மொழியாக்கக் கவிதைகள்
திராட்சை தோட்டக் காவல்காரனுக்கு சொந்தமாய்
ஒரு குடிசை வைத்திருந்து
அவன் காவல் காக்கிறான்
நாம் அப்படியே
இறைவா
உமது இரவின் ஸ்பரிசத்தை நேர்கொள்ளும்
கைகளின் இரவுகளில் நான் ஒரு குடிசை
திராட்சைத் தோட்டம், புல் பரப்பு
புராதன ஆப்பிள் தோட்டம், வயல்வெளி யாவும்
வசந்தத்தின் மாற்றத்தைப் புறக்கணிப்பதில்லை
அத்தி மரம்
கற்களால் கெட்டிப்பட்ட நிலத்தில் நிற்கிறது
நூறுமடங்கில் காய்த்திருக்கிறது
வளைந்த கிளைகளிலிருந்து வாசனை கசிந்தொழுகுகிறது
எனக்குக் கவனமிக்கக் கண்கள்(பார்வை) உள்ளதாவென
நீர் என்னைக் கேட்பதில்லை
அச்சமின்றி, சாறுகளில் தளர்ந்து
உமது பெருகும் ஆழங்கள் யாவும்
என்னைக் கடந்து செல்கையில்
நிற்பதுகூட இல்லை.