மொழியாக்கக் கவிதைகள்
பூமியிலிருந்து கண்காணாதபடி அது உயர்ந்தது மேலே மேலே
மேலும் தனது ரகசியத்தை
அதன் மௌனமான தண்டில் வைத்துக்கொண்டது
தெளிந்த மலரில் ஒரு தீம்பிழம்பாய் மாறியது
பிறகு தொடர்ந்தது தனது ரகசியத்தை
முழுநீளக் கோடையினூடாய்க் கனிந்தது
பகலிலும் இரவிலும் மகப்பேறு வலிகொண்ட மரத்தினுள்ளாய்
வற்புறுத்தும் உடனடிக்கணமாய்த் தன்னை உணர்ந்தது
எதிர்வினை தரும் புறவெளியைச் சந்திக்க
அந்தப் புதிதாய் முற்றுப்பெற்ற வனப்பான வளைவை
இப்போது அது அத்தனை பளபளப்புடன் புலப்படுத்தினாலும்
தனது புறத்தோலுக்குள் சரிகிறது விட்டுக்கொடுத்து
மீறி வளர்ந்த மையத்தினுள் மீண்டபடி.