ரைனர் மரியா ரில்கே
2. பாம்பு வசியம்

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

மொழியாக்கக் கவிதைகள்

கடைவீதியில் பாம்பாட்டி வளைந்து வளைந்து
மகுடியை ஊதுகிறான்
அது தாலாட்டி மீண்டும் எழுப்புகிறது
சில சமயம் மகுடியின் வட்டத்தினுள்
கேட்பவன் ஒருவனை ஈர்க்கிறான்
அவன் சந்தடியான காட்சி மேடைகளிலிருந்து
அடிவைத்து வெளிவருகிறான்
அந்தப் பாம்பு தன் கூடையில் நிமிர்ந்து நிற்கும் வரை
வாசிப்பு விருப்பந்  தெரிவித்துக்கொண்டேயிருக்கிறது
நிமிர்நிலை மேல் கெஞ்சுகிறது
அது தளரும்வரை
குருட்டுத்தனமாய்த் தலைசுற்றும் விதமாய்
இன்னும் இன்னுமென
திடுக்கிடுதலையும்
விரிவாதலையும் மாறி மாறிச் செய்தபடி
ஒரே ஒரு பார்வையில்
அந்த இந்தியன்
உனக்குள் நுழைந்து
ஓர் இந்திய விநோதத் தன்மையை உட்செலுத்திவிடுகிறான்
அதில் உள்ளது மரணம்
ஒரு விரிசல் உன் முகத்தின் குறுக்காய் ஓடுகிறது
கீழிறங்கும் வானங்கள் உன்னை நோக்கி
பிழம்பாய் விரைகின்றன
உனது வடக்கு ஐரோப்பிய ஞாபகத்தின் மீது எவ்வித பயனுமற்ற
வாசனைத் திரவியங்கள் அடுக்கப்படுகின்றன
அவை உனக்குப் பயனளிக்காது
வலிமை உன்னைப் பாதுகாப்பதில்லை
சூரியன் சீறுகிறது
காய்ச்சல் தாக்கி நடுக்குகிறது
கெடுநோக்கான  சந்தோஷத்தில்  ஈட்டிக்காம்புகள் உயர்கின்றன
மேலும் பாம்புகளில் விஷம் மின்னுகிறது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer