தியாகராஜன் கவிதைகள்


பகிரு

அலுமினியப் பாத்திரங்களுக்கு அவர்கள் உடுத்தியெறியும் ஆடைபற்றி
நாமறிய வாய்ப்பில்லை
உடுத்தப்பட்ட விழா காலம்
அவர்களின் கடந்தகால நினைவுகளாய்
நம் வாகனம்தான்
சரியாக அவசரத்தில் கிளம்பும்போது
புத்திஜீவிகளின் வேலையைக் காட்டி விடுகிறதே

உள்ளாடைகள் வாங்குமிடத்தில்
ஒரு ஆணிடம் அவர்கள் அளவைச் சொல்லவேண்டியிருக்குமா
நம் துணியைத் துவைக்க இந்தக் காதலிகளுக்கு என்னவாம்
அவர்கள் தெரிவு செய்யும் ஆண்களுக்கு உடலில் மலமே சேராதா

ஒரு வழியாய் உருப்படாமல் நாம் சீரழிவதில்
எவரையும்விட நிராகரித்த காதலிகள் கருத்தாயிருக்கிறார்கள்
எந்தநேரத்திலும் அரைநாள் விடுப்பெடுக்கும்படி செய்துவிடுகிறார்கள்
சிறிய பெரிய பொறாமைகளுள் ஒன்று
அந்தக் கணவனாகப்பட்டவனின் நடுவிரல் மீதும்தான்.

மேன்மை தங்கிய ஆசான்களே

ஆளற்ற தீவுக்கூட்டத்தில் மாட்டியவனில்லை தியாகு
உயிர்பிழைத்து வந்து சாவு பற்றியான வாசகங்களைப் புழங்கவிட்டவனில்லை
அடுத்தபடி அடிமை சமூகமாக நடத்தப்பட்ட காலத்தில்
இந்தச் சாதியில் நான் தோன்றியிருக்கவேயில்லை
ஒடுக்கப்பட்ட இனத்தின் குரலாகவும் என்னை அடையாளப்படுத்த முடியாது
தப்பிதவறி கதைசொல்ல வந்தாலும்
என் கதாநாயகன் கமிஷன் மண்டியில் கணக்கெழுதிக்கொண்டிருப்பான்
மார்கழியில் திண்டு போட முடியாமல்
கடை வாசலில் சாக்கடை நிற்பதே பெருமிடராக இருக்கும்

வாசக சகாக்களோ கேணப்புண்டைகள்
நோபல் மொழிபெயர்ப்பென்றால்
சுன்னியில் தண்ணி கழண்டுவிடும்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer