வே.முத்துக்குமார் கவிதை


பகிரு

அகல்

அவளுக்கான அகலை
அவளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன்
எண்ணெய் வதப்பிலூறிய
மெத்தான திரிகளின் நுனிகளைத் திருகி
தீக்குச்சியைக் கொளுத்துகையில்
தன்னிலை மறந்த பதட்டம் தொற்றிக்கொள்ள
அச்செயலிலிருந்து தன்னிச்சையாக
தன்னை விடுவித்துக்கொள்கிறாள்
அக்கணத்தில் அவளறியாமல்
கண்களிலிருந்து சொட்டிய நீர்
அகலில் விழுந்து எண்ணெயோடு கலவாமல்
மிதந்துகொண்டிருக்கிறது
ஏற்றப்படாத சுடரென.

குறிச்சொற்கள்