பெர்டோல்ட் ப்ரக்ட் (1898 - 1956)

ப்ரக்ட்-இன் கவிதைகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்

பெர்டோல்ட் ப்ரக்டின் கவிதைகள் இரண்டு காரணங்களுக்காக குறிப்பிடத்தகுந்த ஸ்தானத்தைப் பெறுகின்றன. அவர் பெயர் பெற்றிருந்த நாடகக் கொள்கைகள் மற்றும் அவரது நாடகங்களுக்கு அப்பாற்பட்டு அவர் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை ஆச்சரியப்படுத்தக் கூடியது.

அவரது தொகுக்கப்பட்ட படைப்புகள் அடங்கிய 4 தொகுதிகளில் இக்கவிதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை மேன்ஹெய்ம் மற்றும் வில்லட் ஆகியோர் தொகுப்பாளர்களாய் இருந்த கவிதைகள் 1913-1956 நூலில் இடம் பெறுகின்றன. இந்நூல் 1967இல் வெளிவந்த பிறகு ஒரு இணைப்புத் தொகுதியாக விடுபட்ட கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. தன் வில்லுக்கு இரண்டாவது நாண் என்று தன் கவிதையை ப்ரக்ட் கருதியபோதிலும் அவர் கவிதைகள் அவரை எண்ணிவிடக்கூடிய மகத்தான ஜெர்மானியக் கவிஞர்களில் ஒருவராக அவரை ஆக்கியிருக்கிறது. அவர் கவிதைகளின் தன்மை மிக உயர்ந்த தரத்தைக் கொண்டவையாய் மட்டுமின்றி வகைப்பாடுகள் மிக்கதாயும் அமைந்திருக்கின்றன. ஜெர்மானியக் கவிதையில் அவர் ஒரு அபாரத் தனித்தன்மை கொண்டவராய் இருந்தார். அவருக்கு முன்னரோ அன்றி பின்னரோ அத்தகையதொரு கவித்துவ ஆளுமை ஜெர்மானியக் கவிதையில் தோன்றவில்லை என்பது கவித்துவ நிஜம்.

ரில்கே மற்றும் ஹாஃப்மன்ஸ்தால் ஆகியோரால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட ஜெர்மானியக் கவிதையின் பிரதான நீரோட்டத்திலிருந்து வெளியில் நிற்கின்றன. மேற்குறிப்பிட்ட இரு கவிஞர்களுடன் நாம் காட்ஃபிரைட் பென்-ஐயும் ஜார்ஸ் ட்ரேக்ல்-ஐயும் சேர்த்துக் கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டு ஜெர்மானிய இலக்கியத்தை நோக்கும் சம்பிரதாய அணுகல் ரில்கே மற்றும் பிற கவிஞர்களை மையமாய்க் கருதுவதால் இந்த இடத்தில் ப்ரக்டை வைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சம்பிரதாய அணுகல் தவறானது என்பது இதற்கு அர்த்தமல்ல. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வளர்ச்சியடைந்த ஜெர்மானியக் கவிதை கதே மற்றும் ரொமாண்டிக்குகளின் ஆதிக்கத்தால் அபரிமிதமான வகையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த வகைப்படுத்தும் திட்டத்திற்கு வெளியில்தான் ப்ரக்டின் கவிதைகளை வைக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் எந்த வகைப்பாட்டிலும் அடங்காதவை ப்ரக்டின் கவிதைகள். ப்ரக்ட் கவிதைகளின் வகைமாதிரிகள் ஆச்சரியப்படுத்தக்கூடிய வகையில் வேறுபட்டவை: கதைப்பாடல்கள், கடிதங்கள், காதல் கவிதைகள், கிடார் வாத்தியத்துடன் சேர்ந்து பாடக்கூடிய பாடல்கள், கிராமஃபோன் இசைத்தட்டுக்களுக்காக எழுதப்பட்டவை, அறிக்கைகள் இது போன்று பல. ப்ரக்ட் 1927இல் வெளியிட்ட கவிதைத் தொகுதியிலேயே மிகத் தெளிவாக தனிநபர் வெளிப்பாடாய் இருந்த சம்பிரதாய ‘லிரிக்' கவிதையின் வெளிப்பாட்டு முறைகளிலிருந்து துண்டித்துக் கொண்டார். பிரார்த்தனைகள் என்பவை பொதுவாக பூர்ஷ்வா இல்லங்களில் காணப்படும் ஒழுக்கவியல் சார்ந்த முறையான வாழ்க்கைக்கான அனுசரிப்புகள் கொண்ட பாடல்கள். ஆனால் ப்ரக்டின் பிரார்த்தனைகள் எந்த விதத்திலும் முறையான வாழ்க்கையைச் சார்ந்தவையோ அல்லது மதச்சார்பானவையோ அல்ல. மாறாக மதத்தூஷணம் மிக்கவை. பிரார்த்தனைகளில் நாம் இளமையான துணிகரமிகுந்த துடுக்குத்தனமான ப்ரக்ட்ஐப் பார்க்க முடிகிறது.

ப்ரக்ட் ஆக்ஸ்பர்கில் பூர்ஷ்வாப் பெற்றோருக்குப் பிறந்தார். தந்தை ஒரு காகித ஆலையின் நிர்வாக அதிகாரியாக இருந்தார். Black Forest பகுதியில் ஒரு சிவில் அதிகாரியின் மகள் ப்ரக்டின் தாய். ப்ரக்டின் கலகக்காரத்தன்மை பள்ளிக்கூட நாட்களிலேயே வெளிப்பட்டது. முதல் உலகப்போர்க் காலத்தில் போருக்கெதிரான தன் வன்மையான கருத்துக்களைக் குரல் உயர்த்தி அறிவித்தார். ம்யூனிக் பல்கலைக்கழகத்தில் தனது வித்யாசமான எதிர்ப்பு வாழ்க்கையைத் துவக்கினார். அவரின் வாழ்நாள் நடைமுறையான பல காதல்களை ஒரே நேரத்தில் நடத்துவதையும் இங்குதான் ஆரம்பித்தார். ராணுவ மருத்துவமனையில் துணையாளராக சிறிது காலம் சென்றது. பவேரியாவில், போருக்குப் பிந்திய கம்யூனிஸப் புரட்சியில் பங்கு கொண்டார். இங்கு விடுதிகளிலும், குழுக்களிலும் ஒரு நாடோடிப் பாடகராகப் பிரசித்தம் பெற்றார். உள்ளூர் செய்தித்தாள்களில், குறிப்பாக இடதுசாரிப் பத்திரிகைகளில் அமிலத்தன்மையான விமர்சனங்களை வெளியிட்டார். பிறகு நாடகத்துறைக்கு வந்தார். பெர்லின் தியேட்டரில் 1924 ஆம் ஆண்டிலிருந்து 1933ஆம் ஆண்டுவரை தீவிரமாய் இயங்கினார். இந்தக் காலகட்டத்தில்தான் சாகித்யகர்த்தாவான Kurt weillஐச் சந்தித்தார். இருவரும் இணைந்து இயக்கிய பிரபல நாடகம் The Three Penny Opera. 1933இல் சுயவெளியேற்றத்தில் ஜெர்மனியை விட்டுச்சென்றார்.

டென்மார்க்கிலும், ஸ்வீடனிலும், ஃபின்லாந்திலும் மகா எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ரஷ்யாவின் வழியாக 1939 - 40களில் அமெரிக்காவுக்குச் சென்றார். ஹெல்சின்க்கியிலிருந்து விளாடிவாஸ்டாக்கிற்கு வந்து கலிபோர்னியாவுக்குப் புறப்பட்ட கடைசிப் படகினைப் பிடித்தார். ஹாலிவுட்டில் திரைப்படம் தயாரிக்கும் முயற்சியில் அளவற்ற சக்தியை வீணடித்தார். கிழக்கு பெர்லினுக்குத் திரும்புமுன் அமெரிக்க அமைப்பான Committee on Un-American Activities ப்ரக்டை விசாரணைக்கு உட்படுத்தியது. கிழக்கு பெர்லினில் Berliner Ensembleஐ நிர்மாணித்தார். ஆனால் பெரும்பாலும் ஸ்டாலினிய கிழக்கு ஜெர்மானிய அதிகாரிகளுடன் வேறுபாடுகளும், தவறான புரிந்து கொள்ளல்களும், பூசல்களும் உண்டாயின. 1956இல் ப்ரக்ட் காலமானார்.

தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் யாவும் கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.

Bertolt Brecht Poems (1913 -1956), Edited by John Willet and Ralph Manheim with the co-operation of Erich Fried. First published in Great Britain in 1976 by Eyre Metheun Ltd.

பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்

அதிகாரம் நோக்கி உண்மையைப் பேசுகின்ற, வரலாற்றை மறுவாசிப்பு செய்து அதிகாரத்தின் மொழியைக் கட்டுடைக்கின்ற கலக மொழியாடல்களால் விடுதலையை முன்னிறுத்துகின்றன விளிம்பு நிலை இலக்கியங்கள். இவை ‘தலித்திய’, ‘பெண்ணிய’இலக்கியங்கள் என்ற சட்டகத்துள் இருத்தி வாசிக்கப்படுகின்றன. சாதிக் காலனிய, பார்ப்பனிய ஏகாதிபத்திய அதிகாரத்திற்கு எதிரான விடுதலை அரசியலை உள்ளடக்கிய தலித்தியமும் காலனியாதிக்கப் பண்போடு ஒத்த பண்பு கொண்டதான ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான அரசியலை முன்வைக்கும் பெண்ணியமும் இன்றைக்குப் பின்னைக்காலனியக் கோட்பாட்டுப் பின்புலத்தில் வாசிக்கப்படும் சூழலில் ‘பெண்ணியக்கவிதைகள்’ என்ற அடையாளத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் (ப.24-ல் படைப்பாளி பெண்ணியத்தை முன்வைத்து எழுதப்பட்ட இக்கவிதைகள் எனக் குறிப்பிடுகிறார்.) ‘பால்(ழ்) முரண்’ என்ற கனலி விஜயலட்சுமி - யின் கவிதைப் பிரதி நிகழ்த்தும் பெண்ணிய அரசியல் கவனத்திற்குரியது. ஒரு வகையில், பிரதி மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டகப் புரிதல் பிரதியின் பன்முகத்தன்மையைச் சீர்குழைப்பதாக இருப்பதனை உணர்ந்துகொள்ளமுடியும். அதாவது, வாசகன் தனக்கான பிரதியாக வாசிக்க அனுமதிக்காமல் படைப்பாளரின் பெண்ணியக் கவிதைகளாகத்தான் வாசிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு படைப்பு மன அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக இருப்பதனை மறுப்பதற்கில்லை. இது ஒருவகையில் அதிகாரத்திற்கு எதிரான அதிகார அரசியல் என எடுத்துக்கொள்ளவும் இடம் தருகிறது.

படிநிலைச் சமூக அமைப்பில் எவ்வகைப்பட்ட முரண்களைக் காட்டிலும் ஓர் உலகளாவிய பொதுமை உடையது பாலினம் சார்ந்த ஆணாதிக்க ஒடுக்குமுறை வரலாறு. இந்த வரலாற்றில் உறைந்து கெட்டித்தட்டிப் போயுள்ள மொழி, பண்பாடு, சமூக அமைப்பு ஆகிய அடிப்படைத்தளங்கள்மீது கலக மொழிகளால் அதிர்வுகளை உண்டாக்கச் செய்கின்றன பால் (ழ்) முரண் கவிதைகள். பாலிய வேறுபாட்டினடிப்படையாகக் கட்டமைக்கப்பட்ட இந்தச் சமூகம் பாழ்பட்டுக் கிடக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதாய் அமைந்துள்ளது தலைப்பு.

மனித சமுதாய வரலாற்றில் ஆணாதிக்க வழிப்பட்ட சமய அரசியல்களால் முழுமையாகப் பீடிக்கப்பட்டு சுய அடையாளங்களை அனைத்து வகைகளிலும் தொலைத்துவிட்ட பெண் சமூகத்தின் வலியை, அவ்வடையாளங்களை மீட்டெடுக்க, மறுஉற்பத்தி செய்ய வேண்டிய உடனடித் தேவையைஆதித்தாய்என்ற முதல் கவிதையில் படைப்பாளி பேசுபொருளாக்குகிறார்.

காலக் கண்ணாடிக்குள்
கடந்து சென்று
தேடத்தொடங்கினேன்.
என் ஆதித்தாயை...
...
வலிமையின் வடிவமாம்
ஆதித்தாயின் அங்கம் கண்டு
அங்காப்போடு
அருகில் சென்றேன்
பொம்மை என்று எண்ணி
அள்ளி எடுத்தாள்
பெண்மை என்றறிந்து
பெயர்ந்து நின்றாள்
பூஞ்சையாய்...
பொருளாய்... போனதன்
சதி கேட்டாள்
காமத்தின் கண்டுபிடிப்பும்
கருவியாய்ப் பெண்
உடலமைப்பும் ஆனதன்
கதை சொன்னேன்
வாரி எடுத்து
வாஞ்சையுடன் தோளிலிட்டு
உருக்கி எடுத்து புடமிட்டு
எனக்கு உருவம் கொடுக்க
அழைத்துப் போனாள்
ஆதிகாலத்திற்கு. (ப.30)

ஆணாதிக்கப் பண்பாட்டில் பெண் மீது குவியப்படுத்தியிருக்கும் காமம் முதலான கருத்துருவப் பண்பட்டுக் கூறுகளை உடைத்தெறியும் ஆயுதமாகத் தாய்வழிச் சமூகப் பண்பாட்டினை இக்கவிதை முன் வைக்கிறது. தாய்வழிச் சமூகப் பண்பாட்டை பெண் தனது வலிமையின் மையப்பகுதியாக அடையாளம் காண்கிறாள். ஆணாதிக்கச் சமூகம் திணித்துள்ள ‘மென்மை’ முதலான மெய்ப்பாட்டு அழகியல்களை மறுதலித்து, வலிமையின் அடையாளமாக இருந்த பெண் உடலை மீட்டுருவாக்கம் செய்கிறாள். தந்தையதிகாரச் சமூகத்தின் கருத்தியல் அதிகாரங்களான கற்பு, தீண்டாமை உள்ளிட்டவற்றாலும் ஆணின் காம உணர்வினைத் தீர்த்துக் கொள்வதற்கான கருவியாகவும் பார்க்கப்பட்ட ஆண்களுக்கான நுகர்வுப்பண்டங்களாகப் பெண் உடல்கள் உருவாக்கம் செய்யப்பட்டதன் தன்மையைக் கவிதை விவாதிக்கிறது. கீழைத்தேயச் சமூகங்கள் காலனிய அதிகாரங்களால் திணிக்கப்பட்ட அடையாளங்களை, சிந்தனைகளை காலனிய நீக்கம் செய்து தனக்கான சுய பண்பாட்டையும் அடையாளங்களையும் முன்னிறுத்திச் செயல்படும் இன்றைய பின்னைக்காலனியச் சூழலில் படைப்பாளரின் ஆதித்தாயை மீட்டெடுக்கும் இந்த அடையாள மீட்டுருவாக்கக் கவிதையில் பெண் விடுதலைக்கான பின்னைக்காலனிய அரசியல் வினையாற்றுவதாக இருக்கிறது. மீண்டும் உடல், மன வலிமை நிறைந்த ஆதித்தாயின் ஆதிகாலத்திற்குச் செல்லும் படைப்பாளரின் இச்சிந்தனை ஆணாதிக்கச் சமூகத்திற்கான நுகர்வுப்பண்டங்களாக, நகல்களாக மாறிப்போன பெண் சமூகத்தின் மனவெளியைக் காலனிய நீக்கம் செய்து பெண்விடுதலைக்கான கலகம் செய்தலாய் அமைந்துள்ளது.

தாய்வழிச்சமூகம் தழைகீழாக்கப்பட்டு, தந்தைத் தலைமைச் சமூகமாக உருமாற்றப்பட்ட பின்பு, பெண் மீது நிகழ்த்தப்பட்டுவரும் தொடர் ஒடுக்குமுறைகளை (உடல், மனம் சார்ந்து), அவ்வொடுக்குமுறைமைகளின் போலித்தனங்களை தம் மீது சுமத்தப்பட்ட வரையறைகளைச் சிதைத்துக் கலகம் செய்வதாக இயக்கம் பெறுகிறது இப்பிரதி. நல்லது x கெட்டது, உண்மை x பொய், கருப்பு x வெள்ளை, புனிதம் x தீட்டு, மேல் x கீழ் போன்ற இணைமுரண்களால் தொடர்ந்து இயக்கம் பெற்றுவரும் இவ்வுலக நியதியில் ஆண், பெண் என்ற பாலியம் முரணாகிப்போனதை பேசுபொருளாக்கியுள்ளது. ஆண் முதல்நிலையில் செங்குத்துத் தளத்தில் இருந்துகொண்டு பெண்னை இரண்டாம் நிலையில் கிடைக்கோட்டுத் தளத்தில் இருத்தித் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வதைத்துறு மோகத்தில் திளைத்துக்கொண்டிருப்பதை இப்பிரதி சுட்டிக்காட்டுகிறது. ஆண்மையச் சமூகம் பெண் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடும் ஆதிக்க, அதிகார வடிவங்களைப் பேசுபொருளாக்கி,

முரண்கள் கூட இணைந்து
நடந்தன
பால்(ழ்) முரண் மட்டும்
பகையாய்த் தொடர்ந்தது. (.54)

என்று அதன் தீவிரத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்தியச் சமூக அறங்களின் பெண் மீதான சொல்லாடல்கள் எல்லாமே ஆணாதிக்கத் தளத்தில் இருந்துகொண்டு மொழியாடியுள்ளன. அம்மொழியாடல்கள் வழி உருவாக்கப்பட்ட பொதுப்புத்திக் கற்பிதங்களால் நிர்மாணிக்கப்பட்ட பெண் அடையாளங்களை மறுவாசிப்புக்குட்படுத்திக் கலகம் செய்து கலைத்துப்போடுகிறது பால்(ழ்) முரண் கவிதைகள்.

சமய நிறுவனங்கள் எல்லாமே ஆணை முன்னிறுத்தி ஆண் அதிகாரத்தைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டே நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளதால் சமய அதிகாரங்களின் கருத்தியல் உருவாக்கங்கள் ஆண் மொழியிலேயே உருவாக்கம் பெற்றுள்ளன. ஆக, கருத்தியலைக் கட்டமைத்த ஆணிய மொழியை முதலில் கட்டுடைத்து பெண் மொழியை முன்னிறுத்திக் கலகம் செய்கிறது பெண்ணியம். மொழி மூலமாக நிகழ்த்திக் காட்டப்படும் இக்கலகத்திற்குக் கலைத்தன்மையை ‘தொன்மங்கள்’ மூலமாக படைப்பாளர்கள் முன்வைக்கிறார்கள். இதனை, “ஓர் இலக்கியத்தில் தொன்மக்கூறு சிறப்பாக அமைந்துவிடின் அதன் கலைத்தன்மை குறைவுடையதாக இருப்பினும் கற்போரை அது, பற்றி ஈர்க்கக் கூடிய ஆற்றல் பெறும்” (2005, ப.10) என்று யுங் கூறுவதாக டாக்டர் பா.மருதநாயகம் முன்வைக்கும் கருத்தியல் தெளிவுபடுத்துவதாக இருக்கிறது.

ஆரிய நிலவுடைமைச் சமூக, ஆண்மையக் காலனியாதிக்கக் கருத்தாக்கங்களின் அனைத்துக்கனைகளும் சிறிதும் தயக்கமின்றி குத்திக் கிழிக்கும் பெண் உடலின் உணர்வுகளின் வலிகளை உரக்கப்பேசுகிறது இப்பிரதி. புனிதம் x தீட்டு என்ற போலித்தனத்தால் பெண் உணர்வுகளின் மீது அதிகார மேலாண்மை செய்கிற ஆணாதிக்க அதிகார வடிவங்களை உடைத்து நொறுக்கி அதன் குரல்வலையை நசுக்குகிறது. பால்பேதமற்ற மனித சமத்துவத்துக்கான குரலை உயர்த்திப்பிடிக்கவும் விளிம்பை மையம் நோக்கி நகர்த்தவும் எத்தனிக்கிறது படைப்பாளியின் பால்(ழ்) முரண் கவிதைகள்.

பெண் சமூகத்தின்மீது ஆணாதிக்கச் சமூகம் நேரடியாகக் கட்டவிழ்த்துவிடும் உடல் சார்ந்த ஒடுக்குமுறை வடிவங்களை, பாலியல் சுரண்டல்களை, உழைப்புச் சுரண்டல்களை மட்டுமின்றி, கருத்தியல் காலனியாதிக்க வடிவங்களாகிய கற்பு, தீண்டாமை, தீட்டு ஆகிய கலாச்சாரக் காலனியாதிக்க வடிவங்களின் ஆதிக்கக் கற்பிதங்களையும் தனது கவிதைகளால் பகடி செய்து பெண் விடுதலைக்கான கலகக்குரல்களை முன்வைக்கிறார் படைப்பாளி.

வரலாறு நெடிகிலும் ஆண்களின் விருப்பப் பார்வைகளுக்கு ஏற்பவே பெண் தன் உடலையும் உணர்வுகளையும் கட்டமைத்துக்கொண்டு சுய அடையாளமற்றவளாய் சுய உணர்வுகளற்ற பொம்மை உடல்களாய், ஆண் பசிக்கு ஏற்ற பழங்களாய்த் தங்கள் உடல்களைக் கட்டமைத்துப் புசிக்கக் கொடுக்கும் இயந்திர உற்பத்தி உடல்களாய் பெண் சமூகம் இருத்தப்பட்டுள்ளமையையும் அத்தகைய அதிகாரத் திணிப்புக்கு எதிரான கலகக் குரலையும் படைப்பாளி, ‘கைக்குள் ஒரு கனல்’ (ப.71), ‘படைப்பு’ (ப.41) ஆகிய கவிதைகளில் பதிவு செய்துள்ளார். இக்கவிதைகள் மில்லத்தின் ‘பாலுணர்வு அரசியல்’ என்ற பெண்ணியல் விமர்சனக் கருத்தாக்கத்தின் பின்புலத்தில் இருத்தி வாசிக்கத்தக்கது.

பெண் மொழி

ஆணாதிக்கத்தின் மையங்களாக நிறுவனமயப்பட்ட சமயங்கள் பெண் சமூகத்தின்மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள ஏகாதிபத்திய, பாசிசக் கருத்தியல்கள் மொழி என்னும் வல்லாதிக்கக் கருவியினூடே இரண்டறக்கலந்து ஆண் மொழியாகப் பரிணமித்து பெண்ணை மொழியற்றவளாகச் செய்துள்ளது. சிதிலமாக்கப்பட்ட பெண் அடையாளங்களை மீட்க மொழியை மறுகட்டமைப்புச் செய்ய முற்படும் பெண்ணியவாதிகள் ஆண்மொழியைக் காயடிப்புச் செய்யவேண்டிய உடனடித் தேவையை உணர்ந்து செயல்படுகின்றனர்.

இருமை எதிர்வுகளுக்கு உயிர்ப்பூட்டும் மொழி, அதிகாரத்தின் பக்கம் மட்டுமே சாய்ந்து கொடுப்பதனை வரலாறு நெடுகிலும் கண்டுகொண்ட அடிமையாக்கப்பட்ட பெண்ணுடல்கள் தன்னுடைய மொழியில் தானே அந்நியமாக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதைமொழிபெயர்ப்புஎன்ற கவிதையில்,

மொழியே இங்கு
முட்டுக்கட்டை ஆகிவிட்டது
அந்நியமாக்கப்பட்டுவிட்டன அனைத்தும்
எனக்கு நானே புரியாமல்
பேசிக்கொள்கிறேன்
பெற்ற பிள்ளை கூட
வேற்று மொழியில்
வித்தியாசமாய் பேசுகிறது
உள்ளத்து உணர்ச்சிக்கும்
மொழி ஒரு பெரும் தடை
வாழ்க்கையே இங்கு
மொழிபெயர்ப்பாகிவிட்டது...
புரிந்த மொழியிலிருந்து
புரியாத மொழிக்கு... (ப.48)

என்று பதிவு செய்துள்ளது. மொழிபெயர்ப்பாகிப் போன தங்களின் வாழ்வை, மொழியை மறுநிர்ணயம் செய்ய வேண்டியுள்ளதை உணர்ந்து செயல்பட தன்முனைப்புக்காட்டும் சூழலில் படைப்பாளரின் ‘புதுமொழி’ என்ற தலைப்பின் கீழான கவிதை,

கல்லானாலும்...
கட்டடம் கட்டலாம்
புல்லானாலும்...
எருமைக்குக் கொடுக்கலாம்
...
கட்டிக்கட்டி பெறும்
சொந்தங்கள் வேண்டாம்
கட்டற்ற சொந்தங்கள்
இருப்பின் அவை போதும். (ப.34)

சமூக அதிகாரக் கட்டமைப்பைக் கட்டுடைக்கும் கலக மொழியாக வடிவம் பெறுகிறது. சமூகத்தில் பிறர் மீது தன்னுடைய கோபத்தை மொழிவாயிலாக வெளிப்படுத்த முனையும்போது கையிலெடுக்கும் வசைமொழிகூட பெண்னை இழிவுபடுத்தும் பாங்கில் பெண்ணின் உடல் உறுப்புகளை மையப்படுத்தியதாகவே இருந்து வருவதையும் அத்தகைய ஆதிக்க மொழிக்கட்டுமானத்திற்கு எதிராக ஆணை மையமிட்ட மொழியும் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதனையும் முன்வைக்கும் படைப்பாளி ஆணை வசைபாடுவதற்கான சொற்களைக் கொடுத்து அச்சொல்லுக்குள் உறைந்துகிடக்கும் புறந்தள்ளல்களையும் ஒடுக்குமுறைகளையும் ஆணுக்கும் கொடுத்துச் சமத்துவம் பேசுகிறார் ‘சுடச்சுட’ என்ற கவிதையில்,

வேசனைக் கூட்டி வா
விளையாட வேண்டும்
விதவனை விரட்டிவிடு
அபசகுணத்திற்காய்
தேவடியான் எங்கே
தெருவிலே தேடிப்பார்
...
இருக்கட்டும்
சமத்துவம் இதிலும் கூட. (.73)

தேவடியான், வேசன், வாயாடன், மூளன், பத்தனன், சுமங்களன் என சொற்களை அடுக்கி பெண் மொழியை, மொழிக்கிடங்கை விசாலப்படுத்துகிறார். இங்கு ஆண் மொழியைப் போலச்செய்யும் பெண்மொழியும் அதிகார மொழியாகத்தானே வடிவம் கொள்ளும் என்ற வாதம் பொருத்தமற்றது. ஏனெனில் அடிவாங்கினவன் திருப்பி அடிக்கும்போதுதான் கலகம் பிறக்கும். அக்கலகம்தான் சமநிலைப்படுத்தலுக்கான தீவிரத்தைத் துரிதப்படுத்தும் என்பதான பொருண்மையில் அவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

உயர்வழிப்படுத்தல்களின் உள்ளுறைவு

சமய அதிகாரங்களின் உயர்கட்டுமானமாகிய புனிதம் x தீட்டு என்ற கட்டுமானத்திற்குள் தீட்டுக்கானவர்களாக அகிலம் முழுவதும் பெண்கள் இருந்து வந்து உள்ளதையும் அதன் பீடிப்பை உடைத்து அதன் கட்டுமானங்களைச் சிதைத்த பின்நவீனத்துவக்கால கட்டத்திலும் பெண்கள் தீட்டுக்குரியவர்களாகவும் தீண்டாமைக்குரியவர்களாகவும் ஆளாக்கப்பட்டு வருவதைத் ‘தீண்டாமை’ எனும் கவிதையில்,

பின் நவீனத்துவ காலத்திலும்
நாங்கள் தீண்டப்படாதவர்கள்தான்
உனக்கு மட்டுமல்ல
உன் கடவுளர்களுக்கும். (.39)

என்று பதிவு செய்கிறார். பெண்னைத் தீட்டுக்குரியவர்களாகப் புறந்தள்ளி வைத்த சமய வெறியர்களின் உயர்வழிப்படுத்தப்பட்ட நனவிலி மனச்செயல்பாடுகளை ‘ஐயோ சாமி’ என்ற கவிதையில்,

...
தேவியின் உடை களைத்து
தேகம் கழுவி
பின்னால் பிட்ட வளைவில்
தண்ணீர் ஊற்றி
முன்னால் முலைக்காம்புகளை
மெல்லத் தடவி
ஒடுங்கிய இடுப்பை
இறுகத் தேய்த்து
மொத்தமாய்த் தடவி
முழு அலங்காரமும்
ஆசாரமாய் செய்ய
பூசாரினி வேண்டாம் என்றீர்
என்ன தர்க்கம்?
தேவிக்குப் பிடிக்காது
என்ற பேரில்
தெய்வப் பெண்ணின்
தொடு சுகம் காண
செய்த சதியா?
ஐயோ சாமி... 
... (ப.49)

என்று அம்பலப்படுத்துகிறார். பெண்ணினுடைய பார்வையில் ஆணாதிக்கச் சமூகத்தின் பெண்ணுடல் மீதான தீண்டலின் வன்மத்தைச் சுட்டிக்காட்டும் இக்கவிதை, சமய அதிகாரங்களைத் தூக்கிச் சுமக்கும் ஆணாதிக்கச் சமூகத்தின் நனவிலிக்குள் உறைந்து கிடக்கும் குப்பைகளைத் திறந்து காட்டுவதாக இருக்கிறது. சமயத்தின் பெயரால் ஆணின் பாலியல் இச்சைகள் உயர்வழிப்படுத்தப்படுவதான புரிதலை முன்வைக்கும் இக்கவிதை, அது எழுதப்பட்ட காலத்துக்குப் பின் கோவிலின் கருவறைக்குள் சிதைக்கப்பட்ட ஆசிபாவை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. அதோடு, சாதிய முரண் கடந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமத்துவச் சிந்தனைப்புலம் பால் சமத்துவத்தையும் உள்ளடக்கியதாக இல்லாமல் ஆணாதிக்கச் சமூகத்தின் வழிப்பட்ட சிந்தனைப்போக்காக மட்டுமே அணுகப்படுவதைச் சுட்டிக்காட்டி பெண்களும் பூசாரினிகளாக வேண்டும் என்ற கலகத்தை முன்வைப்பதாக இருக்கிறது.

சமயங்கள் பெண் மீது நிகழ்த்தும் அதிகார வடிவங்களுக்கு எதிராகக் கலகத்தை முன்வைக்கும் படைப்பாளியின் கவிதைகள் நுட்பமாகச் சமயங்கள் குறித்த தன்னுடைய நிலைபாட்டை பதிவு செய்யாமல் கடந்துவிடுகிறது.

இன்றைய பாசிச மதவாத ஆட்சிமுறையின் கற்பழிப்பு அரசியலின் இயங்குதளம் குறித்த வாசிப்புப் புரிதலையும் இக்கவிதை கொடுப்பது எண்ணத்தக்கது. தொடர்ந்து, ‘பொய்முகம்என்ற கவிதையில் சமூக இயங்குவெளியில் நல்லவர்களாகவும் உயர்ந்தவர்களாகவும் பெண்ணிய ஆதரவாளர்களாகவும் முகம் காட்டும் வேடதாரி ஆண்களின் ஆழ்மனக் கிடக்கையையும் படைப்பாளர் வெளிச்சப்படுத்தி அவர்களின் பொய்முகங்களை அம்பலப்படுத்துகிறார். அத்தகைய முகமூடி மனிதர்களின் உண்மைமுகம் அறியாது.

.......................
.......................
அருகில் இருந்து உணர்ந்தேன்
பாவம் நான் இலவு காத்த கிளி (ப.55)

என்று பெண் சமூகம் ஆண்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் வருவதனைப் பதிவுசெய்கிறார். சமூகத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் ஆணாதிக்கக் கரங்களை இனங்காண வேண்டிய தேவையைஅறிவாளிகள்என்ற கவிதையில்

எங்கே... உன்
அறிவார்த்தம்...?
உன் காமப் பசிக்கு
அறிவார்த்த முலாமா? (.62)

என்று கோபம் கொப்பளிக்க கேள்வி கேட்கிறார். ‘பெண் உடல்’ வரலாறு நெடிகிலும் ஆணுக்கான நுகர்வுப் பண்டமாகவே இருந்து வந்துள்ளதை இலக்கிய, புராண, தொன்மங்களின் ஊடே சுட்டிக்காட்டும் படைப்பாளி இன்றைக்கும் அதன் சரடு அறுபடாமல் ஆணாதிக்கம் கட்டிக்காத்து வருவதனையும் தொடர்ந்து பெண் உடல்கள் ஆண்களால் சூறையாடப்படுவதனையும்

..................
கடிக்கும் உயிரிக்கு
காய் என்ன கனி என்ன
உணராமலே
உலர்ந்தன உயிர்கள். (ப.81)

என்று ‘இருப்பு’ என்ற கவிதையின் இறுதி வரிகளில் ஆணாதிக்கத்தின் வக்கிரத்தை, பாலியல் சுரண்டலைப் பதிவு செய்கிறார். பெண் உடலைப் பாலியல் மோகித்தலுக்கான, பொம்மை உடல்களாக்கக் கற்பிதம் செய்துகொண்டு தொடர்ந்து சுரண்டும் ஆணின் உடல் மோகித்தலுணர்வைக் காயடிப்புச்செய்யப் போர்க்கொடி தூக்கும் படைப்பாளி,

பூவுலகெங்கிலும்
குறிவைக்கும் குறிகளைத்
தர்ப்பையாய்க் கிள்ளி
பிண்டம் வைக்க
புறப்பட வேண்டாமா? (.40)

என்று தனது கோபக் கனலை வார்த்தைகளில் வெளிப் படுத்துகிறார்.

ஆண் சமூகத்தால் தொடர்ந்து முடமாக்கப்பட்ட பெண்சமூகத்தின் உணர்வுகளையும் உறுப்புகளையும் மீட்டெடுக்கும் பொருட்டு ஆதித்தாயின் அரவணைப்பில் அடைக்கலம் புகத்துடிக்கும் பெண்ணிணத்தின் ஒடுக்கப்பட்ட ஓலக்குரல் ‘தொடக்கம் முதல்’ (ப - 31) என்ற கவிதையில் ஓங்கி ஒலிக்கிறது. பெண்ணின் அடையாளங்களாக ஆண் சமூகம் முன்வைத்த அடையாளங்கள் அனைத்தும் அடிமையாக்குவதற்கான அஸ்திரங்களாகவே இருந்து வந்துள்ளன என்பதனைச் சுட்டிக்காட்டி,

ஆட்டத்தைக் கலைத்து
தொடக்கம் முதல் விளையாடுவோம்
வா... (.31)

என்று சரிநிகர் வாதத்திற்கு அழைத்து ஆணாதிக்கத்திற்கு எதிராகக் கலகம் செய்கிறது. அடக்கம், ஒடுக்கம், அச்சம், நாணம், மடம் என்று தந்தை தலைமை அதிகாரச்சமூகத்தைக் கட்டிக்காக்கும் பொருட்டு பெண்கள் மீது சுமத்தப்பட்ட பண்பாட்டு வெங்காயங்கள் தூக்கியெறியப்பட்ட பின்பும் அறிவியல் முலாம் பூசப்பட்டு, பண்பாட்டுக் காவலர்களால் மீண்டும் மீண்டும் கவர்ச்சிகரமாக விற்பனை செய்யப்படுவதைப் பெரியாரைப் பின்புலமாகக்கொண்டு பகடி செய்யும் படைப்பாளி, தனது ‘பண்பாட்டு வெங்காயம்’ எனும் கவிதையில்,

சேம்பிலுக்கு ஒன்றை
உரித்துப் பார்த்தேன்
அதே அழுகிய ...
பண்பாட்டு வெங்காயம். (.33)

என்று ‘பண்பாடு என்னும் போலித்தனத்தின்’ நுண்ணரசியலை உரித்துக்காட்டுகிறார். அதோடு இந்தப் பண்பாட்டு வெங்காயத்தின் வடிவத்தில், பெண் உடல் மீது திணிக்கப்பட்ட கருத்தாயுதங்களால் பெண் சமூகம் எதிர்கொள்ளும் உபாதைகளை, உதிர்ந்துபோகும் போராட்ட குணங்களை எல்லாம் கடந்து மீறி, விடுதலைக்கான வேட்கையை உரக்க ஒலிக்கும்போது அதன் குரல்வளையை நசுக்கத் துடிக்கும் ஆணாதிக்க வெறியர்களின் வெறியாட்டத்திற்கு எதிராகத் ‘தொல்லை’ என்ற கவிதையில்,

அப்பப்பா என்
சிந்தனைகள் உடலையே
கடக்க முடியவில்லை
இதில் உயரப் பறப்பது எங்கே? (.47)

என்று சாடுகிறார். ‘குழந்தைஎனும் கவிதையில் தன்னுடைய அடுத்தத் தலைமுறைகூட பெண்ணைச் சம உயிரியாக மதிக்கத் தெரியாத ஆணாதிக்கம் நிறைந்த தினவு ஏறிய உடல்களாக இருந்து ஏளனம் செய்வதனை,

நிரம்பிய மையுடன்நீ
எழுதிய பேனா எழுத்துகளுக்கு
குருதி ஓட்டத்தைக்
கொண்டு கொடுத்தது
என் கருவறைப் புத்தகம்
இன்று அவ்வெழுத்துக்கள்
எழுந்து சிரிக்கின்றன
என்னைப் பார்த்து. (.68)

எனப் பதிவு செய்கிறார். பெண்களைக் காலனியாதிக்கப் பண்புகொண்டு நசுக்கியும் சுரண்டியும் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஆணாதிக்கச் சமூகத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் இக்கவிதைப் பிரதியை, ‘மேற்கு என்பதே கிழக்கின் உழைப்பால் விளைந்ததே’ என்ற பின்னைக்காலனிப் பார்வையை அடியொட்டிப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இப்புரிதலை ஒட்டியதான வாசிப்பைக் கொடுக்கும் படைப்பாளரின்,

சுற்றிப் படர்ந்திருக்கும்
பூங்கொடியின்
தயவில்
பூத்துக் குலுங்குகிறது
வெத்துக் கரண்டு கம்பம். (.38)

என்ற கவிதையும் இங்கு எண்ணத்தக்கது. இப்படியாக, சமூகத்தில் பெண்கள் மீது வரையரையின்றிக் கட்டவிழ்த்துவிடப்படும் ஆணாதிக்கத்திற்கு எதிரான கலகக்குரல்களைத் தனது கவிதைகளின் வழி விடுத்து பெண் விடுதலை பேசும் கனலி விஜயலட்சுமியின் ‘பால் (ழ்) முரண் என்ற கவிதைத் தொகுப்பு மூன்றாம் உலக இலக்கியங்கள் வரிசையில் பெண் விடுதலைக்கான போராட்ட அரசியலை முன்னிறுத்தி, கலக இலக்கியமாக இருந்து, மையமறுப்பு மொழியாடலைச் செய்கிறது.

ஆண் x பெண் என்ற பால் பேதத்தை அடிப்படையாகக்கொண்டு இக்கவிதைகள் படைக்கப்பட்டதாகத் தன்னை அறிவித்துக்கொண்டாலும் அவை வாசகப் பிரதிகளாக அர்த்தங்களைத் தன்னுள் உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. பிரதியில் தொகுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கவிதைப்பிரதியும் ஆண் x பெண் என்ற பால் முரணைக் கடந்து, முதலாளி x தொழிலாளி, புனிதம் x தீட்டு, கீழ் x மேல், உயர்வு x தாழ்வு என சமூகத்தால் இணைமுரணில் வைத்து மதிப்பிடப்படும் அனைத்து மதிப்பீடுகளிலும் பொருத்தி வாசிப்பதற்கான திறப்புகளைக் கொண்டுள்ளன.

ஆரிய நிலவுடைமைச் சமூகத்தின் கலாச்சாரக் காலனியாதிக்கக் கருத்தாயுதங்களின் ஆதிக்க மொழியாடல்களைக் கேள்விக்குள்ளாக்கிய படைப்பாளி, இச்சமூகத்தின் ஆகச்சிறந்த காலனியாதிக்க வடிவமான சாதியச்சட்டக அதிகார வடிவங்களை, அது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சார்ந்த பெண்சமூகத்தின் மீது நிகழ்த்தும் மும்மைக்காலனிய ஆதிக்க வடிவங்களின் அழுகிய முடைநாற்றத்தைப் பேசாமல் கடந்து சென்றிருப்பது முரண்பாட்டுணர்வை ஏற்படுத்துகிறது. ஒருவேளை அதைப்பேச தலித் படைப்பாளிகள் இருக்கின்றனர் என விட்டுவிட்டாரோ என்ற எண்ணம் மேலிடுகிறது. இப்பண்பு படைப்பாளியின் படைப்புமன ஆழத்தில் உறைந்து கிடக்கும் சாதிச்சட்டக ஏற்பின் விளைவோ? இந்தியச் சமூகத்தைப் பொருத்தமட்டில் சாதியச் சட்டக ஆதிக்க அதிகார வெங்காயங்களின் தோலை உரித்து, அதன் உட்கிடக்கையை அம்பலப்படுத்தாமல் கிளைகளை ஒடித்துவிடுவது அவ்வாதிக்க வடிவத்தை வலிமைபெறச் செய்வதான செயல்பாடாகவே இருக்கும். தொடர்ச்சியான அவரது எழுத்தில் ஆண் x பெண் பாலிய முரண் கலகமொழியோடு சாதி, மத, இன நுண்ணரசியல் சார்ந்த பாலியல் சுரண்டல்களின் அடித்தளங்களும் கவிதைப் பொருண்மைகளாக வெளிப்படும் என நம்புவோம்.

பயன்பட்ட நூல்கள்
  1. கனலி விஜயலட்சுமி, 2017, பால்(ழ்) முரண், சென்னை - 600 102, பூவரசி வெளியீடு,
  2. முனைவர். க. பஞ்சாங்கம், 2005, தொன்மத் திறனாய்வு, தஞ்சாவூர்- 613 007, அன்னம் வெளியீட்டகம். 

There is a turning to the Erikarai Street if you go straight in the Mettu Street, isn’t there? Just opposite is the platform under the banyan tree. It is there Lechumi akka had her iddli shop. The round shaped platform around the tree was the symbol of the taste of the people of yore. All the time you could hear endless arguments. Only those who have experienced sitting on the cement layered platform will know how significant it is. Sometime ago there used to be a pillayar statue on the platform. The statue was five hundred years old and the president of the village had spirited it away and sold it to a foreign country, they say. There were court cases and so on and later the president became a minister.

It is at the place where there was the pillayar, Lechumi akka had her little eatery.  My house was not too far away from there. When I say it was a shop don’t imagine that it was like a restaurant. The shop consisted of a large pot for the dough, a stove, the iddli maker, a tin shelter around the stove to protect the fire from the wind, a bamboo basket with a lid and some firewood. Akka would sit on a sack and put the coins got for iddly and vadai under the sack.

When the morning light slowly crept in like putting on the cover on a black pillow, akka would start her shop. By the time the twigs caught fire it would be day break. It would be seven o’clock when I went to akka to get iddlies with a plate and an egg.   

It was the time when I stayed with my grandmother and went to school. It was arranged that akka should give me two iddlies and an egg dosai every morning. Akka would get the money from grandmother. When I stood before akka she would invariably say, “I was wondering why you had not come yet?”

Though she repeated the same words every day, they wouldn’t be mere formality. It would make you feel as if she had been really expecting you. She would cover the egg with an aluminum plate to let it cook.  Akka’s yellow face would shine in the morning light. She would sit before the stove only after a dip in the tank, it appeared. Her hair would be still wet and her wet blouse would be sticking on her back. Her hair still uncombed would be pressed close by the water drops. And just on her forehead would be the red pottu like the flame. 

People who returned after their bath at the lake would get iddlies and eat them standing with their wet dhoti around their waist. The iddli would be broad and thick and the iddlies were piled like a little mound of prickly-pear flowers. The steam from them smelled like that coming from the freshly steamed paddy and would be quite refreshing.

Stretching the plate with two iddlies and an egg dosai along with chilli powder, oil and dry chilli chutney, akka would not forget to tell me, “Remember you must study well.”

“Yes, akka.”

When I returned the plate also she would repeat the same words and it would seem as if only because of her iddlies I was studying well. But I could understand that akka was really serious about it.

In the evenings akka would browse through the books in my bag. Akka did not know how to read and write. She had never been to school.

“Vaithi, I could have been sent to school at least for two years. That cursed woman, oh my mother, kept me at home and thrust my sister on me. Now I need not be simply looking at pictures,” she would lament.

When akka was four years old, her mother gave birth to a baby and so she was made to look after her sibling and thus lost her schooling. And when akka was six years her mother ran away from her husband and akka had to live with her uncle.

“Didn’t uncle put you in school?”

No, my aunt made me pick up cow dung…”

Akka stopped with that. Only my grandmother would narrate akka’s story in a few sentences now and then.

“Just a year after she attained puberty, the girl got a husband. But of what avail? That boy was a temple bull. He had a number of affairs in the village. He had a firewood shop. He had enough money to go about. He had a good physique craving for sex. Once in his drunken state he thrashed her mercilessly. So she left him and came here. She did not turn back. Later he came and called her several times. But she refused to have anything to do with him.”

Now akka would be twenty or twenty-two. Her house was in the Naickar Street running opposite the lake. It was a thatched hut. At the backyard there were malabarnut bushes serving like a fence. Near akka’s house my classmate Radhakrishnan was living. He was a close friend of mine.  I used to visit him and on my way back I would enter akka’s house also. In the inner room, akka’s father Kuthirai Gopal Naickar would be lying down. He was once driving a horse drawn cart between Virudhachalam junction and the village. But a sudden attack of paralysis crippled him.

“What did you do with the horse, akka?” I asked her when I went to her house for the first time.

“We could not feed even ourselves. How could we feed it? The horse used to pull the cart everyday and it could not remain in a place and felt uneasy. So I sold it away to the first bidder. It is enough it is safe in someplace away from our eyes. A creature which could not speak, you know?”

Later some other day akka herself told me this:

“Even yesterday that man came to call me. I said ‘no more of it’.”

“Who, akka?”

“Who else? Who would call me? That rogue who tied the knot.”

“You could have gone, akka!”

Akka stared at me. She stood in front of me. “Look at this.” So saying she unbuttoned her blouse and showed her breasts. That sight shocked me. That was the first time I saw a woman’s breasts. Just above her nipple there was the impression of teeth. It was a scar; it was as if there was no nipple at all. There was black skin thick like a nail bitten and spit off. The scar was the size of the inner palm in the breast which was a little whiter than the body.

“How can I live with a man who bites like this when he is drunk? You tell me, Vaithi. Once when I refused, he branded me with a piece of burning wood. If you see it you will be frightened.” She sat in front of me and started crying. But it was only for a few minutes. After sometime she became all right consoling herself.

Now I am peaceful without any worry. I cook and sell. I make some money. My father and I have our gruel in an honourable way. I have a peaceful sleep. Why should I want a man and the misery?” she said buttoning up her blouse.

Sometime after this when I went to the iddli shop she signalled to me to look at the man sitting near her shop. The man was eating. He was emaciated due to T.B. His dhoti was dirty and his hair uncombed. The very act of eating was painful, it appeared. Only later in the evening I came to know who it was. He was her husband. He had to close his shop. He had T. B. and he was coughing all the time.

“Akka, give him hundred rupees. He looks very pathetic.”

Akka used to keep all the money she saved with my grandmother.

“Why do you give to that rogue? You earn your money sitting before the hot stove. Why do you pity the man who spent away his money on harlots?”

“Let it go. Would the women who slept with him come now? I have some money. Let him eat for two months and die.”

That evening akka gave him some money and sent him away. As akka had predicted he died in two months.

When I was in my tenth class, Siva teacher came to live in our street. His house was just opposite mine. He was a teacher in the primary school. He became friendly with me soon. I introduced myself to him only in akka’s iddli shop. I was attracted by his lively speech and his way of moving with me without minding my age.  He did not treat me as a student or a little boy. He had a strong black body. He appeared to expose it in his vest and folded dhoti when he came to the iddli shop. Akka was happy that the teacher himself came to her shop to get his iddlies. Her joy could be seen distinctly on her face.   

He would tease akka in the few minutes she would have his hot dosai ready.

“What do you put specially in your dosai? You also make your dosai with rice and how is it that it gets its special flavour and taste?” He would wink at me. In reply akka would say, “Through my fingers flows honey, do you want to see?” and she would stretch her fingers at him.

“Is it a finger or okra?” he would ask. She would also have a ready retort for it. It was thus in the morning they would tease each other. If there were many people in the shop akka would avoid speaking. Siva also would keep quiet.

In Thangamani Palace, “Parthal Pasitheerum” film was playing. Siva told akka and me, “My hunger will not be satisfied if I don’t see the film today.” Then he said, “You also come with me Vaithi, it is six o’clock show.” Akka appeared to be looking somewhere. That evening Siva and I went to see the film. The lamps were switched on in the interval. Only when the boys were selling ‘soda, colour, tea’  could we see akka in the women’s side. Akka smiled at me when I accidentally turned towards her. Siva knew that akka had come, it appeared. He signalled to the boy selling aerated drinks to give one to akka. When the boy went near her, she became shy and shook her head as if to decline it. Siva nodded his head to insist on her to take it. Akka also got it. And drank it all the time showing that she was reluctant.

When I was talking in akka’s house one day, she suddenly asked me, “What do you think of Siva teacher, Vaithi?”

I thought for some time and said, “He is a jovial person.”

Akka did not reply.

“Why, what is the matter?”

Nothing, leave it.”

“Say openly, akka.”

“I saw the teacher in the market in the evening. He asked me, ‘what? You have fish curry tonight?’ Those who were standing near us have a wagging tongue. So I kept quiet. It was about nine o’clock at night. Somebody knocked at the door. And who do you think it was? Your teacher! How could I turn him away? It would be discourteous. He had his food and stayed that night. Fortunately, father did not wake up at all throughout the night.”

Akka lowered her head.

After a few days, akka asked for all the money she had given my grandmother for safe keeping.

“Why, woman?”

“It seems two kanis of land are available at a cheap rate at Rasampalayam, patti.  I thought I could buy it.”

“Do it. But who is helping you?”

“Teacher.”

Grandmother was looking at akka without saying anything. After some time she said, “Whatever it is, it is enough you are happy. Women from your street gossiped a lot of things about you. But I said I knew Lechumi very well. It is all right. This amount will not be enough.”

“He said he would advance the amount and register the land in my name.”

“Be careful. Things might go wrong.”

Nothing would happen, patti. Teacher is a learned man. He would not do anything like that.”

I was busy with my school final examination. Akka took leave saying her mother-in-law had passed away. But it was only for the village. She told my grandmother the truth. She was going with the teacher to register the land. She promised to return in two days. But she did not come back till I finished my examination and started for my home town. The shade of the banyan tree was empty. Even if I forgot my birthday akka would not forget to get me a new shirt.  My birthday came. But akka did not come. Nobody knew where she was.

One day grandmother said, “A good girl, he must treat her kindly.”

I returned to the village. I must get the results and I must apply to the college. It was then akka came back. When I came home after going out she and grandmother were engaged in an interesting conversation. Akka was cleaning greens. “Vaithi has come,” she said looking at me. Akka had gone very thin and dark. Only that day, after two months, I got the details.

“I was cheated, Vaithi. I thought he was educated. Only later I realized he was a useless man,” she said.

Siva got a house somewhere for akka. They were together for two months. Only then she came to know that he was making arrangements for his marriage. It was a teacher working with him.

Siva had himself transferred to Kurinchipadi. I went there to meet him. He welcomed me warmly, took me to Muniyandi Vilas and got me biryani. When I had an occasion I asked him, “I thought you would marry Lechumi akka?”

“Who, that iddli shop woman?” said Siva teacher.

After completing my Pre-University class I came to my grandmother’s house during holidays. I went with a plate to the banyan tree iddli shop. Akka was very happy. “Come to my house in the evening,” she said. I went and I talked about Siva.

“That man had done like this, akka?”

“Leave it,”

“What happened to the money given for the land?”

“Land? Everything was a lie. It was like paying wages. Wages for a man.”

Akka laughed. Then she cried. She cried for a long time.


Prapanchan passed away on 21  December 2018 and this translated version of his short story will be a fitting tribute to his memory.

Prapanchan is the pseudonym of Sarankapani Vaidyalingam. He is a well known writer in Tamil. He has written more than 200 short stories, many novels and essays. Born in the year 1945 in Puducherry, Prapanchan had his early education there and his Tamil studies for a Pulavar course at Karanthai Tamil Sangam, Thanjavur. He is known for his realistic portrayal of human life. The natural tendency to have sympathy, grace and sacrifice, buried deep in the human heart is brought out in his works. Prapanchan’s stories are not modelled on the work of any writer but are born out of pure experience of the self. His style is his own making without the shadow of any other writer, a style strong and simple like the handloom cloth and it comes into one’s heart and writes itself,” says Sirpi Balasubramaniam.

ஏதோவொரு நாள் அடிக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டு ஊர்ந்தபடி வீடு திரும்பலாம் நான், ஆனால் என் உடைந்த நெஞ்சத்திலிருந்து கதைகளைத் துயரத்திலிருந்து அழகை என்னால் ஆக்கமுடிகிறவரை அது இல்லை.

- சில்வியா ப்ளாத், சுருக்கப்படாத குறிப்புகள்

தாயகம் கடந்த தமிழ் மாநாட்டில் புதிய சிறகுகள் என்ற தலைப்பிலான அரங்கத்தில் பெண்ணிய எழுத்து குறித்து பேச, கட்டுரை எழுத நான் அழைக்கப்பட்டவுடன் நான் மகிழ்வடைந்ததற்கு முக்கிய காரணம் உண்டு: இந்த வாய்ப்பால் நான் இதுவரை அறியாத புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள், குறிப்பாக பெண் எழுத்தாளர்களின் எழுத்தை வாசிக்க எனக்கு இதனால் கிடைத்த உந்துதலே அது. பலசமயம் புதிய புத்தகங்கள் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தாலும், வாசிப்பில் மனம்கொள்ளும் ஆசையையும் எழுத்து தரக்கூடிய இன்பத்தையும் நேர்க்கோட்டில் இணைக்க வாசிப்புக்கான நேரத்தை நாம் தரவேண்டும். ஆனால் அன்றாடத்தில் குடும்பமும் உறவுகளும் பணியும் நேரத்தைப் பிய்த்துத் தின்றுவிடும் சூழலில், இப்படியான நிகழ்வுகளில் பங்குபெறும் வாய்ப்பு தரும் உந்துதல் மட்டுமே நேரத்தைக் கொஞ்சம் நமக்கான வாசிப்புக்கு பங்கிட்டுத் தரச்செய்கிறது.

என் கட்டுரையின் இயங்குதளங்களை முதலில் கூறிவிடுகிறேன். பெண்ணியம் என்றவுடன் பெண் எழுத்தாளர்களின் எழுத்தை மட்டும் விசாரிக்கும் தமிழ்ச்சூழலின் பரவலான விமர்சனப்போக்கை இக்கட்டுரையும் பிரதிபலிக்கிறது. ஒரு எழுத்தாக்கத்தை பாலின வகைப்பட்ட எழுத்துச் செயல்பாடாக (gendered textual production) எழுத்தாளரின் பால் (sex) எனும் சாராம்சத்தை வெளிக்காட்டுவதாகப் பார்ப்பதோடு எனக்கு உடன்பாடில்லை. மேலும் பெண் எழுத்தாளரின் ஆக்கம் பெண்சார்பு நிலைகளோடு செயல்படும், ஆண் எழுத்தாளரின் ஆக்கம் அப்படியில்லை என்று பால் இருமையை படைப்பின் இருமையாக மாற்றி பொதுப்படையாக நிறுவுதலிலும் எனக்கு ஒப்புதலில்லை. பெண் உணர்வுகளை, சார்புநிலைகளை முன்வைக்கிற ஆண் எழுத்தாளர்களின் கதைகள் (அரிதாகவேனும்) நம்மிடமிருக்கின்றன. உடனடியாக நினைவுக்கு வருவன:

புதுமைப்பித்தனின் வாடாமல்லி, அகல்யை, அசோகமித்திரனின் விமோசனம், சமீபத்தில் வெளிவந்த திலீப் குமாரின் புதினமான ரமாவும் உமாவும். என்றாலும் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதற்கு சில முகாந்திரங்கள் உண்டு. முதலில், சில வருடங்களாகத்தான் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகள் தமிழ் இலக்கியச் சூழலில் பேசுபொருளாகியிருக்கின்றன, இன்னமும்கூட பிரபல ஆண் இலக்கியவாதிகள் தருகிற மையநீரோட்டத் தரவரிசையில் பெண் எழுத்தாளர்கள் இடம்பெறுதல் அபூர்வமாகவே இருக்கிறது, தவிர, அப்படி இடம் பெறுதல்கூட சாதி, நட்புவட்டம், பிராந்தியம் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு செய்யப்படும் சைகையளவாக இருக்கிறது. பெண் எழுத்தாளர்களின் எழுத்து குறித்த, பெண்ணியம் குறித்தத் தீவிர ஆய்வுகள், வாசிப்புகள், விமர்சனங்கள் பெரிதும் நம்மிடையே இல்லை. இது போன்ற பெண்ணியத்துக்காக ஒதுக்கப் படுகிற அரங்குகளில்கூட பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பேசவில்லையென்றால் வேறெங்கே பேசுவது? எனவே, அரசியல் நிலைப்பாடாக பெண்களின் எழுத்தை முன்நிறுத்தவேண்டிய வேண்டிய தேவையிருக்கிறது. மேலும், எழுத்தாக்கத்தில் எழுத்தாளரின் பால் என்பதன் கையெழுத்துக்கு இடமில்லை என்றாலும், ஆக்கம் வாசிப்புப்பிரதியாக துலங்கும் போது, பல சமயங்களில் அதனை வாசகர் அர்த்தப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒரு முக்கியமான சட்டகமாக எழுத்தாளரின் பால் செயல்படுகிறது. உதாரணமாக, பெண் ஒடுக்குமுறை, குடும்பத்தின் ஆண் செலுத்தும் வன்முறை, பெண் பாலியல் போன்றவை இடம்பெறும் ஆக்கம் ஆண் எழுத்தாளரைவிட பெண் எழுத்தாளரிடமிருந்து வரும்போது கூடுதல் முக்கியத்துவத்தை, ஈடுபாட்டை வாசிப்புச் செயல்பாடுகளில் பெறுவதை நாம் பார்க்கிறோம்.

தாயகம் கடந்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளை (குறிப்பாக சிறுகதைகள், ஒரு குறுநாவல்) ஆராய முயலும் இக்கட்டுரை, அவற்றைப் பற்றிய விரிந்த சுற்றுப்பார்வையை (survey) வைப்பதாக எழுதப்படவில்லை. எடுத்துக்கொண்ட சில கதைகளின் கதையாடல்களில் பெண்பார்வையில் புலம்பெயர்ந்தவெளியும் வீடும் எப்படி பங்குபெறுகின்றன; எத்தகைய அனுபவங்கள், ஞாபகங்கள் மையப்படுத்தப்படுகின்றன; பாலியல்கள், பால் அடையாளங்கள், சகோதரத்துவ ஒன்றிப்பு கதையாடலில் (narrative) எவ்வகைகளில் உருவாக்கப்படுகின்றன; இவை உருவாக்கப்படுகிற வழி முறைகளில் ‘தமிழ்ச் சமூகபண்பாட்டு நியதிகள்’ என்று கருதப்படுபவை எவ்வாறு செயல்படுகின்றன; இவற்றில் எவ்வகையான குறுக்கீடுகள் நடக்கின்றன போன்ற கேள்விகளை சரடுகளாக்கி நகர்கிறது இக்கட்டுரை. இடம்பெயர்தலின் சமூக, பண்பாட்டுக் கூறுகளும் ஞாபகங்களும் பதிந்திருக்கக்கூடிய சொல்லாடல் களம் (discursive site) இலக்கியம் என்கிற புரிதல் இக்கேள்விகளின் அடிப்படை. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் எழுத்தாளர்கள் அவர்கள் ஆக்கங்களில் தத்தம் தாயகங்களையும் எழுத்துச்சட்டகங்களாகக் கொண்டிருக்கிறார்கள்; எனினும் கட்டுரை வகைமையின் பக்க எல்லைகளும் தாயகம் கடந்த எழுத்து குறித்த என் ஆர்வமும் கட்டுரையின் பேசுபொருளைத் தீர்மானித்திருக்கின்றன.

Diaspora என்ற வார்த்தை dispersion அதாவது பரவுதல், தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பரவி யிருத்தலை எளிய பொருளில் குறிக்கிறது. ஆனால் இந்தப் பரவியிருத்தல் என்பது ‘இங்கிருந்து’ ‘அங்கு’ என்று பயணம் மூலமாக பிறிதொரு புலத்தில் உடல்ரீதியான நிலைகொள்ளுதல் எனப் புரிந்து கொள்ளுதல் எளிமைப்படுத்துவதாக இருக்கும். மேலும் ஒரு சமூகத்திரளை, ஒற்றைப் பண்பாட்டை, ஒரு பிராந்தியத்தை வைத்துப் புலம்பெயர்ந்தவர்களை பெட்டிகளிலிட்டு அடையாளப்படுத்தல் வசதியென்றாலும் அப்படிச் செய்வதிலிருக்கும் பிரச்சினைகள் புலம் பெயர்தல் ஆய்வுகளில் பேசப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, இன்றைக்கிருக்கும் உலகமயச்சூழலில் ’மனிதர்களும் பொருட்களும் பணமும் தகவலும் தொடர்ச்சியான சுழற்சியில்’ இருக்கும்போது, நாடு கடந்த சுற்றுகளையும் (transnational circuits) அவற்றின் சிக்கலான பண்பாட்டு உருவாக்கங்களையும் நாம் காண வேண்டிய தேவையிருக்கிறதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தவிர, புலம்பெயர்தல் (diaspora) என்பதற்கும் குடிபுகுதல் (immigration) என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டை உணர்தலும் அவசியம். பின்நவீனத்துவச்சிந்தனையை மானுடவியல் ஆய்வில் பதிக்கும் ஜேம்ஸ் க்ளிஃபர்ட் இந்த வேறுபாட்டைப்பற்றி எழுதும்போது, நினைவேக்கமும் (nostalgia) இழப்பும் புலம்பெயர்ந்தவர்க்கும் குடிபுகுந்த வருக்குமானவை, என்றாலும் புலம்பெயர்ந்த நாட்டின் தேசியச்சொல்லாடலுக்கு முற்றிலும் அந்நியமானவர்களாக புலம்பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் (Clifford 1994, 307). குறிப்பாக இடம்பெயர்தலின், வன் இழப்புகளின் கூட்டுவரலாற்றைக் கொண்டவர்களை புலம்பெயர்ந்தவர்களாக வரையறுக்கும் க்ளிஃபர்ட், அவர்களின் வலியை, புலம்பெயர்ந்த இடத்தின் அனைவரையும் உள்ளிழுக்கப்பார்க்கும் தேசியச் சொல்லாடல் எளிதில் ஆற்றிவிடமுடியாது எனக் கூறுகிறார் (307). இப்படியான கொடிய வரலாறுகளின் பின்னணியில், புலம்பெயர்ச் சொல்லாடல் வேர்களையும் வழிகளையும் பின்னிப்பிணைந்து மாற்றுப் பொது வெளிகளை, குழுவிழிப்புணர்வை, ஒன்றிப்பை (Solidarity) உருவாக்குகிறது; விளைவாக புலம்பெயர்ந்த இடத்தில் வித்தியாசத்தோடு வாழ, கால / வெளிகளைத் தாண்டிய அடையாளங்களை புலம்பெயர்ந்தவர்கள் பராமரிக்க முடிகிறது (Clifford, 308). மேலும், அவர்களுக்கான தனித்த அரசியல் போராட்டத்தோடு - தேசத்துக்கான போராட்டமாகவும் அது இருக்கலாம் - ஒன்றிணைந்து இயங்கக்கூடியவர்களாகவும் புலம்பெயர்ந்தவர்களிருக்கிறார்கள். (Clifford, 307-8). வாழும் இடத்திலிருந்து அகற்றப்படுதல், உடைமைப்பறிப்புகள், இவற்றின் நீண்ட வரலாறுகளும் வம்சாவளிகளும் புலம்பெயர் தன்னிலைகளை வரையறை செய்வதாக கனேடியப் பேராசிரியர் லிலி சோ-வும் கருதுகிறார். (2007,14).

மேலே சொன்னவற்றின் அடிப்படையில் ஈழத்தமிழர்களையும் இந்தியத் தமிழகத் தமிழர்களையும் ‘புலம்பெயர்ந்தவர்கள்’ என்ற ஒரே வகைமைக்குள் கொண்டுவருவது பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. இந்தியத் தமிழர்களை ‘குடிபுகுந்தவர்கள்’ என்று கொண்டோமானால், அவர்கள் கட்டமைக்கிற பொது வெளிகளைப் பிரித்துப்பார்க்கவேண்டியிருக்கிறது. மேலும், இவ்விரண்டு வகையினர் மத்தியிலும் நிலவும் இந்தக் கட்டமைப்பில் பெண்கள் பங்குபெறுகிற முறைகளை அவதானித்தல் அவசியம். ‘பெண்ணை’ அல்லது ‘பெண்களை’ ஒற்றை வகைமயாகப் பார்க்காமல் இவற்றையணுக முயற்சிக்கிறது கட்டுரை.

ஆணின் ‘வரைபடத்தில்’ பெண் எனும் பயணி பொதுவாக இந்திய, தமிழ் வம்சாவளியினரைப் பொறுத்தவரை இடம்பெயர்தல் பெண்ணின் பால் இருப்பில் எழுதப்பட்டிருக்கும் ஆண் - மையப் பண்பாட்டு விதி. திருமண பந்தத்தில் கணவனின் வசிப்பிடத்தில் பெண் போய்ச்சேர்வது இயல்பாகவேக் கருதப்படுகிறது. வீடு இடவாகுபெயராக குடும்பத்தை, குறிப்பாக மனைவியைச் சுட்டுகிறது; இல்லாள் இல்லத்திலிருப்பவளாக மனைவியை அடையாளப்படுத்துகிறது. எனினும் பெண்ணைப் பொறுத்தவரை, ‘வீடு’ உறைவிடம் என்பதன்றி, அந்தச் சொல்லுக்கிருக்கும் ‘விட்டுவிடுதலை’ என்கிற பிறிதொரு பொருளில் அவள் தாய்வீட்டையும் அவ்வீடுசார் நிலத்தையும் அன்றி, கணவன் வீட்டையோ, அதுசார் நிலத்தையோ சுட்டுவதாக இல்லை. சந்திரா இரவீந்திரனின் ‘யாசகம்’ ([2001] 2011) கதையில் வீடு அம்மாவின் நினைவுகளோடு கூடிய வீடு; முற்றத்து வேப்பமரக்கிளைகள், அம்மாவின் மூக்குத்தி ஒளிரும் சமையலறை, ஊஞ்சலின் ஒய்யார ஆட்டம் இட்டுச்செல்லும் மனதின் வானுயரம், வெள்ளை மணற்கும்பி தந்த நிசப்த வேளைகள், ஏகாந்தம் இவை அனைத்தும் திருமணத்தில் தொலைந்துவிடுகின்றன. கதைசொல்லிப் பெண்ணின் ‘சுவாசத்துக்காக மூச்சுக்காற்றையே தந்து விட முயல்பவன்’ அவள் காதலித்து மணந்தவன் (93). அவளின் ‘சரிபாதியாக’ அவனைக் கருதுகிறாள் (89), ஆனால் அந்தச் சரிபாதியின் ‘விரல்களில் நசித்துக் கொண்டிருக்கிறது அவளின் இதயம்’ (93). இயல்பான சிறகுகள் வெட்டப்பட்டுவிட, தனது ஆண்பாதி தரும் சிறகை ‘கடன்வாங்கி’ அணியவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு (93). அவளை அவளாகவே ‘பறக்க விட்ட’ அவளது அன்னையின் அருகாமைக்கான யாசகம், அன்னையோடான ஒன்றிப்புக்கான யாசகமாகிறது (93). சுதந்திரத்தைச் சுட்டும் மிகவும் வழமையான கற்பனைவாத உருவகமான வானமும் பறத்தலும் கதையாடலில் வருகின்றன. இவற்றுக்கு நேரெதிராக நகர்தலைக் கண்காணிக்கும் ‘மாயப்பலகையொன்று எச்சரிக்கையுடன்’ அவள்முன் நடப்பட்டிருப்பதும் சொல்லப்படுகிறது (88). அவள்மேல் ‘நெருப்புத் துகள்களோடு நகர்கிற’ இரு கண்கள் வேறென்ன, அவன் கணவனுடையதாகத்தான் இருக்க வேண்டும் (88). அவள் வாழ்வுக்கு அவன் வரைபடமிட்டுத் தந்திருப்பதாகக் கூறுகிறாள் கதைசொல்லி (88). கணவனின் வரைபடத்தில், கண்காணிப்புப் பார்வையில் அவளற்ற அவளின் பயணமாக நகர்கிறது வாழ்க்கை.

எனினும், நகைமுரணாக அவளுக்கு வாழ்க்கை ‘அழகாக’ இருக்கிறது: ‘லண்டன் பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் பெயர்தெரியாத மரங்களைப்போல, வாசனையேதுமற்ற வண்ணப்பூக்களைப்போல, மொழி மறந்த உதடுகள் தரும் கவர்ச்சிப்புன்னகையைப்போல’ அழகு அது (89). பெயர் தெரியாத மரம் பசுமையென்றாலும் அந்நியம், வண்ணமிருந்தாலும் வாசமிலா மலர்கள், மொழித்திறனை கைவிட்ட உதடுகள். திருமண உறவில் அந்நியப்படுதலும் காதல்நீக்கமும் பயனற்ற மேம்பூச்சுத்தன்மையும் இடம்பெயர்ந்திருக்கும் புலத்தின் வர்ணனைகளாகிவிடுகின்றன. விளைவாக, புறவெளி கதையின் பின்னணியாகவன்றி அகத்தின் நீட்சியாகக் கதையாடலில் பங்குபெறும் இன்றியமையாத கதாபாத்திரமாகிவிடுகிறது.

சந்திராவின் சிறுகதை புலம்பெயர்ந்திருக்கும் பெண்ணின் மன உணர்வுகளைச் சித்தரிக்கிறது என்று சொல்லி விடலாம். ஆனால், பெண்ணைப் பொறுத்தவரை, புலம் பெயர்தல் இரண்டு பரிமாணங்களில் செயல்படுவது கதையை வாசிக்கையில் மனதிலோடியதை மறுக்கமுடியாது. புலம்பெயர்தலை ஒரு குழுவின் பொதுவானவன் இழப்புகளின், இடம்பெயர்தல்களின் கூட்டு வரலாறைக் குறிக்கும் குறியீட்டுச்செயல் என்று கொண்டால், இந்திய அல்லது தமிழ் சமூகத்தில் திருமண நிமித்தத்தால் பிறந்த இடத்திலிருந்து பிய்த்து வேறிடத்தில் நடப்படுகிற - சந்திராவின் கதைசொல்லியின் வார்த்தைகளில், ‘சிறகுகள் வெட்டப்படுகிற’- வன் இழப்பை, உள ஊறுதனை காலம் காலமாக சந்தித்துவரும் பெண்கள் அனைவருமே தத்தம் தாயகங்களில் இருந்தாலும் புலம்பெயர்ந்தவர்கள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகிறார்கள். ஆக, பெண்ணின் புலம்பெயர்தலோடு திருமணத்தை முன்னிட்டு பெண்ணின் புலம்பெயர்தலும் சேரும்போது, தாயகம் நீங்குதலோடு தாயிடத்தை நீங்குதலும் சேர்ந்துவிடுகிறது. இந்நிலையில் புலம்பெயர்தல் கொள்கிற இரட்டைத்தன்மை பெண்ணின் இழப்புகளிலும் பிரதிபலித்து, கூடுதல் மன அழுத்தத்தை நினைவேக்கத்தைத் தரக்கூடியதாகவும் உள்ளது. இந்த இரட்டைத்தன்மை அதனளவில் தனித்த, விரிவான ஆய்வைக் கோரும் பொருளாக இருக்கிறது.

குடிபுகுதலும் தேசியச் சொல்லாடலும்

இழப்புகளின் வேறுபட்ட ஒரு சுவாரசியமான கதையாடலாக, புலம்பெயர் வெளிக்கு எதிர்ப்புள்ளியில் விரிகிறது காஞ்சனா தாமோதரனின் ‘ஒரு அமெரிக்க நெடுஞ்சாலைப் பயணம்’ (2009). இங்கே 11 செப்டம்பர் 2001-இன் நியூயார்க் இரட்டைக்கோபுரத் தாக்குதலில் கதைசொல்லியின் கணவன் மறைய, அந்த உறவிழப்போடு அவள் ஓவியக்கலையில் கொண்டிருக்கும் ஊக்க இழப்பும் நிகழ்கிறது. சில வருடங்களுக்குப்பின் ‘அகத்தூண்டல்கள்’ அற்றுப்போக, ‘இறுதிப் புகலிடமான கலையும் இழந்து நிற்க’ ‘திட்டமோ இலக்குகளோ இல்லாத’ நெடுஞ்சாலைப் பயணத்தில், அமெரிக்காவின் பலபண்பாட்டுக் குடியினரையும் அவள் சந்திக்கிறாள். கதையாடலில் மெய்ன், மிஸிஸிப்பி, வர்ஜினியா என்று விரியும் நிலப்பரப்புகள் வெவ்வேறுவகை இழப்புகளை சங்கிலியாகக் கோர்த்து அவள் முன் காட்சிப்படுத்துகின்றன. அமெரிக்கப் பூர்வகுடியினரின் பல வருடங்களுக்கு முந்தைய நில இழப்புகளும் இன அழிப்பும், சமகாலத்திய கேத்ரினா புயலில் கிராமங்கள் சந்தித்த இழப்புகளும் இச்சங்கிலியின் சில கண்ணிகள். கதைசொல்லியை ஆற்றுப்படுத்தி, உலகோடு அவள் ஒத்திசைந்துவாழ பூர்வகுடியினர் செய்யும் மருத்துவச் சடங்குக்குப் பிறகு கதையாடலில் வைக்கப்படுகிற வேறு சில இழப்புக் கண்ணிகளில் முதன்மையானது அமெரிக்கப் பெண்ணொருத்தியின் கணவனின் சாவைப் பற்றிய குறிப்பு. ஈராக் போரில் நடந்த இது கதைசொல்லியின் கணவனின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின்போது நடந்த சாவுக்குச் சமமாக வைக்கப்படும் ஒரு கதைக்கூறு. அமெரிக்கப் பெண்ணோடு நட்பு வலுப்பட்டு, அவளது பிரசவத்தின்போது கதைசொல்லி குழந்தையின் தொப்புள்கொடியையறுக்கிறாள், தன் ‘தாய்மையை உணர்கிறாள்.’ அந்த நாளும் செப்டம்பர் 11 ஆக இருக்கிறது. இரட்டைக்கோபுர அழிப்பை பதிலீடு செய்யும் பிறப்பின் பிரசன்னத்தில், கதைசொல்லி இழந்த உறவை பின்னாளில் பதிலீடுசெய்யக்கூடிய அமெரிக்க ஆண் ஒருவரும் பங்குகொள்கிறார்.

பூர்வகுடியினர் நிகழ்த்தும் மருத்துவச் சடங்குக்கு முன், கதைசொல்லியின் கூற்று: ‘பல மில்லியன் வருடங்களுக்கு முன்னும் இந்நிலம் இப்படியேதான் இருந்திருக்கும். நீலவானத்தில் நகரும் வெண்மேகங்களுடன் பாறைகளும் பள்ளத்தாக்கும் சேர்ந்து நகருவது போலிருந்து, தலை மெல்லச்சுற்றியது. உறைந்த காலம் சூழக்கிறங்கும் தலையுடன் நான் அங்கே நின்றேன் (51).’ பல்லாண்டுகள் சென்றும் மாறாத நிலம், உறைந்த காலம் என்கிற விவரணைகள் இழப்பெனும் விதியின் மாறாத்தன்மையைச் சொல்கின்றன. ஆனால் மேகமும் பாறையும் வானமும் நகர்வது இந்த மாறாத்தன்மையிலும் நிற்காத இயக்கத்தைக் குறிப்பிடுவதாகவுள்ளது. சாவின் மத்தியிலும் முன்நகரும் வாழ்க்கையைச் சுட்டுவதுபோல கதையாடலில் பின்னர் வருகிற நேர்மறைச் சம்பவங்களை - குழந்தையின் வரவு, புது உறவின் அணுக்கம் போன்றவை - சுட்டும் கதையாடல் குறியீடுகளாக இவை செயல்படுகின்றன.

புலம்பெயர்ந்தவர், குடிபுகுந்தவர் என்கிற வகைமைகளை வித்தியாசப்படுத்துவது வன்இழப்புகளின், இடம்பெயர்தல்களின் கூட்டு வரலாறு என்று பார்த்தோம். செப்டம்பர் 11 இரட்டைக்கோபுரத் தாக்குதலில் சம்பவித்த மரணங்கள் வன் இழப்புகள்தாம். ஆனால் இடம் பெயர்தலின் கூட்டுவரலாறு இதிலில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். கதைசொல்லியின் கணவனின் மரணம் அதில் உயிரிழந்த அமெரிக்க மக்களின் மரணங்களில் ஒன்று. இந்த செப்டம்பர் 11 நிகழ்வின் மூலம் அமெரிக்க தேசியத்தின் உள்வாங்கும் சொல்லாடலுக்குள் (American nationalism's discourse of assimilation) கதையாடல் தொடக்கத்திலேயே நுழைந்துவிடுகிறது. கணவன் மறைந்த துயரத்தை விவரிக்கும் கதைசொல்லியின் கூற்று இதை வெளிப்படையாக நிறுவுகிறது: ‘வெளியே, என் வாழ்நாளில் நான் கண்டிராத வகையில் ஒரு தேசமே இணைந்து நின்றது. அன்றாடத்தின் இயந்திரத்தனத்தில் இதயத்தைத் தொலைத்துவிட்டதாய் நான் நினைத்திருந்த தேசம் தன் இதயத்தைத் திறந்து காட்டியது. வெறுப்பில்லை. அன்பு இருந்தது. ‘ஐ லவ் யூ’ (37). அமெரிக்க தேசத்தின் இதயம் திறக்க, கதைசொல்லியின் அடையாளம் குடிபுகுந்த தேசத்தின் அடையாளத்துக்குள் உள்வாங்கப்படுகிறது. இவ்விடத்தில் இந்த உள்வாங்கலை ஆங்கிலமொழிப்பயன்பாடு சுலபமாக்குகிறது. ஈராக் போருக்கெதிராக நியூயார்க்கில் நடந்த எதிர்ப்புப்பேரணியில் கதைசொல்லி பங்கெடுக்கும் முந்தைய நிகழ்வு அமெரிக்க தேசியத்தின் கரிசனைகளுக்கு மாற்றான கரிசனையை அவர் கொண்டிருப்பதாக முதல் வாசிப்பில் தெரியலாம், ஆனால் கதையாடல் இந்நிகழ்வையும் அமெரிக்கத் தேசியச் சொல்லாடலுக்குள் கதைசொல்லியின் அடையாளத்தை நிறுவுவதற்கே பயன்படுத்துகிறது. ஈராக் போரில் கணவனை இழந்த அமெரிக்கப் பெண்ணை கதைசொல்லி பின்னர் சந்திக்கும் தருணத்தின் உரையாடல் இதற்குச் சான்று: ‘தப்பா நினைக்காதே, ஸமாந்த்தா,’ என்னும் முகாந்திரத்துடன் போர் எதிர்ப்புப் பேரணியில் பங்கெடுத்தது பற்றிச் சொன்னேன். நம் அரசியலமைப்புச் சட்டம் தரும் உரிமையுடன். ஆக்கபூர்வமான ஜனநாயக வழியில்.’ இதையெல்லாம் ஏன் மன்னிப்பு கேக்கிற தொனியிலே சொல்லுறீங்க, கோதை? நீங்க ஒரு நல்ல குடிமகள். நாமதானே நம்ம அரசாங்கத்தைத் தட்டிக்கேக்கவும் விமரிசனம் செய்யவும் முடியும்?’ (72 - 73)

அமெரிக்கப் பெண்ணின் ‘நாம’ ‘நம்ம அரசாங்கம்’ என்கிற தன்மைப் பன்மைப் பயன்பாடும் கதைசொல்லிக்குத் தரப்படும் ‘நல்ல குடிமகள்’ உத்திரவாதமும், பல பண்பாட்டினரையும் உட்கொள்ள முயலும் அமெரிக்கத் தேசியச்சொல்லாடலின் அழுத்தமான மொழித்தருணங்கள். ஆனால், கதைசொல்லிக்கு இதைக் கேட்டவுடன் ‘பலதளங்களிலும் பல முரண்கள் நெருடுகின்றன.’ ‘எல்லா நவீன தேசங்களும் எதிர் கொள்ளும் முரண்கள்’ என்று அடைப்புக்குறிகளுக்குள் கொடுத்துவிட்டு மேலே தொடர்கிறார்: ‘ஆனால் வலி நிரம்பிய ஆத்மசோதனைகள் மூலம் முரண்களை விலக்கி விலக்கி மெல்ல முன்னேறிய சரித்திரம் உள்ள சமூகம் இது. இந்தக் குடிமைச் சமூக அமைப்பின் மேல், அந்த ஒட்டுமொத்த மனசாட்சி மேல், நம்பிக்கை வைத்துத்தான் முன்னகர முடியும் (73).’ சில பல நூற்றாண்டுகளாய் குடிபுகுந்த பலபண்பாட்டினரும் கட்டமைத்திருக்கிற நவீனதேசத்தின் முரண்கள் கதைசொல்லிக்குத் தெரியாமலில்லை. ஆனாலும் அமெரிக்காவின் ‘குடிமைசமூகம்,’ ‘ஆக்கபூர்வ ஜனநாயகம்’ ஆகியவற்றால் முரண்களைக் களைந்துவிடமுடியும் என்றும் நம்பிக்கை ஏற்படுகிறது. கதைசொல்லி அமெரிக்காவில் ‘குடிபுகுந்த’ இந்தியத் தம்பதியினரின் பெண் என்பதற்கு ஏற்றவகையில் செயல்படுகிறது கதையாடல்.

‘புலம்பெயர்ந்தவர்’ போலன்றி ‘குடிபுகுந்தவருக்கு’ இலகுவாகச் சாத்தியமாகும் தேசிய ஒன்றுபடுதல், இந்தக் குறுநாவலின் கதையாடல் சென்றடையும் இலக்கு. இங்கே பெண்ணின் அடையாளம், குடிபுகுந்த தேசியத்தில் பங்குபெறும் குடிமகளின் அடையாளம். ‘வீடு’ இங்கே கணவனின் இடமான பெண்ணைக் கட்டுறுத்தும் வரம்பெல்லைகளோ அல்லது அன்னையின் இடமான நினைவேக்கத்தின் களமோ அல்ல, மாறாக அது இதயத்தைத் திறந்துவிட்ட, குடிபுகுந்த தேசிய வெளியின் அங்கம். இங்கே கதைசொல்லியின் ஆழமான ஒன்றிப்பு குடிமைச்சமூகத்தின் பிற பல பண்பாட்டுக் குழுக்களுடன். தன்னைப்போலவே துயரைச் சந்தித்த அமெரிக்கப்பெண்ணுடன் ஒன்றிப்பும் இந்தக் குடிமைச் சமூகத்துக்குள்தான்.

காஞ்சனா தாமோதரனின் சிறுகதையொன்றில்கூட இத்தகைய ஒன்றிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சுருக்கமாக இதைப் பேச நினைக்கிறேன். 2000-ல் வந்த அவரது சிறுகதைத்தொகுதி ‘வரம்.’ அதில் ‘சில பயணக்குறிப்புகள்’ சிறுகதை. இடம்பெயர்ந்துவந்த பெண், தமிழ்ப்புத்தகங்களில் ‘அவளை அவளால் கண்டுகொள்கிறவள்’ (153) இக்கதையின் கதைசொல்லி. ஒன்பது வருடங்களுக்குப்பின் 2009-ல் வெளிவந்த, மேலே விவாதித்த குறுநாவலைப் போலன்றி, இச்சிறுகதையில், பிறந்த நாட்டுக்கும் குடிபுகுந்த நாட்டுக்குமிடையே கதைசொல்லியின் அடையாளத்தின் அல்லாட்டத்தைக் கண்கூடாகப் பார்க்கிறோம்: ‘நான் ஒரு நாடோடி. பிறந்த நாடு என்பது நான் என்றோ இழந்துவிட்ட, இன்று அந்நியப்பட்ட, என் கற்பனையில் மட்டுமே தொடரும் ஒரு லட்சியவாதம். புகுந்தநாட்டின் அந்நியம் என்றுமே மாறாதது. ஓர் அந்நியத்துள் குடியிருந்து, இன்று இல்லாத (என்றுமே இருந்திருக்காத?) அந்நியமாகிப்போன மற்றொன்றைப் பற்றிக் கற்பனாவாதக் கனவுகள் காண்பதே மிச்சமிருக்கும் என் வாழ்வில் என்னால் ஆகக்கூடியது’ (159). நாடோடி என்று கதைசொல்லி தன்னைக் கருதினாலும் அமெரிக்க தேசம் அவளை உள்ளிழுக்கக்கூடியதை கதையாடல் சுட்டிக்காட்டுகிறது. கதைசொல்லியைப் போலவே தன் குடும்ப ‘வேர்களைத் தேடும்’ ஸூஸன் எனும் பெண்ணின் குரலில் இது நடக்கிறது: ‘உன் மகளிடம் அவள் வேர்களைப் பற்றி நீ பகிர்ந்து கொள்வது முக்கியம். பல நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்தோர் தத்தம் தனித்துவத்தைப் பேணிப் போற்றுமிடம் இந்தத் தேசம். நம்மைத் தாங்கிக்கொள்ள வேரோ, விழுதோ ஏதோ ஒன்று தேவைப்படுகிறது’ (155). ஆலமரத்தின் உருவகத்தில் மரம் விரிந்து விழுதுகள் விட்டு அவற்றில் வேர்பிடித்து மீண்டும் நிலைகொள்ளும் வாய்ப்பு; பலபண்பாட்டையும் அதே நேரத்தில் தனித்துவத்தையும் போற்றுவதாக அமெரிக்க தேசியச் சொல்லாடல் பற்றிய விவரணை; புலம்பெயர்ந்தோர் என்ற சொற்றொடரைக் கதைசொல்லி உபயோகித்தாலும், குடிபுகுந்தவருக்கே உரித்தான தேசியச் சொல்லாடலுக்குள் கிடைக்கும் அடையாளத்தை, பங்கைத் தெளிவாக முன்வைக்கிறது கதையாடல். இதிலும் கதைசொல்லி தன்னையொத்த இன்னொரு குடிபுகுந்த வம்சாவளிப் பெண்ணுடன் ஆனால் குடிமைச்சமூகத்தின் அமெரிக்கப் பெண்ணுடன்தான் ஒன்றிப்பு கொள்கிறாள் என்பது கவனிக்கத்தக்கது.

வீடு: அச்சுறுத்தலின் உருவகம்

வீடு, சுமதி ரூபனின் ‘அகச்சுவருக்குள் மீண்டும்’ (2003) சிறுகதையில், பெண்ணின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக மட்டுமில்லை, அது ஆண் வன்முறையின் நிகழ்த்துக் களம். ‘கொத்தாக தலைமயிர் பிடித்திழுத்து முகத்தில் குத்துவிடுபவன்’ கணவன் (18). வீடல்லாத வேறிடத்தில் அவன் இல்லாத போதும் அவள் கடவுளிடம் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்யும் நேரத்திலும்கூட அவன் தாக்குதலை உணர்கிறாள் (18). வீடு அச்சுறுத்தலின் உருவகமாய் வீடுதாண்டியும் வெளிவருகிறது. பௌதீகப் பொருளென்றாலும் அதன் சுவர் அவள் அகத்துக்குள் வந்து அழுத்துகிறது. மனவுறவில் கொடுந்திரையாய் எழும்பி நிற்கும் சுவரென்றாலும் அவன் வன்முறையிலிருந்து காப்பாற்றக் கூடிய, ஒளிய இடம் தரும் சுவர்போல அவளுக்குத் தோன்றுகிறது, ஆனால் அதுவுமில்லை: ‘உண்மையைக் கூறப்போனால் அவளுக்கும் அவனைப் பிடிப்பதில்லை. எங்காவது போய்ச் சந்தோஷமாக இருந்துவிட்டு வந்தான் என்றால் தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நம்பினாள். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. அவளை தினம்தினம் புழுதியில் போட்டுப் புரட்டி எடுக்கின்றான்’ (24). அவளால் அவனை எதிர்த்து நிற்க முடியாமல் போகிறது. காவல்துறைக்கு அவனைப் பற்றிப் புகார்செய்தாலும் வழக்கைத் தொடராமல் பின்வாங்க வேண்டியிருக்கிறது. புலம்பெயர்ந்திருப்பது பழக்கமில்லாத நாடெனும் யதார்த்தம்: ‘கால் விறைக்கும் குளிர், மகன், நிரந்தரமற்ற வேலை, இருப்பது இவ்வளவுதான், இதற்குள் ரோஷம் என்றால் பொருந்தாது’ (22). மேலும் ‘ஆம்பிளைகள் அப்பிடி இப்பிடித்தான் இருப்பீனம், நாங்கள்தான் அனுசரிச்சி நடக்கவேணும். உவங்களுக்கு எங்கட கலாச்சாரம் பண்பாடு எங்கை விளங்கப்போகிறது... உனக்கு இஞ்ச ஆர் இருக்கீனம்?’ என அறிவுறுத்துகிற மாமியின் குரலுக்குச் செவிகொடுக்கவேண்டியிருக்கிறது (22). மாமி போல புலம்பெயர்ந்த மற்ற பெண்களோடுகூட எந்த ஒன்றிப்பும் கொள்ள இயலாது, முழுமுற்றாக நசுக்கப்பட்ட பெண் தன் அடையாளத்தை காவுகொடுக்க வேண்டியிருப்பதை, ஆனால் காவுகொடுக்கும்போதும் அது குறித்த விழிப்போடு அவளிருப்பதை முன்வைக்கிறது கதையாடல்.

இருண்மையைத் தொனியாகக் கொண்டிருக்கும் இக்கதையின் வன்முறைக்களம் சுமதியின் ‘ஆதலினால் நாம்...’ சிறுகதையிலும். ஆனால் இதில் கணவனிடமிருந்து ‘அறை விழ, அறை விழ’ அவளில் ‘ஏன் என்ற கேள்வி கூடிக்கொண்டேபோகிறது’ (31). படிப்பில் ஆசை வருகிறது: நெஞ்சுறுதி வலுக்கிறது. தான் சந்தித்ததைப்போன்றே ஆணிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்கிற இன்னொரு புலம்பெயர்ந்த அவள் தோழிக்கு நம்பிக்கையும் உதவியும் தருகிற அளவுக்கு புலம்பெயர்ந்த நாட்டில் தன்னை நிறுவிக்கொள்ள முடிகிறது அவளால். கதைசொல்லியும் தோழியும் ஒருவருக்கொருவரில் வன்முறைக்காளான தம் பிம்பங்களைக் காண்கிறார்கள். கதைமுடிவில் பிம்பங்களின் ஒன்றிப்பு பாலியல் தளத்திலும் நிகழ்கிறது. இந்தப் பெண்களின் சந்திப்புக்கு முன்பே, கதையாடலில் இதற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது. கதை சொல்லிக்கு ‘ஆணின் நெருக்கம் உடல் சிலிர்க்க வைப்பதற்குப் பதில் அருவருக்கத் தொடங்கியதாகச்’ சொல்லப்படுகிறது (31). மோசமான வாழ்வனுபவங்களை ஆண் தரும்போது, எதிர்ப்பாலியல் (heterosexual) உறவுக்கு மாற்று மட்டும்தானா பெண்ணின் ஒருபாலுறவு என்ற கேள்வி எழுகிறது. மேலும், மரபார்ந்த எதிர்ப்பாலியல் குடும்பத்தின் ஆண் செலுத்தும் வன்முறைக்குத் தீர்வாக இந்த ஒருபாலுறவு வலிந்த முழக்கமாக வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இரு பெண்களின் ஒன்றிப்பின், ஒருபாலுறவில் இணையும் பெண்பால் அடையாளங்களின் பரப்பாக வடிவெடுக்கிறது வீடு. புலம் பெயர்ச் சூழலில்தான் இத்தகைய வீடு சாத்தியமாகக் கூடியதாக இருக்கிறதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

வெற்றுக் குறி

புலம்பெயர்ந்த சூழலில் புறத்திலும் அகத்திலும் பெண் அடையாளத்தின் பொருளின்மையைப் பேசுகிறது லதாவின் ‘அடையாளம்’ (2008) சிறுகதை. பெண்ணின் வழமைப் பாதையில் புகுந்த வீட்டில் இருக்கும் அனைவரின் தேவைகளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவளுக்கு உகந்ததைச் சமைக்கும், உண்ணும் சுதந்திரமும் அவளுக்கில்லை. தன் பெண்குழந்தையின் ஆடைத் தேர்வுகூட அவளுக்கு மறுக்கப்படுகிறது. அக்குழந்தைக்கும்கூட அவளோடு நெருக்கமிருப்பதாகத் தெரியவில்லை. புறத்திலும் அவள் படிப்புக்கான அங்கீகாரமும் வருமானமும் இல்லை. அந்நியமாக இருக்கிறது புறமும்: இங்கே ஏன் யாருமே தனக்கு நெருக்கமாயில்லை. ஒருவேளை தன்னால்தான் இந்த ஊர் மக்களை, அவர்கள் வாழ்க்கையை நெருங்க முடியவில்லையோ... இந்த மண்ணோடு ஒட்டமுடியவில்லையோ... என்று யோசித்துக்கொண்டே மணிபர்சைத் திறந்தாள். சிவப்பு நிறத்தில் சிங்கப்பூர் குடியுரிமை அட்டை. வாய் நிறையப் புன்னகையோடு அவள் படம். ‘ஐ யெம் சிங்கப்பூரியன்.’ அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. (21) மலாய் மொழி தெரியாததால் அவளைச் சிங்கப்பூர்க்காரி என்று அங்கீகரிக்க மறுக்கும் ‘டாக்ஸிக்காரன்’ அவள் எதிர்கொள்ளும் புறவுலகத்தின் பிரதிநிதியாக இருக்கிறான் (13). வெளிநாட்டிலிருந்து இறங்கியிருக்கும் ‘மெயிட்,’ ‘வேலைக்காரி’ என்றழைக்கிறான் (13). கதைசொல்லிக்கே தன் அடையாளத்தில் சந்தேகம் வருகிறது, கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாள் (18 - 19). அழகுநிலையத்துக்குச் சென்று தன் உருவத்தை மெருகேற்ற நினைக்கிறாள், ஆனால் நேரமில்லை, அவளுடைய நேரமும் உழைப்பும் குடும்பத்தில் உள்ளவர்களுக்காக, அவர்களுடையதாக இருக்கின்றன. பெண்ணியலாளர் ஜெர்மைன் கிரியர் ‘நிரந்தரப் பணியாளாக இருக்கக் கிடைக்கும் பாதுகாப்புக்காக சம்பளம் வாங்காத பணியாள் வீட்டில் மனைவி’ என வீட்டில் பெண்ணின் பணிச்சுரண்டலை விமர்சிப்பதை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கலாம். வீட்டில் ‘மனைவி’ என்கிற அவள் அடையாளம் பெயரளவில்தான். பொதுவெளியில் அவள் அடையாளமோ தட்டைப் பரிமாணமான குடியுரிமை அட்டை. ஆக, வீட்டிலும் பொதுவெளியிலும் ஒன்றே போல் உள்ளீடற்ற வெற்றுக்குறியே பெண் அடையாளமாக வலம் வருகிறது.

கணவனின் வீட்டில் சுய அடையாளத்தைத் துறக்க வேண்டியிருக்கும் அல்லது சுய அடையாளம் நசுக்கப்படும் பெண்கள் அந்த வீட்டைத் துண்டித்து வெளியே வந்து ஏன் தமக்கொரு சுதந்திர வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயல்வதில்லை என்றொரு வழக்கமான கேள்வி எழலாம். முன்பின் தெரியாத அந்நிய இடம் பற்றிய யோசனை, குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை போன்ற வழக்கமான பதில்களையும் தரலாம். ஆனால், தீர்மானிப்பவையாக இங்கே இருப்பன, பெண்ணின் தன்னிலையை எதிர்ப்பாலியல் குடும்பவெளியில் காலம்காலமாக, வம்சாவழி வழியாக உருவாக்கியபடியிருக்கும் சமூக, பண்பாட்டு நியதிகள் (norms) தாம். பெண் தன் சுய அடையாளம் குறித்து கேள்விகேட்க, விசாரணை செய்ய முற்படும்போதெல்லாம் இவை தொடர்ந்து நினைவூட்டப்படுகின்றன; நியதிகளுக்கு இயைந்த, உட்பட்ட பெண்பால் தன்னிலை (female subjectivity) தொடர்ந்து உருவாகிக்கொண்டிருக்க, அடையாளம் குறித்த விசாரணைகளும் கேள்விகளும் புறந்தள்ளப்படுகின்றன. இந்த நியதிகள் கதையாடல்களில் தாயின் குரலாக, மாமியின் குரலாக என்றெல்லாம் வடிவெடுக்கின்றன. உதாரணமாக, லதாவின் கதையில் பெண் கோபப்பட யத்தனிக்கும்போதெல்லாம், நினைவில் மீளும் தாயின் வார்த்தைகள், ‘எத்தனை கோபமாயிருந்தாலும் பொறுமையாப் போம்மா... அதாம்மா நமக்கு நல்லது ...

என்ன பொண்ணு வளர்த்திருக்கிறா பாருன்னு நாலு பேர் என்னைச் சொல்றமாதிரி வைச்சிடாதம்மாகோபத்தை மழுங்கடித்துவிடுகின்றன (லதா, 14-15).

அல்லது மாமியின் குரலாக கலாச்சாரத்தையும் பண் பாட்டையும் குறிப்பிட்டு எச்சரிக்கின்றன (சுமதி ரூபன் 2003, 22). இந்த நியதிகளை நிறுவுபவர்களாக தாய்களும் மாமிகளும் மட்டுமில்லை, பலசமயம் பெண்ணியம் பேசும் பெண்கள்கூட பெண்ணை எதிர்ப்பாலியல் குடும்பவெளியில் நிறுவ முனைவதில் விதிவிலக்கில்லை (பார்க்க, சுமதி ரூபனின்பெண்கள்: நான் கணிக்கின்றேன்,’ 2010). வயதான காலத்தில் தனித்திருக்கும் பெண்ணைக்கூடஆக்கள் நினைப்பினம், ஆக்கள் சொல்லுவினம், ஆக்கள் கதைப்பினம்என்றுஆக்களின்நினைப்பும் வார்த்தையும் பேச்சும் விட்டு வைப்பதில்லை (பார்க்க, சுமதி ரூபனின்சூன்யம்,’ 2003)

மாயக்குதிரை

பெண்ணொழுக்க நியதிகளைத் தடையின்றி நினைவூட்டும் கண்காணிக்கும் புலம்பெயர்ந்த சமூகத்தைத் தமிழ்நதியின் ‘மாயக்குதிரையிலும்’ (2012) காணலாம். இதில் கதைசொல்லி வித்தியாசமான கதாபாத்திரம். வீடு, பணியிடம், பயணம் என்கிற வழக்கமான கதைக்களனில் இல்லாமல் காசினோவில் பெரிதும் நிகழ்கிற கதையாடல். பெண்ணை முறைப்படுத்தும் சமூக, பண்பாட்டு நியதிகளின் யதார்த்தம் குறித்த புரிதல் கதைசொல்லிக்கு இருக்கிறது; ஆனால் அந்த யதார்த்தம் அவள் காசினோவுக்குச் செல்வதைத் தடுப்பதில்லை. காசினோவுக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருக்கும்போதுகூட நினைவூட்டுதல் நடக்கிறது: சனிக்கிழமை, எங்காவது உணவகத்துக்குப் போகிறார்களாயிருக்கும். உணவுச் செலவு நாற்பது டாலருக்குள் முடிந்துவிடும். தான் காசினோவுக்குச் செல்வது தெரிந்தால் இவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்துப் பார்த்தாள். ‘கொழுப்பு’ என்பார்கள். அநேகமானவர்கள் அவளை ஒரு விசித்திரப் பிராணியாக, கேவலமாக நோக்கவும் கூடும். ‘அந்தப் பெட்டையோ...’ எனத் தொடங்கி ஆயிரம் கதை சொல்வார்கள்.’ காசினோவிலும் சூதுக்களத்திலிருந்து குடும்பக்களத்துக்கு அவள் திரும்பவேண்டிய பொறுப்பும் கடமையும் அவளுக்கு நினைவூட்டப்படுகின்றன, இதைச் செய்பவர்களும் தமிழர்களே:மேசையில் சூதாடுபவர்களில் தமிழ் முகங்களும் உண்டு. பெரும்பாலும் ஆண்கள். மிக அரிதாக பெண்கள். ‘ஒரு தமிழ்ப் பெண்... குடும்பத்தில் பொறுப்பாக இருக்க வேண்டியவள்... இங்கு என்ன செய்கிறாய்?’ என்றொரு பார்வையை உரிமையோடும் கண்டிப்போடும் அவளை நோக்கி எறிந்த ஆண்கள் உண்டு. தமிழ்ப் பெண்கள் குடிக்கக்கூடாது என்பது போன்ற விதி சூதிற்கும் பொருந்தும் என்பதை அவள் அறிவாள். ஆரம்பத்தில் அத்தகைய பார்வைகளுக்கு அஞ்சி அவசரமாக அவ்விடத்தைக் கடந்து சென்றாள். பிறகோ, ‘நீ மட்டும் இஞ்சை என்ன பிடுங்கிக்கொண்டிருக்கிறாய்?’ என்ற பார்வையை அலட்சியமாக திருப்பி எறியப் பழகினாள்.

சூதாடியில் ஆணென்ன, பெண்ணென்ன? ஆனால் இந்தப் பெண் ஏன் சூதாடப் போகவேண்டும்? கதையாடலின் சிறப்பே இக்கேள்விக்கு அதில் நேரிடையான விடையில்லை என்பதுதான். இந்த மனிதர்கள்தான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று எண்ணினாள். தன்னிரக்கம் பெருகியது. இளமையின் வறுமையையும், அகதியாக அலைந்ததையும், புலம்பெயர்ந்துபட்ட சிரமங்களையும் நினைத்துத் தன்னிரக்கம் கொள்வதனூடாக தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க விழைந்தாள். வறுமையும் அகதி அனுபவமும் புலம்பெயர்த்துயரமும் தனிமையும் இவள் சூதுக்குச் செல்லக் காரணங்களா, அல்லது அதை நியாயப்படுத்தும் முகாந்தரங்களா? என்றாலும், தாய்க்கு அவள் ஒற்றைப்பெண், கேட்டவுடன் தன் சொற்ப சேமிப்பிலிருந்து பணம் தருகிற தாய், சூதில் இவளின் நாட்டம் பற்றிப் புரிதலும், அதிலிருந்து அவளை மீட்க நினைக்கிற மேலான அன்பும் கொண்ட காதலன். ஆனாலும், காசினோவில் சூதாடி அதில் மீண்டும் மீண்டும் தோற்றுப்போய் நிற்கும்போது எந்த ஆண் கூப்பிட்டாலும் பணத்துக்காகப் போயிருக்கக் கூடியவள்தான் அவள் என்று தன்னை நினைக்கிறாள். நியான் விளக்குகள், கண்சிமிட்டும் இலக்கங்கள், நாணயங்கள் எண்ணப்படும்போது கேட்கும் ஓசை, இவையெல்லாம் அவளுக்குள் சூதாடியை உயிர்ப்பித்து விடும்போது வேறென்ன செய்ய முடியும் என்றும்.

கதையாடலில் முன்வைக்கப்படுகிற பொதுவெளி வழக்கமானதல்ல. காரண காரியத்துக்கு அப்பால் செயல்படும் சூதுவெளி. என்ன நடக்குமென்று தெரியாத மாயவெளி. எனினும் புறத்தே பொது வெளிக்கும் இதற்கும் வேறுபாடுண்டு. சூதின் ஆட்டம் தன்னிச்சையானது (arbitrary). தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது. வெற்றியும் தோல்வியும் யாருக்கும் வரும். தர்க்கத்துக்கு அப்பாலான தன்னிச்சைவெளியில், தாயங்களாக விழும் வெற்றியும் தோல்வியும் சூது களத்துக்குப் புறத்தே சமூகத்திலிருக்கும் அனைத்துப்படி நிலைகளையும் (தற்காலிகமாகவேனும்) கலைக்கமுடியும்.

ஆசியப் பெண்ணென்று தோல் நிறத்தை முன்னிட்டு அலட்சியம் காட்டும் மேசைப்பணியாளர்களுக்கு, கதைசொல்லி தான் ஆட்டத்தில் ஜெயிக்கும்போது எதிர்பாராத டிப்ஸ் கொடுப்பதன் மூலம் அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறாள். ஆட்டத்தில் தோற்று நிராதரவாக நிற்கும்போது, வெளிறிப்போகும்போது, அரற்றும்போது, அழும்போது, விவாதித்துப் பிரிந்துபோகும்போது, தமிழர், மஞ்சள் நிறத்தவர், வெள்ளையரிடையே எப்பேதமுமில்லை. காஞ்சனா தாமோதரனின் ஆக்கங்களில் வைக்கப்படும் பலபண்பாட்டினரையும் உள்வாங்கப் பார்க்கும் தேசியப் பொதுவெளிக்கு நேரெதிர்ப்புள்ளி சூதாட்டப் பொதுவெளி. புலம்பெயர்ந்தவர்களுக்கு, ‘வந்தேறிய’ புலத்தின் தேசியப் பொதுவெளியில் அல்ல, சூதாட்ட வெளியென்கிற தர்க்கம் மீறிய, தன்னிச்சைவெளியில்தான் குடிமைச் சமூகத்துடன் ஒன்றுபட முடியும், ஒன்றிப்பு நடக்கும் என்கிறது கதையாடல். இப்படிச் சொல்வதன் மூலம் குடிபுகுந்தவர் பார்வையில் வியந்தோதப்படுகிற தேசியச்சொல்லாடலைத் தலைகீழாக்குகிறது, நிராகரிக்கிறது. என்றாலும், சூதாட்ட மாயவெளியில்கிட்டும் ஒன்றிப்பும் ஒன்றுபடுதலும் நிரந்தரமல்ல, நிஜமல்ல, இந்த வெளியில் கண்டடையும் அடையாளம் மாயக் குதிரை. அது எங்கும் கொண்டு சேர்க்கப்போவதல்ல என்ற எச்சரிக்கைப் பார்வையும் உள்ளோடுகிறது கதையாடலில்.

முடிவுரை

இக்கட்டுரையில் தாயகம் கடந்து செல்லலை புலம்பெயர்தல், குடிபுகுதல் என்கிற வகைமைகளில் வைத்து தமிழகத்துக்கு, ஈழத்துக்கு வெளியே வசிக்கும் சில பெண் எழுத்தாளர்களின் குறிப்பிட்ட எழுத்துச் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன். வீடும் புறவெளியும் கதைக் களன்களாக அல்லது நிகழ்வுகளின் பின்னணித் திரையாக அன்றி கதையாடல்களில் பங்குகொள்ளும் விதங்களைக் கட்டுரை குறிப்பிட்டிருக்கிறது. கதையாடலின் புலம்பெயர் சூழலில், நினைவேக்கத்தின், ஆணின் கட்டுப்பாட்டின், ஆண் செலுத்தும் வன்முறையின், பணிச்சுரண்டலின் களமாக வீடு இருக்கிறது. புறவெளி, அகத்தின் பொருளற்ற நீட்சியாக, சுரண்டும், அங்கீகரிக்க மறுக்கும் வீட்டின் பிரதிபலிப்பாக, சூதாட்ட மாயவெளியாக உருவம்கொள்கிறது. பெண்ணின் அடையாளம் அவளின் சுயம் நீக்கப்பட்டதாக, காவுகொடுக்கப்பட்டதாக, வெற்றுக்குறியாக முன்வைக்கப்படுகிறது. அடையாளம் குறித்த பெண்ணின் கேள்விகளும் சுய விசாரணைகளும் சமூக, பண்பாட்டு நியதிகளின்முன் பயனிழக்கின்றன. விதிவிலக்காக கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படும்போது, ‘மரபார்ந்த’ எதிர்ப்பாலியல் குடும்பத்துக்கு மாற்றாக, பெண் அடையாளம் ஒருபாலுறவில் நிலைகொள்கிறது, வீட்டை அதற்கேற்ப மறுவடிவாக்கம் செய்ய முனைகிறது.

குடிபுகுந்தவரின் சூழலில், வீடு குடிமைச்சமூக பொதுவெளியின் அங்கமாகக் கட்டமைக்கப்படுகிறது. தேசியச் சொல்லாடலின் அடையாளத்தில் குடி புகுந்தவரால் எளிதாகப் பங்குபெற முடிகிறது, ஒன்றிவிட முடிகிறது என்று ‘ஆதர்ச நம்பிக்கையை’ கதையாடல் தருகிறது. ‘ஜனநாயகம்,’ ‘குடிமைச்சமூகம்’ ஆகியவற்றை உரத்துப் பேசுகிற தேசியச் சொல்லாடலில், குடி மகள் என்கிற அடையாள ஒளிவட்டத்தில், பால் அடையாளங்களும் பேதங்களும் கதையாடலில் இருளில் தள்ளப்படுகின்றன. இதைப்போலவே, பால் அடையாளங்களும் பேதங்களும் முக்கியத்துவம் பெறாத இடம் சூதாட்டப் பொதுவெளி. புலம்பெயர்ச் சூழலில், ஒன்றுபடுதலின் ஒன்றிப்பின் இந்தத் தலைகீழ் வெளியில், அடையாளம் மாயக் குதிரையாக, ஒரே நேரத்தில் மாயமென்றும் தோற்றம் கொண்டும் அலைகிறது.

இந்த முடிவுரை, தாயகம் தாண்டிய எழுத்துவெளியில் புலம்பெயர், குடிபுகும் சூழல்கள் குறித்த முற்றான உரையல்ல. இதைப் பிரச்சினைக்குட்படுத்தும் வகையில் கதைகள் எழுதப்பட்டிருக்கலாம், எழுதப்பட்டிருக்கும். ஒருவகையில் இந்தக் கட்டுரை எடுத்துக்கொண்ட கதைகளுக்கும் என் வாசிப்புக்குமான தீவிரமான கண்ணாமூச்சி ஆட்டம் என்றும் சொல்லலாம். வேறு கதைகளோடு மற்றவர்களுக்கோ, மீண்டும் எனக்கோ விளையாட வாய்ப்பு கிடைக்காமலா போகும்?


தாயகம் கடந்த தமிழ் மாநாட்டில் ‘புதிய சிறகுகள்’ என்ற தலைப்பிலான அரங்கத்தில் பெண்ணிய எழுத்து குறித்து பேச எழுதப்பட்டக் கட்டுரை.

நன்றி: மாலன்

உதவிய ஆக்கங்கள்

காஞ்சனா தாமோதரன். ‘சில பயணக் குறிப்புகள்.’
வரம். சென்னை: ஆசிரியரால் பதிப்பிக்கப்பட்டது, 2000.

ஓர் அமெரிக்க நெடுஞ்சாலைப் பயணம்.’
மரகதத் தீவு. சென்னை: உயிர்மை, 2009.

சந்திரா இரவீந்திரன்.. ‘யாசகம்.’
நிலவுக்குத் தெரியும். நாகர்கோவில்: காலச்சுவடு, 2011.

சுமதி ரூபன். ‘அகச் சுவருக்குள் மீண்டும்.’
யாதுமாகி நின்றாள். சென்னை: மித்ரா, 2003.

ஆதலினால் நாம்...’ யாதுமாகி நின்றாள். சென்னை: மித்ரா, 2003

சூன்யம்.’ யாதுமாகி நின்றாள். சென்னை: மித்ரா, 2003.

பெண்கள்: நான் கணிக்கின்றேன்.’
உறையும் பனிப்பெண்கள். சென்னை: கருப்புப் பிரதிகள், 2010.

தமிழ்நதி. ‘மாயக்குதிரை.’ அம்ருதா, ஜூன் 2012.

லதா (கனகலதா). ‘அடையாளம்.’ நான் கொலைசெய்யும் பெண்கள். நாகர்கோவில்: காலச்சுவடு, 2008.

Cho, Lily M. ‘The Turn to Diaspora.’
Topia 17, special issue on ‘Diaspora’ (Spring 2007): 11-30.

Clifford, James. Diasporas. Cultural Anthropology, 9.3 (Aug., 1994): 302-338.

Greer, Germaine. 1970. The Female Eunuch. New York: Harper Collins, 2006.

I

ஒருவேளை, உற்றதுக்கு பின்பு ஒரு வகைமாதிரி கிடைக்கலாம்

தி பிலீவர்: இப்போது வேலை நாட்கள் எப்படி போகிறது, பாடமெடுப்பதிலிருந்து விடுப்பில் இருக்கிறீர்கள் அல்லவா?

லிடியா டேவிஸ்: எனது வேலை நாட்கள் எனது எழுத்து வேலையினூடும் எனது தற்போதைய மொழிபெயர்ப்பிற்கும், அது பெங்குயினுக்கான மேடம் பாவரியின் புதிய பதிப்பு, இடையேயும் பிரிந்துள்ளன.

தி பிலீவர்: உண்மையில் முன்பை விட கூடுதலாக எழுதினாலும், மெக்காத்தர் பெல்லோஷிப்பிற்கு பின்பு உங்கள் எழுத்து தர அடிப்படையில் மாற்றம் அடைந்திருப்பதாக தோன்றுகிறது?

லிடியா டேவிஸ்: அது மாற்றமடைந்திருக்கிறது, ஆனால் அது எப்போதும் மாறியபடியேதான் இருக்கிறது. நான் பிறருடைய பிரதிகளோடு வேலை செய்வதில் கூடுதலான ஈடுபாட்டோடு இருப்பதாகப்படுகிறது - அதாவது, ஒரு மொழிபெயர்ப்போடு எனது குறிப்புகளை இணைப்பது அல்லது இரண்டு அல்லது அதற்கு மேலான பிரதிகளோடு எனது குறிப்புகளை இணைப்பது - மேலும் கொஞ்சம் நீண்ட கதைகளில் ஈடுபடுவதென. ஆனால் சமீபமாக எனது சொந்த கற்பனையில்/ தனி முயற்சியில் மிகச்சிறிய கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆக எனக்கு உண்மையில் அடுத்தது என்ன என்பது தெரிவதில்லை.

தி பிலீவர் : நீங்கள் ஒரு வாசகராக தொடங்கும் போதே பெக்கெட் உங்களின் ஆழமான பாதிப்பு எனக்கூறியிருந்தீர்கள்.

லிடியா டேவிஸ்: நான் பெக்கெட்டிடம் மிக ஆரம்பித்திலேயே வந்துவிட்டேன் அவரது கச்சிதமான நடையைப் பார்த்து பயங்கர ஆச்சரியப்பட்டேன். எனது இருபதுகளில் எழுதிப்பயிலும்போது, அவர் வாக்கியங்களை ஒன்று கூட்டும் விதத்தை நான் ஆர்வத்துடன் பயின்றேன். அவரது விருப்பமான வாக்கியங்களை காப்பி அடித்தேன். எனக்கு பிடித்தது என்னவென்றால் அந்த நேரடியான / ஆங்கிலோ - சாக்சன் சொற்கள்; அந்த அறிவுத்திறன்; எனது அறிவுத்திறனுக்கான சவால்; கனமான செய்தியாகக் கூடியவற்றுக்கு அடியே ஊடும் அந்த நகைச்சுவை; மேலும் மொழிக்குறித்த தன்னுணர்வு.

தி பிலீவர்: என்னுடைய பள்ளி ஆசிரியரொருவர் பெக்கெட்டின் ப்ரௌஸ்ட் பற்றிய கட்டுரையை அதிர்ஷ்டக் கயிற்றைப்போல எடுத்துச்செல்வார். ப்ரௌஸ்டும் பெக்கெட்டும் உங்களுக்காக இணைக்கப்பட்டவர்களா?

லிடியா டேவிஸ்: நான் ப்ரௌஸ்டிடம் கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தேன். முப்பது வருடங்களுக்கு முன்பு ஸ்வான்ஸ்வேயின் முக்கால்வாசி பகுதியை வாசித்திருக்கிறேன், ஆனால் பெக்கெட்டை வாசித்த அளவு ப்ரௌஸ்டை வாசிக்கவில்லை. சமீபமாக ப்ரௌஸ்டை மொழிபெயர்க்கும்போது அடைந்த மகிழ்ச்சி. என்னுடையது போன்ற இல்லாத நடையை எழுதுவதனால் அடையும் மகிழ்ச்சிதான் என எண்ணுகிறேன். மேலும் அதுபோல் எப்போதுமே எழுத முடியாது, ஆனால் அதை முயற்சி செய்வது விந்தையானது.

தி பிலீவர்: பெக்கெட்டையும் ப்ரௌஸ்டையும் உங்களின் படைப்புகளுள் இணைப்பது போன்று ஏதோ மாஸ்டர் ப்ளான் உள்ளது போல் தெரிகிறதே?

லிடியா டேவிஸ்: ஒரு சில எழுத்தாளர்களே ஒரு விரிவான மாஸ்டர் ப்ளான் அல்லது செயல் திட்டத்தோடு இருப்பதாக எனக்குப்படுகிறது - அல்லது குறைந்த பட்சம், முதலில் எழுதத் தொடங்கும்போது ஆரம்பிப்பது கிடையாது. அது எப்படியாகினும் நான் என் எழுத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் படிப்படியாக வருவதாகத்தான் எண்ணுகிறேன். ஒருவேளை உற்றதுக்கு பின்பு ஒரு வகைமாதிரி கிடைக்கலாம், ஆனால் அது செல்ல செல்ல, ஒருவரது வளர்ச்சியென்பது, ஒரு விதத்தில் தர்க்கரீதியானதாக அல்லது தவிர்க்கமுடியாததாக இருந்தாலும், இன்னொரு விதத்தில் அது பெருங்குழப்பமானதாகும்.

II

ஒரு கதை, சிறிதாவது விவரணையைக் கொண்டிருக்க வேண்டும்

தி பிலீவர்: சிறுகதைக்கும் கதைக்குமான உங்களின் வேறுபாட்டோடு உடன்படுகிறேன் - அந்த கதை என்ற சொல், சிறுவை கழித்தால் பல்வேறு விசித்திரமான வடிவங்களை உள்ளடக்கலாம். நீங்கள் ரசல் எட்சனின் ‘உரைநடை கவிதைகளை’ ‘கதைகள்’ என்று அழைத்ததாக வாசித்தேன் (அதை அவர் முதலில் ‘நீதிக்கதைகள்’ என்று அழைத்தார்.)

லிடியா டேவிஸ்: எட்சன் அவைகளை ‘கவிதைகள்’ என்று குறிப்பதற்காக அப்படிச்சொன்னேன், அவரது தொகுப்புகளின் அட்டைகளில் பார்த்திருக்கிறேன் (‘உரைநடை கவிதைகள்’ அல்லது ‘நீதிக்கதைகள்’ என்பதைக் காட்டிலும்). அவைகளை ‘நீதிக்கதைகள்’ என்று அழைக்கலாம், ஆனால் அந்தச் சொல் ஒரு நீதி அல்லது போதனை என்பதையே சுட்டுவதாக இருக்கிறது மேலும் அவரது படைப்புகள் வியத்தகு வகையில் நீதிமொழிகளின்றி இருப்பதாகவே நினைக்கிறேன். அவைகள் எனக்கு கதைகளாகவேப் படுகிறது, ஏனென்றால் அவை முழுவதும் விவரணைகளாக உள்ளன.

அவற்றிலுள்ள வலியுறுத்தலின் கணம் விவரணையிலேயே உள்ளது, மொழியில் இல்லை என நினைக்கிறேன். அந்த கணம் மொழிக்கு மாறும்போது, அவை அப்போது கவிதையின் வெளிக்குள் நுழையலாம்.

தி பிலீவர்: நீங்கள் ‘கதை’ யென்பது ‘கவிதையை’ விட பெரிய வகைமையாக இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக கருதுகிறீர்களா?

லிடியா டேவிஸ்: ஆம், கதை என்ற வகைமை கொஞ்சம் கூடுதல் நெகிழ்வுதன்மையோடு இருப்பதாகவே கருதுகிறேன். ஆனால் பிரச்சனையென்னவென்றால் நம்மிடையே மிகச் சில பரிச்சயமான வகைமைகளே உள்ளன. அவற்றில் ஏதோவொன்றில் எட்சன், காஃப்கா, பீட்டர் ஆல்டென்பெர்க், ராபெர்ட் வால்சர், ஜிம் ஹெய்னன், ஹென்றி மிச்சாக்ஸ், லீயோன் பால் ஃபர்க், பீட்டர் செர்செஸ், ப்ரான்ஸிஸ் பொஞ்சே, ஜேஃப் போவியெர், மார்த்தா ரோன்க், பைலிஸ் கொஸ்டென்பாம், டயான் வில்லியம்ஸ்... போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளைப் பொருத்தப் பார்க்கிறோம்.

தி பிலீவர்: ஃப்ளாஷ் புனைவு, திடீர் புனைவு, சிறிய சிறுகதைகள், குறுங்கதைகள், உரைநடை கவிதைகள், கவிதைகள் - இன்னும் நிறைய வகைமைகளை உருவாக்குவதுதான் இந்த குழப்பத்திற்கான தீர்வு என நினைக்கிறீர்களா?

லிடியா டேவிஸ்: இன்னுமொரு வகைமைக்கான ஒரு தேவையிருப்பின், அதற்கு கொஞ்சம் காலமானாலும் அது உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும். ஃப்ளாஷ் புனைவு, திடீர் புனைவு போன்றவற்றிற்கு கொஞ்சம் ஏற்புடைமை உள்ளதுதான். ஆனால் மக்கள் ஃபளாஷ் ஃபிக்‌ஷன் கதைகளை வாசிக்கத் தொடங்குகையில் ஒரு மாதிரி ஒரு குட்டி சிறுகதையைத்தான் எதிர்பார்க்கிறார்கள், வழமைக்கு குறைவாக வழங்குபவையாக அவை இருப்பினும் - எண்ணவோட்டம், புதிர் விளையாட்டு, விரிவான வார்த்தை ஜாலம், வசைமாரி - அதற்கு நல்லதொரு பொதுப்பெயர் கிடையாது. ஒரு விமர்சகர் ராபர்ட் வால்செரை ‘ஃபுயில்லெடனிஸ்ட்’* என (தரம் தாழ்த்தி தான் என நினைக்கிறேன்) அழைத்தார். அவர் சில சமயங்களில் தன் படைப்புகளை வெறுமெனே ‘சிறு உரைநடை படைப்புகள்’ எனக் குறிப்பிட்டார்.

தி பிலீவர்: ஏதோ சில இதழ்களில் பார்த்த கதைகள் போல் இல்லை என்பதற்காக உங்களது சில கதைகளை கதைகளே இல்லை என ஈடுபாடற்ற விமர்சகர்கள் கூறுகிறார்கள். கதைக்கான ஒரு நேர்மறையான வரையறையை எப்போதும் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறேன். ஒரு கதை கதைதானென்று எப்படி தெரிந்துகொள்வீர்கள்?


“சாரு ஒரு ஒரு பத்தி எழுத்தாளர் மட்டுமே! ” என்று குறிப்பிட்டு கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா, அது போல Feuilletonist என்பது பிரெஞ்ச் தினசரிகளின் இணைப்பிதழான feuilleton இல் பத்தி எழுதக்கூடியவர்களைக் குறிப்பிடுவது


லிடியா டேவிஸ்: அது விளக்குவதற்கு கடினமான ஒன்று, அது குறித்து எளிமையாகச் சொல்லுவதென்றால், இப்படிச்சொல்வேன், ஒரு கதை சிறிதாவது விவரணையைக் கொண்டிருக்கவேண்டும், ‘அவள் கூறினாள்’ அப்படியென்று சொன்னால்தான், வேறு காலம் இடத்தை உருவாக்கி வாசகனைக் கடத்த தோதுவாக இருக்கும். ஆனால், கண்டிப்பாக, அது விவரணைக்கவிதை கிடையாது. கொஞ்சம் தட்டையாக, கவிதையிலிருந்து சந்த வேறுபாட்டோடு இறுக்கம் குறைந்து இருக்கும்.

தி பிலீவர்: கதை சந்தங்களில் வேறுபடுவது எப்படி? இறுக்கம் என்பதன் மூலம் சிக்கனமான அல்லது வேண்டுமென்றே தெளிவற்றத்தன்மையாக இருப்பதைக் குறிக்கிறீர்களா?

லிடியா டேவிஸ்: வெறும் வரி முடிவுகள் உள்ள கவிதைகளை மட்டும் நான் எடுத்துக்கொண்டால், பின்பு அங்கு தெளிவான சந்த வேறுபாடுகள் உண்டு - வரி முடிவில் உள்ள இடை நிறுத்தத்திற்கு பதிலாக ஓவ்வொரு வரிகளின் இறுதியில் உள்ள தொக்கி நிற்றல். ஆனால் அதற்கு மேலேயும், உண்மையான ஒரு கவிதையில் ஓவ்வொரு சொல்லும் சொற்றொடரும் ஒரு வெடிகுண்டாக இருப்பதைக் காண்கிறேன், அதாவது அது வாசகனின் மனதில் மலரவேண்டும் அல்லது வெடிக்கவேண்டும். ஒரு உரைநடைப் படைப்பில் உள்ள ஒவ்வொரு சொல்லும் சொற்றொடரும் அந்த மாதிரி அழுத்தப்பட்ட அல்லது செறிந்த பொருளை கொண்டிருப்பதில்லை. இறுக்கமானது என்பது மூலம் வெறுமனே சிக்கனமானதோ அல்லது வேண்டுமென்ற தெளிவற்றத்தன்மையையோ நான் அர்த்தப்படுத்தவில்லை. கண்டிப்பாக ஒரு நல்ல கவிதை சிக்கனமாக இருக்கவேண்டும் (நல்ல உரைநடைப் படைப்பை விட மேலும் சிக்கனமானது என்பதாக இல்லை - ப்ரௌஸ்ட் தன் உரைநடை சிக்கனமானது என்றார், நான் அதை ஒத்துக்கொள்கிறேன்),

ஆனால் அது வாசகர் வெளிப்படையாகவோ அல்லது உள்ளார்ந்தோ வழங்கக்கூடிய பொருளை விட்டு விடக்கூடலாம். (‘கூடலாம்’ என்று சொல்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு கவிதையும் அது போன்ற பல்வேறு விதிகளில் இயங்குகிறது.) ஒரு நல்ல கவிஞன் எப்போதுமே வேண்டுமென்ற தெளிவற்றத்தன்மையோடு இருப்பதை நான் நம்பவில்லை. ஒரு கவிஞன் அவனுக்கு அல்லது அவளுக்கு அவசியமான விதத்தில் எழுதுகிறார். வாசகர், பின்பு அக்கவிதையைக் கடினமாக உணரலாம்.

கிறிஸ்டபர் மிடில்டன் எழுதுகிறார், ‘கவிதையின் தாளமென்பது மாறுபடும் இசைவேகத்தின் அமைப்பாகும். அது தனது ஓசைகளே அர்த்தத்தின் முளை வேரென உணர்கிறது.’ (நான் அவர் சொன்னதைப் அப்படியே குறிப்பிடுகிறேன், ஆனால் உணர்கிறது என்பது பன்மையில் இருப்பது எனக்கு சரியென்று படுகிறது). இது கொஞ்சம் அதிகம்தான், ஆனால் சிந்திப்பதற்கு சுவாரஸ்யமானது.

III

நடையில்லாத எழுத்து என்றொன்று இல்லை.”

(லிடியாவின் ப்ரௌஸ்ட் மொழிபெயர்ப்பு குறித்தான கேள்வி)

தி பிலீவர்: Prosaic என்ற சொல்லை, Prosaique - ன் நேரடி அர்த்தமாகிறதால் அதையே உபயோகிப்பது நல்லது என்று நினைக்கிறீர்களா? அல்லது ‘dull’ என்ற சொல்லை பயன்படுத்தலாமா? ஏனென்றால் அது தற்காலத்து ஆங்கிலத்தில் ப்ரௌஸ்ட்டின் பிரெஞ்சில் Prosaique இருந்த இடத்தில் இருக்கிறது. நீங்கள் முந்தையதை தேர்ந்தெடுத்தீர்கள், சி.கே.ஸ்காட்- மான்கிரிஃப் பிந்தையதைத் தேர்ந்தெடுத்தார்.

லிடியா டேவிஸ்: எது என்னை Prosaicஐ தேர்வு செய்ய வைத்தது என்று என்னால் இப்போது மீட்டுருச்செய்ய முடியாது - ஆனால் நான் Swann's wayஐ மொழிபெயர்க்கும்போது, ஒரு முறைக்கு இருமுறை ஓவ்வொரு சிக்கலான சொற்தேர்வையும் சரி பார்த்துக்கொண்டேன், என் மொழிபெயர்ப்பின் மூலம் அந்தக் காலத்தில் ப்ரௌஸ்ட் பிரெஞ்சில் வெளிப்படுத்தியதை இந்தக் காலத்திய ஆங்கிலத்தில் வெளிப்படுத்திவிட வேண்டுமென மெனக்கெட்டேன். உங்களின் உதாரணத்தில், prosaic இன் ஓசை பிரெஞ்சிற்கு நெருக்கமாக இருப்பதால் அதை நான் விரும்பியிருக்கலாம்: அதே மூன்று அசைகள் மற்றும் pr என்ற தொடக்கத்தைக்கொண்டிருந்தது. வரலாற்று ரீதியாகவும் சந்தவகையிலும் அது dullல் இருந்து முற்றிலும் வேறானது - அதுவே தன்னளவில் ஒரு அற்புதமான சொல், கண்டிப்பாக என்னுடைய எழுத்தில் prosaicக்கு பதிலாக அதைப் பயன்படுத்தவே அதிக வாய்ப்புள்ளது.

தி பிலீவர்: அது போன்ற சமயங்களில், எப்போதும் ‘cognate’ஐயே நீங்கள் தேர்ந்தெடுப்பீர்களா?

லிடியா டேவிஸ்: என்னால் எப்பவெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் நான் ‘cognate’ -ஐ பயன்படுத்தலாம், ஆனால் அது எப்போதும் சந்தம், தாள ஓசைக்கானக் காரணங்களுக்காகத்தான்.

தி பிலீவர்: பெக்கெட்டின் சுயசரிதையில், ஜேம்ஸ் நோவல்சன் கூறுகிறார்: பெக்கெட், ப்ரௌஸ்ட்டை தேர்ந்தெடுத்ததற்கானக் காரணம் எழுத்து நடையில்லாமல் எழுதுவதற்கு பிரெஞ்சில் எழுதுவதே எளிமையானது என்பதுதானதென்கிறார். நீங்களும் மொழிபெயர்ப்பைக் குறித்து அதே போன்று கூறியிருக்கிறீர்கள் - அது தன்னுடைய சொந்த நடையை இன்னொரு எழுத்தின் மேல் திணிக்கச் செய்யாத ஒரு பயிற்சியென. கொஞ்சம் அடிப்படை உண்மையை எழுத்து நடை மூடி மறைக்கிறதென்பது - ஒருவரெடுக்கக்கூடிய குறைந்தபட்ச பின்நவீனத்துவ நிலைப்பாடு என்று படுகிறது.

லிடியா டேவிஸ்: இல்லை, உங்கள் கேள்வியைச் சரியாக புரிந்துகொண்டேனென்றால், கொஞ்சம் அடிப்படை உண்மையை எழுத்து நடை மூடிமறைப்பதாக நான் கூறமாட்டேன். இது நாள் வரை மூலத்தின் நடையைப் பேணியே வந்திருக்கிறேன், மூலத்தின் நடையை பேணாமல் என்னுடைய நடைக்கு ஏற்றபடி மொழிபெயர்த்தால், நான் அக்கதையின் தன்மையை முக்கியமான கூற்றை மாற்றிவிடுகிறேன். ஒரு முறை விளையாட்டாக லாரன்ஸ் ஸ்டேர்னை கொஞ்சம் தற்காலத்தைய ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தேன். சில கதைக்கூற்றின் உள்ளடக்கம், கொஞ்சம் நகைச்சுவை, விசித்திரத்தன்மை, இன்னும் சிலவற்றைப் பேண முடிந்தது, கொஞ்ச தூரத்திற்கு பரவாயில்லை, ஆனால் அது கடினமாகயிருந்தது. ‘மேம்படுத்தப்பட்ட’ பதிப்பிற்காக ஓவ்வொரு முறை அவரது சில சொற்றொடர்களை கைவிடும்போது, அப்படைப்பின் மிக இன்றியமையாத, இனிமையான விசித்திரத்தன்மைத் தொலைந்து போயிற்று.

தி பிலீவர்: ஆக ஒரு மொழிபெயர்ப்பாளராக தனது நடையைக்கொண்டு எழுத்தாளரின் நடையை மறைத்து விடாமல் இருப்பதன் அவசியம் குறித்து நீங்கள் கூறுகிறீர்கள். இன்னொரு விதத்தில் பெக்கெட், நடையில்லாத எழுத்துக்குறித்தான சாத்தியத்தைச் சுட்டுகிறாரெனப்படுகிறது. அது சாத்தியமென நினைக்கிறீர்களா? ஒருவேளை தனக்கு பரிச்சயமான ஆங்கில - மொழி நடையின் பாரமின்றி எழுவது குறித்து மட்டும் கூறுகிறாரோ?

லிடியா டேவிஸ்: இறுதியில், நடையில்லாத எழுத்து என்றொன்று உள்ளது என்பது போன்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ரொம்ப நேரான, தட்டையான, வழக்குகளற்ற, கவித்துவ செழிப்புகளற்ற, கடுமையான உருவகங்கள் புழங்கப்பெற்ற, நடையும் நடைதான், அது நெருக்கமான அடர்த்தியான, மரபுகள் மற்றும் சொற்களஞ்சியங்களைப் பயன்படுத்தும் எழுத்தாளரின் நடைக்கிணையான தனிச்சிறப்பான எழுத்து நடையாகிவிடுகிறது. நான் பெக்ட்டின் சுயவிளக்கத்தை போய் பார்க்கவேண்டும், ஆனால் அவர் ஒரு மாதிரி தனக்கு பேசுவதற்கும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் வெகு இயல்பான ஜாய்சிய மிகு பெருக்கத்தைத் தடுத்தாட்கொண்டிருக்கவேண்டும் என்றுபடுகிறது.

IV

நிஜ வாழ்வு

தி பிலீவர்: உங்களது தனிப்பட்ட வாழ்கையின் அடிப்படை விஷயங்களைப்பற்றி நீங்கள் ரகசியமாக இருப்பது கிடையாது - நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளராக வேலை செய்கிறீர்கள், பல்கலைக் கழகத்தில் பாடமெடுக்கிறீர்கள், மணமுடித்தீர்கள் மறு மணமுடித்தீர்கள், இரண்டு மகன்களைப் பெற்றீர்கள், இசை படித்தீர்கள், புத்தகம் எழுதுகிறீர்கள். உங்களிடம் முன்பே கேட்டிருக்கக்கூடும், டேவிஸின் கதாபாத்திரங்களுக்கும் டேவிஸ் என்ற மனிதருக்குமுள்ள வெளிப்படையான ஒப்புமை என்ன?

லிடியா டேவிஸ்: நான் பீட்டெர் ஆல்டென்பெர்கிடம் மீண்டும் செல்கிறேன் - அவரது பெரும்பான்மையான சின்ன கதைகள் அவர் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது அவரை ஒத்த கதாபாத்திரத்தைப் பற்றியதாகவோ இருக்கும், இருந்தும் அனைத்திற்கும் மேலாக என்னை ஈர்ப்பது, அந்தக் கதைகள் அதனளவில் நேர்மையாகவும், முழுமையாகவும் மற்றும் சுயமான ஒரு வாழ்வை கொண்டுள்ளன. முடிவில், அவை எங்கிருந்து வருகின்றன, எப்படி உருவாக்கப்பட்டன, முதன்மை கதாபாத்திரம் ஆல்டென்பெர்கா இல்லையா என்பது குறித்தெல்லாம் எனக்கு ஆழ்ந்த விருப்பமில்லை. இல்லை ஒரு வேளை, எனக்கு விருப்பமிருக்கலாம், ஆனால் அது அவைகளை நான் சிறு புனைவுகளாக வாசிப்பதில் எந்த தடையையும் ஏற்படுத்துவதில்லை. எப்படி தன் வாழ்விலிருந்து கூறுகளை தேர்ந்தெடுத்தார் என்பது கொஞ்சம் சுவாரஸ்யமானது தான் - மேலும் அது போன்று வலுவான, முழுமையான, வேடிக்கையான, துயர்மிகு உலகத்தை - தேர்ந்தெடுத்ததுதான் விஷயம். ரசல் எட்சனின் படைப்புகளில் எவ்வளவு நேர்மையும் ஈர்ப்பும் இருக்கிறதோ அதே அளவு இந்த சிறு படைப்புகளிலும் உள்ளது, அவைகள் கண்டிப்பாக அல்லது பெரும்பான்மையானவை சுயசரிதைத்தன்மை இல்லாதவை என நம்புகிறேன் அநேகமாக உணர்வுகளைத்தவிர. மேலும் தேர்ந்தெடுப்பது குறித்த - தொனி மற்றும் நோக்கம் கொண்டு - கருத்திற்கு திரும்புதல் அவசியமாகிறது. நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்வியற்கூறுகள் அல்லது உளவியல் குணங்கள் மூலம் என்னுடைய கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் என்னை சில வழிகளில் ஒத்திருக்கலாம் ஆனால் அவள் மொத்ததில் வேறுவொன்று, இன்னொரு படைப்பு.

தி பிலீவர்: கலைப்படைப்பென்பது தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்று நம்புகிறீர்களா?

லிடியா டேவிஸ்: கண்டிப்பாக அது அதைவிட இன்னும் கூடுதலானது. என்ன சொல்கிறேன் என்றால் உங்கள் ‘நிஜ வாழ்விலிருந்து’ எடுக்கும்போது, நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் மேலும் அதன்படி திரித்து கூறுகிறீர்கள், ஒரு வகையில் - உங்கள் விஷயங்களைச் சிதைக்கிறீர்கள், அல்லது உண்மையில் அவற்றைப் புனைந்துகொள்கிறீர்கள்.

தி பிலீவர்: உங்கள் கதைகள் குறித்து பென் மார்கஸ் இப்படிச்சொல்கிறார்: ‘ அனுபவத்தால் அறியப்படும் விஞ்ஞானமே டேவிஸின் சிறந்த கதைகளை வழி நடத்துகிறது. மாறாக ஒரு உள்ளுணர்வால் கதைசொல்லும் முறையல்ல.’ எழுத்தாளர்களை வெறும் உணர்வுகளின் பெருமூட்டைகள் என்பதல்லாமல், ஒரு இயந்திரத்தனமான இஞ்சினாக எண்ணுவது எனக்குப் பிடித்திருக்கிறது.

லிடியா டேவிஸ்: உள்ளுணர்வுகளாலான அனுபவ கதைச் சொல்லும் பாணி என்பது எப்படி இருக்கிறது?

இரண்டு மாடல்களும் (உணர்வு மூட்டைகள் மற்றும் இயந்திர இஞ்சின்கள்) வழிநடத்தும் நுண்ணறிவை விட்டு விடுகின்றன. வழிநடத்தும் நுண்ணறிவில் ஒரு வியத்தகு விஷயம் ஒன்று உள்ளது அது விஞ்ஞான கொள்கைகளை உறிஞ்சி ஒன்றுசேர்த்து மனித உளவியலிலும் உணர்வுகளிலும் கொண்டு சேர்த்துவிடுகிறது. இன்று உள்ளபடியே இன்றைய விஞ்ஞானத்தைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் என்னுடைய நண்பரொருவர் என்னிடம் வெப்பச்சலனம் மற்றும் வெப்பக்கடத்தல் குறித்த வித்தியாசத்தை விளக்கிக் கொண்டிருந்தார், பின்பு வெப்பக் கதிரியக்கம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். (தொட்டி நிறைய தண்ணீரில் சாம்பெய்ன் குளிர்ந்துகொண்டிருந்தபோது இது ஆரம்பித்தது.) விஞ்ஞானக் கொள்கைகள் மற்றும் கணித விதிகள் குறித்து ரொம்ப இனிமையான விஷயங்கள் உண்டு, அவை புலனாகாத, ஏதோ வழியில் தவிர்க்கவேமுடியாததாகவும் மிக ஓத்திசைவானதாகவும் இருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த கவிஞர், ரே ஆர்மண்ட்ராட், குறிப்பிட்ட சில விஞ்ஞானத்தில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார். விஞ்ஞான கொள்கைகளும் உண்மைகளும் அவரது கவிதைகளில் தவிர்க்க முடியாத ஒருங்கிணைந்த ஓர் அங்கமாகிறது ஏனென்றால் அவை அவரது சிந்தனையின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாகும்.

தி பிலீவர்: அருமை. எனது அழகான சிறிய முரண் தர்க்கம் காணாமல் போனது. ஆக, நான் சரியாக புரிந்துகொள்கிறேனென்றால், முடிவில், வழிநடத்தும் நுண்ணறிவே கலையை உருவாக்கும் என்று சொல்கிறீர்கள் - அந்த நுண்ணறிவிற்கு பின்புறம் எப்போதும் தகவல் மற்றும் உணர்வுகளிலான செயலியக்கம் நடந்துக் கொண்டே இருக்கிறது எனலாம்.

லிடியா டேவிஸ்: வழி நடத்தும் நுண்ணறிவு, ஆம், ஆனால் படைப்பின் தோற்றத்தில் வலிமையான உணர்வு இருக்க வேண்டும், அது எவ்விதத்திலேனும் நன்மை பயக்குமென்றால். கண்டிப்பாக, அந்த வலிமையான உணர்வு மொழியின் பெருங்களிப்பாகலாம்.

தி பிலீவர்: ஆர்மண்ட்ராட் குறித்து உங்களைக் கவர்ந்தது எது?

லிடியா டேவிஸ்: ஒ, அவரின் நகைச்சுவை, அவரின் நுண்ணறிவு, அவரின் துல்லிய படிமங்கள், அவரின் உணர்ச்சி வரிகள், மொழி மீதான அவரின் அக்கறை, - ஒவ்வொரு கவிதையிலும் வரும் ஆச்சர்யங்கள்.

வை ஸ்டாப் வித் பார்னகெல்?’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் - தலைப்பு அவருடைய ஒரு வரி தான், எனக்கு மிக விருப்பமானவற்றில் சேர்ந்தது.

V

தன்மன இறுக்கமான கதைசொல்லிகள்

தி பிலீவர்: ‘கிட்டதட்ட, உணர்வுபூர்வமான முக்கியமான விஷயங்களைக் கவனப்படுத்த தன்மன இறுக்கமான கதைசொல்லல் தோல்வியடைந்துள்ளது. மேலும் கதாபாத்திரங்களுக்கிடையேயான விவரணைக்காட்சிகளில் துடுக்கான ஆர்வமின்மை உள்ளது’ என உங்கள் கதைகள் குறித்து பென் மார்க்கஸ் மேலும் சொன்னவை.

லிடியா டேவிஸ்: இந்தத் தருணத்தில், கதாபாத்திரங் களிடையே விவரணைக்காட்சிகளை உருவாக்க எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. அந்த மாதிரி எழுதப்பட்டவை களில் குறிப்பிடும்படியான செயற்கைத்தனங்கள் அது நான் உருவகித்துக்கொண்டதாக இருக்கக்கூடும், அவற்றிலிருந்து விலக எண்ணுகிறேனோ என்னவோ. இருந்தும், அதைச் சொன்ன கணத்தில், வேறு என்ன எதிர்வினைகள் அந்தச் செயற்கைத்தனம் குறித்த அனுமானத்திற்கு இருக்குமென்று எண்ணுகிறேன். உதாரணத்திற்கு ஜேன் பாவெல்ஸ் போன்ற எழுத்தாளர், கொஞ்சம் அறிந்த செயற்கைத் தனத்தை, கதாபாத்திரங்கிடையிலான அந்த விவரணைக் காட்சிகளில் அனுமதித்து எப்படி பயனுள்ள அங்கமாக்குகிறார் என...

தி பிலீவர்: அந்தக் காட்சிகளில் அப்படியென்ன செயற்கையானது? மீதிக் கதையைவிட அது எப்படி செயற்கைத்தனமானது?

லிடியா டேவிஸ்: நம் தலைகளில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கதைக்கூறு ஒன்றுண்டு, நண்பன் ஒரு கேள்விக்கேட்டால் சத்தமாக பதிலளிக்கக் கூடியக் கூற்று. எனக்கு அந்தக் கூற்று வெகு இயல்பாகப் படுகிறது. உரையாடலின் துண்டுகளோடு நாமும் இருத்திக்கொள்கிறோம். நமது ஞாபகங்கள் எப்போதும் முழுமையான உரையாடல்கள் கொண்ட மொத்த காட்சிகளாக விரிவது கிடையாது. ஆக நமது கதாபாத்திரம் கொஞ்சம் உள்ளடங்கிய பகுதியிலிருந்து எதை நினைவுக்கொண்டிருக்குமோ அது குறித்து எனது படைப்புகள் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

தி பிலீவர்: இது தவறாக கூட இருக்கலாம், ஆனால் நான் இதைக் கேட்டாகவேண்டும் - உங்கள் கதை சொல்லிகள் குறிப்பாக தன்மன இறுக்கத்தோடு இருப்பதாக எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா (அல்லது வேறு ஏதாவது நரம்பியல் கோளாறுகளுடன்)?

லிடியா டேவிஸ்: இல்லை, எனக்கு அப்படி எப்போதுமே தோன்றியதில்லை. கதாபாத்திரங்கள் அல்லது கதைசொல்லிகள் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்கலாம், - நாம் நமது வாழ்வில் செய்வது போல.

ஒரு எழுத்தாளராக, உணர்வுபூர்வமான முக்கிய விஷயத்தையும் விவரங்களில் கவனத்தையும் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் அந்த உணர்வுபூர்வமான முக்கிய விஷயம் எப்படியாவது கடத்தப்பட்டுவிடும் என நம்புகிறேன். உதாரணத்திற்கு, எனது சமீபத்திய புத்தகத்தில் உள்ளவி மிஸ் யூஎன்ற கதையில், கிட்டத்தட்ட பித்தநிலையிலான மனவொருமையுள்ள கதைச்சொல்லி (ஒரு சமூகவியலாளராக) அலைவுறாத கவனத்தோடு அதே நேரம் அவரது சொந்த உணர்ச்சிகரமான எதிர்வினைகளை விட்டுக்கொடுத்து விடாதவாறும் சிறுவர்களின் கடிதத்தைப் பற்றிய விரிவானஅலசலில் ஈடுபட்டிருப்பார். மேலும் தனது நடுநிலையையும் அவரதுவிஞ்ஞானபூர்வவிலகலையும் தக்கவைக்க போராடுவதற்கான துணுக்குகளும் அங்கு இருக்கிறது. அக்கதைக்கு, பெரும்பாலான கதைகளுக்கு போல, உணர்வே பிரதானமானது.

தி பிலீவர்: உங்கள் கதைசொல்லிகள் எப்போதும் உலகைப் புரிந்துக்கொள்ள வேண்டுமென விரும்புவதாக தெரிகிறது, ஆனால் சமயங்களில், அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கு பிறகும், சிறிது எஞ்சக்கூடிய விளங்கா புதிர்தன்மைக்கு வேண்டுவது போலப்படுகிறது.

லிடியா டேவிஸ்: எனது கதைசொல்லிகள், விளங்கா புதிர்த்தன்மைச் சூழ வாழ்வதற்கு கவலைப்பட்டதே இல்லை என எண்ணுகிறேன். ஆனால் அதே வேளையில், அவர்கள் முழுமையாக புரிந்துகொள்ள விரும்பும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளும் உண்டு. நாம் புனைவிலோ அல்லது நிஜ வாழ்விலோ கற்பனையான எதோவொரு நாடகத்தில் மாட்டிக்கொண்டு மேலும் அது எவ்வாறு ‘முடிவுறும்’ என்று தெரிந்துகொள்ளவேண்டுமென ஒரு அவசரத்தன்மையைக் கொண்டிருப்போம், கதைசொல்லிகளின் விருப்பம் அதே உணர்வைக்கொண்டிருக்கும். கேள்விகள் உளவியல் ரீதியானதாகவோ அல்லது உணர்வு பூர்வமானதாகவோ இருக்கலாம். அல்லது அவை தாவரவியல் சம்பந்தமானதாகவோ இருக்கலாம், அல்லது இந்த விஷயத்தில் அது உடற்கூறு சம்பந்தபட்டதாக இருக்கிறது. எனது கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே நான் இரண்டு துண்டுத்தாள்களை, பிடித்துக்கொண்டிருக்கிறேன், ஒன்றல்ல இரண்டென்று எப்படி எனது உடம்புக்குத் தெரியும்? நான் கவனிக்கும் புதியவர்களின் மேல் (பேருந்திற்காக வரிசையிலிருப்பவர்கள்போல) பெரும் ஆர்வத்தோடு இருக்கிறேன். விடைகளைக் கண்டுபிடிப்பதோடு நான் மிக நெருக்கமாக உணர்கிறேன். ஆனால் நான் கூறியது போல, நானும் என்னுடைய கதாபாத்திரங்களும் சௌகரியமாக உணரும் அந்தப் புதிர்தன்மையின் சூழலில் இவையெல்லாம் தனித்துவிடப்பட்ட நிகழ்வுகள்.

தி பிலீவர்: புதிர்த்தன்மையின் சூழலில் தனித்துவிடப்பட்ட நிகழ்வுகள் - அது உங்கள் புனைவுக்கான சாத்தியமான மாதிரி எனப்படுவதோடு, பிரபஞ்சத்துக்குமானது என்பதைச் சொல்லத்தேவையில்லை.

ஜூஸ்...”  என்றான் ராம் மெனு கார்டிலிருந்து தலையைத் தூக்கியவாறு.

இரண்டு பிளேட்  இட்டிலி, ஒரு ஊத்தாப்பம், ஒரு பூரி, இரண்டு கிரேப் ஜூஸ்என்று வெயிட்டர் அதுவரை சொல்லப்பட்டவற்றையெல்லாம் ஒரு முறை திரும்பிச் சொன்னான்.

கரெக்ட், ஜூஸ் முதலில்

வெயிட்டர் சென்றான். ராம், டன்ஹில் பாக்கெட் ஒன்றை வேணுவிடம்  நீட்டி, “ஸ்மோக்என்றான்.

பிற்பாடுஎன்றான் வேணு.

ராம் தான் மட்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். தீர்க்கமாக இரண்டு இழுப்பு இழுத்துப் புகையை ஊதினான். “யார் வேண்டுமானாலும் ஸ்மோக் பண்ணலாம். ஆனால் எல்லோரும் கதை எழுத முடியாது: இல்லை?” என்றான்.

வேணு: வெறுமனே புன்னகை.

இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?”

ஒரு குறுநாவல்

அபௌட் வாட்

ஒரு எழுத்தாளனுக்கும் அவன் மச்சினிக்குமிடையே இருக்கிற அஃபேர் பத்தி

ஹோப் இட் இஸ் நாட் ஆட்டோபயாகிராஃபிகல்

எனக்கு மச்சினியே கிடையாது

“ஓ! a wish fulfillment story, then"

தேவலையே! நீயும் இலக்கிய பரிபாஷையெல்லாம் நிறைய பிக் அப் பண்ணிண்டு வரயே!”

ராம் கடகவென்று சிரித்தான். “யா, யு நோ... தில்லியிலே நான் மூவ் பண்ற சர்க்கிள் அப்படி; லிட்டரேச்சர்லே இண்டரஸ்ட் உள்ளவங்க - அதுவும் மாடர்ன் டமில் ரைட்டிங்ஸை குளோசா ஃபாலோ பண்ற கேரக்டர்ஸ் - அங்கே நிறைய இருக்காங்க. ஒவ்வொருத்தனும் கதைகளையும் ஆத்தர்ஸையும் எப்படி புட்டுப் புட்டு வைக்கிறான்கிறே! Those guys are fantastic, I tell you. உன் பெயரைக் கூட அவர்கள் மென்ஷன் பண்ணிக் கேட்கிறேன் அடிக்கடி.”

அப்படியா

“ஆமாங்கிறேன். நான் உன் கிளாஸ்மேட், க்ளோஸ் பிரண்ட்னு சொன்னேனோ இல்லையோ,  என் மதிப்பு அப்படியே உசந்து போச்சு. ஐ பிகேம் கிரேட் ஹீரோ, உன் அப்பியரன்ஸ் பத்தி, பேமிலி பத்தி, வொர்க்கிங் ஹாபிட்ஸ் பத்தியெல்லாம் தூண்டித் துருவி என்னென்னெல்லாம் கேள்விகள்! அதுவும்... (கண்சிமிட்டல்) லேடீசுக்கு உன் கதைகள் ரொம்பப் பிடிச்சிருச்சுப்பா. மிஸ் ஷோபான்னு ஜே.என்.யுவிலே அமெரிக்கன் ஹிஸ்டரி படிக்கிற பெண் ஒருத்தி... அவ அப்படியே உன் கதைகளிலிருந்து வரிக்கு வரி கோட் பண்ணினா, ஏன் அவர் இப்பல்லாம் நிறைய எழுதறதில்லே? அவரை நிறைய எழுதச் சொல்லுங்க சார் அப்படின்னா. உன் எழுத்துன்னா அவளுக்குப் பைத்தியமாம்”

வேணு சிரித்தான்.

என்னடா, பிளஃப் அடிக்கிறேன்னு நினைக்கிறியா?”

சேச்சே! சந்தோஷத்தினாலே சிரிச்சேன்

“நிஜமாகவே நீ சந்தோஷமாக இருக்கலாம். நிறைய பேர் ஆங்காங்கே உன் கதைகளை ஃபாலோ பண்ணிக் கொண்டுதானிருக்கிறார்கள். ரசித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். சற்று முந்தி உன் ஆபீசிலிருந்து நாம் கிளம்புகிற சமயத்தில் அதைரியப்பட்டியே, எழுதி என்ன பயன், எதற்காக எழுதிண்டே போகணும், என்றெல்லாம் அலுத்துண்டியே, அதெல்லாம் அனாவசியம் வேணு! உனக்கு தெரியலை... வீணே மனசத் தளர விடாதே!”

வேணு உலர்ந்த புன்னகை செய்தான்.

“நீ அந்த ஜே.என்.யு. கேர்ளுடைய போட்டோவையாவது கொண்டு வந்திருக்கக் கூடாதா... அதைப் பார்த்து எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் வந்திருக்கும்.”

ராம் சிரித்தான்.

நோ... நான் சொல்வதை நீ நம்பவில்லை, அல்லவா!

