ரைனர் மரியா ரில்கே
6. அப்படியானால் யார்தான் அதனை வாழ்கிறார்கள்?

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

மொழியாக்கக் கவிதைகள்

இருந்தாலும், நாங்கள் தினசரித் தேவைகளின்
தளர்வான பிடிப்பினை எதிர்த்து யத்தனித்தாலும்
இதுதான் அந்த மர்மம் என்றுணர்கிறேன்

எல்லா வாழ்க்கையும் வாழப்படுகிறது

அப்படியானால் யார் வாழ்கிறார்கள் அதை?
வஸ்துக்கள் தாமாகவேவா?
அல்லது அவற்றினுள் காத்திருக்கும் ஏதோ ஒன்றா?
புல்லாங்குழலில் வாசிக்கப்படாத
ஒரு லயம் கூடிய பாடல் போன்றா?

தண்ணீர்களின் மீது வீசியடிக்கும் காற்றா?
ஒன்றுக்கு மற்றொன்று சமிக்ஞைகள் தரும் கிளைகளா?

தம் வாசனைகளை இணைத்துப் பின்னும் அவை மலர்களா?
அல்லது
காலத்தினூடாய் வளைந்து செல்லும் தெருக்களா?

கதகதப்புடன் இயங்கும் விலங்குகளா?
அல்லது
திடீரெனப் படபடத்து மேல் எழும் பறவைகளா?

அப்படியானால் யார்தான் அதனை வாழ்கிறார்கள்?
அல்லது
நீர்தான் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறீரா?

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer