அஜ்நபி கவிதை


பகிரு


தினமொரு வலையிழுத்து தினவெடுத்த தோள்களில்
உலகத்துச் சுமையெலாம்
ஒற்றையாய்ச் சுமந்த களைப்பொடு
கீழ்திசை வான்மிசை
களிம்பிட்டப்பிய கருமுகிற்றிருளில்
நாளைய தேதியின்
அநிச்சயம் கண்டுணர்ந்து
சாவகாசமாய் உள்ளிழுத்த
சல்லிசுப் புகையில் ஈர்ப்பற்று
மணற்றரை மீதுறைந்து
வெய்துயிர்த்துழல்கிறான்
நெய்தற் கிழான்.

குறிச்சொற்கள்