அந்தப் பெண் என் கற்பனை என்று நினைக்கிறாய்

சிகரெட்டை ஆஷ் ட்ரேவில் நசுக்கி அணைத்து, மடக் மடக்கென்று தண்ணீர் தம்ளரை காலி செய்தான்.வெயிட்டர் ஜூஸ் தம்ளர்களுடன் வந்தான். அவன் தம்ளர்களை வைத்துவிட்டுச் செல்லும்வரை ராம் பேசாமலிருந்தான். பிறகு சொன்னான்:

புதுமைப்பித்தன் எழுதிய கடிதம் என்ற சிறுகதையை படித்திருக்கிறாயா?”

வேணுவின் முகத்தில் ஆச்சரியம். (இவன் புதுமைப் பித்தன் வேறு படிக்க ஆரம்பித்துவிட்டானா?)

ஞாபகமில்லைஎன்றான்.

என்ன கதை, சொல்லு? சொன்னால் நினைவு வந்து விடும்... படித்து நாளாச்சே! அந்தக் காலத்தில் ஒரு வரி விடாம படிச்சிருக்கேன்...”

“உன்னை மாதிரிதான் அதிலே ஓர் எழுத்தாளன், என் கதைகளை யார் புரிந்துகொள்கிறார்கள், எழுதி என்னதான் பயன், என்றெல்லாம் தன் நண்பனிடம் அலுத்துக்கொள்கிறான். சில நாள் கழித்து ஏதோ முன்பின் தெரியாத ஒருவன் மனம் மகிழ்ந்து எழுதிய ஒரு பாராட்டுக் கடிதம் எழுத்தாளனுக்கு வருகிறது. எழுத்தாளனுக்கு ஒரே பூரிப்பாகவும் நிறைவாகவும் இருக்கிறது. ஆனால் கையெழுத்தைக் கூர்ந்து பார்த்தால் தெரிந்த கையெழுத்தாக இருக்கிறது. சே! தன் சோர்வை அகற்ற நண்பன்தான் இப்படி வேறு பெயரில் எழுதியிருக்கிறான் என்று தெரிந்து கோபமும் மறுபடி ஆயாசமும் ஏற்படுகிறது.”

“தெரியும், தெரியும், ஞாபகம் வந்துவிட்டது. கடைசியில் எழுத்தாளன், இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தன் கதைகளைப் புரிந்துகொள்கிற ஒருத்தன் வருவான்;

அப்போது தானில்லாவிட்டாலென்ன, தன் கதைகளிருந்தால் போதும், என்று தன்னைத் தேற்றிக்கொள்கிறான்... இல்லையா?”

ஆமாம்

“சுவையான சிச்சுவேசன்...” என்று வேணு அக்கதையை நினைவு கூறுவதுபோலச் சிறிது நேரம் பேசாமலிருந்தான்.

புதுமைப்பித்தன் பெரிய ஆள்என்றான்.

ஹீ இஸ் ஜீனியஸ்

இட்லி வந்து விட்டது. வேணுவின் பசிக்கு வேண்டியிருந்தது இட்லிதான். புதுமைப்பித்தன் அல்ல. ஆனால் வெறுமனே பரக்கப் பரக்க இட்லியைத் தின்ன முற்படுவது தன்னை ஒரு பிச்சைக்காரனாகக் காட்டும், என வேணு நினைத்தான். ராம் தன்னிடம் எதிர்பார்ப்பது இலக்கியக் கருத்துகள் அல்லது குறைந்தபட்சம் இலக்கிய வம்பு. நான் ஆர்ட்டிஸ்ட், அவன் ஸ்பான்ஸர், impresario, என் ஏஜன்ட், என் புகழின் ரட்சகன், என் விசிறிகளின் பக்தியைக் குடம் குடமாக, குடலைக் குடலையாக, என் காலடியில் சமர்ப்பிக்கும் பூசாரி; இந்த இட்டிலி, ஊத்தாப்பம், ஜூஸ் எல்லாம் அவன் அடிக்கும் உடுக்கு. டகடும், டகடும், டகடும்! நான் இப்போது ஆடவேண்டும், அவனுக்குப் பிரத்தியட்சம் ஆகவேண்டும்.

அல்லது இது ஒரு சவாலாகவும் இருக்கலாம். எனக்கு மட்டுமே சொந்தமென்று நான் நினைப்பதாக அவன் நினைக்கிற இலக்கிய உலகம் தனக்கும் தான் சொந்தமென்று முழுங்கி என் பிரத்யேகத் தன்மையைச் சீண்டுதல், என் காலை வாருதல், என் அகந்தையை ஆழம் பார்த்தல்...

வேணு, இட்டிலித் துண்டைச் சட்டினியுடன் சேர்த்துத் தின்றான். பேஷ்! பிரமாதமாயிருந்தது. இன்னொரு துண்டைச் சாம்பாருடன் சேர்த்து. அதுவும் ஃபர்ஸ்ட் கிளாஸ், திருநெல்வேலி, தென்காசி முதலிய பிரதேசங்களிலெல்லாம் இட்டிலி இன்னமும் கூட நன்றாயிருக்கும். புதுமைப்பித்தன் ஏன் இதைப்பற்றி எந்தக் கதையிலும் எழுதவில்லை? ஆசாமிக்கு ஸ்வீட்தான் பிடிக்கும் போலிருக்கிறது. ‘அல்வா எனச் சொல்லி அங்கோடிவிட்டாலும்...’

“வெறும் சூத்திரங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கையை வென்றுவிட முடியாது... ஓர் எழுத்தாளனாலும் கூட” என்றான் வேணு.

புரியவில்லை

நீ அந்தக் கதையைக் குறிப்பிட்டாயே, அதற்காகச் சொன்னேன். ‘எதிர்காலத்தில் வரப்போகும் ரசிகன்என்ற நம்பிக்கை மட்டுமே ஓர் எழுத்தாளனுக்கு போஷாக்குத் தர முடியுமா? இஸ் இட் பிராக்டிகல்? புதுமைப்பித்தன் தேவையேற்பட்டபோது சினிமாவுக்காக எழுதித் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டிவந்தது, என்பதுதானே உண்மை? எழுத்தாளன் என்பது ஓர் உருவகம் மாத்திரம் அல்ல. வயிறும், வாயும் உள்ள ஒரு பிண்டமும் கூட. இந்த பிண்டம் ரசிகனுக்கு எதற்காக, அவனுக்குக் கதைதானே வேண்டும், என்கிற நயமான விரக்தியே அக்கதையில் வெளிப்படுகிறது. ‘சிற்பியின் நகரம்பிரச்சினையின் ஒருபக்கம் என்றால் இங்கே பார்ப்பது பிரச்சினையின் மறுபக்கத்தை. பாராட்டுக் கிடைத்தாலும் மனம் மகிழ்வதில்லை. அந்த பாராட்டின் பரிசுத்தத்தை பரிசீலிக்க முயல்கிறது. தோழமையைத் தேடுகிறது. அதே சமயத்தில், தோழமையைக் கண்டு மருளவும் செய்கிறது.”

ஃபண்டாஸ்டிக்!” என்றான் ராம் - அவன் முகம் ஆர்வத்தில் ஜொலித்தது. என்ஆட்டம்இவனுக்கு போதையேற்றத் தொடங்கிவிட்டது என்று வேணு நினைத்தான். தொடர்ந்து பேசினான்.

புகழும் பணமும் இருந்தும் ஹெமிங்வே தற்கொலை செய்துகொண்டானே! அதைப்பற்றியும் நினைத்துப்பார். அவனுக்கென்ன, ரசிகர்களுக்குப் பஞ்சமா!”

“அதைப்பற்றி நான் யோசித்ததுண்டு” என்று ராம் மறுபடி வேணுவை ஆச்சரியப்படுத்தினான். ஹெமிங்வே ஓர் அமெரிக்கர், here, now என்ற சித்தாந்தத்தைத் தொழுதவர். தன் ‘நம்பர் ஒன் எழுத்தாளர்’ என்ற பிம்பத்தை தொழுதவர். தன் நம்பர் ஒன் ஸ்தானம் சாஸ்வதமல்ல, யாரும் எக்கணமும் அதைப்பறித்துவிடக்கூடும், என்ற இன்செக்யூரிட்டியை அவரால் தாளமுடியவில்லை. அதுவே அவரை தற்கொலைக்கு விரட்டியது. புதுமைப்பித்தன் விஷயம் வேறே. அவர் ஒரு துறவி, அதாவது, தோல்வி சார்ந்த துறவு அல்ல, ஞானத் துறவு. He was mystic.

“ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’, ‘கிலி மஞ்சாரோ’ ‘பனிச் சிகரங்கள்’ ஆகிய படைப்புகளில் mystic சாயைகள் இல்லையா என்ன?”

“தனிமை பற்றிய ஒரு தவிப்பு, ஒரு மருட்சி... ஆனால் ‘தான்’ சரணாகதியடைவதில்லே! Surrender of the ego... You know what. I mean?”

“புதுமைப்பித்தன் mystic தான்.  அதைப் பற்றிச் சந்தேகமில்லை” வேணு இப்போது தானும் புதுமைப்பித்தனைப் படித்திருப்பதாக, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கும் நிர்பந்தத்தில் சிக்கிக்கொண்டான்.

அப்பா! சாமியாராகப் போற கேரக்டர்ஸுக்குப் பஞ்சமேயில்லை... அன்று இரவு, உபதேசம், அவதாரம், சித்தி, கந்தசாமிப்பிள்ளை என்னடான்னா, கடவுளை பிராட்வே பக்கத்தில் சந்திக்கிறாராம், காஷுவலா அவரை காப்பி ஹோட்டலுக்குக் கூட்டிப் போறாராம், தன் பத்திரிகைக்குச் சந்தா கேட்கிறாராம். என்ன நையாண்டி, என்ன அனாயாசமான தத்துவ வீச்சு எமகாதகப் பேர்வழியப்பா, அந்த மனுஷன்...”

கயிற்றரவு

கிளாசிக்!”

அப்புறம் அமானுஷியக் கதைகள். காஞ்சனை மாதிரி... புராண நிகழ்ச்சிகள்... சாப விமோசனம் மாதிரி...”

தனித்தனிக் கட்டுரைதான் எழுதணும்என்று வேணு இட்லியை முடித்துத் தண்ணீர் குடித்தான்.

ரியலிசம் அல்ல, ஃபேன்டஸியும், மிதாலஜியும்தான் புஷ்டியான இலக்கிய ஊற்றுகள்னு ஜான் பார்த் ஒரு இண்டர்வியூவிலே சொல்லி இருக்கிறான். படித்தேன் புதுமைப்பித்தன் அன்றைக்கே இதை ஆன்டிசிபேட் பண்ணிட்டானே! அதை நினைச்சால் ஆச்சரியமாயிருக்கு

ஊத்தப்பமும் பூரியும் வந்துவிட்டன. ராமுவுக்கு பூரி, வேணுவுக்கு ஊத்தப்பம். ஊத்தப்பமும் மிக ருசியாயிருந்தது. ராமின் தயவில் இன்று இந்த நட்சத்திர ஹோட்டலில் டிபன். ஒரு நாள் மனைவியைக் கூட்டிக்கொண்டு இங்கே வரவேண்டும். முடியுமோ என்னவோ? கணவனும் மனைவியும் பீச்சுக்குப் போய் உட்கார்ந்திருப்பது பற்றிய ஒரு புதுமைப்பித்தன் கதை... என்ன தலைப்பு அது, ஞாபகமில்லை... கணவன் வறட்டு அறிவு ஜீவி, மனைவியுடன் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் ஒரு தனி உலகத்தில் வாழ்கிறவன்... நானும் அந்தக் கணவனைப் போலத்தான் ஆகிக்கொண்டு வருகிறேனோ?

ராம் ஒருவேளை அந்தக் கதையை படிக்காமலிருக்கலாம். அவ்வளவு பிரபலமான கதை இல்லை. எப்படியோ மனதில் தங்கிவிட்டிருக்கிறது. வேணு ராமிடம் அக்கதையைப் பற்றி பிரஸ்தாபித்தான்.

“தெரியும், படிச்சிருக்கேன்” என்றான் ராம். வேணுவுக்கு ஏமாற்றமாக இருந்தது. கோபமாகக் கூட இருந்தது. இவனையெல்லாம் யார் புதுமைப்பித்தனைப் படிக்கச் சொல்கிறார்கள்?. பிசினஸ்மேனாக லட்சணமாக ஸ்பேர் டைமில் விஸ்கியடித்துக்கொண்டு, பார்ட்டிகளுக்கும் டின்னர்களுக்கும் போய்க்கொண்டு இருக்கவேண்டியதுதானே!

இரண்டு உலகங்கள் என்பது தலைப்பு நீ சொல்ற கதைக்கு..” என்றான் ராம். “இதே தீமை, ‘நினைவுப் பாதைஎன்கிற கதையிலே இன்னமும் பவர்ஃபுல்லா டீல் பண்ணியிருக்கார். மனைவியுடைய பாடை கிளம்பிண்டிருக்கு... கணவனுக்கு அதைப் பார்த்து மணப்பெண்ணாக அவள் நின்ற கோலம் நினைவுக்கு வர... தான் அவளை அறிந்துகொள்ளவேயில்லை என்று அப்பத்தான் உறைக்கிறது... அப்பா! மனத்தை உலுக்கும் ஒரு சிச்சுவேஷன்!”

இப்போது, இதைக் கேட்டதும், வேணுவுக்குக் கொஞ்சநஞ்சம் இருந்த சந்தேகமும் நீங்கிவிட்டது. ஆமாம் இவன் ஷோ ஆஃப்தான் செய்கிறான். இலக்கியமும் இலக்கிய ரசனையும் உனக்கு மட்டும் சொந்தமல்ல, என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். என்னுடைய ஒரே உடுப்பான இலக்கிய உடுப்பையும் தான் பறித்துக்கொண்டு என்னை அம்மணமாக்க முயலும் குரூர விளையாட்டு.

“ஆமாம், உன்னைப் போன்றவர்களுக்கு உலுக்கும் சிச்சுவேஷந்தான்” என்றான் வேணு. இப்போது அவனுக்கும் ராமை பதிலுக்குக் காயப்படுத்தவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. “அதாவது உன் மென்மையும் பெண்ணென்ற கவிதையைப் புரிந்துகொண்டுள்ள சூட்சுமமும் உலுக்கப்பட்டதாக நீ சொல்ல வருகிறாய்.. இது உன் வர்க்கத்தைத்தான் காட்டுகிறது. மென்மை, ரசனை இதெல்லாம் கூட ஒரு மட்டத்தில் இருப்பவர்களுக்கு லக்ஸுரி. அப்பா! கணவன் வீட்டுக்கு வெளியிலும், மனைவி வீட்டுக்குள்ளேயும் ஒரே நுகத்தடியில் கட்டப்பட்ட இரு மாடுகளாக உழை உழையென்று உழைத்துக்கொண்டு, ஒருவர் முகத்தை இன்னொருவர் சரியாகப் பார்க்கக்கூட முடியாமல் போகிற மிடில் கிளாஸ் அவலத்தையே அக்கதை சித்தரிக்கிறது. கம்பேடிபிலிடி, அறிந்துகொள்ளுதல், இதெல்லாம் பணக்காரர்களுக்குத்தான்”

ராமின் முகம் சிவந்தது. கோபமல்ல, வியப்புதான் அதில் அதிகம் தெரிந்தது. “இருக்கலாம்...” என்றான். “நீ சொல்வது போல இருக்கலாம்... நீ ஏன் இப்படிப் பதற்றப்படுகிறாய்?”

பதற்றமில்லை, ஓர் உண்மையைச் சொன்னேன்.”

ராம் பூரியை முடித்தான். வேணு ஊத்தப்பத்தை முடித்தான்.

காப்பிஎன்றான் வெயிட்டர்.

ராம் வேணுவைப் பார்த்தான். வேணு தலையசைத்து ஆமோதித்தான். உடனே இரண்டு கப்கள் காப்பி என்று சொல்லிவிட்டு ராம் கண் சிமிட்டினான். “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்என்று சிரித்தான்.

வேணுவும் வேறு வழியின்றிச் சிரித்து வைத்தான்.

“புதுமைப்பித்தனுடைய கதைகளையெல்லாம் நானும் என் வைஃபுமாக ஒரு மாசமாகப் படித்துக்கொண்டு வருகிறோம். அதனாலே மனசிலே புதுமைப்பித்தனே ஓடிண்டிருக்கார். தப்பா நினைச்சுக்காதே.”

படி, படி, நிறையப் படி

நான் இன்னொன்று சொல்கிறேன் - தயவுசெய்து, இதுவும் என் கிளாஸ் மென்டாலிட்டியைக் காட்டுவதாக நினைச்சுக்காதே. வெறுமனே ஒரு எண்ணம்...”

சொல்லு

புதுமைப்பித்தனுடைய தத்துவ விசாரத்தின் ஊற்று, ஒருவேளை நிறைவற்ற திருமண உறவாக இருக்குமோ, என்று தோன்றியது..”

அப்ஸர்ட்

“அவருடைய தம்பதியரைப் பற்றின கதைகள் எதிலேயும் மனைவி ஃபிகருக்கு கதாரீதியாக முக்கியத்துவமே தரப்படுவதில்லை, கவனிச்சியோ?”

ஸோ?”

“ஆனால், குழந்தைப் பாத்திரமாக வருகிற கதைகளிலெல்லாம் ஒரு பெண் குழந்தை - புதுமைப் பித்தனுக்கும் பெண்தானே! - தவிர்க்க முடியாமல் இடம்பெறுகிறது. கதையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ‘சிற்றன்னை’, ‘மகாமாசானம்‘, ‘ஒருநாள் கழிந்தது’, ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’, ‘சாமியாரும் குழந்தையும் சீடையும்’ எனவே, குழந்தை அவரது சப்கான்ஷியஸ்ஸை ஆக்கிரமித்துக் கொண்ட அளவு, மனைவி ஆக்கிரமித்துக்கொள்ளவில்லை என்றுதானே ஆகிறது?”

“இதெல்லாம் ஸ்டுபிட் அனாலிஸ். ஒரு முடிவை மனதில் இருத்திக்கொண்டு, பிறகு அதற்கான சாட்சியங்களை நிறுவும் காரியம்...”

காப்பி வந்துவிட்டது.

இருக்கலாம்என்றான் ராம்.

“அதுதான் சொன்னேனே... ஐ ஆம் ஜஸ்ட் ஸ்பெகுலேடிங்”

காப்பியில் சீனியைக் கலக்கும்போது சட்டென்று வேணுவுக்கு இரண்டு கதைகள்... மிகவும் பிரபலமான கதைகள் நினைவுக்கு வந்தன. “வாட் அபௌட் காஞ்சனை?” என்றான். “வாட் அபௌட் செல்லம்மாள்? - இக்கதைகளில் மனைவி ஃபிகர் நன்றாக அமைந்திருக்கிறதே!”

அக்ரீட், ஆனால் இக்கதைகளில் என்ன நடக்கிறது. அதை யோசித்துப் பார். காஞ்சனையில் பிசாசு மனைவியின் கழுத்தை நெரித்துகொல்லப் பார்க்கிறது. செல்லம்மாளிலோ, மனைவி ஒரு சீக்காளியாக்கப்பட்டு, சாகடிக்கப்படுகிறாள்.”

ஸோ

“மனைவியைக் கொல்லவேண்டும் என்ற எழுத்தாளனின் சப்கான்ஷியஸ் வேட்கையைத்தானே இது புலப்படுத்துகிறது?”

“How far fetched! உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது.”

இருக்கலாம்என்று ராம் காப்பியை ஒரு வாய் உறிஞ்சினான். “ஆனால் கே.என்.எஸ். அவருக்குமா பைத்தியம்?”

கே.என்.எஸ்ஸா!” வேணு மலைத்துத்தான் போனான்.

கே.என்.எஸ்ஸைப் பாத்தியா?”

எப்பவாவது மாசத்திலே ஒருநாள், இரண்டு நாள் போவேன் அவர் வீட்டுப்பக்கம்என்றான் ராம் அலட்சியமாக.

பக்கத்திலே தானே! நான் இருப்பது டிஃபன்ஸ் காலனி, அவர் சவுத் எக்ஸ்டன்ஷன்

கே.என்.எஸ்! வேணுவுக்குப் பேச்சே எழவில்லை. போன மாதம் கூட சென்னைக்கு வந்து இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார். வேணுவுக்கு அவரைப் பார்க்கவேண்டுமென்று ஆசை. ஆனால் கூடவே ஒரு கூச்சம், தன்னம்பிக்கையின்மை. அவருடைய இலக்கிய ஹோதா தன்னை அரவணைக்குமா, புறக்கணிக்குமா என்று புரியாமல், போகாமலே இருந்துவிட்டான். ராம் அதிர்ஷ்டசாலி, அவன் எழுத்தாளன் இல்லை.

“அவர் புதுமைப்பித்தனுடன் க்ளோஸா மூவ் பண்ணினவராச்சே! அவர் என்ன சொன்னார் தெரியுமா? There may be Something in what you say, அப்படின்னார். ராமின் முகத்தில் என்ன ஒரு கொக்கரிப்பு, வெற்றிப் பெருமிதம்!

வேணு இப்போது உண்மையிலேயே அம்மணமாகிப் போனான். “படவா!” என்று பல்லை கடித்துக்கொண்டான். காஞ்சனையில் வருகிற மோகினிப் பிசாசு இப்போது சட்டென்று இங்கு தோன்றி ராமின் கழுத்தை நெரித்துக்கொன்றால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அல்லது, ‘செவ்வாய்தோஷ’த்தில் வருகிற ரத்தக் காட்டேரி...

மனதில் ஒரு பிளாக் அவுட். ரெஸ்டாரன்ட்டிலிருந்து வெளியில் வரும்போதும் டாக்ஸியில் செல்லும்போதும் ராம் பேசிக்கொண்டு வந்த எதுவும் மனதில் பதியவில்லை. ஒரே சுய வெறுப்பு, சுய அனுதாபம் - சே! நான் ஒரு முட்டாள். நானும் இவனைப்போல ஒரு பிசினஸ்மேனாகப் போயிருக்கவேண்டும். பணம்தான் முக்கியம். அது இருந்தால் பிற ஹோதாக்களும் பட்டங்களும் தானாக ஏற்பட்டுவிடும். இலக்கிய ரசிகன், எழுத்தாளன்...

ஆமாம், ராம் இனி கதையெழுதவும் கூடும். என் சாம்ராஜ்ஜியமென்று, அவனைப் போன்ற ஒட்டகங்கள் நுழைய முடியாதஊசித் துவாரமென்று’, நான் இறுமாந்திருந்த இடத்தினுள்ளும் அவன் நுழைந்துவிடப் போகிறான். எனக்கென இனி எந்தக் கிரீடமும் மிச்சமில்லை.

வேணு வீட்டருகே, மெயின்ரோட்டில் அவனை இறக்கிவிட்டு வைஃபை மிக விசாரித்ததாகச் சொல்லி விட்டு, ராம் சென்றான். வேணு அந்த இருளடர்ந்த திருவல்லிக்கேணி சந்தினுள் மாடுகளின் மீது தடுக்கி விழாமல் ஜாக்கிரதையாக நடந்து சென்று, தன் இரண்டு ரூம் அரண்மனைக்குள் நுழைந்தான். பிற்பகலில் பார்த்த ராமின் விசாலமான ஹோட்டல் அறை நினைவு வந்தது. எரிச்சலாக இருந்தது. அந்த அறையிலுள்ள அழகிய மஞ்சத்தில் படுத்தபடி, ராம் புதுமைப்பித்தனைப் படிப்பான். அவனது வீட்டிலும் அத்தகைய படுக்கை இருக்கும். அவன், அவன் மனைவி, இருவருமே படுத்துக்கொண்டு புதுமைப்பித்தனைப் படிப்பார்கள்.

“காப்பி வேணுமா?” என்ற மனைவியின் விசாரணை எரிச்சலை அதிகமாக்கியது. ‘ப்ச்’ என்று சூள் கொட்டினான். அதற்கு என்ன அர்த்தமென்று புரியாமல் அவள் நின்றுகொண்டே இருந்தாள். அவன் பேண்ட்டை அவிழ்த்துவிட்டு வேட்டியைத் தேடினான். பட்டென்று மனதில் குமைந்துகொண்டிருந்த எரிச்சலெல்லாம் குப்பென்று வெடித்தது: “என் வேட்டியை எங்கே கொண்டு வச்சே?”

அவள் அமைதியாக, அவன் அதுவரை தேடிக் கொண்டிருந்த இடத்திலிருந்தே வேட்டியை எடுத்துக் கொடுத்தாள். “காப்பி கலக்கட்டுமாஎன்று மறுபடி விசாரித்தாள்.

வேண்டாம், வேண்டாம், வேண்டாம்!” என்று அவன் மறுபடி வெடித்தான். இந்த இரண்டாவது வெடிப்புடன் கோபம் சட்டென்று வடிந்துபோயிற்று.  தன் மேலேயே வெட்கம் ஏற்பட்டது. தான் ஒரு டிபிகல் மிடில் கிளாஸ் கணவனாக நடந்துகொள்வதாகப் பட்டது. தன் மன உளைச்சல்கள், ஏமாற்றங்களுக்குப் பரிகாரமாக மனைவியை அடித்து நொறுக்கும் கணவனின் பிம்பம்...

குழாயடியில் கால் அலம்புகையில் சட்டென்று புதுமைப்பித்தனின் இன்னொரு சிறுகதை நினைவு வந்தது. ஆபிஸில் எளிய குமாஸ்தாவாகவும் வீட்டில் சர்வாதிகாரியாகவுமிருக்கிற கணவனைப் பற்றிய கதை. ‘மண்ணாங்கட்டி’ என்று அவன் முணுமுணுத்துக் கொண்டான். பெரிதாக மிடில் கிளாஸ் ஹஸ்பண்டை வைத்து என்ன சட்டையர் வேண்டிக்கிடக்கிறது. ராம் போன்றவர்களின் மனோரஞ்சகத்துக்காக, தன் வர்க்கத்தினரைக் கோமாளிகளாக்குதல்... துரோகி! உனக்கு வேண்டியதுதான். சொஃபிஸ்டிகேடட் வாசகரின் அங்கீகாரத்தை வேண்டித்தானே இப்படியெல்லாம் எழுதினாய்? நன்றாக இப்போது இவர்களிடம் மாட்டிக்கொண்டு திண்டாடு. இவர்களுடைய வாயில் புரண்டு எச்சில் படு! உன் செக்ஸ் லைஃபைக்கூட இவர்கள் விட்டுவைக்கப்போவதில்லை...

வேணு மனதில் இப்போது ஒரு சாந்தம், அதைப் பகிர்ந்துகொள்ள அவன் மனைவியைத் தேடிச் சென்றான்.

இந்த இருபதாண்டுகளில் அந்தக் குளத்தை அவன் முழுமையாக உள்வாங்கிக்கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருநாள் கூட அவனை ஏமாற்றி வெறுங்கையோடு அனுப்பியதில்லை குளம். குளத்தின் சகல பரிமாணங்களும் அவனுக்கு அத்துபடியாய் போயிற்று. குளத்தையும் அதைச் சுற்றிலும் புதைந்து கிடக்கும் ரகசியங்களும் அவனிடம் சேகரமாகத் தொடங்கி பல காலமாயிற்று. குளத்தைச் சுற்றியுள்ள கரையில் எங்கேயாவது ஓரிடத்தில் ஒரு கொக்கைப் போல் உட்கார்ந்து காத்திருப்பான். அவனும்கூட தன்னை ஒரு நீர்வாழ் பறவையைப் போல்தான் உணர்ந்தான்.

வற்றாத அந்தக் குளத்தில் குதூகலித்திருக்கும் எண்ணற்ற பறவைகள் அவனை எப்போதும் சந்தோஷிக்க வைத்துக்கொண்டிருந்தன. கரைகளில் தளிர்த்து செழித்திருக்கும் அடர் மரங்களில் பறவைகளின் கூடுகளும் குஞ்சுகளும் சண்டை சச்சரவுகளும் பலவித பறவைகளின் விதவிதமான ஒலிகளும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் சாயங்காலம் கீழ மடையோரம் உட்கார்ந்து தூண்டில் போட்டுக் காத்திருந்தான். இரு கண்களும் தூண்டிலின் மிதப்பு அசைவின் மீது குறி வைத்திருந்தன. திடீரென்று பக்கத்தில்ஸ்ளப்...’ என்று தண்ணீர் சிதறும் சத்தம் பெரிய மீன்கள் ஏதாவது துள்ளியிருக்கலாம் என்றுதான் நினைத்தான். அந்த இடத்திலிருந்து வட்டவட்டமாய் அலைகள் எழும்பியதைப் பார்த்தவன் திடுக்கிட்டான். கையடக்க உருண்டையான, பந்தைப் போல் ஒரு குருவிக் குஞ்சு மரத்தின் கூட்டிலிருந்து தவறி விழுந்து, நீரில், தன் பிஞ்சுக்கால்களையும், பூஞ்சை இறக்கைகளையும் அசைத்தப்படி தத்தளித்துக்கொண்டிருந்தது. தூண்டிலை கரையில் வீசிவிட்டு வேகவேகமாக ஓடி நீருக்குள் பாய்ந்தான். இடுப்பளவுதான் தண்ணீர். இரு கையேந்தி ஒரு பூவைத் துக்குவது போல் தூக்க குனிந்த போது தன் முகத்திலும் நீர்த்திவலைகள் தெறிக்கசளார்என்ற சத்தத்துடன் பெரிய மீன் ஒன்று குருவிக்குஞ்சை நீருக்குள் இழுத்துக்கொண்டு போயிற்று. அவனால் தன் முகத்தில் ஒட்டியிருந்த நீர்த்திவலைகளைத் துடைத்துக்கொண்டு கரையேற மட்டும்தான் முடிந்தது. பறவைகளுக்கு மீன் இரையாவதைப்போல் மீனுக்கு பறவைக் குஞ்சு இரையாகிப்போனதை எண்ணி வியப்புற்றான். நெஞ்சு கனக்க தூண்டிலை கையில் எடுத்தான்.

பல தடவை இது மாதிரி குஞ்சுகளைக் காப்பாற்றி, அதன் கூடுகளைக் கண்டுபிடித்து, கஷ்டப்பட்டு மரத்தில் ஏறி மெதுவாக வைத்துவிட்டு இறங்கியிருக்கிறான். சிலநேரம் பறவைகளின் பிராண்டுதல்களையும் எதிர்க் கொண்டிருக்கிறான். கணப்பொழுதில் தன் கண் முன்னே பறவைக் குஞ்சின் உயிர் பறிபோனதை எண்ணி பல நாட்கள் வருத்தப்பட்டான். திரும்பி வந்த தாய்ப்பறவை தன் குஞ்சைக் காணாததால் பரிதவித்து புலம்பியதைப் பார்த்து மிகவும் வருத்தமுற்றான். பறவை - ஆகாயம் மீன் - பாதாளம் இரண்டையும் ஜெயிக்க பிரபஞ்சத்தால் மட்டுமே முடியும்

அவன் குளத்தின் பாஷையையும், குளத்துடன் பேசிக் கொள்ளும் முறையையும் எப்படி கற்றுக்கொண்டானோ, அதே போல் பறவைகளின் பாஷையையும், அவற்றின் பேச்சையும் உணரத் தொடங்கியபோது மிகவும்; சந்தோஷமும், ஆச்சர்யமும் அடைந்தான். புறவைகளின் களி நடனத்தையும், காதல் பேச்சுகளையும், இணைசேரும் இன்ப விளையாட்டுகளையும் அவன் ரசிக்கவும், புரியவும் தொடங்கியபோதுதான், பறவைகளுக்கேயுரிய தனி பாஷையை அவன் தெரிந்துகொண்டான். அதே போல் மரங்களும், செடிகளும், கொடிகளும் கூட தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பேச்சு இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டான். அதை உணர்ந்து அறிய இன்னும் இருபதாண்டுகள் தூண்டில் போட்டு தவமிருக்கவேண்டுமோ என்னமோ.

இப்போது தானே ஒரு குளக்கரை மரமாகவும், ஒரு நீர்வாழ் பறவையாகவும் அல்லது தானே அந்தக் குளமாகவும் மாறியிருப்பதை உணர்ந்தான். பொன்மாடன் என்கிற தன்னுடைய பெயர் மறைந்துபோய் குளத்தான் என்கிற பெயரே நிலைத்து பல வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. மீன் பிடிக்கிற அத்தனை உத்திகளையும் அவன் பறவைகளிடமிருந்தே கற்றுக்கொண்டான். அதுமட்டுமா, கால்கடுக்க நாள் முழுவதும் சலிக்காமல் காத்திருக்கும் பொறுமையை, கிடைத்த கணநேர பொழுதில் குறி தவறாமல் கொத்துவதையும், நழுவிச் செல்லும்போது ஏற்படும் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், நிறைய, ஏராளமான இரைகள் கிடைக்கும்போது அளவான சந்தோஷத்தை வெளிப்படுத்தவும், தோற்றவர்களைப் பார்த்து புளகாங்கிதமடையாதிருக்கவும் பறவைகளே அவனுக்கு கற்றுக் கொடுத்தன. இறந்துபோன உயிர்களை உண்ணாத நீர்வாழ்பறவைகளின் பழக்கத்தை எண்ணி வியந்தான். இப்போது அவன் பறவைகளின் பேச்சையும் குளத்தின் பேச்சையும் மறுமொழியுடன் பேச முற்றாகக் கற்றுக்கொண்டான்.

அடர்ந்திருந்த சங்கச்செடிப் புதர் மறைவில் அமர்ந்து தூண்டிலை வீசிவிட்டுக் காத்திருந்தான் குளத்தான். தண்ணீர் திட்டுக்களில் ஏராளமான கொக்குகளும், நாரைகளும், கூனக்கடாக்களும் சிறகை உலர்த்திக்கொண்டிருந்தன. உள்ளான்களும், சிறகுகளும் நீள் கால்கள் தெரிய தண்ணீருக்குள் தவம் இருந்தன. அலையடிப்பில் மிதந்து முங்கி விளையாடின முக்குளிப்பான்கள். இரண்டு நாரைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பேச்சு குளத்தானின் காதுகளில் அரச்சலாய் கேட்டது. கண்களை மிதப்பின் மீது வைத்துக்கொண்டு காதுகளை நாரையிடம் நீட்டுவது சங்கடமாயிருந்தது. ஆனாலும் நாரைகளின் உரையாடல் லேசாக கேட்டபடிதானிருந்தது.

“தூண்டில் போடறவங்கள ஒரு எழுத்தாளர் தவமிருக்கிறதா எழுதியிருக்காரு”

சரியாத்தான் எழுதியிருக்காரு, நம்ம ஒத்த மீனுக்கு தவமிருக்கிற மாதிரிதான், தூண்டில்காரனும் தவமிருக்கான்

அந்த எழுத்தாளர் பேரு ஒனக்கு தெரியுமா

சொல்லேன்

மா.அரங்கநாதன்

முத்துக்கறுப்பன்னு சொல்லு

அவரேதான்

இந்த உரையாடல் தன் காதில் விழுந்தவுடன் குளத்தானுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தூண்டிலை நீட்டிக் காட்டியபடியே சத்தமாகச் சொன்னான்.

உங்களப் பத்தியும் ஒரு எழுத்தாளர் எழுதியிருக்கார் தெரியுமா

அதுதான் ஊரு ஒலகத்துக்கே தெரியுமே, நாராய்.. நாராய் பாடிய சத்திமுற்றத்துப் புலவன்

அது பழைய கத, இப்ப ஒரு போஸ்ட்மார்டனிச எழுத்தாளர் எழுதியிருக்காரு

அப்படியா அது யாரு

ஜெயமோகன்

நித்திய சைதன்ய யதியோட சிஷ்யர்தான

அவரேதான் சரியா சொல்லிட்டியே

என்னனு எழுதியிருக்காரு

ஆத்துல ஒரு பொம்பள குளிக்கா, அவளோட ஆடையெல்லாம் ஆத்தோரம் கெடக்கு, அவ கழட்டி போட்ட மார்புக்கச்ச தரையில செத்துக் கெடக்கிற கொக்கு மாதிரி இருக்குன்னு எழுதியிருக்காரு

பெண்களோட மார்புகள தாங்குகிற கச்சைனா அது எவ்வளவு பெரிய பாக்கியம், யாருக்கு கெடைக்கும், ஜெமோவுக்கு நன்றி

சரி, உங்க பேரு என்ன பேரு

எம் பேரு சத்தி, என் ஜோடி பேரு முத்து

ஆம்பள பேரு, பொம்பள பேருனு தனியா இல்லையா

பேர வச்சு என்ன ஆம்பள, பொம்பள, உருவத்த வச்சும், உறுப்புகள வச்சும்தான் ஆம்பள, பொம்பள, அதுவும் போக இந்தப் பேர்களுக்கு பின்னால ஒரு பெரிய கதையே இருக்கு

அப்படி என்ன கத, பெரிய கத

ஒனக்கு சத்திமுற்றத்துப் புலவர் தெரியுமா

இந்த நாரைகள பொண்டாட்டிட்ட தூது விட்டான

அவனேதான். அவன் தூது விட்டது யாருனு நெனைக்க, எங்க பூட்டனையும், பூட்டியயையும் தான்

ஏய்... முத்து, எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம், நூறு பேருகிட்ட கேட்டாச்சு, ஒருத்தரும் பதில் சொல்லல

“மொதல்ல பேரு சொல்லிக் கூப்பிடுறத விடு, பக்கத்துலதான என் வீட்டுக்காரர் இருக்காரு, நம்மளப்பத்தி என்ன நெனைக்கமாட்டாரு, நீ இங்க தூண்டில் போட வரல, எம் பொண்டாட்டியத்தான் பாக்க வாரனு சொல்லிருவாரு, கொஞ்சம் சந்தேகப் புத்திகாரர், மத்தபடி அப்புராணி, சரி, இப்ப கேளு, என்ன சந்தேகம்”

ஒங்க பூட்டனையும், பூட்டியையும் தூது விட்டான்ல்ல, அந்த சேதி, அவன் பொண்டாட்டிட்டப் போய் சேந்துச்சா, இல்லையா. அந்த புலவனோட வறுமை தீந்துச்சா? இல்லையா? மன்னன் பரிசு குடுத்தானா? இல்லையா? பல வருஷமா என் நெஞ்ச அரிச்சுக்கிட்டே இருக்கிற கேள்வி, யாருக்குமே பதில் தெரியல, சொல்லுங்க முத்... தெரியாம பழையபடியும் பேரச் சொல்லிட்டேன்

பரவாயில்ல, என் வீட்டுக்காரனுக்கு காது கொஞ்சம் மந்தம், மத்தபடி தங்கமான கொணம், எதுக்கும் இன்னொராட்ட உரிமையோட பேரச் சொல்லாத

சரி, அந்த சந்தேகத்த என்னால சொமக்க முடியல

“பரவாயில்ல. இதப்பத்தி யாரெல்லாம் கவலப்படணுமோ, அவங்க யாருமே கவலப்படல, ஆனா, ஒரு தூண்டில்காரன் கவலப்படுறான், தமிழ்நாட்ல இலக்கியம் எந்த அளவுக்கு சீரழிஞ்சு போச்சுனு பாத்தியா தூண்டிலு”

யாரெல்லாம் கவலப்படணும். இதுக்கும் இலக்கியம் சீரழிஞ்சதுக்கும் என்ன சம்பந்தம்

இந்தநாராய்... நாராய்... செங்கால் நாராய்’; பாட்ட எத்தன பேராசிரியருங்க உதாரணம் காட்டிப் பேசுறான், எத்தன கவிஞருங்க அப்படியே உருகுறான், அவங்க இதப்பத்தி யோசிச்சானா

சரி. அதவிடு, இப்பச் சொல்லு. சத்திமுற்றத்தான் பொண்டாட்டி புள்ளைகளோட பசி நீங்குச்சா? இல்லையா?”

முத்து நாரை சொல்லப் போகும் கதையைக் கேட்கவோ என்னவோ குளம் அமைதியாகிப் போனது. நாரைகளின் கதையென்றால் அது குளத்தின் கதையும் தானே. நாரையின்றி குளமேது? குளமின்றி நாரை ஏது? குளத்தானை நெருங்கி அருகில் வந்தன அந்த ஜோடி நாரைகள். அவை சத்திமுற்றத்துப் புலவனின் சோகக் கதையை சுமந்துத் திரிபவை.

தூண்டில மடக்கி கரையில வச்சா, நீ கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்றேன். ஏம்னா, காது என்கிட்டயும், கண்ணு தூண்டில் மிதப்பலயும் இருந்தா ரெண்டு காரியமும் உருப்படாது. செய்ற வேலையில முழுக்கவனத்தையும் வைக்கனும். குளத்துக்குள்ள நின்னுக்கிட்டு போறவார ஆளப்பாத்தா நான் பட்டினி கெடக்க வேண்டியதுதான். அப்புறம் மீனு என்கிட்ட வந்து பொண்ணு கேட்கும்.”

கோவப்படாத முத்து. இப்ப சொல்லு தூண்டில மடக்கிட்டன்

பேரச் சொல்லாத சொல்லாதன்னாலும் கேக்க மாட்டேங்க. ஓம் யோகத்துக்கு எம் புருஷன் செவிடாப் போயிட்டான். இல்லனா இந்நேரம் கதையே வேற

சரி. சொல்லு தாயி

இது பேச்சு. அதுக்காக ஓயாம தாயி, தாயினு சொல்லாத, எனக்கு ஒன்னும் அவ்வளவு வயசாகி போகல

சரி சரி. சொல்லு

“கவனமா கேளு, தூண்டிலு. கடுமையான குளிர்காலத்துல நாங்க கூட்டங்கூட்டமா கௌம்பி, வடக்கேயிருந்து தெக்க வந்திருவம். அதுக்கு வலசை போறதுனு பேரு. நீங்க பொழப்பத் தேடி வேற எடம் போறீகள்ள அதே மாதிரிதான். அப்படியான ஒரு ராத்திரி நெலா வெளிச்சத்துல எம் பூட்டனும், பூட்டியும் ஏகாந்தமா பறந்து போறாக. ராத்திரில பறக்கறது எங்களுக்கு பாதுகாப்பு, அப்புறம் வெய்யில் களைப்பு தெரியாது. திடீர்னு ஒரு சோகமான முனகல் சத்தம். நாரைகளே... ஏய் நாரைகளே, செவந்த கால் நாரைகளே, பளபளனு ஒங்க அலகு பவளம் கெனக்கா தகதகனு மின்னுது, அப்படின்னு”

“இதக் கேட்டதும் என்னோட பூட்டியும் பூட்டனும் அப்படியே சொக்கிப் போயி நின்னுட்டாங்க. அழகப் புகழ்ந்தா மயங்காதவர் உண்டா தூண்டிலு. என்னனு பாத்தா சத்திரத்து மொட்டை மாடியில ஒராள் சுருண்டு படுத்துக்கெடக்கான். வாயிலருந்து கவிதையா வருது. சுத்திமுற்றம்ங்கிற ஊர்ல ஒரு கொளம் இருக்கும். அங்க தங்கிட்டு அப்படியே ஊருக்குள்ள போனா, எப்படா இடிஞ்சு விழுவோம்னு நனைஞ்சு போன சுவரோட ஒரு வீடு இருக்கும். கூரை வீடுதான். அந்த வீட்டுக்குள்ள என் மனைவி உட்கார்ந்துக்கிட்டு பல்லி நல்ல சேதி சொல்லாதானு ஏங்கிக்கிட்டு, பசியோட, மொகட்டு வளையப் பாத்திட்டு ஒக்காந்திருப்பா. அவகிட்ட, ஒம் புருஷன் இன்னும் மன்னனைப் பாத்து பரிசு வாங்கல, குளிர் வாடையில நடுங்கி, வெற்று மேலோட, கையாலயும், காலாலயும் ஒடம்பப் பொத்திக்கிட்டு சுருண்டு பாம்பு போல படுத்துக் கெடக்கிறான்ங்கிற செய்திய மறந்திராம சொல்லியிருங்கனு சொல்றான். அவன் சொன்ன வெதத்த வச்சு இவன் ஒரு புலவன்னும், இவன் சொன்னது கவிதையின்னும் எங்க பூட்டிக்கு புரிஞ்சு போச்சு. புலவனுக்கு ஈவு இரக்கம் காட்டாதவன் நல்ல நாரையா இருக்கமாட்டான். நேரா எங்க பூட்டன இழுத்துக்கிட்டு, சத்திதுற்றத்துல புலவன் சொன்ன அடையாளத்த வச்சு வீட்டையும் கண்டுபிடிச்சாச்சு. குளிர்ந்த மண் தரையில கந்தைத் துணியவிரிச்சி ஒரு கொழந்த படுத்திருக்கு. தொட்டில்ல இன்னொரு கைக்கொழந்த பசியோட அழுகுது. சத்திமுற்றத்தான் பொண்டாட்டி தொட்டில ஆட்டிக்கிட்டு உக்காந்திருக்கா. சின்னதா ஒரு விளக்கு வெளிச்சத்துல பார்த்தா பரிதாபம். பசியில கண்ணு குழிவிழுந்து, கன்னம் ஒட்டிபோயி, எங்க பூட்டிக்கும் பூட்டனுக்கும் விருளி அத்துப் போச்சு. ஈரக்கொல கருகிப் போச்சு உடனே ரெண்டு பேருமா பேசி ஒரு முடிவு எடுத்தாங்க.”

என்ன முடிவு எடுத்தாங்க சொல்லு முத்து

ஒம் வாயில மீன் முள்ள வச்சுக் குத்துனாலும் நிய்யி என் பேரச் சொல்றத விட மாட்ட. நாங்க என்ன ஒங்கள மாதிரி மானங்கெட்டவங்கனு நெனச்சயா தூண்டிலு.”

“கவனமா இருக்கேன். இனிமே சொன்னா இறக்கையால அடி”

அந்தக் குடிசையை ஒட்டி இருந்த வேப்பமரத்திலேயே ராத் தங்கிட்டாங்க. விடிஞ்ச ஒடனே கொளத்துக்குப் போயி, நல்லமீன் பெரிய மீனாப் பிடிச்சி இங்க கொண்டாந்து பொத்துனு போட்ட ஒடனே, அந்தப் புலவனோடப் பொண்டாட்டி எட்டிப்பாத்தா ரெண்டு கெண்டையும் தரையில துள்ளுது. வேப்பமரத்த அண்ணாந்துப் பாத்தா அங்க ரெண்டு பேரும் உச்சிக் கொப்புல உட்காந்திருக்க, கையெடுத்து கும்பிட்டுட்டு ரெண்டு கெண்டையையும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிட்டா.”

அப்ப அவ சைவம் கெடையாது அசைவம்தான்

“இங்க கேளு தூண்டிலு. புலவருங்க, கவிஞருங்க எல்லாருமே அசைவமாத்தான் இருப்பான். யோக்கியமாவும் இருக்கமாட்டான். ஏம்னா அவன் தொழில் அப்படி. எல்லாமே தன்னால வந்து, தானா மேல விழும்போது அவன் என்ன மரமா? அதுவும் போக பசி வந்தா பத்தும் பறந்திரும்ங்கிறது சொலவட, பெறகென்ன சைவம், அசைவம். மத்தியானம் போல குழந்தைகளோட சிரிப்புச் சத்தம் கேட்டதும் எங்க பூட்டனுக்கும், பூட்டிக்கும் சந்தோசம். இப்படியே ரெண்டு நாளா மீன் பிடிச்சுப் போட்டுக்கிட்டே இருந்திருக்காக. அன்னைக்கு ராத்திரி பார்த்தா கெக்கக் கேனு பொம்பள சிரிப்பு, பாத்தா வீட்டுக்குள்ள புருஷனும், பொண்டாட்டியும் கொஞ்சி கொலாவுறாக. தீப வெளிச்சத்துல புலவனோட பொண்டாட்டி கழுத்துல தங்கமும் வைரமும் மின்னுது. கதைய எல்லாத்தையும் சொல்லியிருப்பா போலிருக்கு, விடிஞ்ச ஒடனே மரத்தடியில நின்னு அப்படியே அண்ணாந்து பார்த்து கும்பிட்டான் புலவன். சும்மாவா நாலு நாளா பொண்டாட்டி புள்ளைய காப்பாத்தியிருக்கோம்ல, அப்படியே அதே மரத்துல கூடு கட்டி நாங்களும் கொழந்த பெத்தாச்சு. எங்க பாட்டனும் பாட்டியும், பிறகு எங்க அப்பனும் ஆத்தாளும் இப்ப நானும் இவனும் இதே மரம்தான். இதே கொளம்தான். இப்ப நான் உண்டாகியிருக்கேன் கூட்டக் கொஞ்சம் பிரிச்சுக் கொடுக்கனும்.”

அதுலயிருந்து வேற ஊருக்கு போகவே இல்லையா?”

தேவையான மீன் கெடைக்குது. கூடு கட்ட பெரிய மரம் இருக்கு இதுபோக புலவனோட பாதுகாப்பு ஏம்னா அவன் பொண்டாட்டி புள்ளைகள காப்பாத்துனது நாங்கதாங்கிறத தெரிஞ்சுக்கிட்டான். அதைவிட முக்கியமான ஒரு விஷயம் அடுத்த தடவ புலவன் மன்னன்கிட்ட போனபோது பரிசு எதுவும் வேண்டாம்னுட்டு ஒரே ஒரு வரம் மட்டும்தான் வேனும்னு கேட்டு வாங்கிட்டு வந்தான்.”

வரமா. அப்படி என்ன வரம் வாங்கியாந்தான்

எத்தன இருந்தாலும் அவன் கவிஞன் இல்லையா, அறத்தோட வாழ்றவனாச்சே சாதாரண ஆளா, மன்னர்களுக்கே யோசனை சொல்றவங்களாச்சே.”

சரி சரி. என்ன வரம்னு சொல்லு

காலா காலத்துக்கும் இந்த கொளத்துல யாருமே வலைபோட்டு மீன் பிடிக்க கூடாது. கொளத்தையோ கொளத்தோட கரையிலிருக்கிற மரங்களையோ சேதப்படுத்துனா அதை ராஜ துரோகமா கருதி மரண தண்டணை. ஆனால் தூண்டில் போட்டு யார்னாலும் மீன் பிடிக்கலாம். இது புலவன் வாங்கி வந்த வரம். ஆதனாலதான் எக்கசக்கமா மீனு கெடக்கு, கரை முழுக்கத் தோப்பா மரங்க வளர்ந்திருக்கு. ஆயிரக்கணக்கான பறவைக அடைஞ்சு கெடக்கு. இந்த கொளத்தோட பேருதான் சத்திமுற்றத்துக் குளம். இப்ப நானும் இவனும் நாலாவது தல மொறையா இருக்கோம். அஞ்சாவது தல மொறைக்கு அஸ்திவாரம் போட்டாச்சு. ஆமா இவ்வளவு கதை கேட்டியே தூண்டிலு நீ யாருனு தெரியுமா?”

நான் தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறவன். எம் பேரு பொன்மாடன். இப்ப கொளத்தான்னு சொன்னாத்தான் தெரியும்.”

அட முட்டா தூண்டிலே நிய்யி யாருனு தெரியுமா எங்க பூட்டனும், பூட்டியும் மொத மொத அந்த புலவனோட வீட்ட கண்டுபிடிச்சாக பாத்தியா, அப்ப புலவனோட பொண்டாட்டி பசியோட கொழந்தையை தொட்டில்ல போட்டு ஆட்டிக்கிட்டு இருந்தாள்ல அந்த கொழந்ததான் நிய்யி. சத்திமுற்றத்துப் புலவனோட ஒரே நாரைப் பாட்டு மாதிரி ஒரே வாரிசு நிய்யிதான். இந்த கொளமும் ஒன்னோட கொளம்தான். ஏம்னா ஒன்னோட அப்பன் ராசாகிட்ட அந்த வரம் வாங்கிட்டு வரலன்னா, இந்த கொளத்த மூடி இந்நேரம் பிளாட் போட்டு வித்திருப்பாங்க, இல்ல பஸ் ஸ்டாண்ட் கட்டி வெக்கமில்லாம கொளத்துப் பஸ் ஸ்டாண்டுனு பேரும் வெச்சிருப்பாங்க. வரத்தால தப்பிச்சது கொளம். நிய்யும் இனிமே வாரிசு உரிமை கொண்டாடியிராத நாங்க மொத்தமா சேர்ந்தா நிய்யி கொளத்துக்கிட்ட வர முடியாது. தூண்டில மறந்து போக வேண்டியதுதான் தெரிஞ்சுக்கோ.

