பிரதாப ருத்ரன் கவிதை

அர்த்தமண்டபம் ஆயிரம் உச்சாடனம்
வீழ்ஒளி நீள்நிழல் இருள்குறி முனைமுகம் பொய்காயம் காற்றடைத்தப் பை காதறுந்த ஊசி கடைவழி
பிடிமண் சாம்பல் அருவரூபம் வாடல்தேடல் நாடல்நேரம் நித்திய ஓட்டம் வீரிய வார்த்தை தேகமந்திரம்
காந்தள்பருவம் காமத்தனிமம் தேகச் சூளை ஒளிக்கதவம் யோனி உச்சாடனம் புஞ்சைப் பியானோ உளிதின்ற
சுடரகல் தொட்டவிரல் விட்ட இடம் இருகரை கடல்நிலை நீர்மப் பேச்சு இடம்மாற்றி நட்ட நாற்று
மஞ்சள் குளித்தத் துவரை இரவில் பிரிந்த ஜாமம் பாளைவிரித்துச் சொட்டும் இளநீர் வாசனை நிறை(ந்த)
தேவன் வயலாடும் நாரை தாழப்பறக்கும் வாரம் அந்தரக் கோளகம் பக்கவாட்டு கவிதை திற(ந்து)க்கும்
(கொண்ட) நீர்ப்படுகை வடக்கு நோக்கி (சுவர்;) திறந்த நீலம் ஒருநாள் கோடை தும்பியின் தியானநித்யம்
நினைவில் பழைய நட்சத்திரம் சிறகுகளில் தேடும் பறவை 730 நாட்கள்(ளுக்குமுன்) பார்(த்த) மரம்
உறக்கத்தில் உண்மை இ(ல்)லை மூடாக் கதவு அழையா(க்கா(த) ஏற்பு இலையுதிர்(கால) நிழல்வேட்டை
வனநில விடுதலைப்பு ஜாமக் கோடாங்கி விரோதமிலா நாய்கள் ஒளிக்காட்சி பிரிய(படும்) ஓவியம் சீர்முலை
கனத்து உடை(யும்) பிம்பம் பூ விரி(த்த) இதழ்கள் ஒற்றைப்படை தன்மகரந்தம் சாத்தியமில்லை அவரை(க்கு)
இளம் ஊதாப் பருவம் வானத்தைப் போல் நின்றுபார் அர்த்தமண்டபம் ஆயிரம் கேட்புகள் தலைகீழாய்
ஒலிக்கும்(கின்றன) கல் சிரிக்கும் மலை நினைவில் காடலைந்த பறவை வனம் நிறைந்த கூடு நீர்நீந்தும் திசை
சூர்யகால வடிவம் நாரைகள் பூத்த கருவேலம் நடந்து மூழ்கிய தவளைக்கல் மலைநகரப் பிரயாணம்
வாய்கொண்டு பேசாது பல்கொண்டு கடிக்காது கால்கொண்டு நடக்காது கவிஞனின் கல்லறைக் கவிதை
கேட்ட மரம் மத்தியான வெய்யில் நிறை(ந்த) குளம் புராதனத் துயரம் அசைபோடும் மாடு முக்கோண
ஆதங்கம் தடம் தவறி 40 சமுத்திர மைல் தொலைவு தீ பிராயத்தில் தேவன் உண்ட முலைகொண்ட தேவி
ஒருபக்கத் தாளம் அதிரம் குலுங்க அபிநயம் காலைநிற பனிவிடியல் தூரத்து ரயில் முகங்களின் அணிவகுப்பு
தலைதிரும்பா வார்த்தைகள் சிகிச்சை வேண்டும் பூனைக் கல்யாணம் மணற்காட்டில் நிர்சொற்பாணி 35கிலோ
தங்கம் நாற்பரிமாணம் நிறையும் பறவைக்கு உல்லாச காலம் வயோதிக மலர் லட்சணம் தவறிய புருஷம்
தூங்கிக் கழித்த கால்வருடம் சொற்கள் அவிழ்(த்த) தனிமை குந்திக் கூவும் தவகோணங்கள் ஒன்பதில்
அடங்காது காற்றுப் பருகும் பானை வாய்கள் எப்படி ஆடினரோ அப்படிப் பாடினவர் யோனி அசைவம்
இல்லை தாவரவியல் பெயர் மறந்த ஆண்குறி ஊடிப்பிணங்கும் வியர்வைக்கால மறுமுலை வளர்ப்பு நாய்
முறையற்ற விசுவாசம் கடல் அமர்ந்த வலதுகால் சிம்மாசனம் கட்டெறும்பாய் சிறுத்த பிருஷ்டம் கணக்கில்
வரா ஆவர்த்தனங்கள் நட்சத்திரப் பூ உந்திச்சுழி நங்கூரம் தேவனுக்குத் தருணம் தற்கொலை ஒற்றையில்
பிளந்து நிற்கும் ஊமத்தை கடல் பைத்தியம் பறைதரும் காதுக்குள் விருட்சம் வளர்க்கும் இருள்கெடு(ட்ட)
நேரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *