தமிழ் சுப்பிரமணி - கவிதை


பகிரு

பெரியப்பனின் நொண்டிக்கால் நெய்த சீலையை
உடுத்துகிறார்கள் ஊர்க்குடிகள்
பாவு அடசும் யாருக்கும்
பாவுப் பணைக்கவும் அவரே
சிட்டம் பிரிக்கும் நூதன
கண்களில்
ஓட்டிடுவார்
முப்பது களிகளை
கச்சாத்துப் பார்த்து கணக்கு
தீர்க்கும் நாளில்
பாவோடியின் தேவடியாத்தனத்தை
தலை தீர்த்து தாண்டவமாடினார்
ஒற்றைக்கால் பெரியப்பனே
கும்பிடுறேன் தில்லை நடராசனே.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer