தங்கபாலு கவிதைகள்


பகிரு

இரயில் பாதையில்
மலம் துடைத்து எறிந்த
கல்லைப்போல உனது புறக்கணிப்பு
மஞ்சள் திப்பியாக
எவ்வளவு மிளிர்கிறது பார்.
சதைப் பகுதியாக
கூடவே வளர்ந்தவனை
நீங்கள் பிரிய நேரிடும்போது
தாரைத் தாரையாக
வழியும் கண்ணீரை
பொற்கிண்ணத்தில் பிடித்து
சூத்துக் கழுவிய பிறகு
சொல்லுவான்
அதிக உப்பு
‘அதுக்கு’ ஆவாதென்று.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer