மொழியாக்கக் கவிதைகள்
இரவுகள் ஜனத்திரள்களுக்காகச் செய்யப்பட்டவை அல்ல
இரவு உன்னை உன் அண்டை வீட்டானிடமிருந்து பிரிக்கிறது
நீ அவனைத் தேடிச் செல்லக் கூடாது
அது மீறப்படலாகாது
பிற மனிதர் முகங்களைக் காண
இரவில் உன்னறையை ஒளியூட்டினால்
உன்னை நீ கேட்டுக்கொள்ளவேண்டும் அது யாருடையதென
வெளிச்சத்தால் படுகோரமாக உருவழிக்கப்பட்டிருக்கின்றனர் மனிதர்
அது சொட்டுசொட்டாய் அவர் முகங்களிலிருந்து வழிகிறது
அவர்கள் அனைவரும் ஓரிரவில் ஒன்று சேர்ந்தார்களானால்
கைக்கு வந்த விதத்தில் அடுக்கப்பட்ட
ஒரு நடுங்கும் உலகினை நீ காண்பாய்
மஞ்சள் ஒளி அவர்தம் தலைகளிலிருந்து
எல்லாச் சிந்தனைகளையும் துரத்தியடித்துவிட்டது
அவர்களின் முகங்களில் மது ஒளிர்கிறது
அவர்தம் உரையாடல்களில் தாங்கள் புரிந்து கொள்ளப்பட
அவர்கள் செய்யும் கனத்த கையசைவுகளிலிருந்து
‘நான்’ மற்றும் ‘நான்’ என அவர்கள் சொல்கின்றனர்
‘எவர்’ வேண்டுமானாலும் என அர்த்தப்படுத்தி.