எஸ். சுதந்திரவல்லி கவிதை


பகிரு

சூரசம்ஹாரம்

குறுக்கி தைத்த யோனி
நுழைப்பதிலும் கடினம்
எடுப்பதிலும் கடினம்…
சூரனும் முருகனும்
நேருக்கு நேர்
சந்திக்கும் முச்சந்தி
முருகனுக்குள் சூரனும்
சூரனுக்குள் முருகனும்
சந்திகளில் மட்டும் தான் நேருக்கு நேர்
பின்பு
முருகனுக்கு பின்னால் சூரனும்
சூரனுக்கு பின்னால் முருகனும்
எல்லா நகர்வையும் கவனிக்கும்
குழந்தைகள்
பெரியவர்கள்
வீதிகள்
பாருங்கள்
பெண்பூனையொன்றை அழைக்கும்
ஆண்பூனை
அழுத்தமான மியாவ் சத்தம்.

குறிச்சொற்கள்