தான் பொன்மாடன் மட்டுமில்லை குளத்தான் என்பதும், சத்திமுற்றத்துப் புலவனின் ஒரே வாரிசு என்பதும், தன் அப்பனின் நாரைப் பற்றிய அந்தக் கவிதைதான் தன்னிடம் தூண்டிலாகி வந்திருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டான் குளத்தான். இது சாதாரண தூண்டில் அல்ல. இந்த குளத்தையும், அதைச் சுற்றியுள்ள மரங்களையும், ஆயிரமாயிரம் பறவைகளையும், நீர்வாழ் உயிர்களையும் காக்கும் விசித்திர ஆயுதம் என்பதை உணர்ந்துகொண்டான் குளத்தான். அதே கைகளில் தூண்டிலுடன் கம்பீரமாக கரைமேல் நடந்து செல்கிறானே குளத்தான். அவன் தூண்டில் போட்டு மீன் பிடிக்க மட்டும் செல்லவில்லை. கண்மாயையும், ஆயிரமாயிரம் உயிர்களைக் காக்கும் காவலாளியாகப் போய்க் கொண்டிருக்கிறான்.

வெளிச்சமில்லாத அறை.

மஞ்சள் பல்பின் மங்கின நிறம் நெஞ்சில் சுவாசத்துக்கான அனக்கமில்ல. நாடிகளில் ஒன்னு கூடத் துடிக்கல. இதயத்துடிப்பு நின்னுபோச்சு. கண்ணு திறந்தநிலையில் நிலைகுத்திப்போச்சு. கிளினிக்கலி எக்ஸ்பயேடு... மருத்துவ அறிவியலின்படி செத்துப்போய்ட்டாங்க. பத்து நிமிசமாவது காத்திருந்து பார்த்துட்டு அப்புறந்தான் சொல்லமுடியும். தெய்வமே! சொல்லி வாய்மூடறதுக்குள்ளயே மூச்சு கொஞ்சம் இழுத்துச்சோ? நாடித்துடிப்பு நின்னுடுச்சா? இன்னொரு தடவைகூட ஸ்டெத் வச்சு பார்க்கணுமா? இல்லை, இனி முடியாது. அழுகுரல் எழுந்து அடங்குச்சு. மருத்துவப்படி உறுதிப்படுத்தியாச்சு.

வீட்டை விட்டுப் படியிறங்கி நடக்கும்போது நான் ஒருக்காக்கூட திரும்பிப் பார்த்தேன். இல்லை, சும்மா இப்படித் தோனுது. திரும்பவும் பல்ஸ் பார்க்கிறபோது தெரியறது என்னோட விரலில் இருக்கும் துடிப்பாத்தான் இருக்கும். பின்னையும் தோனும் இதே சந்தேகம்.

கொஞ்சதூரம் முன்னாடி நடந்துட்டுத் திரும்பிப் பார்த்தபோது திடீரென நிலைச்சுப்போன அழுகைகளோட கனத்த அமைதி மெதுவா என்னையும் கடந்து எனக்கு முன்னால நீண்டு நிமிர்ந்து நடக்குது.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததில் இருந்தே இதயத்துடிப்பு வேகம் கூடுறதல்லாம குறையமாட்டேன்கிறது. வயலுக்கு அந்தக்கரையில் தெரியறதுதான் அந்த வீடு. இந்த ஊரில் மொத்தமா மிஞ்சியிருக்கும் விளைநிலங்கள் இவ்வளவுதான். அதுக்கு இந்தக்கரையில்தான் இந்த வீடு. இந்த வீட்டில் நான் ஒத்தையாளு. இன்று வேறு ஒன்னும் செய்யுறதுக்கில்லை. பொறுப்பேத்துக்கறதுக்கு இரண்டு நாளுக்கு முந்தி, நேரத்துலயே வந்து சேர்ந்துட்டேன். கொண்டுவந்த முக்கியமான சாமான்களை நேத்து ராத்திரியோட வீட்டுக்குள்ள வைக்கவேண்டிய இடங்களில் வச்சாச்சு. வசதியும் அழகுமுள்ள இந்த வீட்டைக் கண்டுபிடிச்சுக் கொடுத்த புரோக்கரும் அவர்கூட வந்த சில ஊர்க்காரங்களும் மட்டுந்தான் இப்போதைக்கு மொத்தமாத் தெரிஞ்சவங்க.

உறுதிப்படுத்தின மரணத்தை இன்னொரு தடவை போயிப் பார்க்கணும்னு மனசு அடிச்சுக்கிட்டு நிர்ப்பந்தம் பண்ணினாலுங்கூட சகிச்சுக்கிட்டுக் காத்திருக்கணும்னு புத்தி உபதேசம் பண்ணுச்சு. இந்த ஊரு அரசாங்க ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புரபஷனல் வாழ்க்கையைத் தொடங்கறதுக்காக வந்து சேர்ந்திருக்கிறேன். இப்போதைக்கி புத்தி சொல்லறதைத்தான் கேட்டுக்கணும்.

அப்படிப் புத்திக்குக் கீழடங்கி, அந்தக்கரையில் இருக்கும் வீட்டைப் பார்த்துக்கிட்டே இருந்து என்னோட கண்ணு களைச்சுப்போச்சு. கக்கூசுக்குப் போகல. பல்லு தேய்க்கல. ஒரு டம்ளர் தண்ணிகூடக் குடிக்கல. இன்னைக்கி விடியற்காலம் நாலு மணிதான் ஆகியிருந்துச்சு. யாரோ வந்து காலிங்பெல் அடிச்சு எழுப்பிவிட்டாங்க, டார்ச் லைட் வெளிச்சத்தில் அந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. போனமாதிரியே திரும்பவும் கூட்டிட்டுவந்து விட்டுட்டாங்க. அப்போதிருந்து இந்தத் திண்ணையில் உக்கார்ந்திட்டிருக்க ஆரம்பிச்சேன்.

உறுதிபடுத்துனதுக்கு அப்புறமும் மரணத்தை உற்றுப் பார்த்து அந்த வீட்டில் இருக்கிறவங்க அமைதியானவங்களா இருக்கறாங்களோ! செத்த உசுரு பொழச்சு திரும்ப வரும்னு சத்தமில்லாம பிரார்த்தனை செய்யுறாங்களோ!

அந்த வீட்டைப் பார்த்தால், சாவு நடந்ததுக்கான லட்சணம் ஒன்னையும் வெளியே பார்க்கவே முடியலை. இழவு வீட்டுக்கு வண்டிகள் எடதடவில்லாம ஓடிவாரதோ, பாய்ந்து போறதோ, அந்த வண்டிகளில் இருந்து இறங்கி அழுது ஒப்பாரி வச்சுக்கிட்டு சனங்க வீட்டுக்கு ஓடுறதோ ஒன்னையும் பார்க்க முடியல.

சூரியன் இப்போது என்னோட தலைக்கு மேல் வந்தாச்சு.

எடதடவில்லாம ஜனிச்சு விழுகின்ற எண்ணங்களோட குஞ்சுகள் பற்றியெரிகிற வயிற்றுக்குள் குழஞ்சு விழுகின்றன.

தூக்கம் வந்து கண்கள் மூடிப்போகாமல் இருக்கறதுக்காகப் பார்வையை பலமா முன்பக்கமா ஓடவிட்டேன். மூக்குக்குத் துணையா கட்டாயமா முழிச்சிருக்க வேண்டியிருந்துச்சு. அய்ந்து புலன்களும் வேறு எதுக்காக இருக்குதுங்க! ஒன்னு இன்னொன்னுக்கு உதவி செய்யணும். வயலைக் கடந்து வருகிற காற்றில் இப்போது என்ன நெடியடிக்குது? சூட்சுமமா கவனி.

இவ்வளவு சூட்சுமமா வாசத்தத் தெரிஞ்சுக்கறதுக்காக என்னோட மூக்கு முதல் தடவையா பரிசீலனைக்கு உள்ளாச்சு! புலன்கள் அய்ந்தும் பூரணமான புலன் அனுபவங்களைத் தெரிஞ்சுக்கவேணும்னா அதுல தீவிரமான கவனமும் பரிசீலனையும் வேணுங்கறது எனக்கு இப்போதுதான் அர்த்தமாச்சு.

ஒவ்வொரு தடவையும் மூக்குக்குள் நுழஞ்சு வெளியேறிப் போகின்றபோது காற்று சிரமப்பட்டுச் சொல்லுச்சு:

“நெல்வயல்களோட மணத்தைக் கொண்டுவந்து கொடுக்கறதுக்கு இந்த வயல்களில் நெற்பயிர் ஒன்னுமில்லயே...”

வயலில் சுட்டுக்கிட்டிருக்கும் செங்கற்கள் வெந்து கரியும் நெடி மூக்கறைகளுக்கு அடர்ந்து வந்துச்சு.

வெசனத்தோட உக்கார்ந்திருக்கற ஒருத்தனுக்கு புதுநெல்லோட மணத்தையாவுது கொண்டுவந்து கொடுத்தாகவேண்டியிருந்துச்சு

பசியோட வாசமும் காற்றுக்குத் தெரியுமா?

நான் காற்றிடம் சொன்னேன்:

ஒரு உறுதிப்பாட்டுக்கு வேண்டித்தான் இந்தக் காத்திருப்பு.”

இதயத்துடிப்பு சாந்தமடையணும்.

என்னோட உடம்பு ஒரு கெஞ்சலோடு திண்ணையில் சுருண்டு குறுகிக் கிடந்துது.

இப்படி இரண்டுமில்லாத ஒரு அவஸ்தையில், நிச்சயத்திலும் நிச்சயமில்லாமையிலும் சிக்கிக்கிறதவிடக் கஷ்டமானது வேறொன்னுமில்லை உலகத்தில்.

வயல் மண்ணு, மழை வெள்ளத்தில் நனையும்போது மண் அடுக்குகளில் இருந்து எழுந்து பொங்குகின்ற வாசனைய வாரியெடுத்து நான் கொண்டுவந்து தந்துட்டிருந்தேன். அந்த மணம் இதயத்தைச் சாந்தப்படுத்தும்.”

எனக்கு இப்போதைக்கு மரணத்தை இன்னொரு தடவை உறுதிப்படுத்தறதுக்கான வாசம்தான் வேண்டியது.”

ஆனால் யாசகனுக்கு நேராகப் பார்த்து மிகுந்த தளர்ச்சியோடு காற்று சொன்னது:

எனக்கு வேண்டியது ஒரு மழைதான். மழையில் விழித்தெழுகிற பூமியில் இருக்கும் உயிர்களோட அத்தனை மணங்களும். நான் கடந்துபோன, தீப்பிடிக்கிற காடுகளோட அடிவயிறு குளிரணும்.”

சொற்களில் புகைநெடி நிறைந்த காற்று எனது மூக்குக்குள் திரும்பத் திரும்ப நுழஞ்சு வெளியேறுச்சு.

மரணத்துக்கு ஒரு மணம் மட்டும்தானா இருக்குது...”

காற்று, அதனோட சிறு குட்டி அலைகளால் முற்றத்தில் அங்கேயும் இங்கேயும் மெதுவா நடந்தவாறே பேசிக்கொண்டிருந்தபோது, வயலில் இருந்து எழும்பிப் பொங்கின புகைமூட்டங்களுக்கு மேலாக கறுத்த சிறகுகளை வீசியடித்து இணைகளான கொக்குகள் எங்கேயென்று இல்லாமல் பறந்துபோவதை நான் பார்த்துக்கிட்டிருந்தேன்.

இப்படிச் சாவுக்குக் காத்துக்கெடந்து காவலிருக்காம, எதிர்பார்ப்புகளோட ஆவலை நெறச்சு என்னோட சிறகுகளால் நீங்க பறக்கவேணும்னு நான் ஆசைப்படுறேன். நனஞ்ச மண்ணோட மணம் உணர்வில் காதல் ருசிகளைப் பரவசப்படுத்துமென்று தெரியும் தானே!”

எனக்குள் இருக்கும் காதலின் மணத்தையும் இந்தக் காற்றுக்குத் தெரியுமோ!

இயற்கையின் இண்டு இடுக்குகளையும் தீண்டிக் கடந்து போவதுக்குச் சக்தியுள்ள இந்தக் காற்றிடம் யாருக்கும் ஒன்னையும் ஒழிச்சு வைக்க முடியறதில்லைன்னு அப்ப எனக்குப் புரிஞ்சுது.

எனது மூச்சு மிகவும் வேகமெடுக்குது.

தெரியும்... என் காதலி தூரத்தில் இருக்கிறாள். இன்று நான் அவளைப் போயிப் பார்த்துட்டு நாளைக்குத் திரும்பி வரவேணும்னு நினச்சு காரை எடுத்துப் பறக்கறதுக்குத் தயாராக இருந்தேன். அதுக்குள்ள என்னென்னவோ நடந்துட்டிருக்குது!”

“பற்றியெரிகின்ற மலைகளுக்கும் காடுகளுக்கும் முன்னால் இதுபோலக் காவலிருக்க முடியாமல் லட்சியமில்லாமல், திசையில்லாமல் ஏதேதோ வழிகளினூடாக அலஞ்சலஞ்சுதான் நான் இங்கே வந்து சேர்ந்தேன்.”

எனது கண்கள் இரண்டும் சுட்டுப் பொசுங்குகின்றன.

தயவு செய்து ஒரு உதவி செய்கிறாயா? அந்த வீட்டுக்கு அதிவேகத்தில் சென்று அதே வேகத்தில் என்னிடம் திரும்பி வருவாயா... நான் இங்கே இந்த ஊருக்கு புதியவனே...”

காய்ந்துபோன உதடுகளைக் கஷ்டப்பட்டுத் திரும்பவும் திறக்கறதுக்குப் பார்த்தேன். அதே ஆயாசத்தோடு எனக்கு முன்னாலயே முற்றத்தில் தளர்ந்து நின்ற காற்று முணுமுணுத்தது:

நானும் இந்த ஊருக்கு இப்பொழுதுதான் வந்தேன். இந்தச் சுடுவயல்களைக் கடந்து போயிட்டுத் திரும்ப வருவது பெருந்துன்பம். கொஞ்சநேரம் நான் இங்கே சற்று உக்காந்துக்கிட்டா.”

முற்றத்து மண் துகள்கள் சற்று அடங்கின. திரும்பவும் அந்த இடத்திலேயே உருகிக்கிடந்தேன். வயல் கரையில் இருக்கும் தென்னை ஓலைகள் சுருண்டு புரண்டு அனங்காமல் நின்றன.

முற்றத்தில் இறங்கி, மண்ணில் குனிந்து நின்று, காற்றுக்குத் தண்ணி கொடுத்து எழுப்பிவிடலாமென்று நான் ஆசைப்பட்டேன். ஆனால், அங்கே தங்கி நெறஞ்சு நின்ற எரிந்த காட்டோடதும் மலைகளோடதுமான சாம்பல் நெடியில் எனது ரத்த நாளங்கள் எல்லாம் மிகவும் வேர்த்துப்போயின. நான் அந்த வீட்டின்மேல் கண்களை ஓடவிட்டுத் திண்ணைமீதே சரிந்து சுருண்டு கிடந்தேன்.

காற்று உறங்குது. இனி நான் மட்டுந்தான் முழிச்சிக்கிட்டிருக்கணும். வயல் கரையில் வீட்டுத்தோட்டத்தில் தீநாக்குகள் எழுந்தால் அதை எனது கண்கள்தான் முதலில் பார்க்கவேண்டும்.

ஒரு சிதைக்குத் தீ வைக்கிறதுக்குச் சில விதிமுறைகள்கூட உண்டு. அது முடியாமல் இருக்கும்போல தாமதமாகறதுக்கு.

சாவு வீட்டோட சப்தங்களைக் கேட்கமுடியவில்லையென்று வருத்தப்பட்டுக் காதுகள் இரண்டும் இருந்த இடத்திலேயே இருந்து கவலையோடு விறைப்புக் கொள்கின்றன. அங்கே இப்பவும் கனத்த அமைதி இருக்குதா? ஆனால் அங்கே இருப்பவர்களுடைய சப்தங்களுக்கு இங்கே வரைக்கும் வருவதற்கு நிபந்தனையா?

எல்லா நிசப்தங்களுக்கும் சவால்விட்டது கிருஷ்ணாவின் ரிங்டோன். சட்டைப்பையில்கிடந்து சப்தம்போடத் தொடங்கியது. உடனே உறங்கிக்கொண்டிருந்த காற்று கண் திறந்து தூக்க கலக்கத்தோடு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணா என் தவம். எங்களுக்கு நடுவில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பிறப்பாகும். அவளோடு பேசிக்கொண்டிருக்கும்போது எனக்கு வேறெந்தச் சப்தத்தையும் காட்சியையும் தொடுதலையும் ருசியையும் மணத்தையும் அறிவதில்லையே தெய்வமே! இனியென்ன செய்வேன்!

ஃபோன் எடுக்காமல் இருந்தால் கிருஷ்ணா நெஞ்சில் தலைகவிழ்ந்து அழுவாள். அவளுடைய பயமும் அழுகையுங்கூட எனது உடம்பையும் மனசையும் வாரிப் பொதிஞ்சு தழுவி எக்காலத்துக்கும் அமைதிகொள்ளச் செய்வதற்கும்கூட சக்தியுள்ளவைதான். புறப்படாதேன்னு சொல்லியுங்கூட கிருஷ்ணா புறப்பட்டிருப்பாளோ? நான் எதற்காக இப்படி அப்பப்ப நடுங்கறேன்! பயம் நெய்தெடுக்கின்ற வலைக்குள் எந்தவழியிலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கணும்.

ஃபோன் எடுத்தால் நான் கிருஷ்ணாவிடம் சொல்வது இப்படியா இருக்கும்:

நேரம் கெட்ட நேரத்தில் பரிச்சயமில்லாத வாடகைக் காரைப் பிடிச்சிக்கிட்டுப் பயணம் போகவேண்டாம்.”

அப்போது அவள் இப்படிப் பதில் சொல்வாள்:

இரண்டு நாளுக்குள்ள இருபதாவது தடவையா என்கிட்ட இதைச் சொல்றே.”

“அவங்க எல்லா இடத்திலும் இருக்காங்க. ராத்திரியில் மட்டுமல்ல, பகலிலும்”

சட்டைப்பையில் இருந்து ஃபோனை எடுத்து காதோடு சேர்த்துப் பிடித்தேன்.

எனக்கு இன்று புறப்பட்டுத்தான் ஆகவேண்டும். அஃபீஷியல் பயணமல்லவா!”

போகிற இடத்திலெல்லாம் காடும் மலையும் ஏறுவதற்குப் போகவேண்டாம். இப்போது எனக்குப் பக்கத்தில் ஒராள் உட்கார்ந்திட்டிருக்கான். நெருப்புப் பிடிச்சுக் கரிஞ்சுபோன நெடிக்கு நடுவுலதான் நான் இப்போ இருக்கேன்.

அங்கே வேலையில் சேருவதற்கு முன்னாடியே நோயாளிகள் வரத்தொடங்கிட்டாங்களா! அப்படினா நான் அப்புறமா கூப்பிடறேன்.”

எதாவது வண்டியை வரச்சொல்லிப் போகாதே.”

போகிற இடத்துக்கெல்லாம் தெரிஞ்ச வண்டி கிடைக்குமா?” அவள் சிரிக்கிறாளோ அழுகிறாளோ.

அப்படியானா நானும் அங்கே வாரேன். ஒரு நாளைக்கு.”

சிறகு விரிஞ்சு விரிஞ்சு வருவதுபோல் அவள் சிரிக்கிறாள்.

அப்படினா, பாக்கியுள்ள நாளெல்லாம்? வெளிய போகவேண்டா!”

பத்திரமா இரு... எல்லா இடத்திலும் ஆபத்து உண்டு!”

“மனுசனுக்கு அறிவு உதிக்கும்போது உலகம் சுந்தரமாகும். அடர்ந்த வனத்துக்குள் ஊடுருவிச் செல்கிற சூரியக்கதிர் மாதிரிதான் அறிவு என்றெல்லாம் சொல்கிற நீ என்னைப் பயப்படுத்தறையோ?”

! நான் திருத்திக்கிறேன். நீ தைரியமா இருக்கணும்.”

“அங்கே இன்னைக்கி நடக்கிற ஹர்த்தால் முடியட்டும். நான் அங்கு வாரேன்.”

“நாளைக்கும் ஹர்த்தால் நடக்காதுனு சொல்ல முடியாதே... பதிலுக்குப் பதிலு இன்னைக்கி எங்கெங்கையோ என்னென்னவோ நடக்குது.”

அவள் உண்மையாகவே உடைந்து அழத்தொடங்கி விட்டாள்.

வயலுக்கு நடுவில் இருக்கும் ரோடும் கடந்து, மண்கட்டிகள் வேகின்ற சூளைகளும் தாண்டி நடு உச்சிப் பொழுதைக் காவி உடுக்கச்செய்துவிட்டுப் போகின்ற பிரகடனமாக இருந்தது இங்கே இதுவரைக்கும். எனக்கு இன்னைக்கு கண்ணை மூடியிருக்கறதுக்கு ஆன நாளல்ல

“நான் ஃபோன வைக்கிறேன். அந்த நோயாளியப் பாரு. நேரம் கிடைக்கும்போது கூப்பிடு. நான் சாயுங்கால ரயிலில்தான் போவேன்”.

“அழாதே. நான் வாரேன். முடிந்தால் கொஞ்ச நாளைக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு வரணும். கல்யாணமும் சடங்கும் ஒன்னும் வேண்டாம் என்று நாம் இரண்டுபேரும் கூடித் தீர்மானிப்பதுதான் செய்ய வேண்டியது. அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் சீக்கிரமா விசயங்களைச் சொல்லு.”

நம்ம வாடகை வீட்டைப் பார்க்கறதுக்கு அவசரம் எனக்கு.”

நல்ல அழகுள்ள வீடு.”

ரொம்ப நேரமாச்சு ஏதாவது சாப்பிட்டயா

இல்ல

பழங்கள் ஒன்னும் இல்ல... அதானே...”

“இல்ல. கடைகளெல்லாம் தொறக்கறதுக்கு சாயுங்காலமாகும்!”

கிருஷ்ணா ஒரு சஞ்சாரி. பயணங்கள் உள்ள வேலையில் மூழ்குபவள். போகிற இடத்தில் அந்தந்த இடத்துக்கு ஏற்றதுமாதிரியான சுபாவத்தோடு வாழக்கூடியவள் அவள். கொஞ்ச நாளைக்கு இலைகள் மட்டும். இல்லாவிட்டால் பழங்கள் மட்டும். சிலசமயம் தானியங்களும் பயறுகளும் போதும். ஒன்னுமே கிடைக்காத இடத்தில் தண்ணியக் குடிச்சுக் குடிச்சு ஒரு தெளிந்த நீர் அருவி மாதிரி ஆகிடுவாள். காட்டு மண்ணின் புராதன ருசி, மணங்களில் முகம் சேர்த்துக் கிடந்து என்னை காட்டுக்குக் கூப்பிடக்கூடியவள்.

கிருஷ்ணாவின் சிறகுகளுக்கு பூமியிலிருக்கும் ஆபத்துகளில் இருந்து உயர்ந்து பறக்கறதுக்கான சக்தி வரட்டும்.

ஃபோன் அமைதியானதும் நீண்டு வந்த மூச்சுக்குப் பிறகு முற்றத்தில் உட்கார்ந்திருந்த காற்று மெதுவா எழுந்து நின்றது.

பூமியில் எல்லாப் பெண்பிள்ளைகளுக்கும் சிறகுகள் வேணும்.” காற்றில் இருந்து மெல்ல வழிந்து இறங்கின அலைகள் முழுக்க துக்கத்தின் பாசிப்படர்ந்த மணம்.

களைப்புத் தீர்ந்துட்டுதா?”

பதிலை எதிர்பார்த்ததுக்கு இடையில் எனது கண்கள் வயலுக்கு அந்தப்பக்கத்துக்குக் காட்சிகளைப் பிடித்தெடுப்பதற்காக முகத்தில் இருந்து பறந்துபோயின.

எனது கேள்விக்குப் பதிலா காற்று குசுகுசுவெனச் சொன்னது:

எனக்குக் கொஞ்சம் தூங்கவேணும். ஆத்மா வரைக்கும் தூங்கவேணும். செடி வித்துக்குத் திரும்பிச்சென்று தூங்குவதுமாதிரி. திரும்பவும் முளைவிட்டு முளைக்கத் தொடங்குவது வரைக்கும். சமாதி மாதிரி உறக்கம்.”

அந்த வீட்டில் இப்போ என்னதான் நடக்குது...” ஒரு மரம் மாதிரி இரண்டு கைகளையும் விரித்து நான் கவலைப்பட்டேன்.

உண்மையாவே இந்த உசுரு போயிருச்சுனு நீங்க நம்பறீங்களா?”

ஆமாம், ஆனா இவ்வளவு நேரத்துக்கு அப்புறமும் அந்த வீட்டில் இருந்து காரியமான ஒரு அனக்கமும் இல்லையே...”

அந்த வீட்டில் இறந்துவிட்டது என்று முடிவு செய்த உடம்பைச் சுற்றிலும் அலைமுறையிடுவதற்கு ஆரம்பித்த முகங்கள் எனக்கு முன்னால் இப்பவும் தெளிஞ்சு நிற்கின்றன. அப்புறம், திண்ணையிலும் முற்றத்திலும் நிற்பவர்கள். அக்கம்பக்கத்தில் இருந்து ஆட்கள் வந்துசேருவதைக்கூடப் பார்த்துக்கிட்டேதான் அந்த இடத்தவிட்டு வந்தேன்.

இது ஒரு ஒத்தச் சாவுதானே.” காற்று குரலுயர்த்தியது.

சாவை உறுதிப்படுத்தவேண்டி வருவது எத்தனை பெரிய பொறுப்பு! அதை, ரொம்ப ஜாக்கிரதையாச் செஞ்சாலும் எல்லாமே சூச்சுமம்தான்னு மறுபடியும் உறுதிப்படுத்தணும். எனக்கு இந்தப் பொறுப்போட சுமையில் இருந்து தப்பிக்கிறதுக்கு முடியறதில்லையே...”

செத்துட்டாங்கனு சொன்னாலும் வேணும்னா உயிர் திரும்பக் கிடைக்கறதுக்கான ஒரு வாய்ப்பையும் கணக்கில் எடுத்துக்கணும் என்றா!”

அப்படியும் யோசிக்கவேணும்

உண்மையாவே செத்துப்போனது யாரு? எப்படிச் செத்தாங்க?”

என்னோட கிருஷ்ணா வயசில் இருக்கும் இரண்டு புள்ளைங்களோட அம்மா. ராத்திரி டிவியில் செய்தி கேட்டதுக்குப் பிறகு படுத்துட்டாங்கனு சொன்னாங்க. ஏதோ இயல்புக்கு மாறானதைக் கேட்டு ஸ்தம்பிச்சுப்போன இதயத்தோட பயந்த அடையாளம் அந்த முகத்துல இருந்து மறஞ்சு போறதுக்கு முடியாமல் அதேபடிக்கி நின்னுட்டிருந்துச்சு”.

அந்தப் புள்ளைங்களுக்கு இனி யாரு இருக்காங்க?”

தெரியல. நான் அங்க கவனிக்கட்டா. கொஞ்சங் கூட ஓய்வெடுத்துக்க.”

நீங்க இவ்வளவு பெருசா கவலப்படாம இருங்க...சில சமயம் அந்த அம்மாவுக்கு சாவுகிட்ட இருந்து தப்பிப்பொழச்சு வாரதுக்கு முடிஞ்சுதுனா நல்லதுதானே!”

இங்கபாரு, நானொரு டாக்டராக்கும்.” என்னோட பேச்சுக்குள் இருந்து ஒரு பெரிய தேம்பல் அடக்க முடியாமல் வெளியே வந்தது.

காற்று எனக்கு மேல் நிற்காமல் வீசத்தொடங்கியது.

அங்கே இருந்து பெண் பிள்ளைகளோட அலறல் சத்தம் செங்கல்சூளை வயல்களைத் தாண்டி வருதோவென்று கேட்பதற்காக எனது காதுகள் ஏக்கம்கொண்டு விடைத்து நின்றன. நான் கேட்டது காற்றின் ஆவிபறக்கும் சப்தத்தை மட்டும்தான்.

“சவமான மரணத்தின் வாசத்தைத் தெரிஞ்சுக்கறதுக்குத்தான் இந்த மெனக்கெடல். எல்லாத்துக்கும் அடியில் புதஞ்சு கெடக்குது அது. ஊரெல்லாம் சுத்துகிற என்னோட ஆழத்துக்குள் மூக்கு நீட்டிக் கொஞ்சம் முகந்துபாருங்க. கரிஞ்சதும் புகஞ்சதும் காயமானதும் எரிஞ்சதும் வெந்ததும் பிளந்ததும் ரத்தம் ஒழுகறதும் அழறதும் தேம்புறதுமெல்லாத்தையும் நீங்க சீக்கிரமாத் தெரிஞ்சுக்க முடியும். இவையெல்லாம் சேர்ந்து எனக்குள்ளாக ஒட்டிப்பிடிச்சிட்டு இருக்கும். அழுகின நாற்றம் என்கிட்ட இருந்து எனக்காகக்கூட வேறுபடுத்தி அறியறதுக்கு முடியறதுமில்லை...”

காற்று அமைதியானது. அந்த நாற்றத்தை அறிந்த எனது கண்கள் இருட்டுக்குள்ள விழுந்துவிட்டன. காற்றின் ஒவ்வொரு அலையையும் கழுவியெடுப்பது எப்படியென்று நினைத்து, எனது உணர்வில் பெய்வதற்கு ஆரம்பித்த பேய்மழை மெல்ல மெல்ல எனது புலன்களின் கதவுகளை ஒவ்வொன்றாய் அடைத்துத் தாழிடுவது மாதிரி. எனக்குத்தெரியும், இது ஆனா சமாதியல்ல.

17. சிறியனவே சிந்திப்போம்

‘சிறியன சிந்தியாதோர்
‘பெரிதினும் பெரிதே’ கேட்கட்டும்
சிறுதெய்வம் பரவாதோர்
‘பெருநெறியே பிடித்தொழுகட்டும்’
சிறியனவே சிந்திப்போம்;
சிறுதெய்வம் சிறுதானியம்
சிற்றிதழ் சிறுசூழல் சிறுபான்மை
சிற்றின்பமும் மற்றாங்கே
பனுவலின்பப் பரவசமாய்
சிறியனவே சிந்திப்போம்’

சீறியாழ், சிற்றிலக்கியம், சிறுகதை, சிற்றிதழ், சிற்றெழில் (Minimalism) எனவருங்கால் ‘சிறு’எனும் முன்னொட்டு வடிவவகைமையிற் சிறிய அளவினதான என்றே பொருள்படும். சிற்றின்பம், சிறுதெய்வம், சிறுதானியம் என்கையிலும் முறையே நீடிக்கும், வழங்கும், பயிர்ச்செலவு எல்லைகள் குறித்த சிறுவாரி என்பதான வரையறையே.

சிறுதெய்வங்களுக்கு குறிப்பிட்ட எல்லையின் காணியாட்சி. சிறுதானியங்களுக்கு குறைந்த நீராதாரமே போது மான சிறுவாரிப் பயிர்ச்செலவு. சிறுதொழில், குறுந்தொழில், கைத்தொழில் இவற்றின் முன்னொட்டுக்களும் வழங்கெல்லை புழங்கு முதலீடு இரண்டையும் குறித்தனவே. எனவே இங்கெல்லாம் சிறு எனில் சிறிய அளவினதான எனக்கொள்ளாமல் ‘சிறுமை’ எனும் இழிவுபடுத்தலாக மயங்கலாகாது. இவ்வாறு பிறழ உணர்ந்த திரிபாலேயே சிற்றிதழ் சேகரிப்பாளர் தி. மா. சரவணன் சிற்றிதழ் என்னாமல் சீரிதழ் எனவும், சிறுதெய்வம் என்னாமல் கொலையில் உதித்த தெய்வங்கள், எனவே ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியனும் ‘நாட்டார் தெய்வம்’ எனவே கவிஞர்கள் வெய்யிலும் மௌனன்யாத்ரிகாவும் கையாள வலியுறுத்துவராயினர். மேனாட்டிலும்கூட ‘சிறுகதை எனில் தவறான பெயரீடே (Misnomer) என்பாரும் உளர். அடிக்கும் படிகள், படிக்கும் வாசகர் இருவகையிலும் எண்ணிக்கை, இடுமூதலீட்டளவு, தனிச்சுற்றுக்கு மட்டும், விதிக்கப்பட்ட ‘பல்பிணிச்சில்வாணாள்’ எல்லை என்றிவை யாவற்றையுமே அகப்படுத்தியதே சிற்றிதழின் ‘சிறு’ எனும் முன்னொட்டாகும். கால்நூற்றாண்டைக் கடந்தும் 333 இதழ்கள் மாதந்தவறாது அறப்பிடிவாதி சரவணனால் வெளிக்கொணரப்பட்டும், மரணத்தருவாயிலும் இதழாசிரியரால் தொகுக்கப்பட்டு, கணவரைப் பறிகொடுத்த கையறுநிலை அவலச்சூழலிலும் கூட, கூடுதலான பக்க இறுதிமூச்சாக, சௌந்தரவதனாவால் வெளிக்கொணரப்பட்ட ‘சௌந்தரசுகன்’ சிற்றிதழ் வரலாற்றிலேயே புறனடையாக ஒரு தனியாக வீற்றிருப்பதாகும்.

அஃக்

‘பஞ்சம் பிழைக்கப் பட்டணம் போகிறேன்’ என்றறிவித்து தருமமிகு சென்னைமாநகரில் மனவெளியில் தொலைந்து போன சாதனையாளன் ‘அஃக்’ பரந்தாமனை மறக்க இயலுமா? சிற்றிதழ் என்றாலே நிறுவனமாக இறுகிப்போகா - நிறுவன எதிர்ப்புத்தன்னமை வாய்ந்த சோதனைத் தேடலான எதிர்நீச்சல் மாற்றிதழ்களை மட்டுமே குறிப்பதாகும்.

புதுமைப்பித்தனின் நிறைவேறாக் கனவுகளில் ஒன்று அவர் நடத்த விரும்பிய சோதனை எனுமிதழ் முயற்சி. அவர் காலத்திற்குப்பின் சோதனை எனும் பெயரில் நா.காமராசன் இதழை வெளிக்கொணர்ந்தார்.

‘மணிக்கொடியின் மனப்பான்மைப் புரட்சி. வாழ்க்கையிலும் சமூகத்திலும் புரட்சி. புராணமித்யேவ நசாது சர்வம் (பழமையானது) என்பதனாலேயே எதுவும் சிறந்தது என்பதற்கில்லை என்று காளிதாசன் சொன்னதுதான் அதன்கொள்கை. இதுதான் கு.ப.ரா. முன்னிறுத்தும் மணிக்கொடிக் கொள்கை.’ ‘சுவடு தெரிகிற இடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம்.’ இதுதான் சி.சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்’தின் மூலவாசகமாக இடம்பெற்றிருந்த கநாசுவின் வாக்கு. ‘இதுநாள் வரையில் / பாத மிதியாத் தளங்களின் மீதும் / கன்னிச்சுவடுகள் பதிப்போம் - இனி / எதிர்வருநாளில் / பதிந்து பதிந்தவை பாதைகளாகப் / புதுயுகத் தடங்கள் விதிப்போம்.’ இதுதான் நான் நடத்திய ‘முனைவன்’ காலாண்டிதழின் மூலவாசகமும்.

‘சிறுபத்திரிகை இயக்கம் என்பது அடிப்படையில் மாற்றுக்கான இயக்கமே. மாற்றுகளை அறிமுகப்படுத்தி உரையாடல் நிகழ்த்திய இதழ்களையே சிறுபத்திரிகைகள் என்று கூறமுடியும்’- வீ. அரசு (சிறுபத்திரிகை அரசியல் ப-37)

‘The Little Magazine’ என்றொரு ஆங்கில இலக்கியச் சிற்றிதழும் வெளியானது. ‘Poetry’ என்றொரு ஆங்கிலக் கவிதைச்சிற்றிதழும் ‘Poetry foundation’ எனும் அமைப்பின் சார்பில் வெளியானது. தொடர்ந்து வருவது குறித்து அறியேன். ஆங்கில இலக்கியக் கையேடு ஒன்று ‘சிற்றிதழை’ எவ்வாறு வரையறுக்கிறது எனக் காண்போம்.

‘‘Little magazine : A term used to designate literary journals of small circulation very limited capital and usually quite short lives dedicated to the foesteering of avant garde aesthetics ideas and to publishing experimental poetry and prose - William Flint Jhrall Addision Hiffard (a hand book to literature -p 203)

சிற்றிதழ் வரலாறென்பது மாறி மாறி கையளிக்கப்பட்ட ஒரு தொடரோட்டமே. தீவிர முனைப்பு, சோதனைத்தேடல், ஆவணப்பாடு, பன்முகப்பரிமாணம் ஆகியவை சிற்றிதழ்களின் ஆக்கக்கூறுகள் என்றால், தன்முனைப்பு, மேட்டிமை மனோபாவம், குறுங்குழுவாதம், பாவனைப்போலிமை, சமரசப்போக்கு ஆகியவை அவற்றின் நோய்க்கூறுகள் எனலாம். இதழாசிரிய மாற்றமும், சில இதழ்களின் செல்நெறி மாற்றத்திற்குக் காரணமாயிற்று. ஆதிவெள்ளி முளைப்பு எனப்பட்ட மணிக்கொடி முதலாக இவ்விருவேறு கூறுகளும் காணக் கிடப்பனவே. வரா, ராமையா, பரா என மூவர் ஆசிரியத்துவத்திலும் வெளியான மணிக்கொடி (1) பத்திரிகையாளர் பங்களிப்பு, சீர்திருத்த நோக்கு (2) சிறுகதைச் சிறப்பிதழ், சோதனைத்தேடல் எனத் தொடர்ந்து மூன்றாம் காலகட்டத்தில் சென்று தேய்ந்திற்றுச் சீரழியலாயிற்று. ‘காலச்சுவடோ’ சுரா ஆசிரியத்துவம் வரை சிற்றிதழாகவே வெளிவந்து கண்ணன் பொறுப்பில் இடைநிலை இதழாக உருமாற்றம் அடைந்தது. கொல்லிப்பாவை முதற்கட்டத்தில் ராஜமார்த்தாண்டன், ராஜகோபாலன் என்ற இருவர் ஆசிரியத்துவத்திலும் காத்திரமாக வெளிவந்து ராஜகோபாலன் மட்டும் தனித்து பொறுப்பேற்ற பின் பின்னடைவாயிற்று. இத்தொடர்பிலான மேலதிகப் புரிதல்களுக்கு என் கருமை செம்மை வெள்ளையைக் கடந்து நூலிற்காண்க.

அண்மையில் ‘சிறுபத்திரிகைகளின் களம் மாற வேண்டும்’ எனும் தலையங்கத்தை (14.07.18) ‘இந்து தமிழ் திசை’ முன்வைத்தது. அதன் மீதான எதிர்வினைகளை கண்ணன் ‘இந்துவிலும்’ ‘காலச்சுவட்டிலும்’ முன்வைத்தார்.

வெகுஜன இதழ்கள், சிற்றிதழ்கள் எனும் வகைமை பாட்டிற்கும் இடைமைப்பட்ட இடைநிலை இதழ்கள் ( Middle Magazine ) எனவும் ஆய்வேடுகள் (Research Journals ) எனவும் வகைப்படுத்தலாம். புலமை, சமூகவிஞ்ஞானம், ஆராய்ச்சி, நா.வா.வின் ஆராய்ச்சி, புதிய ஆராய்ச்சி மேலும், சிற்றேடு, மாற்றுவெளி, இடைவெளி, அகம்புறம், பெயல், பிறழ் ஆகியவை ஆய்வேடுகள். இவை தவிர இதழ்கள், மலர்கள் இரண்டின் கூறுகளுடனும் வெளி வரும். தொகைநூல்கள் தனியே விதந்தோதத் தக்கனவாம். ‘வினோதரமஞ்சரி, குருஷேத்திரம், சுயம்வரம், வீடு, திரட்டு, பறை, தமிழ்க்கொடி, தமிழி’ ஆகியவை தொகை நூற்கள். கோணங்கியின் ‘கல்குதிரை’யையும், வைகறையின் ‘சாளர’த்தையும் தொகைநூல் வரிசையின் பாற்படுத்தலாம். இடைநிலை இதழ்களில் ‘அந்திமழை’மட்டும் வித்தியாசமாக மாதாமாதம் வெவ்வேறு பொருளை மய்யமாகக்கொண்டு வெளியாகும் தொகை நூல் தன்மையும் கொண்டதே. இதழ்கள் போலாது தொகைநூல்கள் என்பன தொகுப்பாசிரியரின் தெரிவிலும், தொகுப்பாசிரியர் கேட்டுப் பெறுவனவாகவும் அமைவனவாம்.

இடைநிலை இதழ்கள் தொடக்கி வைத்த அவற்றிற்கு மிகவும் நெருக்கமான கலாச்சாரம் இன்றைய சிற்றிதழ் களின் பண்பு மாற்றத்திற்கு காரணம். அவற்றின் உள்ளடக்க விஷயத்தில் ஒரு காலத்தேக்கத்தை அடைந்து விட்டன என்பது ‘இந்து’ தலையங்கக் குற்றச்சாட்டாகும். இது ஒரு பகுதி உண்மையே. சிற்றதழ்களின் தொடரோட்ட விளைவாக உருவான சந்தை மதிப்பை வணிகார்த்தமாக அறுவடை செய்யுமுக இடைநிலை இதழுக்கும் வெகுசன நாளேட்டிற்கும் இடையே ஏற்பட்ட போட்டியின் வெளிப்பாடுகளாகவே இந்துவின் தலையங்கத்தையும் கண்ணனின் எதிர்வினைகளையும் இனம் காண்கின்றேன். மட்டுமல்லாமல் நாளிதழின் ஆசிரியப் பொறுப்பிலிருந்தவர்களிடையே ஏற்பட்ட மாற்றத்தினால் இந்து தமிழ்த்திசையில் காலச்சுவட்டின் கை ஓங்கியிருந்த நிலையில் இருந்து தாழ்வு ஏற்பட்டதாகவும் இருக்கலாம்தான். இவ்வாறு சிற்றேட்டு இயக்கத்தின் பயன்பாடுகளை சுவீகரிக்க இயலும் முயற்சி எண்பதுகளிலே காணக்கிடப்பதே. எண்பதுகளில் சிட்டி - சிவபாதசுந்தர இரட்டையர் மணிக்கொடி பொன் விழா நடத்தினர். விழா ஏற்பாட்டாளர் பெயர்களில் செல்லப்பா பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவர் ஏற்காமல் புறக்கணித்து விழா நிகழ்வில் உள்ளிருந்தபடி வேலைநிறுத்தம் செய்தார். மணிக்கொடி பொன்விழா பற்றி பேசவந்த சத்தியகங்கை பகீரதன் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தமக்கும் கல்கிக்குமான அந்நியோன்ய வாழ்வைப்பற்றிக் கதை அளந்தார். கல்கியின் வாரிசுகள் அரங்கைக் கேலிக்கூத்தாக்குவதாக பிரபஞ்சனும் நானும் குறுக்கிட்டோம். இரட்டையர் கல்கி இல்லையேல் மணிக்கொடி இல்லையென வக்காலத்து வாங்கி வந்தனர். இத்தகு சீரழிவின் தொடக்கம் வ.ரா. ஆசிரியத்துவத்தில் இருந்த மூன்றாம் கட்ட மணிக்கொடியிலேயே தொடங்கியாயிற்று.

இதன் பின் சிறுகதை பொன்விழா நடத்திய சி.சு.செல்லப்பா நிகழ்வில் சாண்டில்யனையும் இணைத்திருந்தார். சிறுகதை பொன்விழாவில் சாண்டில்யன் போன்ற பிரகிருதிக்கெல்லாம் என்ன வேலை? என நான் குறுக்கிட்டேன்.

சிற்றிதழ்களால் எதையும் சாதிக்க முடியாதெனவும், சிற்றிதழ் எதற்கு பார்ப்பானத் திட்டவா எனவும் சிற்றிதழ்களின் காலம் முடிந்துவிட்டது எனவும் காலகதியில் குரல்கள் எழுந்ததும், எழுவதும் உண்மைதான். இத்தகு குரல்கள் வண்ணநிலவன், மாறன், அசோகமித்திரன் தரப்பிலிருந்து நேற்றும், காலசுப்பிரமணியன் தரப்பிலிருந்து இன்றும் எழுப்பப்பட்டுள்ளன. சிற்றிதழ்களின் தொடக்கக் காலத்தில் நவீனத்துவமும் பார்ப்பனியமும் கைகோத்தே ஊடாடின. காலகதியில் புதிய கருத்தாக்க அறிமுகங்களும் உரையாடல்களும் பார்ப்பனரல்லாதார்களால் நடத்தப்பட்ட சிற்றிதழ்களில் முன்னெடுக்கப்படலாயின. அவற்றின் விளைப்பயனாய் இலக்கியத் தளத்தில் பெண்ணிய விளிம்புநிலைப் பிரதிகள் முக்கிய பேசுபொருட்களாயின. பார்ப்பன எழுத்தாளர் பீடங்களை ஆட்டங்காண வைத்தன. பல்வேறு நிலப்பரப்பின் புதுப்புது எழுத்தாளர்களின் சிறந்த இலக்கியப் பிரதிகள். இந்த வயிற்றெரிச்சலின் வெளிப்பாடே அசோக மித்திரன் கூற்றென எடுத்துரைத்தார் ஷோபாசக்தி.

‘தமிழகத்தில் நவீனத்துவ இலக்கியப் பின்னடைவு என்று ஒன்று இருந்தால் அதற்கு ஒரு முக்கியக் காரணம் பார்ப்பனர்களின் ததியோன்ன (தயிர்சாதப்) பிரக்ஞை என்பதை சொல்லவேண்டும்’ என்றார் ராஜன்குறை. திராவிட இயக்க எதிர்நிலைப்பதிவுகள் இனக்குழுவாகப் பார்ப்பன சக்திகளிடமிருந்து மட்டுமல்லாமல் மேட்டிமை மனோபாவ வெளிப்பாடாகப் ‘படிகள்’ தமிழவன் தரப்புகளிலும் வெளிப்படலாயின.

மாறுதலைத் தேடும் சிற்றிதழ் மரபின் மாறி மாறி கையளிக்கப்பட்ட தொடரோட்டத்தூடே ஊடறுக்கும் குறுக்குசால்களாக குறுக்கிடலாயின மாரீச இடைநிலை இதழ்கள். இடதுசாரி எதிர்ப்பும், இனக்குழுவாதமும், வணிகார்த்தமும் கைகோத்து சிற்றிதழ் மரபின் பங்களிப்புகளுக்கு ஏற்பட்ட சந்தை மதிப்பைக் கணிசமாக அறுவடை செய்யத் தலைப்படலாயின. பெரு முதலீட்டாளர் குடிசைத்தொழிலை நசிக்கச்செய்வது போல் சிற்றிதழ் முயற்சிகளைச் சீரழிக்கலாயின.

‘நாய் விற்ற காசைக் குரைக்கச் செய்வதுதான் மாற்றுப் பதிப்பகம்’ என்பதுதான் காலச்சுவடு கண்ணனின் நவீன பரிமேலழக வியாக்கியானம். இத்தகு புரிதல்களின் வெளிச்சத்தில் காணத்தலைப்பட்டால் ‘இந்து தமிழ்திசை’யின் தலையங்கமும் கண்ணனின் எதிர்வினையும் பேசி நிற்பனவற்றைக் கடந்து உள்ளவாறு உட்கிடைகளை இனங்காண இயலும்.

இப்போதும் கேட்கும் இன்னும் சில குரல்களையும் அவற்றின் உட்கிடை உள்நோக்கங்களையும் இனங்காணத் தலைப்படலாம்.

சிறுபத்திரிகைகளின் காலம் முடிந்துவிட்டது என்பதால்லயம்சிறுபத்திரிகையை சில ஆண்டுகளாக கொண்டு வரமுயன்றும் கைகூடாமல் இப்போது தொகுப்பு நூல்வரிசையாக கொண்டு வருகிறேன். தொடர்ந்து இவ்வாறு தொகுப்பாகவேலயம்என்பதைத் தொடர நினைத்துள்ளேன். இது சாத்தியமாகிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்’ - காலசுப்பிரமணியம். ‘தமிழி’ - நவீன இயக்கத் தொகுப்பு ஜனவரி 2018.

இதழாக வெளிக்கொணர்வதைக் காட்டிலும் இலக்கியத் தொகைநூல்களாக வெளிக்கொணர்வது விற்பனைக்கு வாய்ப்பாக அமையும் என்பது சந்தைப் படுத்தல் தந்திரோபயம் என்கிற வரையில் அத்தகைய அணுகுமுறை சரியானதே. ஆனால் காத்திரமான சிற்றிதழ் பங்களிப்பாளராகிய காலசுப்பிரமணியமே கூட, சிற்றிதழ்களின் மரண அறிவிப்புச் சொல்லாடலைப் பாவிக்க நேர்வதேன் என்பதே கேள்வி. இது குறித்து இறுதியில் காணலாம். இதற்கு முன் ஏனைப் பிற குறுக்கீடுகள்:

இன்றைய விமர்சனநோக்கு உலகம் முழுக்க மாறி வருகிறது. அய்ரோப்பாவில் இன்று வணிக, இடை நிலைப்படைப்பாளிகளை நுணுக்கமாக ஆராய்ந்து நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் இந்த நிலை விரைவில் தோன்றும்.’ - ஆர். அபிலாஷ் (தீராநதிஜுலை 2018).

இலட்சியவாதத்தின் மரணத்தோடு சிறுபத்திரிகை இயக்கம் மரித்துவிட்டது. இன்று அசலான சிறுபத்திரிகைகள் இல்லையென நம்புகிறேன். இன்று இணையம்தான் நவீன சிறுபத்திரிகை உலகம். நான் ஒரு இடைநிலை மரபில் தீவிரமாக இயங்க இயலும் எழுத்தாளன்’ - ஆர். அபிலாஷ். (உயிர்எழுத்துசெப் 2014).

இத்தகைய அபிலாஷின் அபிலாஷைகளையும், நம்பிக்கைகளையும் சிற்றிதழாளரும் ஏற்கமாட்டார்கள். ‘நெட்டிசன்’களும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். நவீன இலக்கியப்படைப்பாளிகளை மதிப்பிடச் சொன்னால், குழம்பி தவித்து நழுவி வழுவி சொல்வேன் என்னும் அவரே பாலகுமாரனைத் தாமென்றும் மதிப்பிட்டதில்லையென பம்மிப் பதுங்குவானேன்? இடைநிலை படைப்பாளிகளை ஆராயும் எழுத்தேதும் இந்தியாவில் இதுவரை இல்லையா? ஏனில்லாமல்?

இதோ உதாரணங்கள்: (1) பாக்கியராஜின் திரைக்கதைகளில் தொன்ம மீட்டுருவாக்கம் குறித்து ‘இனி’ இதழில் ‘பாப்பண்ணன் மகன்’ எனும் புனைப்பெயரில் எம்.டி.முத்துக்குமாரசாமியின் மதிப்பீடு

(2) முனைவர் தேவதத்தாவின் பாலகுமாரன் நாவல்களில் ஆணாதிக்கம் பற்றிய மணிக்கொடி பொன்விழா கருத்தரங்க ஆய்வுக் கட்டுரை

(3) தமிழ் வணிக எழுத்தின் சமூக இலக்கிய அடிப்படைகள் எனும் ஜெயமோகனின் ‘காந்தள்’ இதழ் கட்டுரை

(4) ப்ராய்டு - லெக்கானியப் பார்வையில் சமூக, அரசியல் பிரதிகள் கதைகள், கவிதைகள், பாடல்கள் எனும் கா.செல்லபாண்டியனின் காத்திரமான மனஅலசல் ஆய்வுநூல்.

மிக அருமையான படைப்புகளை இலக்கிய உலகிற்கு அளித்திருக்கும் அவரே (அயர்லாந்தில் ஜான் பால் வில்டப்ளின்) ‘பெஞ்சமின் பிளாக்என்ற பெயரில்க்ரைம்நாவலும் எழுதுகிறார்.’

அது அங்கே நிகழ்கிறது.’ ‘இதை எங்கள் ஊரில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்என்றேன்.

இதில் ஒரு தவறும் இல்லையே என்றார் ஜான்’.

தமிழில் மட்டும்தான் சிற்றிதழ் சூழல் கலைத் தரமானது. ஜனரஞ்சகம் சற்றுக்குறைவானது எனப் பெரிய மாய்மாலம் இருக்கிறது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை.’ - இந்திரன் (குங்குமம் 24.8.2018).

இவ்வாறே ரவி சேஷையாவின் ஜனரஞ்சக இதழ்ப் பங்களிப்பு குறித்த தம் முகநூற்பதிவிலும் எழுதி செல்கின்றார்கலை விமர்சகர்இந்திரனும் கூட.

இதழியம், இலக்கியம் ஆகிய துறைகளில் கலைத்தரம், ஜனரஞ்சகம் என்பது மாய்மாலம் எனும்  கலை விமர்சகர் ஓவிய விமர்சனத்திலும் இவ்வாறே பாப்லோ பிகாசோ கலைத்தரம், ஜெயராஜ் ஜனரஞ்சகம் என்பது மாய்மாலம் என்பாரா? எழுத்துத்துறையில் ஜனரஞ்சகத்தை தூக்கிப்பிடித்த கல்கிதானே சங்கீதத்துறையில் ஜனரஞ்சகம் புகுத்தப்பட்டபோது கடுமையாக எதிர்த்தவர். எழுத்துத்துறையில் மக்கள் தமிழான பேச்சுத் தமிழை வலியுறுத்திய கி.ராஜநாராயணன்தானே கர்நாடக சங்கீதம் காஞ்சிப்பட்டு, நாட்டார் இசை, சுங்கடிப்புடவை என தராதர நிர்ணயப்படுத்தினார். இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் மாய்மாலம் ஆகாவா? இந்திரன் குறிப்பிடும் பெஞ்சமின் பிளாக்கின் மர்மநாவல்கள் எத்தகையனவோ நான் வாசித்தறியேன். இத்தொடர்பில் இந்திரன் மதிக்கும் அம்பர்த்தோ எகோவின் பார்வைகளுக்கூடாக இதுகுறித்து அணுகலாம். இத்தாலி இலக்கியப் பண்பாட்டின் ஒரு பகுதியாகத் துப்பறியும் நாவல்களை அங்கீகரிக்கும் எகோ அவரை பொறுத்தவரை அவைதாம் ஒரு நாட்டின் இலக்கிய உற்பத்தியின் குறிகாட்டி என்பதாக இனம் காண்கிறார். கல்விப்புலம்சார் எழுத்தோ, ஒரு நாவலோ மிக நல்ல ஒரு பத்தி எழுத்தோ இவற்றிற்கிடையே அவருக்கு யாதொரு வேறுபாடுமில்லை. ஒரு வேலைத்திட்ட ஈடுபாட்டோடு ஈடுப்பட்டால் அப்பணியை அதிவிருப்பமாக ஆற்ற முடியும் என்பதே அவர் நிலைப்பாடு.

‘ஒரு பக்கம் மொழியின் மிகவும் உயர்நிலைப் பண்பாடாகிய பரிசோதனை இலக்கியத்திலும், கலையிலும் விருப்பார்வத்துடன் இருந்தேன். மறுபக்கம் தொலைக்காட்சிகளையும், சித்திரக்கதைகளையும், துப்பறியும் கதைகளையும் விரும்பினேன். இவ்வாறு வேறுபட்டிருப்பது சாத்தியமா என என்னை நான் கேட்டுக்கொண்டேன். பண்பாட்டின் வேறுபட்ட தளங்களைச் சீராக்க விரும்பியே குறியியலுக்குத் திரும்பினேன். மக்கள் தொடர்புச் சாதனங்களில் உருவாக்கப்படும் எதுவுமே கூட ஒரு பாடப்பொருளாக அமையும் என்ற புரிதலுக்கு வந்தேன்’. அம்பர்த்தோ எகோ (அம்பர்த்தோ எகோ நேர்காணல்கள் ப-41 தமிழாக்கம்: ரபேல் வின்சென்ட்பால்)

எகோவின் விருப்பார்வங்கள் வேறுபட்டிருந்த போதிலும் மொழியின் மிகவும் உயர்நிலைப்பண்பாடாகிய பரிசோதனை இலக்கியம் கலை என்பவற்றை அவர் விதந்தோதியே சிறப்பிக்கிறார் என்பது இங்கே மனங்கொள்ளத்தக்கதாகும்.

இன்று இணையம்தான் நவீன சிறுபத்திரிகை  உலகமென்பதன் மூலம் அபிலாஷ்  இரண்டையுமே சரியாக இனங்காணவில்லை என்பது புலனாகி விடுகின்றது. இணையப் பயன்பாடு எவ்வாறு கையாளப் படவேண்டும் என்பது குறித்த எகோவின் பார்வை இத்தொடர்பில் முகாமையானதாகும்:

நான் மிகவும் சமநிலையுடன் இயங்கும் இணைய உலாவி. எனக்குத் தேவையான சிலவற்றைத் தேடுவதில் நான் இணையத்தில் உலாவுவேன். வெறும் ஆர்வத்துடன் 10 அல்லது 15 நிமிடம் மட்டும்தான் உலாவுவேன். ஓர் இரவு முழுவதையும் மனப்பிறழ்வுள்ள போதையேறியவர் போன்று நான் இணையத்தில் கழிக்கமாட்டேன். (-85)’.

சமூகம் எங்களுக்கு பண்பாடு என்ற பொறிமுறையின் ஊடாக எவற்றை நினைவில் வைத்திருக்கவேண்டும், எவற்றை மறக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. பண்பாடு வடிகட்டியாய் இருக்காவிட்டால் அது பொருளற்றதாயிருக்கும். வடிவமற்ற கட்டற்ற இணையம் தன்னளவில் எப்படியிருக்கிறதோ அப்படி பொருளற்ற தாகி இருக்கும்.’ - அம்பர்த்தோ எகோ ( - 73).

மக்கள் தொடர்புச் சாதனங்களால் உருவாக்கப்படும் எதுவுமே கூட ஆய்வுக்கு ஒரு பாடப்பொருளாக இருக்குமென்ற புரிதல்களுடன் பண்பாடு என்ற பொறி முறைக்கூடாக காத்திரமாக அணுகத் தலைப்படுகின்றார் அவர். இவ்வாறு இயங்கவல்ல அவரின் ‘The name of the rose’ எவ்வாறு இலக்கியமாகின்றது என்பதில்தான் அதன் சிறப்பே தவிர ‘அது மர்மநாவல் மட்டுமே’ எனும் தலைகீழ்புரிதலால் அல்ல. எனவே எந்த ஜானரில் எழுதுவது என்பதைப் பொறுத்ததல்ல தராதர நிர்ணயங்கள். எந்த ஜானரில் எழுதப்பட்டபோதிலும் அது இலக்கியமாக பரிமாணித்துள்ளதா? இலக்கியப் போலியா என்பதே இங்கான கேள்வியாகும்.

சிற்றிதழ்களிலும் அபத்தங்களும் சமரசங்களும் ஊடாடிக் கிடக்கலாம். இடைநிலை, வணிக இதழ்களிலும் காத்திரமான படைப்புகளும் காணக்கிடக்கலாம். இவ்வாறான போதிலும், வரிப்புணர்மிக்க படைப்பூக்கமான எழுத்துக்கலைஞர்களின் விருப்ப ஆர்வமான வெளியீட்டு சாதனத்தெரிவென்பதில் மாற்றுத் தேடலின் சிற்றிதழ்களே முன்னுரிமைத் தெரிவாக இங்கு மட்டுமல்ல அயலகத்திலும் காணக்கிடக்கின்றன. அண்மையில் முஜிப் ரஹ்மான் கூடத் தாம் பிரபல இதழ்களில் எழுதுவதே இல்லை எனத் தம் முகநூற்பதிவில் முன் வைத்துள்ளார். அயலகப்பதிவையும் காண்போம்:

‘Thousand of pages experimental poetry fiction and criticism were published in the little magazines in their heyday. but these delits were more than off set by the fact that James Jayce, T.S.Eliot, Sherwood Anderson, Ernest Hemingway, William Faulkner, Edgarlee Masters, Ezra pound, Hart Crane, L.L Cummings, Edmund Wilson, New Critics, Gertrude stein, Thornton Wilder, Jhon crowe Ramson and Allen tate, among many authors found in the pages of the little magazines their first sympathetic publication media'

இன்னொரு கோணத்தில் ஜெயமோகன் கூடதமிழ் வணிக எழுத்தின் சமூக, இலக்கிய அடிப்படைகள்என்றொரு கட்டுரையை முன் வைத்துள்ளார். இத்தொடர்பிலான அவர் பார்வைகளை மட்டுமிங்கே ஒத்துறழ்ந்து நோக்கலாம்.

‘ஒரு பிரம்மாண்டமானதோர் மன இயக்கத்தில் தேவை கருதி, அச்சில் வெளியான சிறுபகுதியே, வணிக எழுத்து. சுயபோகம் செய்பவன் சுவரில் ஒட்டி வைத்துள்ள கவர்ச்சி நடிகையின் படம் போல, அது அவன் மனதில் ஒரு வடிவமே. ஆனால் தேவை கருதி எதிர்முனையாக மாற்றப்பட்ட ஒரு சிறுபகுதி. இதன் காரணமாகத்தான் தான் வாழ்ந்த சமூகத்தின் கூட்டு நனவிலி மனத்தை (Collective Unconscious) ஆராய விரும்பிய அன்டானியோ கிராம்ஸி சீரிய படைப்புகளை தவிர்த்து வணிக எழுத்தை கச்சாப்பொருளாக எடுத்துக்கொண்டார்’

‘வணிக எழுத்து உச்சக்கட்ட மனநிலைகளை தவிர்த்து விடுகிறது. சகஜமான மனநிலைகளின் சமூகப்பொதுமைகள் மட்டுமே அதற்கு அக்கறை. கலாச்சாரத்தின் சகஜமான சலனங்கள் பற்றி ஆராய சமூக ஆய்வாளர்கள் வணிக எழுத்தைக் கருவியாகக் கொள்ளலாம். ஆனால் ஒரு கலாச்சாரத்தின் உச்சக்கட்ட உத்வேகங்களின் சாரமாகிய இலக்கியமே முதன்மையும், கவனமும் பெறவேண்டும்.’

‘இன்று ஒரு சமூகத்தில் வணிக எழுத்தைத் தவிர்ப்பது என்பது சாத்தியமேயல்ல. அந்தளவு ஒரு விரிவான ஒரு சமூக பங்காற்றல் அதற்கு உள்ளது. வணிக எழுத்திற்கு எதிராக ஆரம்பகாலத்தில் விமர்சனங்கள் முன்வைத்த கோபம் பழங்கதை. ஆனால் ஆரோக்கியமான இயக்கம் உடைய ஒரு சமூகம் ஒருபோதும் தன்னில் நடக்கும் மையமான கலாச்சார செயல்படாக வணிக எழுத்தைக் காணாது. எந்த சிறிய உலகுக்குள் நடைப்பெற்றாலும் இலக்கிய செயல்பாடே கலாச்சாரத்தின் மூச்சுக்காற்று’ - ஜெயமோகன் (காந்தள்: 1-1994 கார்கூதிர்).

தமிழில் இவ்வாறு நிகழாமல் வணிக எழுத்தின் முதல்நிலை மாதிரிகளே சீரிய படைப்புகளாகக் கொள்ளப்பட்டன என்கிறார்.

இவ்வாறு வணிக எழுத்தையும், சீரிய இலக்கிய எழுத்தையும் விதந்தோதி இனம் காணும் வரையிலும் சரிதான். முகநூற்பதிவொன்றில் ஜெயமோகனை வாசிப்பதில் மேற்கொள்ளவேண்டிய எச்சரிக்கையாக ஒரு பதிவை (யமுனா ராஜேந்திரனோ, ராஜன்குறையோ என்பதாக ஒரு ஞாபகம்) வாசிக்க நேர்ந்தது. சரியாகத்தானே இருக்கின்றது எனப் பின்தொடர்கையில் சட்டென ஒரு கொண்டைஊசி வளைவு திருப்பம்போல் எதிர்த் திசையில் செலுத்தி விடுவார் என்னுமாப்போல, ஒரு பகுதி உண்மையை முன்வைத்து நம்பகத்தன்மையை ஏற்படுத்தியபின் அப்புறமாக வளையும் நெளிவு சுழிவுகளாக.

‘வணிக எழுத்தின் மூன்று கட்டங்களாக கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா என வரையறை செய்து கொள்ளலாம். மூவரும் அறிஞர்கள். மூவருமே தமிழில் நிகழ்ந்த மூன்று முக்கிய சமூக அலைகளின் விளைவுகள். சுதந்திர போராட்டம், மார்க்சியக் கண்ணோட்டம் அறிமுகமாதல், விஞ்ஞான விளைவியல (Empiricism) பார்வை அறிமுகமாதல்.’

‘ஜெயகாந்தனை தமிழின் மிகச்சிறந்த இலக்கிய ஆசிரியர்களின் பட்டியலிலும் சேர்க்கலாம். அடுத்த படியாக கல்கியையும் சுஜாதாவையும் சேர்க்கலாம். இவர்களில் சுஜாதா சமூகவியலின் பலம் இல்லாமல் முழுக்கக் கற்பனைநேர்த்தியின் பலத்தில் நிற்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டவர். எனவே தமிழ் வணிக எழுத்தில் மிகச்சிறந்த கதைத்தொழில் நுட்பத்திற்கு அவரே உதாரணம். இதில் சீரிய படைப்பிலக்கியத்திலும் அவருக்கு இணையாக அசோமித்திரனை ஓரளவு கூறமுடியும்.’ - ஜெயமோகன். இதற்கூடாக பகுதி உண்மை. கொண்டை ஊசி வளைவு, பின்னடைவு, உண்மைக்கு புறம்பான இடைச்செருகல், அதிர்ச்சி மதிப்புத்தீர்ப்பு என வளையும் நெளிவு சுழிவுகளை இனம் காணும் வேலையை வாசகர்க்கே விட்டு வைத்துவிடுகிறேன்.

சிற்றிதழ்களின் மரணஅறிவிப்புச் சொல்லாடல் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுவதே இவற்றின் கதியை உணர்த்தப் போதுமானதாகும். இடைமைப் படைப்பாளி அபிலாஷை விட்டுவிடலாம். கலைவிமர்சகர் இந்திரனும், ‘லயம்’ காலசுப்பிரமணியமும்கூட இவ்வாறு பாவிப்பதேன்? இங்கு சிறுதெய்வங்கள் சில அவற்றை வழிபடுவோர் சமூக மேம்பாடடைந்த பின் கோவில் தெய்வங்களாக மேனிலையாக்கம் பெறும் கதைகளே மனதிற் பளிச்சிடலாகின்றன. சிற்றிதழ்ச் சூழல் நிலைப்பாட்டிலிருந்து தடம் மாறி மய்ய நீரோட்டத்தில் கலந்திட துடிப்பதன் வெளிப்பாடே இவை எனலாம்.

பிரேமிளுக்கென்றே ஒரு காலசுப்பிரமணியம் வாய்த்ததென்பது பிரேமிளுக்கு வாய்த்த பெரும்பேறே. பிரேமிள் வாணாட்காலத்தில் ஒரு புரவலராகவும் பிரேமிள் காலத்திலும், அவர் காலமான பின்னரும் அவர் நூல்களை உரிய குறிப்புகளுடன் மிக அருமையாக தொகுத்து வெளியிட்ட தொகுப்பாசிரியராகவும் இயங்குவது காலசுப்பிரமணியத்தின் அருங்கொடையே. இவ்வாறே தம் நூலகத்தையும், நூல்களின் காப்புரிமத்தையும் கால சுப்பிரமணியத்திற்கே பிரேமிள் வழங்கியதும் ஒரு அற்புத நிகழ்வே. ‘லயம்’ இதழாசிரியர், வெளியீட்டாளர், தொகுப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், அரிய நூல்களை ஆவணக் காப்பகங்கள்தோறும் தேடிக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்த கூடியவர் என்கிற வகையிலும் அவருடைய பணிகள் குறிப்பிடத்தக்கனவே. மறுப்பக்கமாக பிரேமிள் பேணி நின்ற அறப்பிடிவாதம் ஏதும் இவரிடத்தில் அறவே கிடையாது. உதாரணத்திற்கு அவருடைய ஒரு வாக்குமூலம்:

தினமலர் ஒரு இலக்கிய பத்திரிகை நடத்த முன் வந்ததாகக் கூறி (ஒரு இதழ் தயாரித்து மாதிரி காட்ட) நண்பர் அழைத்ததால் சென்று 20நாட்கள் மட்டும் (யாரையும் காணாத தனி இடத்தில்) தங்கி வேலை முடிந்த உடனே திரும்பிவிட்டேன். திட்டம் கைவிடப்பட்டு இதழ் வெளிவரவில்லை’.

இது அவருடைய 26.10.2015 தேதிய முகநூற்பதிவாகும். பிரேமிளின் ஆறு தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்த்தப்பட்ட முறையும் பிரேமிள் ஏற்கக்கூடியதாக இல்லை. பிரேமிள் மரணப்படுக்கையில் இருந்தபோது தைரியமுள்ளவர்கள் அவருக்கு உதவலாம் என்றெழுதினார் மா.அரங்கநாதன் ‘முன்றிலில்’. இன்றோ அவ்விழாவில் நீதியரசர் மகாதேவன் (மா. அரங்கநாதன் மகனார்) தலைமையேற்றார். வாணாட்காலமெல்லாம் பிரேமிளோடு முரண்பட்ட ‘தமிழினி‘ வசந்தகுமார் நூல் வெளியீட்டிலும் சந்தைப்படுத்துதலிலும் காலசுப்பிரமணியத்திற்கு உறுதுணையானார். இவை யாவும் காலகதியில் பிரேமிளுக்கு ஏற்பட்ட வெற்றியா? காலசுப்பிரமணியத்திற்கு ஏற்பட்ட தோல்வியா? வெற்றியா? முன் எப்போதைக்காட்டிலும் சிற்றிதழ் சிறு சூழல் பங்களிப்புகளின் தேவை இன்றியமையாக் காலச்சூழலே இன்றைய சூழல் என்பதுதான் எம்மனோரின் துணிபாகும்.

சிற்றிதழ்களே உண்மையான இயக்கங்கொள்ளும். இவ்வித இயக்கம் அதிகார மையமெனச் சுருங்குகிற நடுநிலை இதழ்களுக்கும் கூடுவதில்லை. நடுநிலை இதழ்களை களையெடுத்து சிற்றிதழ் தலையெடுக்கின்றது. உண்மையில் இப்போது சிற்றிதழ்களின் காலம்’ - வியாகுலன் - (பவளக்கொடி:5).

பத்திகள், மதிப்புரைகள், பல்சுவைக் கட்டுரைகள் மலிந்த இடைநிலை இதழ் சூழலின் மலட்டுத்தன்மை எந்த படைப்பூக்கத்திற்கும் இடம் தருவதில்லை. படைப்பை முன்வைத்து கூறிய விவாதங்களை நாம் முற்றிலுமாக இழந்துவிட்டோம்’.

இன்று சிறுபத்திரிகை மரபில் கிளைத்து எழுந்த பல்வேறு முரண்பட்ட கருத்துநிலைத் தரப்புகளுக்குள் ஒரு சமரசநிலை ஏற்பட்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. இது கருத்தியல் ரீதியான ஒரு அறிவியக்கத்தின் வழி நிகழ்ந்த சமரசப்புள்ளி அல்ல. வெறுமனே அதிகாரத்தைத் துய்ப்பதற்கும், சந்தை விழைவுகளுக்கும் ஒன்றை ஒன்று ஊடுருவாத, குறுக்கிடாத, விசாரணைப்படுத்தாத பரஸ்பர மௌன சமரசமே அதாவது ஒன்றின் இருப்பை அனுமதிப்பது ஊக்குவிப்பதன் வழி தனது இருத்தலையும் பாதுகாத்துக்கொள்வது’ - பிரவீன் (புறனடை 1).

பச்சையாக கூறுவதனால் இது சந்தர்ப்பவாத சமரசக் கூட்டணியே. ( a marriage of convenience). ‘கலைவிமர்சகர்’இந்திரனையும், ‘லயம்’ காலசுப்பிரமணியத்தையும் நோக்கி கூற விரும்புவதெல்லாம் இதுதான். எந்த வழியில் இயங்கப்போகிறீர்களோ அது உங்கள் தெரிவு. ஆனால் அதை நியாயப்படுத்தும் முகமாக சிற்றிதழ்களுக்கு முரண் சான்றிதழ் வழங்க நீங்களுமா என்பதுதானது. ஒற்றை இதழே வெளிவந்தபோதிலும் கூட தஞ்சை ப்ரகாஷின் ‘குயுக்தமும் சாளரமும்’ ‘காந்தளும்’ ‘புறனடையும்’ குறிப்பிடத்தக்கனவே. புறனடையின் ஆசிரியர் குழுவில் இருந்த பிரவீனே இப்போது பிரவீன் பஃறுளியாக இடைவெளி ஆசிரியர் குழுவில் இயங்குகின்றார். (புறனடையில் ஆர்.அபிலாஷும் இருந்தவர்தான்).

சனரஞ்சக இலக்கியச் சித்தாந்தத்தின் அடிப்படை என்பதும் வாசக எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக்கூடியதுதான். அதுதான் அதன் மகாமந்திரம் என்பார் பிரேமிள். இச்சமன்பாடு ராஜாஜி போட்டுவிட்டப் பாதைதான் என்பார் தமிழவன். ‘கல்கியை ஜனரஞ்சக எழுத்தாளர் என்னும்போது நல்ல இலக்கியப் படைப்பிற்கு வாசக எண்ணிக்கை இருக்கக் கூடாதா என்ற கேள்வி எழக்கூடும். இங்கு நாம் கல்கியை இனம் காண்பது அவருக்கு பின்னால் இருந்த வாசகர்களின் கூட்டத்தை வைத்தல்ல. இக்கூட்டத்தைக் கவர அவர் கையாண்ட மலிவான தந்திரங்களை வைத்துதான்’- வேதசகாயகுமார் (தமிழ்ச் சிறுகதை வரலாறு:1).

வணிகம் என்றாலே நுகர்வியம் சார்ந்ததுதானே. வணிக எழுத்தின் அடிப்படைகளை அந்த ஜானரிலும் ஜாம்பவானானவர் வாயிலாகவே காண்போமே:

வணிக அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் கேளிக்கை எழுத்திற்கு இருக்கக்கூடிய பொதுவான இரண்டு இயல்புகள்:

(1) அது வாசகன் விரும்பும் கருத்து நிலைப்பாட்டை மேற்கொள்ள முயன்றபடி இருக்கும்.

(2) அதன் அழகியலாக்கம் அச்சுவார்ப்புத் தன்மை கொண்டதாக இருக்கும். நுகர்பொருளின் இயல்புகள்தானே இவையிரண்டும்.‘ - ஜெயமோகன் (காந்தள்:1).

இத்தொடர்பில் மேலதிகப் புரிதல்களுக்கான முன் நிபந்தனை சனரஞ்சகம் (Popular) என்பதற்கும் வெகுசனக் கவர்ச்சி (Populistic) என்பதற்கும் விதந்தோதி கண்டாக வேண்டிய வேறுபாடேயாகும்.

‘சனரஞ்சக'வாதத்துக்கும் (Popular) 'சனவிருப்பு'(Populistic)வாதத்துக்குமான வேறுபாட்டை இன்னும் தான் நமது எழுத்தாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் நன்கு விளங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.’- கார்த்திகேசு சிவத்தம்பி (மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும், காற்புள்ளிகளும்..ப.33).

1892இல் அமெரிக்காவில் கட்சி ஒன்று தோற்றுவிக்கப்பட்டபோது அதனை ஜனநாயகக் கட்சியிலிருந்து வேறுபடுத்தக்கூடிய ஒரு பெயரைத் தேடினர். அப்போது தான் தி ஓவர்மாய்யெர் என்பவரால் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டப் பெயர்தான் ‘பாப்புலிசம்’ என்பதாகும்.

ரசியாவின் நரோத்னிக்குகள் இந்தியாவின் காந்தியம் இவற்றை முன்வைத்து வெஹாரோஸ் மற்றும் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தை முன்வைத்து ஏ. கேதின் இருவரும் எழுதிய நூல்தான் ‘வளர்முக நாடுகளில் பாப்புலிசம் நேற்றும் இன்றும்’.

‘பாப்புலிசம் இரண்டு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு அரசியல் அளவுகோலின் முன்னரும் ஓங்கி நிற்கும் மக்களின் சித்தம் மற்றும் எந்தவித இடைநிலை அரசியல் நிறுவனங்களுமின்றி வெகுஜனங்களுடன் தொடர்பு கொள்ள தலைவர்க்குள்ள நாட்டம்’ - எ.ஷில்ஸ் (வளர்முக நாடுகளில் பாப்புலிசம் ப.15).

‘தனிப்பட்ட ஒரு தலைவரின் கவர்ச்சிகரச் செல்வாக்கு அவர் மட்டும் மக்களோடு நேரடித்தொடர்புகொண்டு அவரது கட்சியை நடத்துவது என்பது சில பத்தாண்டுகளுக்கு முன்பு வெகுசனத்துவம் (Populism) எனப் புரிந்து கொள்ளப்பட்டது.’ - ந. முத்துமோகன். (மார்க்சியக் கட்டுரைகள்; ப.935).

இத்தகைய தனிப்பட்ட ஒரு தலைவரின் செல்வாக்கில் வேரூன்றக் கூடிய வெகுசனத்துவக் கவர்ச்சி அரசியல் (Populistic Politics)தானே தமிழக அரசியலின் விதியை எழுதிச் செல்வதாகின்றது. வெகுசனத்துவக் கவர்ச்சித் தொடர்பில் திராவிடக் கட்சிகளை மட்டுமே விமர்சித்து விட்டு காந்திய வெகுசனத்துவக் கவர்ச்சியைப் பொறுத்தவரை காந்தி, பொம்மை குரங்குகளாகிவிடுவதும் இங்கே கண்கூடே. சனரஞ்சக எழுத்தின் ஆராதனையாளர் வெகுசனத்துவக் கவர்ச்சி எழுத்தையும் சனரஞ்சக எழுத்தெனவே சாதிப்பர்.

தீவிர இலக்கியப் படைப்பாளிகள் சனரஞ்சக இதழ்களில் பங்கேற்கையில் அவர்களுக்கான சுதந்திரம் எந்த அளவிற்கு அனுமதிக்கப்படும் என்பது கேள்விக்குரியதே. கந்தறுக்கோலமாகத் தணிக்கைச் செய்யப் படுகையில் இங்கென் எழுத்தை சிரைத்தவன் எவன் எனக் கேட்கும் திராணி ஜெயகாந்தனுக்கு இருந்ததுபோல் எத்தனைப் பேருக்கு வாய்க்கும்?

கனவுத்தொழிற்சாலை உற்பத்தியான கதாநாயகர் மத்தியில் இருந்தே தமிழக முதல்வருக்கு தவங்கிடக்கும் பிம்பச்சிறைத் தன்னிலைகளால் வெகுசனத்துவக் கவர்ச்சி அரசியலே இங்கு தொடர்கதை ஆவதில் வியப்பேதுமில்லைதானே?.

‘கொள்கைன்னாலே தலைசுத்திக் கண்ணைக் கட்டும் ரஜினியின் ஆன்மிக அரசியல் ‘மனிதன் பாதி மிருகம் பாதி’ ‘manimal மிருதன்’ ‘உத்தமவில்லனின் நடுமத்தி நாயக அரசியல்’ அடக்கியே வாசிக்கும் பணிவுத்திலகமான தளபதி விஜய்-ன் ஒரு விரல் அரசியல் இதுகளுக்கு தத்துவார்த்தப் பின்புல ஜாக்கிகளாக காந்தியத் தமிழருவி மணியன், முற்போக்குப் பேருரையாளர் பாரதி கிருஷ்ணகுமார், எப்போதும் அவரைப்போலவே நிறைய பேருக்கும் கதைக்கரு தோன்றக்கூடிய ‘பக்கா மாஸ்’ இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மும்மூர்த்திகளுக்குமே காவி அரசியலையே வெவ்வேறு ஜானரில் வெளுத்துக்கட்டி மூர்த்திகரணமாக திரை உரையாடலை அருளிச்செய்யும் மகா ஜாம்பவானாக நம்ம குமரிப்பேராசான். ஆசான் சீட கோடிகள் மேலான கவனத்திற்கு. இடைப்பிறவரலாய் ஜஸ்ட் ஸ்மால் பிரேக்.

திரைத்துறையைப் பொறுத்தவரை ஜெயமோகன் சாதாரண மனிதர். ஒரு எழுத்தாளர் என்ற அளவில் அவருடைய எந்தச் சொல்லுக்கும் அங்கே பெரிய மதிப்பிருக்காது’ - இது இந்து டாக்கீஸ் குறுக்கீடு - செல்லப்பா (இந்து தமிழ்த் திசை 2.11.18).

திருட்டு மாங்கனிகளே தித்திக்கும் திரைக்கதை வரலாற்றில் ஒரு திடீர் திருப்புமுனை என்றால் அது பாலச்சந்தர் மீது என்.ஆர்.தாசன் ஒரே ஒரு ரூபாய் மட்டும் இழப்பீடாகக் கேட்டுத் தொடுத்த அறிவுக் களவு வழக்கே. ‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்காக மட்டுல்லாமல் பாலசந்தரின் திரைக்கதை யாவுமே களவாடல்களே. பணம் பறிக்கும் நோக்கின்றி பாலச்சந்தர் அறிவுக் களவைத் தடுத்து நிறுத்தவே வழக்கென ஆதாரபூர்வமாய் நிறுவி வழக்கை வென்றெடுத்தார் சிற்றிதழாசிரியருமான சிகரம் ச.செந்தில்நாதன். திருட்டே என குற்றம் நிரூபணமாகி கதைத் திருட்டே எனவும் ஒரு ரூபாயோடு வழக்குச் செலவையும் சேர்த்து வழங்கவேண்டுமென தீர்ப்புரைக்கப்பட்டது. வழக்கு விவரங்களும் வாத தரப்புகளும் கூட மற்றொரு சிற்றிதழில் வெளியாயிற்று. வருண் ராஜேந்திரன் ‘செங்கோல்’ கதைத் திருட்டே ‘சர்க்கார்’ எனும் விவகாரத்தில் கதைத் திருட்டே எனப் பாக்கியராஜின் நேர்மையினால் அவர் பாதிப்புகளுக்கு ஆளாக நேர்ந்தது. இந்த விவகாரத்தில் வழமைபோலவே ஆசான் அறிவுக்களவாளி (Plagiarist) ஏ. ஆர். முருகதாஸ் பக்கமே வக்காலத்து வாங்கிவந்தார். மட்டுமல்லாமல் வருணுக்கு நியாயம் வழங்கப்பட்டபோதிலும் வருண் பெற்றது நோக்குக்கூலி என நக்கலடித்தார். பின் வழமைபோலவேப் பதிவில் நீக்கவும் செய்தார். வருண் பெற்றது நோக்குக்கூலி எனில் ஆசான் பெற்றதற்கு என்ன பெயர்? என வளரி (பூமராங்) எய்தவன் மீதே மீளப்பாய்ந்தது. ஆசான் அமைதியாய் இருந்திருக்கலாம் என்கிறார் இளங்கோகிருஷ்ணன் தம் முகநூற்பதிவில். வணிக எழுத்தின் சமூக, இலக்கிய அடிப்படைகள் பற்றிய தம் கட்டுரையில் கல்கியின் அறிவுக்களவுகள் குறித்து கள்ள மவுனம் சாதித்து அவரையும் அறிஞர் எனக் கொண்டாடுகிறவர்தானே ஆசான். ஆசான் எந்த காலத்தில் இளங்கோ அமைதியாய் இருந்தார்? இவ்விவகாரத்தில் பாக்கியராஜிக்கு பாராட்டுக்களும் ஆசானுக்கு கண்டனங்களும் சமூக ஊடகங்களில் எதிரொலித்திடலாயின.

இவ்வளவிற்குப் பின்னாலும் ஆசான் வலதுசாரியாய் இருந்தாலென்ன? என்னே அவர் படைப்பாளுமை, மொழியாளுமை வேறொருவர்க்கு வாய்த்திடாத இவற்றையெல்லாம் பேசாத விமர்சனம் எல்லாம் விமர்சனமாகுமா? ஆசானை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம் புறக்கணித்துவிட முடியாது என்பாரும் உளர். புறக்கணித்துவிடமுடியாமல் கண்டனம் புரிவதும் பொருட்படுத்துவதன் அறிகுறியே என்பதவர் தரப்பு. படைப்புகள் குறித்த விமர்சனங்களும் எம்மானோராலேயே ஏலவே வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறெல்லாம் ஆசானுக்கு வக்காலத்து வாங்கி ஆஜராகுபவர் தரப்புகளில் எங்கேயேனும் ஆசானின் எண்ணற்ற அவதூறுகளில் யாதொன்றிற்கேனும் கண்டனம் இருந்ததுண்டா? வலதுசாரி என்பதற்கு அப்பாலான பாசிசக்கூறுகளும், நேர்மையின்மை என்பதற்கும் அப்பாலான கயமையுமே ஆசானின் பண்புகளாகவும் பாடுகளாகவும் இருப்பதே விமர்சனங்களுக்கான காரணியாகும். ஆதிக்க சக்திகளை அரவணைத்தும் பாதிக்கப்பட்டத் தரப்புகளைப் புறக்கணித்தும் இயங்கலாகும்அதிகாரத்திற்கு ஒத்தோடியேஆசான் எனில் ஆசானுக்குஒத்தூதிகளேஆசானின் சீடகோடிகள் யாவும்.

கயமையின் ஆதாரப்புள்ளி சுயநலமாகும். ஆனால் சுயநலம் விளிம்பில் நிற்கிறது. கயமையோ மையத்தில் இருப்பது கண்டயறிவது கடினம். அது தன்னை தானே இனம் காட்டும்போதுதான் அறிய முடியும். தெய்வங்களின் கயமை, அரசுகளின் கயமை, மதங்களின் கயமை, தத்துவங்களின் கயமை, தனி மனிதன் கயமை எனப் பரந்துப்பட்ட தளங்களில் இந்த மன அமைப்பு இயங்குவது’. - ரமேஷ் பிரேதன் (அவன் பெயர் சொல்.64).

பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டு என்றும் கணவர்க்கும் தோன்றா கற்பு’ - உமாபதி சிவாச்சாரியார் (‘திருவருட்பயன்’).

ஆணவமலமாகிய இந்தப் பெண் கணவனாகிய தன்னைப் பற்றி நிற்கும் ஆன்மாவுக்கு தன்னைக் காட்டாமல் இருப்பார்’ - கு. வைத்தியநாதன் (சைவச் சித்தாந்த கொள்கைகளும் அவற்றின் குறியீட்டு மொழியும்).

‘மனிதன் தன் உயிரைக்கூட மாய்த்துக்கொள்ள முடியும். ஆனால் அகந்தையை அழிப்பது அவ்வளவு எளிதன்று. அகந்தை எல்லா மயக்கத்திற்கும் காரணமாகின்றது என்பதை மார்க்ஸ் தெளிவாக விளக்கி இதனையே ‘பொருளுக்கு அடிமையாதல்’ ( ‘ஆப்ஜெக்ட் பாண்டேஜ்’) எனக் குறிப்பிடுகின்றார். இதன் வடிவங்கள் பல. தனிசொத்து, சுயநலம், குறுகிய தேசியவாதம், குழு மனப்பான்மை, சாதிவெறி போன்றவைகளனைத்துமே பொருளுக்கு அடிமையாதலின் பல்வேறுவகைப்பட்ட வெளிப்பாடுகளே. அகந்தை தற்பெருமையாகவும், போலி கௌரவமாகவும் வெளிப்படும். இது மனமுவந்து மக்களுக்கு ஊழியம் செய்வதற்குப் பெருந்தடை’ - ‘சத்தியமங்கலம்’ எஸ். நாகராசன் (‘கீழை மார்க்சியம்...’).

இத்தகு புரிதல்களின் வெளிச்சத்திற்கு ஊடாக நோக்கத் தலைப்படுகையில்தான் ஆசானின் ‘சுயரூப சொரூபம்’ விளங்கித் தோன்றிடலாகின்றது. ஆசானின் மொழி ஆளுமையும் படைப்பாளுமையும் நிலை பேறான அறத்தையே வலியுறுத்துவனவாயிருக்க மாறாக அவரின் கைங்கர்ய மார்க்கமோ வர்ணாசிரம தர்மத்தையும் காவிப்பாசிசத்தையும் காபந்து பண்ண மடிதற்று முந்துறுவதாகின்றது. இத்தொடர்பிலான மேலதிகப் புரிதல்களுக்கு ஜனவரியில் என்.சி. பி.ஹெச் வெளியீடாக வெளிவர உள்ள (தொகுப்பாசிரியர்கள்: யமுனாராஜேந்திரன் - வே. பிரபாகர்) ஜெயமோகன் ‘இந்துத்துவப் பாசிசத்தின் இலக்கிய முகம்’ நூலிற் காண்க.

‘எவ்வளவு அழகாக படமெடுத்தாடுகின்றது ஆதிசேசன்’ என்கிறீர்கள். இல்லை என்று சொல்ல வரவில்லை நாங்கள். ஆன்மிகத்தின் மீது கட்டியெழுப்படும் பாசிசமது என்பதனாலேயே எச்சரிக்கின்றோம். மிகமிக அபாயகரமான நச்சரவம் அதுவே தானென’.

சிற்றிதழ் மனோபாவம் இலக்கியத்தை வளர்க்கவில்லையென மறுதலிக்கும் ஆத்மார்த்தி தம் முகநூல் பக்கமே தாம் நடத்தும் சிற்றிதழ் என்கிறார். சிற்றிதழுக்கென பரிட்சை, கோர்ஸ் எதாவது இருக்கா என்கிறார். அவர் மக்களுக்கு அருகாமையில் இருக்கிறாராமாம். ‘பேசும் புதிய சக்தி செப்டம்பர் 2018’ அருகாமையில் என்றால் தொலைவில் என்றே பொருள். ஆமாம் ஆத்மார்த்தி மக்களுக்கு அருகாமையிலேயே தாங்கள் இருக்கின்றீர்கள். முகநூலிலேயே வீற்றிருங்கள். ஆனந்த விகடனின் சிறந்த சிற்றிதழுக்கான விருது பெற்ற சிவ. செந்தில்நாதனின் இடைவெளி சார்பிலான ஏற்புரையே ஆத்மார்த்திகளுக்கு போதுமான பதிலாகும். விளிம்பு நிலை, தீவிரம், தனித்துவம், பிடிவாதம், பொதுப்புத்திக்கு எதிரான போர்க்குணம் ஆகியவையே சிறுபத்திரிகையின் விழுமியங்கள். தமிழில் நவீன பிரக்ஞையைக் கட்டமைத்தது சிற்றிதழ் இயக்கமே. கடந்த நூற்றாண்டின் எல்லா தீவிர அறிவியக்கமும் சிற்றிதழ் வெளியில்தான் நிகழ்ந்தன. இன்று வெகுசன கேளிக்கை வெளிகள் பெருகி படைப்பூக்கமும் சாரமான கண்டுபிடிப்பு மிக்க எழுத்தும் மூச்சுத் திணறடிக்கப்பட்டுள்ள நிலையில் சிற்றிதழ்களே மீட்சிக்கான வழி. விகடன், தடம் பிப்ரவரி 2019

‘பெரிதினும் பெரிதும் கேட்போர்’ மய்ய நீரோட்டத்தில் ஒத்தோடியே கதிமோட்சம் அடையட்டும். ‘சிறியனவேச் சிந்திக்கும்’ ‘மறுத்தோடி’களான எம்மனோர்க்கு எதிர்நீச்சலே எம் விதிமார்க்கம் என பிரகடனப்படுத்துகின்றோம்.

காட்சி - 1

திரை உயரும்பொழுது மேடையில் இருள். திரை உயரும் பொழுதே ஒரு குரல் ஒரே அளவான இடைவெளியுடன் மூன்று முறை திரும்பத்திரும்ப ஒலிக்கிறது. ‘ஜனவரி பதினேழு, ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபது’ அதிகாலை ஒளிரும் பொழுதில் தொலைபேசி ஒலித்து, பாதி மேடையை அவ்வொலி நிரப்புகிறது. சுஜாதா வெண்ணிற சேலையில் படுக்கையிலிருந்து எழுந்து, நடந்து வருகிறாள். இணக்கமற்ற ஓர் அதிகாரியின் குரல்.

குரல்: (மேடைக்கு அப்பால்) 460001 ஆ?

சுஜாதா: ஆமாம்

குரல்: திவ்யநாத் சாட்டர்ஜி வீடுதானே?

சுஜாதா: ஆமாம்

குரல்: நீங்க யாரு?

சுஜாதா: (வியப்படைந்து) மிஸஸ் சாட்டர்ஜி

குரல்: மிஸஸ் திவ்யநாத் சாட்டர்ஜியா?

சுஜாதா: ஆமாம். நீங்க யாரு?

குரல்: வீட்ல ஆம்பிளைங்க யாரும் இல்லியா?

சுஜாதா: தூங்கிக்கிட்டிருக்காங்க நீங்க யாரு?

குரல்: ப்ரதீ சாட்டர்ஜி உங்களுக்கு என்ன சொந்தம்?

சுஜாதா: என் மகன்.

குரல்: மகனா? கண்டாபுர்க்கூருக்கு வாங்க.

சுஜாதா: (கிரகித்துக் கொள்ள முடியாமல்) கண்டாபுர்க்கூருக்கா?

குரல்: ஆமாம் நீங்க ப்ரதீ சாட்டர்ஜியை அடையாளம் காட்டணும்.

(தொலைபேசி மறுமுனையில் துண்டிக்கப்பட்டுவிட்டது. தொலைபேசி ரிசீவர் சுஜாதாவின் கரங்களிலிருந்து நழுவுகிறது. திவ்யநாத்தும் ஜோதியும் உள்ளே வருகிறார்கள்)

திவ்யநாத்: என்ன விஷயம்? யாரு Phone- ல?

சுஜாதா: எனக்குப் புரியல.

திவ்யநாத்: என்ன புரியல.

சுஜாதா: போனில் பேசினது யாருன்னுத் தெரியல. கண்டாபுர்க்கூருக்கு வாங்கன்னு அதை மட்டுதான் சொன்னார் ஒருத்தர்.

திவ்யநாத்: என்ன?

ஜோதி: நீங்க என்ன சொன்னீங்க?

சுஜாதா: அவர் சொன்னாரு கண்டாபுர்க்கூருக்கு வாங் கன்னு, அவர் சொன்னாரு... நீங்க அடையாளம் காட்டணுமின்னு... ப்ரதீயை...?

(நடந்தது என்னவென்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டு திவ்யநாத்தும் ஜோதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்)

திவ்யநாத்: கண்டாபுர்க்கூருக்கா?

சுஜாதா: ஆமாம் நான்தான் சொன்னேனே ஜோதி, காரை எடு, கிளம்பணும்.

திவ்யநாத்: இல்ல! நம்ம காரை எடுக்கக் கூடாது.

சுஜாதா: ஏன்?

திவ்யநாத்: என் கார், கண்டாபுர்க்கூருக்கெல்லாம் போகக்

கூடாது! ழிஷீ! ஜோதி, நல்லா கேட்டுக்க.

ஜோதி: சொல்லுங்கப்பா.

சுஜாதா: ஆனா ஏன்? கார் ஏன் அங்கே போகக் கூடாது? ஏன்?

திவ்யநாத்: எனக்கு கார் வேணும் நான் போய் சௌதுரியைப் பார்க்கணும். நீ தாத்தாவுக்கு போனப் போடு, சொல்லிடு அவர் கிட்ட... நீ போய் நேர்லியே போய் பாத்துடேன் என்ன?

சுஜாதா: ஏன் இவங்களையெல்லாம் பாக்கணும்கறீங்க? ஏன்? ப்ரதீ...

திவ்யநாத்: (சுஜாதா இருப்பதையே மறந்து) ஜோதி உன் மாமியாரோட சொந்தக்காரங்க யாரோ போலீஸில் இருக்காங்க இல்ல?

ஜோதி: மாமியோரோட சித்தி பையன்...

திவ்யநாத்: போன்லக் கூப்பிடு, வெளியில் இதை வராம மூடி மறைச்சாகணும். சௌதுரி நமக்கு உதவி பண்ணுவார். நிச்சயம் அப்பவே அபாய எச்சரிக்கை குடுத்துக்கிட்டிருந்தாரு... பையனை கண்காணியுங்கனிட்டு.

ஜோதி: (எதையும் புரிந்துகொள்ள முடியாமல், கலவரமடைந்து) நீங்க எதை மூடி மறைக்கணும்? ஏன் மூடி மறைக்கணும்? நீங்க எதைப்பத்தி பேசிக்கிட்டிருக்கீங்க?

திவ்யநாத்: ஜோதி, நேரம் ஓடிக்கிட்டிருக்கு கதைலாம் பேசிக்கிட்டிருக்க நேரமில்ல. (கிளம்புகிறார்)

சுஜாதா: ஜோதி (ஜோதி முனைப்பாக எண்களைச் சுழற்றிக்

கொண்டிருக்கிறான் அவன் பதிலிறுப்பதில்லை) ஜோதி...!

(அனுமதிக்காமல்) ஜோதி என்னதான் இங்கே நடக்குது?

ஜோதி: ப்ரதீ... (எண்களைச் சுழற்றிக்கொண்டே தொடர்பு கிடைக்காததால்)

சுஜாதா: ஜோதி! என்ன இந்த கண்டாபுர்க்கூர்...? யாரு கூப்பிட்டாங்க?

ஜோதி: (தவிர்க்கமுடியாமல்) போலீஸ்தான் கூப்பிட்டுருக்கு. சவக்கிடங்கு மார்ச்சுவரி கண்டாபுர்க்கில் இருக்கு.

சுஜாதா: போலீசா?... சவக்கிடங்கா?

ஜோதி: (சற்று எதிர்ப்புடன் கட்டாயமாக பதில் சொல்ல வைக்கப்பட்டதால்) ஆமாம்.

சுஜாதா: (கூட்டிக்கழித்து ஒருமாதிரியாக தெளிவடைந்து) ... அதான் உன்னோட அப்பா சௌதுரியைப் பாக்க விரைஞ்சு போயிக்கிட்டிருக்காரா? ஆனா ப்ரதீ ப்ரதீயைப் பாக்க யாருடா போவாங்க?... ப்ரதீ...

ஜோதி: நாம போவோம் அம்மா, ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு...

சுஜாதா: கொஞ்ச நேரம் கழிச்சா?

(சுஜாதா தலையை அசைக்கிறாள், அசைத்துக்கொண்டே

யிருக்கிறாள். மேடையின் இந்தப் பகுதி இருளடைகிறது.

ஐந்து இளைஞர்கள் மேடையின் மற்ற பகுதியிலிருந்து மேடைக்குள் நுழைகிறார்கள், படுத்துக்கொள்கிறார்கள், வெண்நிற துணியால் போர்த்திக்கொள்கிறார்கள். அடுத்த

படியாக இரண்டு பேர்கள் வந்து நிற்கிறார்கள் மேடையின் இந்த பகுதி இருளிலேயே மூழ்கிக் கிடக்கிறது.)

இருளில் சுஜாதாவின் குரல்:

ஜோதியும் ஜோதியோட அப்பாவும்... (மௌனம்) ஊர் ஊரா போயிக்கிட்டிருக்காரு... இந்த விஷயத்தை மூடி மறைச்சு அழிக்க (மௌனம்) வெளியில் வராம அமுக்கி வைக்க... அதான், நான் மட்டும் தனியா வந்திருக்கேன்.

காட்சி - 2

மேடையின் மற்றப்பக்கத்தில் ஒளி பரவுகிறது. ஐந்து சடலங்கள், போர்வை போர்த்தப்பட்டு, பணியிலிருக்கும் பொறுப்பு அதிகாரி (பொ.) இரக்கமே அற்று, பிணங்களின் தலைப்பக்கம் நின்று கொண்டிருக்கிறான். வெட்டியான் அவன் பின்னால் நின்று கொண்டிருக்கிறார். பின்னால் எங்கேயோ நிற்கும் ஒரு பெண்மணியின் கதறும் ஒலி கேட்கிறது.

அழும் குரல்: அவனைத் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்திடு... ஒரே ஒரு தடவ என் மார்ல சாச்சு கட்டிக்கிறேன்... அப்புறம் நான் அழவே மாட்டேன்... ஐயா, என் சோமு. (இந்த ஒப்பாரி, இந்த காட்சி முடியும் வரை, முழுவதுமாக மெல்லிய ஒலியில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது)

பொ.அ: (சுஜாதாவிடம், கையிலிருக்கும் காகிதங்களைப் பார்த்துக்கொண்டே) ப்ரதீ... யெஸ்... ப்ரதீ சாட்டர்ஜி (சுஜாதா நின்று கொண்டிருக்கிறாள், கைகளால் வாயை அழுத்தமாக பொத்தியபடி. அவளுடைய கண்கள் இதை நம்பிய மாதிரி தெரியாததால்...) யெஸ் லெப்டிலருந்து மூனாவது பாடி Yes உயரம் 5’10” சரிதானே?

பொ.: சிவப்பு நிறம்?

சுஜாதா: யாரோட நிறம்?

பொ.: உங்க பையனோட நிறம், ப்ரதீ சாட்டர்ஜியோட நிறம்.

சுஜாதா: ப்ரதீ எங்கே?

பொ.: ஏதாவது அங்க அடையாளமிருக்கா?

சுஜாதா: கழுத்தில்... கழுத்தில் ஒரு மச்சம் இருக்கும்.

பொ.: யெஸ்.

(வெட்டியானைப் பார்த்து சைகை செய்கிறான். அவன் காலிலிருந்து கழுத்துவரை துணியை நீக்குகிறான், முகம் மூடியே இருக்க) சுஜாதா கால்சராய்களின் முனையைத் தொடுகிறாள். தொட்டவுடன் ஏதோ ரத்தத்தைத் தொட்டு விட்டாற்போல் பயந்து சட்டென்று கையை எடுத்துவிடுகிறாள். மீண்டும் கையை நீட்டி இறந்தவனது ஆடையை உழப்பிப் பார்க்கிறாள். மீண்டும், மீண்டும் ஆனால் ஒவ்வொரு முறையும் தலையை அசைத்தபடி இல்லை... இல்லை... இல்லை என்று சொல்லியபடி, சொன்னாலாவது அவள் முகத்தில் படிந்துவிட்ட இந்தஆமாம்என்கிற பயங்கரம்இல்லைஎன்று மாறிவிடுமோ என்ற நப்பாசையில் அவள் ப்ரதீயின் கையைத் தூக்குகிறாள். விரைத்த விரல்கள் எதையோ பற்றிக் கொண்டு...

அவன் எதைப் பற்றிக் கொண்டிருக்கிறான். சுஜாதா பற்றிய அவனது கைகளைவிட அவை திடும் என்ற சத்தத்துடன் கீழே விழுகின்றன. அவள் தலையை அசைத்துக்கொண்டே முகத்தை மூடிநிற்கும் துணியை நீக்க முனையும்பொழுது)

பொ.: நோ... மூஞ்சியை மூடியிருக்கிற துணியை நீக்காதீங்க....

சுஜாதா: நான் அவனோட முகத்தைப் பார்க்கணும்.

