பசிஃபிக் பெருங்கடல் நாபுகா ஏமாற்றத் தீவுகள்

தமிழில்: இரா. சுகந்தன்

பகிரு

(பிரெஞ்சு பாலினீசியா)

புகாரோவா என்றும் அறியப்பட்டது,
முன்பாக வய்டூஹீ
14𝆩 10’ தெ, 141𝆩14’ மே
8 கி .மீ2 / 277 குடியிருப்பாளர்கள்
29 கி.மீ. டெபோடோ நோர்ட்,
3,990 கி.மீ. ஹவாய்,
920 கி.மீ. ஃபங்காடௌஃபா
ஜனவரி இறுதி 1521:
ஃபெர்டிணாண்ட் மக்கல்லனால்
கண்டுபிடிக்கப்பட்டது 
என்று கருதப்படுகிறது;
1977: விமான நிலையத்தின் திறப்பு

28 நவம்பர் 1520 அன்று அவர்கள் மாபெரும் பெருங்கடலை அடைந்து வடமேற்கு நோக்கி பயணிக்கத் தொடங்கிய போது, அவர்களுக்கு நறுமணப்பொருட்கள் தீவினை அடைய மிஞ்சிப்போனால் ஒரு மாதம் ஆகுமென்று கேப்டன்-ஜெனரல் ஃபெர்டிணாண்ட் மக்கல்லன் அறிவித்தார். யாரும் அதை நம்புவதில்லை மேலும். வாரக்கணக்காக நிலம் ஒன்றையும் பார்க்கவில்லை அவர்கள். பெருங்கடல் பரிபூர்ண அமைதியோடிருந்தது, அதன் நிலையுறைத்தன்மைக்காக பெயரிட்டார்கள் அதற்கு: மேர் பசிஃபிக்கோ. முடிவிலியின் கதவுகள் திறக்கப்பட்டது போல இருக்கின்றது அஃது, அதனூடாக அவர்கள் நேராக பயணித்துச் செல்கின்றனர். விரைவிலேயே திசைகாட்டியின் முள்ளுக்கு வடக்கை காட்டும் திறன் அற்றுப் போக, குழுவினருக்கு உண்பதற்கு உள்ளதும் போதுமானதாக இல்லாமல் போகிறது. தூசியைவிட சற்றே மேம்பட்டதான கப்பலின் பிஸ்கட் புழு அரித்தும் எலி புழுக்கைகளுடனும் இருக்கிறது, கூடாது குடிநீரானது முடை நாற்றம் வீசும் ஒரு மஞ்சள் திரவம். பட்டினி கிடந்த அவர்கள் மரத்தூளினையும் கயிறுகளை பாதுகாக்க பாய்மரக் கம்புகளில் சுற்றியிருக்கும் பட்டைகளையும் தின்கிறார்கள். பாறை போல கடினமாயிருக்கும் தோலினை கடலில் நான்கோ ஐந்தோ நாட்கள் முக்கி மிருதுவாக்கி, நிலக்கரியால் சுட்டு, தொண்டையில் அழுத்தி விழுங்குகிறார்கள். எலிகளை அவர்கள் கண்டுபிடித்த போது, வேட்டை தொடங்குகிறது. அரைப் பட்டினி மாதிரி வகைக்கு அரை தங்க நாணயம் வரை விலை கொடுக்கப்படுகிறது. சற்றும் பொறுமையில்லாத ஒருவன் தான் வாங்கியதை பச்சையாக விழுங்க, தாங்கள் பிடித்த ஓர் எலிக்காக இரு மாலுமிகள் மிகப்பெரும் சண்டையிட, கோடரி கொண்டு ஒருவன் மற்றவனைத் கொல்கிறான். தனித்து சிறையில் அடைக்கப்படவேண்டியவன் கொலைகாரன், ஆனால் யாருக்கும் தைரியம் இல்லாமல் போனதால் அவர்கள் அவனது கழுத்தை நெரித்து கப்பல் மேற்தட்டில் தூக்கியெறிகிறார்கள். ஒவ்வொரு தடவை ஒவ்வொருவர் இறந்துபோகும்போது, மக்கல்லன் அவசர அவசரமாக இறந்த உடலை பாய்மரத்துணியில் தைத்துச் சுற்றி பெருங்கடலில் வீசியெறிய ஏற்பாடு செய்கிறார், அவரது ஆட்கள் நரமாமிசம் புசிப்பவர்களாக மாறும் முன்பு, ஆவதைத் தடுப்பதற்கு. எஞ்சியிருப்பவர்கள் புதிதாக இறந்தவர்களை பொறாமை ஜொலிக்கும் கண்களோடு வெறித்துப் பார்க்கிறார்கள். ஐம்பது நாட்கள் கழித்து நிலத்தை கடைசியாக அவர்கள் கண்டபோது, நங்கூரம் இறக்க ஓரிடமும் இல்லை, தீவின் கரையில் அவர்கள் இறக்கிய படகுகள் அவர்களின் பசியினை தணிப்பதற்கு போதுமானதாக ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை. அந்தத் தீவுகளுக்கு அவர்கள் ஏமாற்றத் தீவுகள் என்று பெயரிட்டு, பயணத்தை தொடர்ந்தனர். கப்பல் சஞ்சிகையின் பராமரிப்பாளர், அன்டோனியோ பிகாஃபெட்டா எழுதுகிறார்: இனி நான் இனிமேல் எந்தவொரு மனிதனும் இத்தகைய கடற்பயணத்தை மேற்கொள்வான் என்று நம்பவில்லை.

தொலைதூரத் தீவுகளின் நிலவரைப்பட நூல்:

நான் சென்றிடாத ஒருபோதும் போகவே முடியாத ஐம்பது தீவுகள் - யூடித் ஷலான்ஸ்கி. ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்தில்: கிறிஸ்டைன் லோ.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer