மொழியாக்கக் கவிதைகள்
இந்த உலகின் வேந்தர் மூப்படைகின்றனர்
வாரிசுகள் யாருமிலாது போகட்டும்
மற்றும் அவர்கள் சிறுவர்களாயிருந்தபோதே மரித்தனர் அவர் மகன்கள்
அவர்தம் வெளிர்ந்த மகள்கள் துறந்தனர்
சலித்த கிரீடத்தை ஜனத்திரளிடம்
ஜனத்திரள் உடைக்கிறது
அதைச் சிற்சிறு பொன் துண்டுகளாய்
உலகின் உய்விப்பாளர், காலத்தின் எஜமானர்
அவற்றினை நெருப்பில் உருக்குகிறார் யந்திரங்களாய்
தாழ்ந்த உறுமல்களுடன் கட்டளைகளை
நிறைவேற்றுகின்றன அவை
ஆனால் அதிர்ஷ்டம் அவை பக்கமில்லை
வீட்டுக்கான ஏக்கம் கொள்கிறது உலோகத் தாது
அது காசடிக்கும் ஆலைகளையும்
சொற்ப வாழ்வை அளிக்கும் சக்கரங்களையும்
கைவிட்டுவிட விரும்புகிறது
உற்பத்திச் சாலைகளிலிருந்தும் பட்டுவாடா பெட்டிகளிலிருந்தும்
திறந்து கிடக்கும் மலைகளின் நரம்புகளுக்கு
திரும்பிச் செல்ல விரும்புகிறது
அம்மலை மீண்டும்
தனக்குப் பின்னால் மூடிக்கொள்ளும்.