பொ.: அங்கே பாக்கறதுக்கு என்ன இருக்கு? ஒன்னு கூட மிச்சம் மீதி இல்லை.

சுஜாதா: (அவள் துணியைப் பட்டென்று நீக்குகிறாள். ஆனால் நாம் ப்ரதீயின் முகத்தைப் பார்க்க முடிவதில்லை. அவன் தலை ஒரு செயற்கையான கோணத்தில் கிடப்பதால்) ப்ரதீ...! (அவள் அவன் முகத்தை தட்டுகிறாள். ஆனால் மறுவிநாடியே பட்டென்று ஒரு குலுக்கலோடு கையை எடுத்துக் கொள்கிறாள்) ப்ரதீ! ப்ரதீ! அவனுடைய தலையை தன் கைகளால் பிடித்துப்பார்க்க விரைந்து குனிகிறாள். ஆனால், பாதி வழியில் அப்படியே பாதி குனிந்தபடி நின்று பிறகு தலையை மெல்லத் தூக்குகிறாள், அவள் குரல் ரகசிய தொனியாக மாறுகிறது. முணுமுணுக்கும் குரல்) நான் இவனை வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போறேன்.

பொ.அ: No. முடியாது...

சுஜாதா: ஏன்?

பொ. அ: No முடியாது...

சுஜாதா: முடியாதா?

பொ.அ: No உங்களுக்கு சடலம் கிடைக்காது...

சுஜாதா: ஏன்?

பொ.: இல்ல உங்களுக்கு சடலம் கிடைக்காது.

அந்த வாக்கியம் பொ.இல்லை உங்களுக்கு சடலம் கிடைக்காதுபல குரல்களில், பல ஸ்ருதிகளில் மீண்டும் மீண்டும் குரலசைகிறது. ஒவ்வொரு முறையும் அது சுஜாதாவின் முகத்தில் சவுக்கடி போல் விழுகிறது. இந்த நேரம் முழுவதும் சுஜாதா மண்டியிட்டு இருக்கிறாள். முகம் உயர்கிறது மேலே பார்த்தபடி, அதிர்ச்சியுடன். ஒளி மங்குகிறது, திரை இறங்குகிறது.

காட்சி - 3

திரை மேலே உயர்ந்த பொழுது மேடையில் இருள் கவிந்திருக்கிறது டெலிபோன் மணி ஒலிக்கிறது.

சுஜாதா: (குரல் எங்கிருந்தோ)

மறுபடியும் அந்த ஜனவரி பதினேழு... இரண்டு வருஷங்கள் ஓடிப்போயிடுச்சு. டெலிபோன் மணி மறுபடியும் அடிச்சுச்சு, விடியற்காலையில், ப்ரதீயின் பிறந்த நாள் அன்னைக்கு (சுஜாதாவின் குரல் தான் போனில் ஒலிக்கிறது அவள் பேசும் வரை மேடை இருளில் உள்ளது.)

நந்தினியா? ஆமாம் நான் ப்ரதீயோட அம்மாதான் பேசறேன். No... நான் வரேன் நாலு மணிக்கு... No, இன்னிக்கு நான் பேங்குக்குப் போகல. இன்னிக்கு துலியோட நிச்சயதார்த்தம். No... தேதி நிச்சயம் பண்றப்ப அவங்க என்னைக் கலந்துக்கில (இந்த டெலிபோன் உரையாடல் நடக்கும் முழு நேரமும் நந்தினி மறுமுனையில் வெண்கலக்குரலாக ஆனால் ஏதும் விளங்கிக் கொள்ள முடியாதபடி)

(சில விநாடிகளுக்குப் பின் மேடை ஒளி பெறுகிறது. துலி, சுஜாதாவின் இளைய பெண் மேஜை முன்னால், பொறுமையிழந்து எரிச்சல், படப்படப்போடு நிற்க, சுஜாதா கையில் எலுமிச்சம் பழ ரச பானம் உள்ள ஒரு டம்ளர் கையில் ஏந்தி வருகிறாள். நெற்றியில், மீண்டும் மீண்டும் வலிகளால் ஏற்பட்ட சுருக்கங்கள்... சுஜாதா மேசையின் எதிர்பாகத்தில் அமர்கிறாள்)

துலி: டீ வேணாமா உங்களுக்கு?

சுஜாதா: No. லைம் ஜுஸ்... போதும்.

துலி: ஏன், ரொம்ப வலிக்குதா?

சுஜாதா: காலையில் ஒரு Tablet போட்டேன்... கேக்க மாட்டேங்குது.

துலி: ஏன் நீங்க அதை ஒத்தி ஒத்தி போட்டுக்கிட்டிருக்கீங்கன்னு தெரியல... அப்பென்டிசிடிஸ் ஆபரேஷன் ஒரு பெரிய ஆபரேஷனே இல்ல... அதில் எந்த ரிஸ்க்கும் இல்ல.

சுஜாதா: (லைம் ஜூசை ஒரு ஸ்பூனால் கலக்கியபடி) நீ சொல்றது பொதுவாக, நான் ரத்தசோகை புடிச்சவ... அப்புறம் தாறுமாறா வேல செய்யறவ, இந்த heart வால்வு... டாக்டருக்கே நிச்சயமா சொல்ல முடியல.

துலி: அப்ப நீங்க எப்பதான் பண்ணிப்பீங்க?

சுஜாதா: உன் கல்யாணம் முடியட்டும்.

துலி: அது ஏப்ரல்ல இல்ல.

சுஜாதா: பாக்கலாம் துலி.

துலி: காலங்காலையில் யாரு போன்ல உங்கள கூப்பிட்டாங்க?

சுஜாதா: (சற்று மௌனத்திற்குப் பிறகு) நந்தினி...

துலி: நந்தினியா?

சுஜாதா: ஆமாம்.

துலி: (சில விநாடிகளுக்குப் பிறகு, விஷமத்துடன்) என்ன வீடு இது! ஒருத்தர் கூட நேரத்துக்கு வந்து டீயைக் குடிச்சிட்டுப் போகமாட்டேங்கறாங்க.

சுஜாதா: இன்னும் யாரு டீக்கு வரணும்? ஜோதி வீட்ல இல்ல. உன் அப்பா...

துலி: நான் அவரைச் சொல்லல, மசாஜ் ஆள் வந்திட்டு போனவுடனே அவருக்கு குடிக்க தயிர் அனுப்பி வச்சிட்டேன்.

சுஜாதா: பினி பூஜை ரூம்ல இருக்கா...

துலி: பூஜை எல்லாம் வெறும் வெக்கக்கேடு! இந்த சாமி, பூதம் இதையெல்லாம் எங்க போய் பொறுக்கினா இவ? பிரிட்டன்ல பொறந்து வளர்ந்த பொண்ணு... எந்நேரமும் சாமியைக் கட்டி அழுதுக்கிட்டு...

சுஜாதா: (துலியின் அதிகமான பொறுப்பைக் கண்டு உணர்ந்து) துலி, இதனால உனக்கு என்ன? அவளோட அப்பா பிரிட்டன்ல வேலை பார்த்தாரு, அவ அங்கே இருந்தா. பதினாறு வயசு வரைக்கும் அங்கே தான் இருந்தா. அதுக்காக சாமிக்கு பூ போட்டு அர்ச்சனை செய்யக்கூடாது, அபிஷேகம் செய்யக் கூடாதுன்னு இருக்கா எதுவும்?

துலி: உங்களுக்கு இதெல்லாம் புரியாதும்மா.

சுஜாதா: இல்ல... துலி... No...

துலி: எனக்குத் தெரியும்

சுஜாதா: நீ ஒரு சுவாமிஜியை நம்பற. உன் வருங்கால மாமியோரோட குருஜி அந்த சுவாமிஜியை நம்பற. அது வெக்கக்கேடு இல்லன்னா பினி சாமி கும்பிடறதும் வெக்ககேடு இல்ல. பினியோட முதுகுக்குப் பின்னால சிரிக்கற நீ... இப்படி தரம் தாழ்ந்து போவேன்னு நெனைக்கவே இல்ல நான்.

துலி: ப்ரதீ மட்டும் மத்தவங்க நம்பிக்கைகளைப் பார்த்து சிரிச்சதில்லையா?

சுஜாதா: சுவாமிஜி மேல உனக்கு நம்பிக்கை, சாமி கடவுள் மேல பினிக்கு நம்பிக்கை. இதிலேருந்து வேறுபட்டது ப்ரதீயோட நம்பிக்கை. இந்த விஷயத்தில் அவனோட பேர வீணா இழுக்கறது வெறும் அபத்தமாயிருக்கு!

துலி: திரும்பத் திரும்ப அதயேச் சொல்லுங்க. ப்ரதீ பேரைச் சொல்லிட்டா போதுமே, வரிஞ்சுக் கட்டிக்கிட்டு வந்திடுவீங்க!

சுஜாதா: ஆமாம்!

துலி: அவன் பேரை உச்சரிக்க கூட எங்களுக்கு தகுதி இல்லையா?

சுஜாதா: நீ அந்த பேரை உச்சரிக்கிற விதம், என்னை காயப்படுத்தணுமின்னு கங்கணம் கட்டிக்கிட்டு கிளம்பிட்டா மாதிரி இருக்கு.

துலி: காயப்படுத்தறதா?

சுஜாதா: இந்த டோனி, அவனோட கூட்டம், மத்தவங்க நீ உன் அப்பா, ஜோதி நீபா... எல்லாரும் அவன் பேரை சொல்றப்ப, ப்ரதீ ஏதோ பெரிய கிரிமினல் என்கிறாப்போல... அவன் பேரை உச்சரிக்கிற மாதிரி உச்சரிக்கிறீங்க.

துலி: சரி,சரி நீங்க பழைய பல்லவியையே பாடிக்கிட்டே இருங்க போதும்.

ஜோதி: நிறுத்து துலீ!

துலி: லாக்கர்ல வச்சிருக்கிற நகைங்க? அது எப்பவரும்?

சுஜாதா: நான் கொண்டு வந்துடுவேன்.

துலி: சாயங்காலம் வீட்லதான் இருப்பீங்க?

சுஜாதா: இருக்காமல்? இன்னிக்கு ப்ரதீயோட பிறந்த நாள் உனக்கும் இது சரின்னு தோணிச்சின்னா இங்கேயே இருந்திட்டுப் போறேன்.

துலி: தேதியை ஸ்வாமிஜிதான் முடிவு பண்ணினாரு... நாங்க பண்ணல.

சுஜாதா:நிச்சயமா வரேன் கவலைப்படாதே வந்துடறேன்.

(லேசாக மிரட்டும் குரலில்) ஒரு விஷயம் டோனியோட பிரன்ட்ஸ் கிட்டே நீங்க நல்லபடியா நடந்துப்பீங்கன்னு நெனைக்கிறேன்.

சுஜாதா: (துலியின் வரிகளில் உள்ள கோடிக்காட்டலைப் புரிந்துக் கொண்டு) ... சரோஜ்பாலை நீ கூப்பிட்டிருக்கியா?

துலி: ஆமாம்... கூப்பிட்டிருக்கோம் ஆனால் அவர் வருவாரான்னு தெரியல.

சுஜாதா: சரோஜ் பால்!

(சுஜாதா விழிகளை மூடிக்கொள்கிறாள். மேடையில் பின் திரையில் எழுதப்பட்டவைத் தெரிகின்றன) ‘சரோஜ்பால் போலீஸ் இலாகாவின் மிகப்பெரிய நச்சுப் பாம்பு நீ. உனக்கு மன்னிப்பே கிடையாதுகதாநாயகனாக வீறுகொண்டு எழுந்து நக்சலைட் போராட்டங்களை நசுக்கி எரிந்த சரோஜ்பாலுக்கு வெகுமதியாக வெகு சீக்கிரம், பதவி உயர்வு காத்திருக்கிறது.

(டேப்ரெக்கார்டரில் குரல்) No மிசஸ் சாட்டர்ஜி உங்க பையன் தீகாவிற்குப் போகல எனக்கு தெரியும். எனக்கும் அம்மா இருக்காங்க No மிஸஸ் சாட்டர்ஜி, இதெல்லாம் பேப்பர்ல வராது No.. நாங்க வீட்டை சர்ச் பண்ணப் போறோம். ஜனநாயகத்தோட உடம்பிலே புற்றா இது வளர்ந்து கிடக்கு (இவையெல்லாம் சுஜாதாவின் மனதில் புகுந்து வெளியேறியவை. துலிக்கு இவைப்பற்றி எந்தக் கவனமுமில்லை. புருவத்தைச் சுருக்கிக்கொண்டு பொறுமையாகக் காத்திருக்கிறாள். சுஜாதா கண்களைத் திறக்கிறாள்)

துலி: இதுமாதிரி ஒரு விஷயம் நடக்கறப்ப அதை மூடி மறைக்கிறது, அமுக்கி வைக்கறது இயற்கைதானே அம்மா.

சுஜாதா: அதுக்காக இத்தனை அவசரம் அவசரமாவா? இத்தனை வேகமாகவா? சவத்தை அடையாளம் காண்றதுக்கு முன்னாலேயேவா? ஒரு தகப்பனாருக்கு டெலிபோன்ல தகவல் வருது, ஓடிப்போய் பார்க்கணுமின்னு ஒரு தவிப்பு, சின்ன நெனைப்புக் கூட வராதா? கண்டாபுர்க்கூர்லே இவரோட காரை யாராவதுப் பாத்துட்டா இவர் தலையில் இருக்கிற கிரீடம் கீழே விழுந்திடுமாம்.

துலி: அம்மா இதெல்லாம் இயற்கைத்தான் மா.

சுஜாதா: உங்களைப் பொறுத்தவரை, ப்ரதீ, ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலியே செத்துப் போயிட்டான், நான் சொல்றது சரிதானே?

துலி: எப்பவும் உங்களுக்கு ப்ரதீயை தலையில் தூக்கி வச்சிட்டு கூத்தாடனும். இப்பவும் கூட...

சுஜாதா: நிறுத்து துலீ

(துலி ஸ்பூனால் டம்ளரில் தட்டி ஓசைப்படுத்துகிறாள். சுஜாதா அவளையே கண்காணித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய நினைவுகள் டேப்ரிகார்டரில் நமக்கு கேட்கிறது)

ப்ரதீயோட என்னையும் எல்லாரும் எதிர் முகாம்லதான் வச்சிருக்கீங்க, ப்ரதீ ஜோதியை மாதிரி இருந்திருந்தா அல்லது நீபாவின் - சுமீத் மாதிரி இருந்திருந்தா, இல்ல கெட்ட போக்கிரி டோனி போலிருந்திருந்தா இல்ல டைப்பிஸ்ட்டோட புடவையைப் பிடிச்சுகிட்டு அவங்க பின்னாலியே போற அவங்க அப்பா மாதிரி இருந்திருந்தா, ப்ரதீயை அவங்க கட்சியில சேத்துக்கிட்டிருப்பீங்க (அவள் எழுந்து - உரத்துப் பேசுகிறாள்) துலி, உன்னோட வாழ்க்கை சந்தோஷமாயிருக்கும்.

காட்சி - 4

(மேடையில் இருள் சூழ்ந்திருக்க திரை உயர்கிறது)

சுஜாதா: (டேப் ரெக்கார்டரில் குரல்) ஒரு நாள் மத்தியானம் கிளம்பி சோமுவோட அம்மாவைப் பார்க்கப் போனேன். இப்பல்லாம் காலனிக்குள்ள சுலபமாப் போயிட்டு வரமுடியுது. இப்பல்லாம் தொந்தரவில்லை, பயம் இல்லை, போலீஸ் அபாய சங்கு சப்தம் கிடையாது, துப்பாக்கி குண்டு வெடிக்கற சப்தம் கிடையாது, இளம் வயது பையன்களோட அலறல் சப்தம் கிடையாது. (இடைவெளி) ரெண்டாவது தடவ சோமுவோட அம்மாவைப் பார்க்கப் போறேன். (இடைவெளி) சோமுவோட அம்மா புரிஞ்சு வச்சிருக்கிற அளவுக்கு கூட நான் ப்ரதீயைப் புரிஞ்சுக்கல. நான் அவங்களப் பாத்து பேசறப்பதான் அவனே எனக்குத் தெரிய வர்றான்.

(மேடையின் ஒரு பகுதி ஒளி பெறுகிறது சோமுவின் அம்மாவும், சுஜாதாவும் நேருக்கு நேர் உட்கார்ந்திருக்கிறார்கள்)

சோமுவின் அம்மா: அக்கா, அழாதேம்மானிட்டு என் பொண்ணு சொல்லுறா. அழுதா அவன் திரும்ப வந்துடுவானான்னு, என்கிட்ட அவ கேக்கறா. நீங்க எவ்வளவோ பரவாயில்ல அக்கா, பார்த்தாவோட அம்மாவை நெனைச்சுப் பாருங்க, பையனை சாகக் கொடுத்துட்டு நிக்கறா. பார்த்தாவோட தம்பியும் வீட்டுக்குத் திரும்பி வர முடியாது. ஏரியாவுக்குள்ள காலடி எடுத்து வச்சாவே சுட்டுக் கொன்னுப்புடுவானுங்க.

சுஜாதா: இப்பக்கூடவா இப்படி?

சோமுவின் அம்மா: இப்ப கூடத்தான், ஆயிரமாயிரம் சின்னவயசுக்காரங்க வீடு வாசல் இல்லாம அல்லாடிக்கிட்டிருக்காங்க. காலனியிலேந்து அத்தனை குடும்பங் களையும் அடிச்சு விரட்டிட்டானுங்க. நெனச்சுப் பார்த்தா மனசே முடங்கிப் போயிடுது. அப்புறம் எங்கே நினைச்சு பாக்கறது?

சுஜாதா: எல்லாம் அடங்கி அமைதி வந்திடுச்சா இப்ப?

சோமுவின் அம்மா: (அமைதியா) அம்மாக்களோட மனசுங்கள்ளாம் நெருப்பல சாத்தி வச்ச பிணங்களானப் புறம் எங்கே அக்கா அமைதியா இருக்க முடியும்? என் பொண்ணுந்தான் பத்தி எரிஞ்சுக்கிட்டிருக்கா. அம்மாவும் பொண்ணும் வயத்தை கழுவ, நாலு காசு வேணுமே, அவ டியூஷன் எடுக்கலாமுன்னா முடியல. அவகிட்ட நான் என்னத்த சொல்லுவேன்? சோமுவைத்தான் பொத்திப் பொத்தி வளர்த்தோம், இவளைப் படிக்க வைக்கக் கூட நேரம் இல்ல... சோமு எங்களை விட்டுட்டுப் போயிட்டான், இங்கே எல்லாம் அலங்கோலமாக் கிடக்குது. இதெல்லாம் நெனச்சுப் பார்த்தா (அழத் துவங்குகிறாள் )

சுஜாதா: (மெல்லிய குரலில் அழாதீங்க... )

சோ. அம்மா: எல்லாரும் அதத்தான் சொல்றாங்கஅழா தீங்கம்மாஎன்னால் மறக்க முடியலியே.

சுஜாதா: எனக்குத் தெரியுது

சோ. அம்மா: அக்கா உங்க பையன், உயிரை துச்சமா மதிச்சிட்டு வந்தான். இங்கே சோமுவையும் அவன் சகாக்களையும் எச்சரிக்கை பண்ண வந்தான். இந்த நாலு பேரும் காலனிலதான் இருக்காங்கன்னு எப்படியோ மோப்பம் பிடிச்சிட்டாங்க. அவனுங்க ஒரு நாள் ராத்திரி தாக்குப்பிடிக்க முடியுமாங்கற பயம் வந்திடுச்சு. சோமு எங்கே சித்தின்னு ப்ரதீ வந்து கேட்டான். நான் ஏன்னு கேட்டேன், சோமுவுக்கு ஒரு விஷயம் தெரியப்படுத்திட்டு நான் உடனே கிளம்பணுமின்னான்.

சுஜாதா: அப்ப சாயங்கால நேரந்தானே?

சோ.அம்மா: ஆமாம் அப்பதான் நான் விளக்கைப் பொருத்தினேன். சோமு, பிஜித்தையும் மத்தவங்களையும் கூப்பிட போயிருக்கான்னுச் சொன்னேன். ராத்திரிக்கு அவங்கள்ளாம் இங்கேயே சாப்பிடுவாங்கன்னு கோதுமை மாவு கொண்டுவந்திருந்தான். எல்லாருக்கும் நான் சப்பாத்தி பண்ணினேன். நான் பேசிக்கிட்டே நின்னேன். அவங்கலாம் வந்தாங்க, ப்ரதீகிட்ட பேசினாங்க. அப்புறம் ப்ரதீ கேட்டான், இப்ப போலாமானிட்டு...

சுஜாதா: அப்புறம்?

சோ. அம்மா: சோமு கேட்டான், ஏண்டா நீ சாவறதுக்கு துடிக்கிறியான்னிட்டு. இங்கேயே இருந்த நானும் அவங்க கூட சேர்ந்துக்கிட்டேன். போகாத கண்ணு இன்னிக்கு ராப்பொழுது இங்கியே தங்கிடுன்னேன். ஏரியாவில் இருக்கிற இளவயசுக்காரங்களையெல்லாம் கொன்னுக்கிட்டிருந்தாங்க. அப்பல்லாம் வெளியாள் ஒருத்தன் உள்ளே வந்தா, அவங்க குறி தப்பவே தப்பாது யாருக்குத் தெரியும் அக்கா? அன்னிக்கு ராத்திரி அவனைப் போகவிட்டிருந்தா அவன் உயிர் பொழச்சிருப்பானோ என்னவோ...

(சுஜாதா மாட்டான் என்பதுபோல் தலை அசைக்கிறாள்)

அந்த ஒரு நாள் ராத்திரிக்கு அப்புறம் அவங்க உயிரோட இல்ல. எல்லாம் என் கண்முன்னால அப்படியே நிக்குது. சோமு, பிஜித், பார்த்தா, ப்ரதீ எல்லாமும் இந்த வீட்ல இருக்கிற கிழிசல் பாயில இந்த ஓட்டை வீட்ல படுத்துக்கிட்டு, பேச்சும் கும்மாளமும் சிரிப்புமாக...

சுஜாதா: அந்த இன்னொரு பையன் லால்ட்டூ?

சோ. அம்மா: அவனை வீட்டை விட்டு அடிச்சு இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க.

சுஜாதா: (சுற்றுமுற்றும் ஏக்கம் நிறைந்த கண்களோடு பார்த்து) இந்த ரூம்லதானா?

சோ. அம்மா: அக்கா எங்க வீடே, இந்த ஒரே ஒரு ரூமுதானே? இதை வாங்கிப்போடவே இவங்க அப்பா தலைகீழா நின்னு பாடுபட்டாரு. சோமுவோட அப்பா பாவம் சின்ன பொட்டிக்கடை வச்சிருந்தாரு. சேமிப்பு எதுவும் கிடையாது. வெள்ளந்தியான மனுசன் ஏமாத்தறது எப்படிங்கறதை கத்துக்காமயே போய் சேர்ந்துட்டாரு. அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் முழிச்சிக்கிட்டேயிருந்தோம். அவங்களும் தூங்கப் போகவே இல்ல. ப்ரதீ சிரிச்ச விதம் அக்கா..., ப்ரதீ சிரிச்சது என் காதில் ஒலிச்சிக்கிட்டேயிருக்கு.

சுஜாதா: ப்ரதீ இங்கே அடிக்கடி வருவானா?

சோ. அம்மா: ஆமா அக்கா, அடிக்கடி வருவான். சித்தி சித்தின்னு கூப்பிட்டுக்கிட்டே வருவான். கொஞ்சம் டீ போட்டு கொடுங்கம்பான், கொஞ்சம் தண்ணிகுடுங்கன்னு கேப்பான், இனிப்பாய் இனிக்கிற பேச்சு. என்னோட சோமு முரடன். தனக்குன்னு ஒண்ணுமே இல்லாதவங்க இத்தினியூண்டு ரொம்ப சாதாரண விஷயங்களை கூட கண்டு மனசு எளகிப்போறவங்கதான் இப்படி முரடாகப் போயிடுவாங்களாம்.

சுஜாதா: எல்லாப் பையன்களும் இந்த ஏரியாப் பையங்க தானா?

சோ. அம்மா: எல்லாம் இந்த காலனிப் பசங்கதான். இவங்கள்ள லால்ட்டு ரொம்ப நேர்த்தியான பையன். எல்லாரையும் இதில் இழுத்து ஒண்ணாச் சேர்த்தவன் அவன்தான். கடைசியில அதுக்காக உயிரையும் குடுத்துட்டான்.

சுஜாதா: நான் இவங்களையெல்லாம் பார்த்தது கூட

இல்ல. (மௌனம்) ப்ரதீ இவங்கள் வீட்டுக்கு கூட்டிக் கிட்டு வந்ததே இல்ல. (மௌனம்) நானும் எந்நேரமும் வீட்டில் இருந்தவ இல்லியே... பேங்க் உத்தியோகம்...

சோ. அம்மா: (நீண்டபெருமூச்சு விட்டு) நீங்க வேலைக்குப் போறவங்க, நீங்க பணக்காரங்க, ஆச்சர்யமா இருக்கு இந்த வழியில் போக ப்ரதீக்கு எப்படித்தான் தோணிச்சோ... உங்க பையன் என்ன வழியைத் தேடறான்னு உங்க மனசுக்கு பிடிப்படலியா?

சுஜாதா: இல்ல... (துயரூட்டும் நினைவுகளுடன்) எனக்குத் தெரியல இதெல்லாம்... அவன் எப்பவும் வீட்டில்தான் இருப்பான். ரொம்ப காலம் கழிச்சுதான் எனக்கு புரிஞ்சுச்சு - அவன் நாள் முழுக்க ஏதோ ஒரு அழைப்புக்காக காத்துக்கிட்டிருந்தான்னு... சோமுவுடன் அவன் சகாக்களும் ஏரியாவுக்குத் திரும்பி வந்துடுவாங்கன்னு தெரியும். திரும்ப வந்தால் தலைக்கு மேலே ஆபத்து இருக்குன்னு தெரியும். அநிந்தியாவை அந்த செய்தியோடதான் அனுப்பி வச்சிருக்காங்க. சோமுவையும் அவன் சகாக்களையும் எச்சரிச்சு அவங்க ஏரியாவுக்கு அனுப்பி வைக்கறது அநிந்தியாவோட வேலை. ப்ரதீ சொல்லி அநிந்தியா சோமுவுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கணும், ஏரியாவுக்குத் திரும்பிப் போகாதீங்கடான்னு.

சோ. அம்மா: அநிந்தியாவா? அவன் சோமுகிட்டே எதுவுமே சொல்லலே.

சுஜாதா: ஆமாம் அநிந்தியா சோமுகிட்டே எதுவும் சொல்லல. அநிந்தியா இந்த ஏரியாவுக்கு வந்தது, சோமுவும் அவன் சகாக்களும் இந்த ஏரியாவுக்கு வர்றப் போறாங்கற விஷயத்தை மத்தவங்ககிட்ட அநிந்தியா சொன்னது இதெல்லாம் ப்ரதீக்கு தெரியாது (மனமுடைந்து) அநிந்தியாதான் உளவு தகவல் கொடுத் தான்னும், ராத்திரி நேரத்தில் அதை செஞ்சு முடிக்கணும் பகல்ல வேணாமின்னும் முடிவானதாக பின்னால் நான் கேள்விப்பட்டேன். அநிந்தியா போலீசுக்கும் தகவலும் கொடுத்துட்டான், அப்புறம் எப்படி அவங்க ஆக்க்ஷன் எடுப்பாங்க?

சோ. அம்மா: அநிந்தியாவா? - நி - ந் தியா? இங்க பலதடவை வந்துருக்கான். சோமுவுக்கு ரொம்ப நெருங்கின கூட்டாளி.

சுஜாதா: ப்ரதீ கலங்காம இருந்தான். எல்லாம் கட்டுப் பாட்டில் இருக்குங்கற ஒரு நம்பிக்கையில இருந்தான். சாயங்காலம் போன் வந்தப்பதான் ஒரு பேரழிவு நடக்க போகுதுன்னு தெரிஞ்சுது. சோமுவும் அவன் சகாக்களும் அவங்க ஏரியாவுக்குத் திரும்பி வந்துட்டாங்க. அவங்களை யாரும் எச்சரிக்கை பண்ணலே.

சோ. அம்மா: போன்ல யாரு பேசினாங்க?

சுஜாதா: எனக்குத் தெரியல... போன் கால் வந்தப்ப... (அவள் எழுந்து நிற்கிறாள் மேடையின் அடுத்த பகுதியை நோக்கி ஓரடி எடுத்துவைக்கிறாள்.) நான் வீட்டில் இருந்தேன்... ப்ரதீயும் நானும் லூடோ விளையாடிக்கிட்டிருந்தோம்.

காட்சி - 5

(சுஜாதா பேசி முடிக்கும் முன்னாடியே மேடையின் அப்பகுதி இருள் அடைகிறது மற்றபக்கத்தில் ஒளி வருகிறது, சுஜாதா வருகிறாள், ப்ரதீ கேரம் போர்டு விளையாட்டு போர்வையும், ஒரு பாயையும் எடுத்துக்கொண்டு வருகிறான். அவர்கள் பாயை விரிக்கிறார்கள். அதில் சாய்ந்து கொண்டு விளையாட ஆரம்பிக்கிறார்கள். சுஜாதாவின் இடது கை ப்ரதீயின் முழங்கால் மேல் கிடக்கிறது)

ப்ரதீ: நான் ஒரு Coin - ஐ வெட்டிட்டேன். வெளியில எடுத்துவையுங்க அதை.

சுஜாதா: மறுபடியும் வெட்டிட்டியா?

ப்ரதீ: நெருங்கி வந்துச்சு. எப்படி விடுவேன் நான் அதை.

சுஜாதா: ஆனாலும் நீ ரொம்ப கல்லுமனசுக்காரண்டா.

ப்ரதீ: நீங்க மட்டும் Coin - ஐ வெட்டலயா?

சுஜாதா: (லூடோ போர்டைப் பார்த்த வண்ணம்) ப்ரதீ, யாரு இந்த நந்தினி?

ப்ரதீ: (ஆச்சரியமடைந்து), எச்சரிக்கையோடு, புன்னகைப் பூத்து) ஏன் கேக்கறீங்க?

சுஜாதா: ஏன் நீ சொல்ல மாட்டியா?.

ப்ரதீ: அவ ஒரு இளம் பெண். அவ்வளவுதான்.

சுஜாதா: அவளை நான் ஒரு நாள், ஒரு பார்வை பார்க்க விடுவியா.

ப்ரதீ: அவ ரொம்ப இயல்பான ஆளு.

சுஜாதா: அதனால் என்ன? உனக்கு பிடிச்சிருச்சா, அப்ப எனக்கும் பிடிக்கும்.

ப்ரதீ: (மாறுபட்ட குரலில் சட்டென்று) அம்மா உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நாளும் ஆபிஸ் முடிஞ்சப்புறம் அப்பா எங்கே போறார்னு தெரியுமா?

சுஜாதா: (குரல் டேப்ரெக்கார்டரில்) ப்ரதீக்கு இந்த டைப்பிஸ்ட் விஷயம் தெரிஞ்சிடுச்சா...

ப்ரதீ: (கண்களைத் தாழ்த்தி) அம்மா, எனக்காகத் தானே நீங்க எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டுப் போயிக்கிட்டிருக்கீங்க இல்ல? இல்ல ப்ரதீ? உனக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டிருக்கேனா? ... இல்ல... இல்லவே இல்ல.

ப்ரதீ: என்ன மனசில வச்சுக்கிட்டு உங்களப் போட்டு எல்லாரும் இந்தப்பாடு படுத்தறாங்க? இல்ல?

சுஜாதா: படுத்தட்டும், அவங்க படுத்தட்டும்.

ப்ரதீ: (கனிவாக, ஈடுபாட்டுடன்) அம்மா, இதையெல் லாம் எதுக்காக தாங்கிக்கிட்டிருக்கீங்க?

சுஜாதா: முந்தியெல்லாம் வலிச்சுச்சு... ஆனா இப்பல்லாம் வலிக்கறதே இல்ல. நீ வந்து பொறந்த வலியெல்லாம் பறந்து போயிடுச்சு. ஏன்னா, நீ இங்கே இருக்கே, என் கூட இருக்கே.

ப்ரதீ: நான் இங்கே இருக்கிறதினாலே...

சுஜாதா: ... அதை விடேன். நாளைக்கு டின்னருக்கு உனக்கு என்ன பண்ணனும்னு சொல்லு.

ப்ரதீ: ஏன்? நாளைக்கு என்ன விஷேசம்?

சுஜாதா: நாளைக்கு உன்னோட பொறந்த நாள் மறந்துட்டியா? (புன்னகைக்கிறான்) இப்ப மணி பன்னண்டரை ஆயிடுச்சு. இன்னைக்குத்தான். கணக்குப்படி, நாளைக்கு அதாவது பதினாறாந்தேதிதான் பொறந்த. ஆனா நடுராத்திரி தாண்டிடுச்சு. அதில பதினேழாந்தேதியாம். வினோதமான கணக்குங்க!

ப்ரதீ: பொறந்த நாளயெல்லாம் எப்படி நீங்க ஞாபகம் வச்சிருக்கீங்க?

சுஜாதா: இதையெல்லாம் எப்படி மறக்க முடியும்? நீ பொறந்தப்ப, கிட்டத்தட்ட நான் செத்தே போயிட்டேன்.

ப்ரதீ: (புன்னகையுடன்) என் அதிர்ஷ்டம் நல்லவேளை நீங்க உயிரோட இருக்கீங்க!

(அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். ப்ரதீ ஒரு பக்கம் நகர்ந்து சுஜாதாவின் நெற்றியில் புரளும் கேசத்தை ஒதுக்குகிறான்)

சுஜாதா: சரி நான் போய் ஹேம் கிட்டே பாலுக்கு சொல்றேன்.

ப்ரதீ: ஏன்?

சுஜாதா: உனக்காக நாளைக்கு கொஞ்சம் பாயசம் பண்ணனும்.

ப்ரதீ: வேற என்ன பண்ணனும்?

சுஜாதா: ஹேமுக்கு புடவை எடுத்து கொடுக்கணும்.

ப்ரதீ: ஹேமுக்கும் நாளைக்கு பொறந்த நாளா?

சுஜாதா: அவளுக்கு ஏதாவது கொடுக்கணும். எத்தனை கரிசனத்தோட அவ ஒன்னை வளர்த்தா... உனக்கு ஏதாவது கொடுத்தா நீ ஆர்ப்பாட்டம் பண்ணுவே.

ப்ரதீ: அண்ணியில்ல அப்பா பண்ணுவாங்க...

சுஜாதா: உனக்கு நான் எதுவும் கொடுக்கப்போறதில்ல. அவ உனக்கு புதுசா ஒரு சால்வை தர்றப்போறா. நீ கிழிஞ்ச, ஹைதர் அலி காலத்து போர்வையை போத்திக்கிட்டு அலையறியாம். அதை துவைக்க கூட போடறதில்லியாம்...

ப்ரதீ: அண்ணிக்கு இந்த பழம்பெரும் சால்வையோட சுகம்லாம் எங்கே தெரியப்போவுது?

சுஜாதா: ஒரு நிமிஷத்தில் வந்திடறேன். போயி ஹேம் கிட்ட பாலுக்கு சொல்லிட்டு வரணும்.

(டெலிபோன் மணி ஒலிக்கிறது. ப்ரதீ துள்ளி எழந்து ஓடி டெலிபோன் ரிசீவரை எடுக்கிறான். சுஜாதா வெளியேறுகிறாள் )

ப்ரதீ: யெஸ், ப்ரதீதான் பேசறேன். என்ன சொல்றீங்க நீங்க? சோமுவும் தோழர்களும் கௌம்பிட்டாங்களா? அநிந்தியா...? Ok

(அவன் ரிசீவரை வைக்கிறான், கைகளைப் பிசைகிறான். நெற்றியில் சுருக்கங்கள் வருகின்றன. தலையை அசைக்கிறான் அவன் கலக்கமடைந்திருப்பது வெளிப்படை

யாகத் தெரிகிறது. கழுத்தில் கிடக்கும் சால்வையை எடுத்து வீசி எறிகிறான். பையிலிருந்து ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, தீக்குச்சியால் கொளுத்துகிறான். அந்த சாம்பலை பாதங்களால் தேய்க்கிறான். சட்டைப் பையிலிருந்து சில நாணயங்களை எடுக்கிறான் அவற்றை எண்ணுகிறான்)

சுஜாதா: என்ன சமாச்சாரம்?

ப்ரதீ: நான் வெளியில் போகணும் கொஞ்சம் பணம் தர்றீங்களா?

சுஜாதா: எங்க போகப்போற நீ? (ஏமாற்றமடைந்து) வெளியில் போகப்போறன்னு என்கிட்ட சொல்லவே இல்லியே. வீட்லயே இருப்பன்னு சொன்ன...

ப்ரதீ: ஒரு முக்கியமான வேலை... திடீர்னு...

(பாக்கெட்டிலிருந்து இன்னொரு காகிதத்துண்டை எடுக்கிறான். அதைப் பார்த்துவிட்டு பாக்கெட்டிலியே வைத்துக்கொள்கிறான்)

சுஜாதா: (பாய் மீது இருக்கும் Bag - ஐ எடுத்து) இந்தா பணம்... உனக்குதான் வச்சுக்க. (பணத்தை கொடுக்கிறாள்) எப்ப திரும்பி வருவ?

ப்ரதீ: நான் திரும்பி வந்துடுவேன்... திரும்பி...

(சட்டென்று சுஜாதாவைப் பார்க்கிறான். அவன் சுஜாதாவின் பார்வையில் கலக்கமும் வாத்சல்யமும். ஏன் ப்ரதீ ஓர் அந்நியனைப் போல் தெரிகிறான்? ப்ரதீ சட்டென்று இறுக்கத்திலிருந்து விடுபடுகிறான், புன்னகைக்கிறான், சுஜாதாவின் தோள் மீது தனது கைகளை வைக்கிறான்.)

அம்மா நான் அலிப்பூர் போறேன் லேட்டாயிடுச்சுன்னா ரோனுவோட வீட்ல தங்கிடுவேன்.

சுஜாதா: (நிவாரணமடைந்து) ஆபத்து ஒன்னும் இல்லையே!

ப்ரதீ: (பாதுகாப்புடன்) என்ன அர்த்தம் இதுக்கு? ஆபத்து, கீபத்துங்கறீங்க...

சுஜாதா: ஒனக்கு இதெல்லாம் தெரியாது. உனக்கு பேப்பர் படிக்க கூட நேரமில்ல. இந்த கல்கத்தாவில் என்னென்னவோ நடந்துக்கிட்டிருக்கு. ஒரு ஏரியாவில் இருக்கிற பசங்க இன்னொரு ஏரியாவுக்குள்ள நுழைய அனுமதியில்ல. நுழைஞ்சா கொன்னு எரியறாங்க. ஆனா ரோனு இருக்கிற இடம் பாதுகாப்பான இடம்.

ப்ரதீ: நான் வர்றதுக்கு லேட்டாச்சுன்னா கவலைப்படாதீங்க.

சுஜாதா: நான் கவலைப்படறேன், படல... அதைப்பத்தி கவலையா உனக்கு?

ப்ரதீ: நான் கௌம்பறேன்.

சுஜாதா: ஹேமு கிட்டே கதவைச் சாத்திக்கச் சொல்லு.

ப்ரதீ: அவங்க கிட்டச் சொல்றேன்.

(சுஜாதா லூடோ போர்டையும், பானயையும் எடுக்கும்போது ப்ரதீ அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான். சட்டென்று சுய நினைவுக்கு வந்த சுஜாதா அவனைப் பார்க்கிறாள். ப்ரதீ புன்னகைத்துக்கொண்டே போகிறான். புருவத்தை உயர்த்தி சுஜாதா, அவன் போவதையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். கையிலிருக்கும் பொருட்களோடு அவனைத் தொடர்ந்துச் செல்கிறாள். பிறகு கையில் Bag - உடன் வருகிறாள் மேடையைக் கடந்து, அடுத்த பாதிக்கு வருகிறாள். முதல் பாதியில் விளக்குகள் அணைந்து அடுத்த பாதியில் விளக்குகள் ஒளிர ஆரம்பிக்கின்றன)

காட்சி - 6

(சோமுவின் அம்மாவும் சுஜாதாவும் உட்கார்ந்திருக்கிறார்கள் நேருக்கு நேராக)

சோ.அம்மா: அவ்வளவுதான் உங்களுக்கு தெரியாது. ஒருத்தர் தெரிஞ்சே தன் பையனை சாவுறதுக்கு அனுப்ப மாட்டாங்க.

சுஜாதா: அன்னைக்கு ராத்திரி என்ன நடந்துச்சு?

சோ. அம்மா: (அந்த கொடுமையான இரவின் அவலங்கள்

அவளை உலுக்க கடந்த காலத்திற்குள் செல்கிறாள் )

நடு ராத்திரி கூட ஆவல. கொஞ்சம் நேரம் இருந்துச்சு... பயங்கர கனவு மாதிரி... பயங்கர கனவாத்தான் தெரியுது. அவங்க ஏற்கனவே வீட்டை சுத்தி வளைச்சிட்டாங்க.

காட்சி - 7

(மேடையின் ஒரு பக்கம் இருள் மறுபக்கத்தில் மோதும் அம்புகள் போல் குறுக்கேயும் நெடுக்கேயும் ஒளிக்கற்றைகள் சுஜாதா வெளியேறுகிறாள். சோமுவின் அப்பா, ப்ரதீ, பிஜித், பார்த்தா மற்றும் சோமு நுழைகிறார்கள். முழு மேடையும் சிவப்பு ஒளிவெள்ளம் அடைந்து கிடக்கிறது. ப்ரதீயும் அவனது குழுவும் ஒரு பக்கம் ஆக்கிரமித்து நிற்கிறது. ஒரு நாசகாரக் கும்பல் மேடையின் மறுபக்கத்திலிருந்து உள்ளே வருகிறது. இரண்டு குழுக்கள் ஒன்றை ஒன்று நோக்கி நகர்ந்தாலும் அவர்கள் வீட்டிற்கான இடம் எது என்பதை நினவில் வைத்திருக்கின்றனர்.)

கும்பல்: சோமு, வெளியில் வா.

சோமுவின் அப்பா: அதுல் பாபுவோட குரல் மாதிரியில்ல இருக்கு.

சோமு: (கடுமையாக) ஆமாம் மதன் முக்தியார் கூட அங்கதான் இருக்காரு.

கும்பல்: சோமு வெளியில வா... இல்லாட்டி வீட்டை கொளுத்திடுவோம் பார்த்தா, வெளியில வா, இல்லாட்டி உங்க அத்தனை பேரையும் கூண்டோட எரிச்சிடுவோம்.

சோமு: (ப்ரதீ மற்றும் அங்கு இருப்போரிடம் நான் முதல்ல போறேன், அப்படி அவங்க என்னைப் பிடிச்சுட்டாங்கன்னா, உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கு... முயற்சி செஞ்சு ஓடிப்போயிடுங்க.

சோ. அப்பா: (நடுங்கும் குரலில்) நீ பின் வழியா போக முடியுமான்னு பாக்கறேன்.

(மேடை மீதும் அப்பாலும் கூட்டாக மிரட்டும் ஒலிகள் (டேப்ரிக்கார்டரில்) ஒரு கூட்டு Slogan- கள் போல)

கும்பல்: வெளியில வா... வெளியில வா...

சோ. அப்பா: பிரயோசனமில்லடா மகனே! அவங்க எல்லா பக்கத்திலியும் நம்மை சூழ்ந்துக்கிட்டிருக்காங்க

(சோமுவின் அம்மா அவனைப் பார்க்கிறாள் பீதியடைந்த, ஊமையான ஒரு பிராணிபோல... இந்த காட்சி முழுதும் அவள் மௌனமாக கதறிக்கொண்டிருக்கிறாள் சேலை தலைப்பை வாயில் கவ்விக்கொண்டு)

கும்பல்: வா, வெளியில... வா வெளியில...

ப்ரதீ: நீ தனியா வெளியில போறதில் அர்த்தமில்ல. தப்பிக்க வழியே இல்ல. நாம் எல்லாரும் சேர்ந்து வெளியிலப் போவோம்.

பிஜித்: (அமைதியாக) நாம் வேகமா வெளியிலப் போயிடுவோம், ப்ரதீ இல்லாட்டி நம்ம வீட்டுக்கு நெருப்பு வச்சுடுவாங்க. மதன் முக்கியமா ஏற்கனவே ஏகப்பட்ட வீடுகளை கொளுத்தியிருக்கான்.

கும்பல்: வெளியில வா... சாவைக் கண்டு பயமில்லன்னு வாய் கிழிய பேசற. அப்புறம் ஏன் ஒணான் மாதிரி ஒரு பொந்துக்குள்ள போய் ஒளிஞ்சுக்கிட்டிருக்க?

ப்ரதீ: கத்தாதே பொறு கொஞ்சம், நாங்க வெளியில வந்துக்கிட்டிருக்கோம்.

கும்பல்: (மற்றோர் இரையை கைப்பற்றி விட்டதால் அடையும் வெற்றியை ஊளையிட்டு கெக்கலித்தது)

புதுசா ஒரு குரல்: இந்த தாயோளிங்க கூட்டத்துக்கு புதுசா ஒருத்தன் வந்துருக்காண்டா, வா வெளியில கல்கத்தா பையா, வெளியில வாடா.

சோ.அம்மா: (தன் குரல் கதியற்றுப் போவதை உணர்ந்து) போகாதே சோமு...

கும்பல்: (அவளைப் போலவே பேசி நையாண்டியாக போகாதே சோ...மூமூமூமூ...)

சோமு: (நிலையான உறுதிப்பாட்டுடன் அம்மாவை நோக்கி பளிச்சென்று) அம்மா அழுதது போதும். அப்பா, அம்மாவைக் பாத்துக்கோங்க.

(சோமுவின் அப்பா தன் மனைவியைப் பிடித்துக்கொண்டு நகர முயற்சிக்கிறார். அவங்கள போக விட்றாதீங்க... சரி நாம கிளம்புவோம், இல்லாட்டி அவனுங்க வீட்டுக்கு தீயை வச்சுப்புடுவானுங்க )

(சோமுவின் அம்மா கதியற்றுப் போய் தனது கணவனின் கையில் சாய்கிறாள். பிஜித் விரல்களால் முடியை வாரி நிறுத்திக்கொள்கிறான். பிஜித்தும் பார்த்தாவும் கத்திகளை எடுத்து அதை நீட்டிப் பிடித்து நிற்கின்றார். சோமுவும், ப்ரதீயும் எந்த ஆயுதங்களும் அற்று)

சோமு: (கையை நீட்டி விரல்களை உயர்த்தி ஆணைகள் இடுகிறான்) போவோம் நாம்.

(சோமு கதவைத் திறக்கும்பொழுது அவர்கள் ஒருவர் கைளை ஒருவர் இணைத்துக்கொண்டு நிற்கிறார்கள். கோஷங்கள் எழுப்புகின்றனர். நக்சல்பாரி ஜிந்தாபாத், நக்சல்பாரி ஜிந்தாபாத், லால்சலாம் லால்சலாம்.

(அவன் வெளியேப் போகிறான் மேடை இருளாகிறது. மேடை ஒளி பெறும்பொழுது சோமுவின் அம்மாவும், சுஜாதாவும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்)

சோமுவின் அம்மா: (தலையை அசைக்கிறாள்) சோமுவோட அப்பா ஓடு ஓடுன்னு ரொம்ப ஓடி நம்பிக்கையோட போலீஸில் கம்பளெயிண்ட் குடுத்தாரு. ஆனா அவங்க கம்ளெயிண்ட்டை தொடக் கூட இல்ல, பொணங்கள அள்ளிட்டுப் போக Van - களை அனுப்பிச்சாங்க எல்லாம் முடிஞ்சப்புறம் கூட இவரு லால்பஜார் இருக்கற பெரிய போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினாரு.

(அவள் மீண்டும் தலையை அசைக்கிறாள்)

அவங்களும் ஒண்ணுமே செய்யல. அவருக்கு நெஞ்சு பொறுக்கல அதிர்ச்சியில செத்துப் போயிட்டாரு. ... கடவுளே இந்த நாட்ல நீதியே இல்லையா? கடவுளே நீதி இல்லியா? ன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே உயிரை விட்டாரு.

சுஜாதா: (தலையை அசைக்கிறாள்) ஆமாம் நீதியே இல்லைதான்.

சோ.அம்மா: உங்களுக்கு இன்னொரு புள்ள இருக்கான். அவனையாவது நீங்க நெஞ்சில சாச்சுக்கிட்டு கொஞ்சம் துக்கத்தை மறக்கலாம். (சுஜாதா தலை அசைக்கிறாள்) என் புள்ளையும் போயிட்டான், புள்ளையோட அப்பாவும் போயிட்டாரு மனசுக்குள்ள அந்த ரெண்டு பொணங்களோட நெருப்பு இன்னும் எரிஞ்சுக்கிட்டிருக்கு. இத்தோட புட்டத்துக்கு மையிட்ட மாதிரி இருக்கிற இந்த வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சாகணும்.

சுஜாதா: புரியுது எனக்கு.

சோ.அம்மா: (திடீரென்று நினைவுக்கு வந்தாற்போல) அக்கா உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லட்டுமா?

சுஜாதா: உம்... சொல்லுங்க.

சோ.அம்மா: (தன்னம்பிக்கையற்று அதைரியத்துடன்) நீங்க எங்க வீட்டுக்கு அடிக்கடி வர்றீங்களாம் அதுக்காக என் பொண்ணை மிரட்டுறாங்க. இவங்க.

சுஜாதா: சோமுவோட அக்காவையா? யாரு மிரட் டறாங்க அவளை?

சோ.அம்மா: வேற யாரு? சோமுவைக் கொன்ன வங்களும், அவங்கக் கூட்டாளிகளும்தான்.

சுஜாதா: அதே கும்பலா?

சோ.அம்மா: அவகிட்ட அவங்க சொல்றானுக, இவ உன் வீட்டுக்கு ஏண்டி வர்றா? தடுத்து வை, இல்லாட்டி பயங்கரமா ஏதாச்சும் நடந்துடும்னு.

சுஜாதா: நீங்க என்ன சொல்ல வர்றீங்க?

சோ.அம்மா: இங்க வலிக்குது அக்கா. அவங்களப் பகைச்சுக்கிட்டு நாங்க இங்க குடியிருக்க முடியாது. சோமுவோட அக்காவுக்கு ஸ்கூல் வேலையும் கிடைக்கல. அதனால அவ எப்பவுமே ஒரு கடுப்புல இருக்கா. என்கிட்டே எரிஞ்சு எரிஞ்சு விழறா... உங்களோட ஒரு புள்ளைக்காகத்தான் இத்தனையும்... என் வயத்தை கழுவிக்க கூட ஒரு வேலையும் செய்யவிட மாட்டேங்கறானுங்க.

சுஜாதா: நான் பேங்க் வேலைக்கு போயிக்கிட்டுதானே இருக்கேன் என்னை...

சோ.அம்மா: அது ஏன்னா நீங்க பணக்காரங்க. மலையும், மடுவுமா நீங்களும் நானும் இருக்கோம்...

சுஜாதா: (மனமுடைந்து) ரொம்ப நல்லது. இனிமேல் நான் வரமாட்டேன். இப்ப ஒரே ஒரு விஷயம்...

சோ.அம்மா: என்ன சொல்லுங்க

சுஜாதா: அது ஒண்ணுமில்ல அக்கா ஒண்ணுமேயில்ல.

சோ.அம்மா: (அதை நினைத்துப் பார்த்து) இல்லக்கா, மறுபடியும் வாங்க, உங்கக்கிட்ட பேசிக்கிட்டிருந்தா மனசுக்கு நிம்மதியாயிருக்கு.

சுஜாதா: (தலையை அசைக்கிறாள் அவள் திரும்பி வரப்போவதில்லை ஒரு விநாடி மௌனம் பிறகு சிறிது முயற்சியுடன்) ப்ரதீ... ப்ரதீ ப்ரதீ இறந்து போன நாள் அதுதான் அவன் பிறந்தநாள்.

