அஜய் சுந்தர் கவிதைகள்


பகிரு

 காற்றின் வருகை இல்லாதிருக்கும் இக்காலம்
 வாழ்க்கையாய் வாய்த்திருக்கிறது
 பனங்காய் முற்றிக்கிடக்கும்
 பனைமர அடி வாய்க்கால் பொந்தில்
 காய்ந்து செத்த நண்டுகளின் கூடுகள்
 வழிச்செல்வோர் கால்களில் நொறுங்குகின்றன.
 புற்கள் நிறைந்திருந்த தரைகள்
 விடுமுறைப் பிள்ளைகள் விளையாட ஏதுவாய்
 மொட்டை அடித்திருக்கின்றன
 கறுப்பு நிறத்தை வெறுப்பதாய் காட்சியளிக்கிறது வானம்
 இல்லாத மரத்தின் நிழலை நினைத்து அழுகிறது
 ஐஸ்வண்டிக்காரனின் நெற்றி
 யூகலிப்டஸ் மரமாய்
 வளர்கிறது வேட்கை நீர். 

பொருட்படுத்தாமைகள் வேர்விட்டபின்னே
 கைகூடும் பறத்தல்கள்
 இரைகண்டு நீளும் அலகின் பேராசையில்
 அழிந்துபோகிறது சிறகின் வண்ணங்கள் 

குறிச்சொற்கள்