(சோமுவின் அம்மா சுஜாதாவின் கரங்களைப் பற்றுகிறாள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க திரை இறங்குகிறது)

காட்சி - 8

(திரை தாழ்ந்தே இருக்கிறது டேப்ரெக்கார்டரில் சுஜாதா வின் ஓய்ந்துபோன சோகமான குரல் கேட்கிறது)

சுஜாதா: (டேப்ரெக்கார்டரில் குரல்) துக்கம் சோமு வோட அம்மாவையும் என்னையும் ஒண்ணா சேர்த்து வச்சுது. ஒரு நாள் காலம் எங்களைத் தனியா பிரிச்சு வச்சுது. நான் அவனைப் பார்க்க, சோமு வீட்டுக்கு போயிக்கிட்டிருந்தேன். இனிமேல் நான் அங்கே போகமாட்டேன். அவன் எங்கேதான் இருக்கான்? நான் சோமுவீட்டுக்கு காலையில் போனேன். அதே நாள் மத்தியானம் நந்தினிகிட்டே வந்தேன் (இடைவெளி) ப்ரதீ (இடைவெளி) காதலிச்சான் (இடைவெளி) நந்தினியை (திரை உயர்கிறது மேடையின் ஒரு பகுதி மட்டும் தெரிகிறது. ஒளி பெறுகிறது நந்தினியும் சுஜாதாவும் ஒரு மேஜைக்கு எதிரும் புதிருமாக அமர்ந்திருக்கிறார்கள் நந்தினி கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறாள். அவளைப் பற்றிய எல்லாமே - அவளது வடிவம் அவள் அமர்ந்திருக்கும் விதம் / அவள் பேசும் விதம் - நமக்கு ரகசியமான ஒரு இறுக்கத்தை அவள் சுயமாக விலங்குகளை அணிந்து நிற்பதை உறுதிப்படுத்துகிறது. அவள் பேசும்பொழுது ஒரு கதை சொல்லி ஏதோ மற்றவர்களைப் பற்றி பேசுவது போல் அவளைப்பற்றி இல்லாமல் அவளுடைய ஜனங்களை பற்றி பேசுவது போல் ஒரு தோற்றம் எழுகிறது. ப்ரதீயின் பெயரை உச்சரிக்கும் பொழுது மட்டும் மென்மையாகப் பேசுகிறாள். அவர்கள் சில விநாடிகள் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். மேஜை மீது கண்ணாடி தம்ளரில் தண்ணீர். சுஜாதா பையிலிருந்து ஒரு Baralgon மாத்திரையை எடுத்து வாயில் போட்டு ஒரு மடக்கு தண்ணீரை குடிக்கிறாள் )

நந்தினி: எங்களைக் காட்டிக் கொடுத்தது இந்த அநிந்தியாதான்.

சுஜாதா: (படிமானமாக) எனக்கு எதுவும் தெரியாது நந்தினி.

நந்தினி: உங்களுக்கு தெரியாததினால் எதுவும் மாறப் போறதில்லை.

சுஜாதா: அதுவும் எனக்கு தெரியும்.

நந்தினி: இப்படியிருந்தும் முட்டாள் மாதிரி ப்ரதீ அநிந்தியாவை நம்பினான் அவன் ஏன் நம்பினான்னு உங்களுக்கு தெரியுமா?

சுஜாதா: இல்ல... தெரியாது.

நந்தினி: ஏன்னா.. இந்த நீதுதான் அநிந்தியாவை அறிமுகப்படுத்தினான். நீது பல செயல் திட்டங்கள்ல இருந்தான், அப்புறம் நீது கொல்லப்பட்டான். ரொம்ப ஈசியான ஒரு குட்டிக் கணக்கு நீதுதான் அநிந்தியாவை அறிமுகப் படுத்தினான்.

+ (Plus) நீது செத்துப்போனான்

+ (Plus) நீதுவோட சாவுதான் அவனோட விசுவாசத்துக்கு ஆதாரம். அதனாலே நீதுவால் நியமிக்கப்பட்ட அநிந்தியா ரொம்ப நம்பகமானவன். அப்படித்தான் எங்களோட விவாதம் போச்சு. எப்பவுமே அவனை நாங்க சரியா எடைபோடல, அவனைப் பத்தி சரியா விசாரிக்கல... சரியா தெரிஞ்சுக்கிட்டிருக்கணும்.

சுஜாதா: என்ன தெரிஞ்சுக்கிட்டிருக்கணும்.

நந்தினி: எங்களுக்கு மாதிரியே அவங்களுக்கு ஒரு ப்ரோகிராம் இருக்கு. அதை தெரிஞ்சிக்கிட்டிருக்கணும். எங்களுக்கு ஒரு காரணம் இருந்தது அவங்களுக்கும் இருந்திருக்கும்.

சுஜாதா: காரணம், ப்ரோகிராம் இதெல்லாம் என்ன நந்தினி? பெரிய ப்ரோகிராம் எல்லாம் காட்டிக்கொடுக்கிற ப்ரோகிராம்... அவங்களுக்கு காரணமே இந்த காட்டிக் கொடுக்கிறதுதான்.

சுஜாதா: (புரிந்து கொள்வதாக) ஆனா எப்படி?

நந்தினி: பணம் பெரிய வேலைங்க அதிகாரம் இதெல் லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல. ஆனா எங்களைக் காட்டி குடுக்கறதுக்காகவே சேர்ந்தவனுக்கு இதெல்லாம் பெரிய சபலத்தை உண்டாக்கிச்சு. அந்த சபலங்களோட பலத்தை நீங்க குறைச்சு எடை போட முடியாது. (இடைவெளி) அதனால்தான் நான் ஓயாம ஆச்சரியப்பட்டுக்கிட்டே இருக்கேன்.

சுஜாதா: நந்தினி ஆச்சரியப்படறியா?

நந்தினி: கட்சியில் சேர்ற நம்ம நண்பர்களே காட்டி குடுக்கறதுக்குத்தான் உள்ள நுழைஞ்சிருக்காங்கற உண்மையை ஆரம்பத்திலேயே நாம ஏன் புரிஞ்சிக்கல. அதான் ஆச்சரியப்படறேன்.

(சற்று படபடப்பு, சிறிய புன்னகையுடன்) நீ சின்னவயசுக்காரி.

நந்தினி: இல்ல, இல்ல இதெல்லாம் கற்பனை கதைங்க. Pure romanticion ஓவர் டோஸ், நடைமுறையைப் பற்றி, நிதர்சனங்களைப் பற்றி துளி கூட அறியாத விடலைத்தனம். அந்த காலத்தில் ஏற்பட்ட பெரும்பாலான தோல்விகள்ல இதுவும் ஒன்னு.

சுஜாதா: தோல்விகளா?

நந்தினி: தோல்விகள் தவறுகள், வழி தவறல்கள் 1947 -லிருந்து நடந்தது நம் எல்லாருக்கும் தெரியும். தெரிஞ்சும் எப்படி 1970க்குள்ளே மனித விசுவாசங்கள்லாம் காத்தோட காத்தா போயிடுச்சு? நமது சொல்லை, நம்மளை ஒருத்தன் காட்டிக் கொடுக்கறான். இது எப்படி நமக்குத் தெரியாமப் போவுது. இந்த படுகொலைகளுக்கு பின்னால் ஒரு அப்பா, ஒரு உடன் பிறந்தவன், ஒரு உறவுக்காரன், ஒரு நண்பன், ஒரு தெரிஞ்சவன் இருக்கான். கேட்டாலே ஆச்சரியம் வருது (புன்முறுவல் செய்கிறாள்) நாங்க இங்க இருக்கற அத்தனையையும் வெறுக்கறோம்னு ஜனங்க நெனைக்கறாங்க. (புன்முறுவல் செய்கிறாள்) ஆனா மேலாகத் தோற்றம் தருகிற இந்த வெறுப்பின் அடியில் வெறியாக ஒரு நேசமும், பணிவான பெரும் வணக்கமும் இருக்குன்னு ஒரு நாள் ஜனங்க புரிஞ்சுக்குவாங்க.

சுஜாதா: நீ எதுக்கு ஆச்சரியப்படறே?

நந்தினி: உங்களுக்கு புரியாது (இடைவெளி) இப்ப நாங்க திரும்பிப் பாக்கறப்ப, இங்கே எல்லாமே வெறும் காட்டிக் கொடுக்கறதாகவே இருக்கு.

சுஜாதா: இது சிந்திக்கிற வழி இல்ல நந்தினி. இதால உன் கஷ்டங்கள் தான் அதிகமாகும்.

நந்தினி: நிறைய காட்டிக் கொடுத்தல்கள். ஆனா எதையும் சந்தேகின்னு யாரும் எங்களுக்கு சொல்லித் தரல. நாம் சந்தேகப்படணும். நம்மோட கடந்த கால அனுபவங்களை ஆராய்ஞ்சு பாக்கணும். அப்பத்தான் நமக்கே ஒரு தன்னம்பிக்கை உண்டாகும்.

சுஜாதா: நந்தினி...

நந்தினி: (அவளே அறியாமல் அவளுடைய குரலில் ஓர் குழைவு உண்டாகிறது) அந்த நாட்கள்ல ஒரு யுகமே முடிஞ்சு போயிடுச்சுன்னு தோணிச்சு எங்களுக்கு. நாம் ஒரு புதுயுகத்தை கொண்டுவந்துகிட்டிருக்குமான்னு தோணிச்சு. (இடைவெளி) நானும் ப்ரதீயும் தெனமும் காலேஜ் ரோட்டிலேருந்து பவானிப்பூர் வரை நடந்தே போவோம் பேசிக்கிட்டே. அப்படி ஒரு பேச்சு அந்த நாட்களிலே ஒரு மகிழ்ச்சி. வெறுமனே பேசறதில, தெருக்கள பார்க்கறதில, ஊர்வலங்களைப் பார்க்கறதில, ஜனங்களோட பேசறதில, தெரு முனையில் கிடக்கும் சிவப்பு ரோஜாக்கள் எடுத்துப் பார்க்கறதில, தெருவில் உள்ள நியான் விளக்குங்கள பார்க்கறதில, ரேடியோவில ஹிந்திப்பாட்டு கேட்கறதில ( Chim 'O' Arab Hamara - Mukesh Phir Subah Hoger' Film - Song இரண்டு வரிகள்) சந்தோசத்தில மனசே வெடிச்சு சிதறிடும். ஆனா (இடைவெளி) நான் இப்ப அந்த ஆள் இல்ல. அந்த யுகம் முடிஞ்சு போயிடுச்சு. அப்ப இருந்த நான் செத்துப் போயிட்டேன். இப்ப நடமாடும் பிணம் நான்...

சுஜாதா: அப்படியெல்லாம் சொல்லாதே.

நந்தினி: நீங்க அப்புறம் என்னோட அம்மா... எல்லாருமே ஒரே மாதிரியே பேசறீங்க (இடைவெளி) உங்களுக்கு இது என்னிக்குமே புரியாது. ஏதோ ஒரு காரணத்திற்காக எப்பவாவது ஒரு உறுதிமொழி எடுத்திருக்கீங்களா நீங்க? நாங்க எடுத்திருக்கோம்.

சுஜாதா: இல்ல நாங்க எடுத்ததில்ல.

நந்தினி: ப்ரதீ சொல்லிக்கிட்டேயிருப்பான் உங்களை மாதிரி ஒரு நேர்மையான ஆசாமியை அவன் பார்த்ததில்லன்னிட்டு.

சுஜாதா: அப்படியா ப்ரதீ சொன்னான்?

நந்தினி: இதை ப்ரதீ உங்க கிட்ட சொல்லலியா?

சுஜாதா: இல்ல.

நந்தினி: ஆனா அவன் பேசறதைப் பார்த்தா உங்க ரெண்டு பேருக்கும் இடையில் நிறைய்ய நெருக்கம் இருந்த மாதிரி தோணிச்சு (முற்றிலும் வேறுப்பட்ட குரலில்) இந்தக் காட்டிக் கொடுத்தல் இன்னும் தொடர்ந்து கிட்டுத்தானிருக்கு.

சுஜாதா: இன்னுமா?

நந்தினி: இன்னும் (மௌனம்) அதுதான் மனசை உலுக்குது. காட்டி கொடுக்கறது. சிறையின் சுவர்கள் உயர்ந்துக்கிட்டே போவுது, புதுசு புதுசா கண்காணிப்பு கோபுரங்கள்! முளைச்சுக்கிட்டேயிருக்குது. இன்னும் நிறைய இளைஞர்கள் சிறையில் வாடிக்கிட்டிருக்காங்க. ஆனா தங்களோட ஆதாயங்களையே மனசில இருத்திக்கிட்டு, அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் எதையும் கேட்காததும்... சில போராளிகள் இரக்கத்தை உண்டாக்க எதை வேணும்னாலும் செஞ்சிக்கிட்டு எங்க பேரையும் கெடுத்துக்கிட்டு... ஜனங்களுக்கும் வேண்டாதவர்களா எங்களை செஞ்சுக்கிட்டு, காட்டிக் கொடுத்தல்... ப்ரஸ், பேப்பர், இது எதுகிட்டேயும் நாங்க வாய் திறந்து சொல்லமுடியாது. எதையும் சொன்னாலும் ப்ரஸ் காதை இறுக்கமாய் அடைச்சுக்கும்... சில பத்திரிகைகள் எங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும். அனுதாபப் படற மாதிரி வேஷம் போடும். காட்டிக் கொடுத்தல் எங்கள் மேல் இரக்கம் கொண்டு எழுதும் கட்டுரைகள் கூட திறமையுடன் நிச்சயமாக எங்களை வீரசாகசங்கள் புரிபவர்களாக சித்தரிக்கும். காட்டிக் கொடுத்தல் நாங்கள் கொல்லப்பட்டால் கூட எல்லா எழுத்தாளர்களும், வாராந்தரிகளும் பங்களாதேஷை பற்றி பிலாக்கணம் வைக்கும், மேற்கு வங்கத்தைப் பற்றி சொல்ல எதுவுமே இல்லை என்பது போல் அவர்களே இப்பொழுது எங்களைப்பற்றி ஒப்பாரிகளை எழுதிக் குவிக்கிறார்கள், ஜெயிலுக்குள்ளே.

சுஜாதா: ...இன்னுமா ?

நந்தினி: பின்னே? இவங்களைப் பத்தி எழுதாத பத்திரிகைகள் இல்லை. அவங்க எல்லாத்தியும் நிறுத்திட் டாங்கன்னு நெனைக்கறீங்களா? கைதுகள்? சித்ரவதைகள்? என்கவுண்டர் என்ற பேரில் கொலைகள்... பதினாறு வயதுலேந்து நாற்பது வயது வரை இதற்கிடையே உள்ள ஒரு தலைமுறையே அழிக்கப்பட்டு வருது.

சுஜாதா: என்கிட்டே சொல்லாதே! மனசு...

நந்தினி: நான் ப்ரதீயை நேசிச்சேன்!

சுஜாதா: தெரியும் எனக்கு (மௌனம்) இப்ப நீ நினைச்சுப் பார்க்கறப்ப ஒருத்தருக்கு வெற்றிடந்தான் தெரியும். ப்ரதீ என் வாழ்க்கையின் ஜீவன், ஆனா அவனை கொஞ்சந் தான் எனக்குத் தெரிஞ்சிருந்தது.

நந்தினி: எப்பவாவது முயற்சி செஞ்சீங்களா? தெரிஞ்சுக்க, முழுசா தெரிஞ்சுக்க.

சுஜாதா: இது முயற்சி செஞ்சு தெரிஞ்சுக்க வேண்டிய வரவா?

நந்தினி: சொந்தக்காரங்க, ரத்த சம்பந்தம், அதால அன்பும், பாசமும் பெருகிடுமுன்னு நினச்ச...அந்தக்காலம் எல்லாம் மலையேறிப் போயிடுச்சு... இந்த நாள்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தருக்கு அந்நியமா இருக்

காங்க. இதை இப்படியே இருக்கவிடறது மஹா பெரிய குற்றம். இப்பல்லாம் ஒரு மகனை ஒரு அப்பா புரிஞ்சுக்கறது, அவர் அவனுக்கு வழங்கற ஒரு சலுகையாப் போயிடுச்சு.

சுஜாதா: பெற்றோர்களுக்கு மட்டுந்தான் இதில் பொறுப்பு இருக்கா?

நந்தினி: (புன்முறுவல் செய்து) நீங்க முதல்ல ஒரு அடி எடுத்து வையுங்க. இளந்தலைமுறைக்கு உதாரணமா இருங்க. நீங்க நேர்மையோட இருங்க. நீங்க நேர்மையா இருக்கமாட்டீங்க. நீங்களாக உறவை பலப்படுத்த மாட்டீங்க. ஆனா, எங்க மேல பழியை மட்டும் தூக்கி போடுவீங்க.

சுஜாதா: நான் அப்படிச் சொல்லல.

நந்தினி: அப்ப நாம எங்கே தான் போயிக்கிட்டிருக்கோம்? ப்ரதீ ஒரு வகையான குடும்பத்திலிருந்து வந்தவன், அவனோட அப்பாவை அவன் மனசுல வெறுத்தான். சஞ்சயும், தீபாவும் ஸ்மரனு கட்டித்தட்டி போன ஒரு மேல் நடுத்தட்டு குடும்பத்திலிருந்து வந்தாங்க. சோமு, லால்ட்டூ, பிஜித் இவங்கள்ளாம் அரசியலே தெரியாத ஏழை அகதிகள் குடும்பத்திலேருந்து வந்தாங்க. மணி குஷாலோட குடும்பங்கள் இடது சாரி அரசியல்ல ஈடுபட்ட குடும்பங்கள். ஆனா, இவங்கள்லாம் ஒரு பொதுவான விஷயத்தைப் பகிர்ந்துகிட்டாங்க. அது குழந்தைகளும் பொற்றோர்களும் ஒருவருக்கொருவர் அந்நியர்களாகவே இருந்தாங்க... Stranger, under the same Root

சுஜாதா: ப்ரதீ என்னைப் பத்தி எதாவது பேசியிருக்கானா?

நந்தினி: உம்... பேசியிருக்கான்... ஜனவரி 16-ந் தேதி வரை வீட்டிலேயே இருந்தான், உங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணுமின்னு. இல்லாட்டி அவன் பதினஞ்சாம் தேதியே கிளம்பி களத்துக்கு வந்திருப்பான்.

சுஜாதா: (வெளிறிப்போய்) அப்ப போன்ல கூப்பிட்டது நீ தானா?

நந்தினி: ஆமாம். அநிந்தியா எங்களை காட்டிக் கொடுத்தது தெரியாம சோமுவும் சகாக்களும் அவங்க ஏரியாவுக்குப் போயிட்டாங்க. இந்த விஷயங்க தெரிஞ்சவுடனே ப்ரதீக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். ப்ரதீ இந்த நியூசை பிஜித்கிட்ட உடனே கூப்பிட்டு சொல்லியிருப்பான்னு நெனச்சேன். அதைத்தான் நான் எதிர்பார்த்தேன், இவனே கிளம்பிப் போவான்னு நெனைக்கல.

சுஜாதா: உனக்கு எப்பத் தெரியும் இதெல்லாம்?

நந்தினி: (அழகே இல்லாத புன்கையுடன்) அன்னைக்கு காலையிலேயே என்னை அரஸ்ட் பண்ணிட்டாங்க. அநிந்தியா மொத்தமா எங்க எல்லாரையும் காட்டிக் கொடுத்திட்டான். போலீஸ்கிட்டேயிருந்துதான் எனக்கு முதல் தகவலே கிடைச்சுது.

சுஜாதா: அப்புறம்?

நந்தினி: ஜெயில் சாலிட்டர் செல் மகா மோசமான சித்ரவதை (சுஜாதா நடுங்குகிறாள், நந்தினி திரும்பவும் அழுத்தமாக) ஆமாம் காட்டுமிராண்டித்தனமான, மிக மோசமான சித்ரவதை

சுஜாதா: நந்தினி!

நந்தினி: (கறுப்பு கண்ணாடியைக் கழற்றி மேசை மீது வைக்கிறாள். மேடையின் இந்தப்பகுதியில் ஒளி குறைகிறது) அவங்க விசாரணையை ஒரு இருட்டறையில் நடத்தினாங்க. பிறகு தன்னந்தனியாய் தனிமைச்சிறையில், அப்புறம் ஒரு நாள் வேற ஒரு ரூமுக்கு என்னை கூட்டிக்கிட்டுப் போனாங்க.

(மேடையில் இருள் குவிகிறது. சுஜாதா மேடையை விட்டு வெளியேறுகிறாள்)

காட்சி - 9

(மேடையில் அதே பகுதியில் ஒளி பரவுகிறது நந்தினி ஒரு நாற்காலியில், மற்றொரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் சரோஜ்பாலை நோக்கி கண்ணைப் பறிக்கும் அதீதமான ஒளி நந்தினியின் முகத்தில். காட்சி முழுவதும் நந்தினி அடிக்கடி உடம்பைத் தூக்கிக்கொள்ள முயற்சிக்கிறாள். நமக்கு நன்றாகத் தெரிகிறது அவளுடைய கால்களும் கைகளும் நாற்காலியில் கட்டப்பெற்றிருக்கின்றன)

சரோஜ்பால்: (ஓர் அறிக்கையிலிருந்து வாசிக்கிறது) அப்பா சூர்யகுமார் மத்ரா, அலிப்பூர் கோர்ட்டில் ஒரு வழக்கறிஞர், முகவரி 23/2/1A பாணி (P) கோலா(G) சந்து, காலிகட் (T1)

நந்தினி: ஆமாம்

சரோஜ்பால்: பிரெசிடென்சி காலேஜ்?

நந்தினி: உங்ககிட்டதான் எல்லா விவரங்களும் இருக்கே... அப்புறம் என்னைப்போட்டு ஏன்...?

சரோஜ்பால்: உன்னோட வகுப்பு நண்பர்களோட டிசம்பர் 12-ந் தேதி தீகாவிற்கு போனியா?

நந்தினி: ஆமாம்

சரோஜ்பால்: (கவர்ச்சியான புன்னகையோடு) ஆனால் நீ தீகாவிற்கு போகல. நீ பையன்களோடப் போயிட்ட. அந்த குருப்பில் வேற பெண்களே கிடையாது.

நந்தினி: அதில் இருந்தாங்க வேற பெண்ணுங்க.

சரோஜ்பால்: ஜாலியா இருக்க ஒரு கிரிமினல்கள் கும்பலோட தீகாவிற்குப் போன? உங்கப்பா இந்த News - ஐ கேட்டு மயக்கம் போட்டு விழுந்தாரு. ஆகக்கூடி நீ தீகாவில இருந்த?

நந்தினி: ஆமாம் இருந்தேன்.

சரோஜ்பால்: என்னோட ரிப்போர்ட்படி நீ டிரெய்ன்ல போயிருக்க.

நந்தினி: இல்ல.

சரோஜ்பால்: கரக்பூரிலிருந்து தீகாவிற்கு டிரெய்ன்ல போயிருக்க. நீ போய் சேரவேண்டிய இடம் Deola நீயும் மணியும் Deolaவில தங்கி Cardres - களுக்கு பயிற்சி கொடுக்கறதாக ஏற்பாடு. கல்லூரிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நீயும், மணியும் போட்டி போட்டிருக்கீங்க. கிராமங்கள்ல கொரில்லாவுகளுக்கு பயிற்சி அளிக்க நீ முடிவு பண்ணின.

நந்தினி: இல்ல.

சரோஜ்பால்: உன்னை போலீஸ்ல தேடிக்கிட்டு இருக் காங்கன்னு சங்சயன் நியூஸ் தந்தப்ப நீ Deola வில பஸ்ஸில ஏறுவதற்காக இருந்த. அதனால நீ ஹைவேஸ்ல ஒரு பெரிய Truck- ஐ பிடிச்சு 12-ந் தேதியே திரும்பி வந்திட்ட.

நந்தினி: இல்ல.

சரோஜ்பால்: 12-ந்தேதியிலிருந்து அஞ்சு நாட்கள் நீ தீகாவிலியே இருந்திருந்தா எப்படி நீ 13 - ந் தேதி நீது பால் வீட்ல இருக்கமுடியும்?

நந்தினி: (புருவத்தை உயர்த்தி இவர்களை யார் காட்டி கொடுத்திருப்பார்கள் என யோசித்து) நான் அங்க போகல.

சரோஜ்பால்: எனக்கு நீதுவோட நண்பர்களைத் தெரியும்

சாமிரான், பிஜித் பார்த்தா...

நந்தினி: எனக்கு இவங்களைத் தெரியாது.

சரோஜ்பால்: ஆனா என்கிட்ட ஒரு தகவல் இருக்கு

(புன்னகைக்கிறான்) நீ இவங்களுக்கு ரொம்ப நெருக்க மானவன்னு... நீ சாமிரான் வீட்டுக்கு ஆயுதங்களை சேகரிச்சு எடுத்துக்கிட்டு வரப் போவே, அத பிஜித்துக்காக தயாரா வச்சிருப்பே, சஞ்சயனோட சேந்துக்கிட்டு போஸ்டர்லாம் எழுதுவ, தகவல்களைச் சுமந்துக்கிட்டு காலிகட்டிலேந்து ஜாதவ்பூருக்கு போவ. (வெட்டி, வெட்டி, சிறு இடைவெளிகளுடன்) பார்த்தாவோட சேந்துகிட்டு Pipe gun லாம் தயாரிக்க கத்துப்ப, ஆனா கேட்டா அவங்களைத் தெரியாதுன்னு சொல்லி அழிச்சாட்டியம் பண்ணுவே.

நந்தினி: (இறுதியில் உணர்ந்து) அநிந்தியா...

சரோஜ்பால்: ரைட் அநிந்தியா ரொம்ப நல்ல பையன். அவன் அவனோட நாட்டை அவனோட சமூகத்தை நேசிக்கிறான் (இடைவெளி) உன்னை இந்த கட்சிக்குள்ள இழுத்துவிட்டது யாரு?

நந்தினி: எதையும் நான் சொல்லமாட்டேன்.

சரோஜ்பால்: ரொம்ப நல்லது (அவளை உற்று நோக்கி) உன் பிடிவாதத்துக்காக உன்னைப் பெத்தவங்க நிறைய கஷ்டப்படப் போறாங்க. புரியுதா உனக்கு?

நந்தினி: நான் எதையும் சொல்லமாட்டேன்.

சரோஜ்பால்: இந்த அமளிதுமளியில எல்லாரும் உன்னை விட்டுட்டு கிளம்பிட்டாங்க, எங்களோட ஒத்துழைச்சிக் கிட்டிருக்காங்க இப்ப.

நந்தினி: நான் உன்னை நம்பல!

சரோஜ்பால்: ஏன்? அவங்கள விலைக்கு வாங்க முடியாதுன்னு நெனைக்கறியா.

நந்தினி: No.

சரோஜ்பால்: சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டு... பெரிய தலைவலியா போயிடுச்சு...

நந்தினி: No No நான் எதுவுமே சொல்லப்போறதில்ல.

சரோஜ்பால்: காலேஜில் பேச்சு போட்டியில அப்படியே கொட்டி முழங்குவியாமே...

நந்தினி: எதையும் காதில் வாங்கிக்க நான் தயாராய் இல்ல.

சரோஜ்பால்: (கோப வேகத்துடன்) அப்ப சரி இந்த போட்டோக்கள் பாரு...

நந்தினி: போட்டோக்களா?

சரோஜ்பால்: போலீஸ் சவக்கிடங்கிலேருந்து வந்திருக்கிற போட்டோங்க.

நந்தினி: இல்ல நான் அதைப் பார்க்கமாட்டேன் (முகத்தை திருப்பிக்கொள்கிறாள் எழுந்திருக்க முயற்சிக் கிறாள் முடியவில்லை)

சரோஜ்பால்: ஏன் சும்மா ஓரப் பார்வைதான் பார்த்து வையேன்.

நந்தினி: இல்ல நான் மாட்டேன். (ஒரு முறை போட்டோக்கள் பக்கம் பார்வையைத் திருப்புகிறாள்)

சரோஜ்பால்: (போட்டோவை அவள் முகத்திற்கு முன்னால் பிடித்து) இதைப்பாரு இது சோமு தத்தா ராய்.

நந்தினி: இல்ல, இது சோமு இல்ல.

சரோஜ்பால்: அப்புறம் பிஜித்குஹா அப்புறம் (ஒவ்வொரு போட்டோவாகக் காட்டுகிறான்) அப்புறம்...

நந்தினி: வேற யாரு? (அவள் அலறுகிறாள்)

சரோஜ்பால்: அப்புறம் ப்ரதீ சாட்டர்ஜி.

நந்தினி: No இது ப்ரதீ இல்ல (பலமாக அவள் முகத்தைத் திருப்புவதால், சரோஜ்பால் கட்டாயத்துடன் அந்த போட்டோவை அவள் கண்களுக்கு முன்னால் பிடிக்கிறான். இல்ல இது ப்ரதீ இல்ல, இல்ல இது ப்ரதீ இல்ல என்று நந்தினி திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கிறாள்)

சரோஜ்பால்: (அதே குரலில்) உனக்கும் ப்ரதீ சாட் டர்ஜிக்கும் என்ன உறவு? உன் பிரண்டா? (அவளருகே நன்றாகக் குனிந்து சிகரெட்டைப் பற்றவைத்து எரியும் சிகரெட்டில் நந்தினியின் கன்னத்தில் சுடுகிறான், அவள் அலறுகிறாள்) உனக்கும் ப்ரதீ சாட்டர்ஜிக்கும் என்ன உறவு? அவன் உன் பிரண்டா (சிகரெட் புகையை அவன் அவள் மீது விடுகிறான். சிகரெட்டில் அவளது கன்னத்தில் சுடுகிறான் கேள்விகளும் பாணிகளும் தொடர்கின்றன)

(மேடை இருளடைகிறது. சரோஜ்பால் எழுந்து வெளியே கிளம்புகிறான். சுஜாதா உள்ளே நுழைந்து அவளுடைய நாற்காலியில் உட்கார்கிறாள் நந்தினி கறுப்பு கண்ணாடியை அணிந்து கொள்கிறாள்)

காட்சி - 10

(இந்தப் பகுதியில் மேடை ஒளி பெறுகிறது)

சுஜாதா: (அவளது குரல் நடுங்குகிறது) நந்தினி! நந்தினி!

நந்தினி: அதுதான் ஆரம்பம்!

சுஜாதா: ஆரம்பமா?

நந்தினி: நடந்ததை எல்லாம் உங்களுக்கு என்னால் சொல்லமுடியாது.(மௌனம்) தோலில் ஏற்பட்ட காயம் ஆறிடுச்சு ஆனா பழையபடி என்னால இருக்க முடியாது. (விரல்களால் அவளது முகத்தையும் மார்பகங்களையும் சுட்டிக் காட்டுகிறாள் )

சுஜாதா: (வாழ்வதில் இப்படி ஒரு பெருங்கொடுமை நந்தினிக்கு நடந்துள்ளது. ப்ரதீயின் மரணத்தை விட துக்ககரமானது என்பதை உணர்ந்து) ஆனா ப்ரதீ இப்ப இங்க இல்ல நந்தினி.

நந்தினி: அதற்காகச் சொல்லல (புன்னகைக்கிறாள்) சொல்ல வந்தது வேற. ஜெயில்ல காலத்தை கழிச்சுட்டு வந்தப்புறம் என்னை குறுக்கிடுற மனுஷன்லாம் போலீஸ்காரனா தெரியறான்.

சுஜாதா: நந்தினி!

நந்தினி: நாளாவட்டத்தில் நான் ப்ரதீயை மறந்திடுவேனான்னு ஆச்சரியப்பட்டுப் போறேன். இந்த மரணங்கள், இந்த ரத்தக்களரி எல்லாமே வீண்தானோன்னு ஆச்சரியமடையறேன். இந்த கைதுகள், கொலைகள், ரத்தம் சிந்தறது இதெல்லாம் இன்னும் தொடருதே ஒண்ணுக்குமில்லாம வெறும் வெட்டியான்னு அதிசயிச்சுப் போறேன்.

சுஜாதா: ஆனா இப்ப தான் எல்லாம் அமைதியா ஆயிடுச்சே நந்தினி.

நந்தினி: (அலறும் குரலில்) இல்ல! இல்ல! இல்ல!

எப்பவும் அமைதியாயிருந்தது இல்ல. எதுவும் அமைதி

யாயில்ல. எதுவும் மாறல. ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

ஜெயில்ல அழுது செத்துக்கிட்டிருக்காங்க, விசாரணை இல்லாம. அவங்களுக்கு அரசியல்ல ஒரு நியாயமான இடம் இல்ல, நிலைமை இப்படியிருக்க நீங்க சொல்றீங்க எல்லாம் அடங்கி ஓஞ்சு இயல்பான நிலைக்கு வந்திடுச்சுன்னு? நவநாகரிகமான சித்ரவதைகள் தொடர்ந்துகிட்டிருக்கு இன்னும் ரகசியமா! நீங்க சொல்றீங்க அமைதியாய் ஆயிடுச்சுன்னு? எல்லாம் அமைதியா... உங்க மண்டையிலதான் ஆயிடுச்சு.

சுஜாதா: (ப்ரதீயைப் பற்றிய சிந்தனைகளை அவள் எண்ணங்களிலிருந்து அழிக்கப்பட்டு நந்தினியின் மேல் அதீத கரிசனம் உண்டாகிவிட்டது!) அமைதியாயிடு நந்தினி.

நந்தினி: இப்படி சாணியா, களிமண்ணா நீங்க எப்படி இருக்கமுடியும்? நிறைய இளைஞர்களை கொன்னு வீசிட்டாங்க. நிறைய பேரை சிறைக்கு அனுப்பிட்டாங்க. நிலைமை இப்படி இருக்க, நீங்க சந்தோஷமா, வழவழா குழகுழா - ன்னு காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கீங்க? ‘லோகமே ஷேமமா இருக்கு, நாமும் சந்தோசமா காலத்தை கழிப்போம்ங்கற உங்களோட போக்கு என்னை பயமுறுத்துது. இந்த பூஜை, புனஸ்காரம், பாட்டுக் கச்சேரி, பரதநாட்டியம், திரைப்பட விழாக்கள், கவிஞர் சங்கமம் இது எல்லாத்திலயும் இந்த நிலைமை யில எப்படி உங்களால ஈடுபட முடியுது?

சுஜாதா: நீ இப்ப என்ன செய்யப்போறே?

நந்தினி: நானா? நான் பரோல்ல இருக்கேன். மெடிக்கல் ட்ரீட்மெண்ட்டுக்காக இல்லன்னா அவங்க என்னை வெளியில விட்டுருக்கமாட்டாங்க.

சுஜாதா: ட்ரீட்மென்ட்டா?

நந்தினி: (கண்ணாடியைக் கழற்றுகிறாள் கண்களை விரித்துக் காட்டுகிறாள். மீண்டும் கண்ணாடியை அணிகிறாள்) ஆயிரம் வாட்ஸ் லைட்டை அந்த போலீஸ்காரன் மணிக்கணக்காக என் மூஞ்சிக்கு முன்னால பிடிச்சிக்கிட்டிருந்தானா, அதிலே வலது கண்ணு குருடாயிடுச்சி. இடது கண்ணுல பார்வை ஏதோ கொஞ்ச நஞ்சம் ஒட்டிக்கிட்டிருக்கு.

சுஜாதா: நந்தினி!

நந்தினி: (புன்னகைக்கிறாள்) உங்களை என்னால் பார்க்க முடியாது. நீங்க என்கிட்டே ரொம்ப அன்பா இருக்கீங்க (தனக்குள்ளேயே) தனிமைச்சிறையில் இருந்து இருந்து கசாப்புக் கடை கத்தி மாதிரி மனசு கூரா ஆயிடுச்சி. உங்கள் பார்க்க முடியாட்டி கூட நீங்க என்ன நினைக்கிறீங்கன்றது எனக்கு தெரிஞ்சு போயிடும்.

சுஜாதா: ட்ரீட்மென்ட்டுக்கு அப்புறம்...?

நந்தினி: தெரியல எனக்கு (பளிச்சென்று புன்னகைக் கிறாள்) இந்த நேர்த்தியான வாழ்க்கைன்னு ஏதோ சொல்றாங்களே, அந்த வாழ்க்கையை வாழ என்னால முடியாது. ஒருநாள், நீங்க கேள்விப்படுவீங்க, என்னை மறுபடியும் அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னு (கடிகாரம் ஆறு அடித்து ஓய்கிறது)

சுஜாதா: நான் கௌம்ப வேண்டிய நேரம்.

நந்தினி: ஆமாம் உங்க இளைய பொண்ணுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம், பார்ட்டி.

சுஜாதா: நான் போயிட்டு வர்றேன்.

நந்தினி: இல்ல (புன்னகையுடன்) போயிட்டு வர்றேன் இல்ல!

சுஜாதா: (மனமுடைந்து) இல்லியா?

நந்தினி: இல்லதான். என்னை வந்து பாக்கறதினால் உங்களுக்கு என்ன லாபம்? நீங்க உங்க கடந்தகாலத்தில் வாழுங்க. நான் என் நிகழ்காலத்தைப் பார்த்தாகணும். வருங்காலத்தைப் பத்தி சிந்திச்சாகணும்.

சுஜாதா: இனிமே நான் சோமுவோட அம்மாவையும் பாக்கபோகமாட்டேன். உன்னை பாக்கவும் வரமாட் டேன். ப்ரதீ இருக்கற இடங்களுக்கு நான் போக மாட்டேன். ப்ரதீயை முழுசா தெரிஞ்சிக்காததற்கு எனக்கு இதான் தண்டனை.

நந்தினி: (புன்னகைத்து) உங்களோட தனிமைச் சிறை... வாங்க, வழிகாட்டறேன்.

சுஜாதா: பரவாயில்ல. என் வழியைக் கண்டுபிடிச்சு நானே போய்க்கறேன்.

காட்சி - 11

திரை உயர்கிறது. மேசையின் ஒரு மூலை இருளில் இருக் கிறது. மற்ற இடங்கள் ஒளி வெள்ளத்தில் இருக்கிறது. மற்ற இடங்கள் ஒளிவெள்ளத்தில் உள்ளது. பார்ட்டி கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது. எல்லார் கை களிலும் மதுக்கோப்பைகள், சுஜாதா, பினி மற்றும் துலி இவர்களைத் தவிர.

மிஸஸ் கபாடியா: நான் ஸ்வாமிஜியைப் பார்த்த அந்த விநாடி, மை டியர், எனக்குள்ள பளீர்னு ஒரு ஒளி மின்னல்! நாங்க சான்பிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட்டில் சந்திச்சிக்கிட்டோம். அவரு - ஸ்வாமிஜி சொன்னாருமை டியர் டாட்டர்  என்னை மியாமில் மீட் பண்ணுன்னாரு கொஞ்சம் நெனைச்சுப்பாரு, நான் மியாமி பீச்சுக்குப் போகப்போறேன்னுட்டு இவருக்கு எப்படித் தெரியும்?

சுஜாதா: (குரல் டேப்ரெக்கார்டரில்) ப்ரதீ, ஒருநாள் முழுக்க உன் கூட கழிச்சிட்டேன், இப்ப நான் என் கடமைகளை மறந்திட்டு இருந்திட முடியாது... (உரக்க) நெஜந்தான், எப்படித் தெரியும்?

மிஸஸ் கபாடியா: அந்த விநாடியே ஸ்வாமிஜி என் குருவாயிட்டாரு... அமெரிக்கா கண்டெடுத்திருக்கு ஸ்வாமிஜியை, ஒரு காலத்தில் விவேகானந்தரை கண்டெடுத்த மாதிரி. இப்ப நம்ம இந்தியா ஸ்வாமியை ஈசியா அங்கீகரிச்சிடும். குருப்யோ நம (மிஸஸ் கபாடியா திவ்யநாத், திமானை நோக்கி நகர்கிறாள். பினி ஒரு தம்ளரில் தண்ணீருடன் சுஜாதாவிடம் வருகிறாள்)

பினி: ரொம்ப வலிக்குதாம்மா.

சுஜாதா: (சுகவீனமான குரலில்) இல்ல.

பினி: நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்... ஐஸ் வாட்டர் குடிச்சே, பச்சைத் தண்ணில குளிச்சே... (சுஜாதா தம்ளரை மார்பிற்கு நேராகப் பிடிக்கிறாள். கண்களை மூடிக்கொள்கிறாள்)

சுஜாதா: (டேப்ரெகார்டரில் குரல்) ப்ரதீயின் கண்கள், கைவிரல்கள் தொட்டுப்பார்க்க சில்லுனு இருக்கும். இதைவிட சில்லுனு எதுவுமே இருக்க முடியாது. நான் ப்ரதீயோட நாள் முழுக்க இருந்தேன்...

திமான்: (வந்தபடி) மிஸஸ் கபாடியா எவ்வளவு அழகாப் பேசறாங்க! அவங்கள எனக்கு அறிமுகப்படுத்தறீங்களா?

சுஜாதா: , யெஸ், கண்டிப்பா... பினி, டோனியோட அம்மாவுக்கு இவரை அறிமுகப்படுத்து (பினி திமானோடு கிளம்பிச் செல்கிறாள், திருவாளர் கபாடியாவும், திருமதி. கபாடியாவும் வரும்பொழுது சுஜாதா மேடையின் ஒரு முனைக்கு வந்துவிடுகிறாள்)

திமான்: ஆமாம், இன்னைக்கு அவனோட பிறந்தநாள்!

மிஸஸ் கபாடியா: யாருதான் நெனைச்சிருப்பாங்க இந்த குடும்பத்திலிருந்து இப்படி ஒருத்தர்...

திமான்: பாவம் இந்த இளைஞனுக்கு யாரோ தப்பான வழியைக் காட்டியிருக்காங்க.

(அமித் - நீபாவின் கணவன் வருகிறான் )

அமீத்: (திமான் நெஞ்சில் விளையாட்டாகக் குத்தி, நாட்டீ! நாட்டீ! நாட்டீ! நம்ம புரட்சிக்கவிஞர் என்ன சொல்லிக்கிட்டிருக்காரு...?

மிஸஸ் கபாடியா: நீங்க கவிஞரா? வாவ், லவ்லி...

அமீத்: கவிஞரே தான். ப்ரதீக்கும் அவன் தலைமுறைக்கும் நினைவு அஞ்சலி எழுதற கவிஞர்.

மிஸஸ் கபாடியா: மார்வலெஸ்!

திமான்: (போலியான தன்னடக்கத்துடன் ) ஒருத்தர் வேற எதைப் பத்தியும் எழுத முடியுமா என்ன? (திமானும், கபாடியும் பேசிக்கொண்டே மேடையின் பின்பக்கம் செல்கிறார்கள். ஜோதியும், நீபாவும் வருகிறார்கள், குடிபோதையில்)

ஜோதி: ஜெயில்ல செத்துக்கிட்டிருக்கிற 20,000 மனுஷங்களைப் பத்தி எப்பவும் திமான் அழுவாச்சி கவிதைகள்தான் எழுதிக்கிட்டிருப்பாரு... நீபா... ஸ்டடியா இரு.

நீபா: (கண்கள் தானாகவே மூட ) எனக்கு... எனக்கு... எனக்குத் தெரியும்.

ஜோதி: ப்ரதீ இறந்தப்ப இவரு பங்களாதேஷ் பத்தி முனகிக்கிட்டும், சிணுங்கிக்கிட்டும் இருந்தாரு, இப்ப நிலைமை ஒரு கட்டுக்குள்ள வந்திட்டப்புறம் பன்னித் தொழுவத்தில உக்காந்துகிட்டு இவங்களைப்பத்தி நினைவாஞ்சலி எழுதிக்கிட்டிருக்காரு நீபா... careful... careful.

நீபா: எனக்கு... எனக்கு... எனக்குத் தெரியும்.

அமீத்: (நீபாவை நெருங்கி வந்து) என்ன தெரியும் உனக்கு?

நீபா: உன் ப்ரெண்ட்டைப் பத்திதானே? வார்த்தைகள் போண்டியான காலாவதி கவிஞர்! பணக்காரங்களுக்கு காவடி எடுத்து ஓசி சாராயம் குடிக்கற ஒட்டுண்ணி இந்த ஆளு, நீ பெருசா அவன பூதாகரமா காட்ற பெரிய புரட்சிக்கவிஞன்னு! என் தம்பி கொல்லப்பட்டப்ப இந்த கவிஞர் எங்க போயிருந்தாரு? புல்லு பிடுங்கவா?

அமீத்: நீ கூடத் தான் ப்ரதீயைப் பத்தி அவமானமா நெனைச்சே! நான் இல்ல.

நீபா: பொய்க்கொள்ளி - வாயை மூடு.

அமீத்: (கத்துகிறான்) நான் ஒரு நல்ல குடும்பத்திலேந்து வரேன். கிதிரிப்பூர் கங்கூலிகள். மூணு ரூபாய்க்கு முந்தான விரிக்கறவங்ககிட்டேருந்து எதுவும் நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்ல.

சுஜாதா: (அருகில் வந்து) அமீத்! நீபா! நிறுத்துங்க...

நீபா: உன்னைப் பார்க்க வேடிக்கையா இருக்கும்மா! நாங்க சண்டை போட்டுக்கிட்டா எவ்வளவு ஜாலியா இருக்கு தெரியுமா?

சுஜாதா: அதையெல்லாம் வீட்ல வச்சுக்கங்க! பப்ளிக்கா

வேண்டாம்! ப்ளீஸ்! (அமீத் ஏதோ சொல்ல நினைக்கிறான். திடீரென்று டோனியும், துலியும் நடனமாடத் துவங்குகிறார்கள். நீபாவும், ஜோதியும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். கபாடியாக்கள், திவ்யநாத் மற்றும் திமான் முன்னால் வருகிறார்கள்)

மிஸஸ் கபாடியா: சின்னப்பையனோட மரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து மிஸஸ் சாட்டர்ஜியால மீளவே முடியல! தோணுது எனக்கு...

திவ்யநாத்: இல்ல! இல்ல!

மிஸஸ் கபாடியா: எப்படி உங்க பையன்..?

திவ்யநாத்: கெட்ட சகவாசம், Bad company மோசமான நண்பர்கள்... அம்மாவோட பாதிப்பு... Hundred percent.

மிஸஸ் கபாடியா: அம்மாவோட பாதிப்பா?

திவ்யநாத்: உங்களுக்குத் தெரியாது? நானும் பிரதீயும் எவ்வளவு நெருக்கமா இருந்தோம் தெரியுமா?

மிஸஸ் கபாடியா: தெரியும் எனக்கு துலி எங்ககிட்ட சொல்லியிருக்கா.

திவ்யநாத்: நாங்க குழந்தைங்க மாதிரி...

திமான்: உங்க மாதிரி ஒரு அப்பா இருக்கறப்ப, இது இயற்கைதானே.

திவ்யநாத்: அந்த நியூசைக் கேட்டப்ப என் இதயமே வெடிச்சுடுச்சு.

திமான்: வெடிக்காதா பின்னே?

மிஸஸ் கபாடியா: (திவ்யநாத்தின் கரங்களைப் பற்றி) வருத்தப்பட ஒண்ணுமே இல்ல. சுவாமிஜி சொல்றார். மரணம்னு ஒண்ணு இல்ல, இந்த உடம்புதான் சாகுது. ஆன்மாவுக்கு அழிவில்ல உன் உடம்புதான் மரணிக்கும்...

ஆன்மாக்கள் சுவர்க்கத்திலே சந்திச்சிக்கும், கை குலுக்கும்...

திவ்யநாத்: உண்மையாவா?

மிஸஸ் கபாடியா: நூற்றுக்கு நூறு உண்மை.

திவ்யநாத்: இனிமே சுவாமிஜி வழியில் நடக்கப்போறேன். நான் (சுஜாதாவிடம்) சுஜாதா, காதில் விழுந்திச்சா?

சுஜாதா: (அவள் இடத்திலிருந்து) என்ன?

திவ்யநாத்: புதுப்புது விஷயங்களா சொல்லிக்கிட்டிருக்காங்க...

சுஜாதா: நானும் கேட்டேன்!

மிஸஸ் கபாடியா: மிசஸ் சாட்டர்ஜி! கொஞ்சம் விஸ்கி சாப்பிடறீங்களா!

சுஜாதா: ழிஷீ, தாங்க்ஸ், நான் குடிக்கறதில்ல!

திவ்யநாத்: உடம்பு சரியில்லியா?

சுஜாதா: இல்லயே!

(இருளடைந்த மூலையை நோக்கி அவள் நகர்ந்து செல்லும்போது பினி அவளை நோக்கி கை அசைப்பதை பார்த்தபின், அவள் பினியை நோக்கி நகர்கிறாள்)

திவ்யநாத்: விநோதமான பொம்பளை! நாள் முழுக்க ஊர் சுத்திட்டு வருவா... நான் கேட்டா சொல்ல மாட்டா. நான் கேட்டா அவ சொல்றா. உங்க விஷயங்களைப் பத்தி கேக்க எப்ப எனக்கு உரிமையில்லையோ, அப்ப என் விஷயங்களைப் பத்தி கேக்க உங்களுக்கு உரிமையில்ல...

மிஸஸ் கபாடியா: அதிகமாத்தான் இருக்கு !

திவ்யநாத்: இப்படித்தான் மேடம் என் வாழ்க்கையே... இம்மி சந்தோஷம் கூட இல்லாம... (அவர்கள் பின்னால் செல்கிறார்கள், நடனமாடுபவர்களைப் பார்த்துக் கொண்டே பேசிக்கொண்டே)

சுஜாதா: என்ன சமாச்சாரம் பினி?

பினி: டோனியோட பிரண்டு ஒருத்தர் வெளியில நின்னுக்கிட்டிருக்காரு.

சுஜாதா: அவரை உள்ளே கூட்டிக்கிட்டு வாயேன்! (திடீரென்று அவள் தள்ளாடுகிறாள்)

பினி: அம்மா, உங்களுக்கு என்ன ஆயிடுச்சு?

சுஜாதா: அதான், அந்த வலி

பினி: அப்ப உக்காருங்களேன் கொஞ்சம்!

சுஜாதா: இல்ல நான் அவரை உள்ளே கூட்டிக்கிட்டு வரேன். (சுஜாதா கருமையான வட்டத்தைக் கடந்து சில அடிகள் எடுத்து வைக்கிறாள். அமுக்கப்பட்ட அலறல் ஒலியோடு பின்நோக்கி நகர்கிறாள். தொண்டையை கனைத்து அலறல் ஒளி வெளிப்படாமல் நிறுத்தி வைக்கிறாள். கண்களில் அவநம்பிக்கையின் கீற்றுகள். கருமையான வட்டம் ஒளிரத் துவங்குகிறது, சரோஜ்பால் காலடி எடுத்து வைக்கும் பொழுது,சரோஜ்பால் DCDD (டெபுடி கமிஷனர் டிடெக்டிவ் டிபார்ட்மெண்ட் என்ற பாட்ஜை அணிந்திருக்கிறான்).

சரோஜ்பால்: (டேப்ரெக்கார்டரில் குரல்) எனக்கும் அம்மா இருக்காங்க... No... உங்க பையன் தீகா போகவே இல்ல... நோ இதையெல்லாம் நாங்க வீட்டில் விட்டு வைக்கமாட்டோம்... உங்க பையன் செஞ்சது மன்னிக்க முடியாதது... No... உங்களுக்கு பிரேதம் கிடைக்காது... NO... பிரேதம் கிடைக்காது...

(டேப்ரெகார்டரில் குரல் தேய்கிறது, சுஜாதாவும் சரோஜ்பாலும் நேருக்கு நேர் அமைதி)

பினி: (வந்தபடி) உள்ளே வரமாட்டீங்களா?

சரோஜ்பால்: இல்ல, நான் டூட்டியில் இருக்கேன். பரான்நகர்... Total Elimination Action நடந்துக்கிட்

டிருக்கு (சுஜாதாவை ஒரு முறைப் பார்க்கிறான். அவனுடைய குரல் டேப்ரிகார்டரில் வருகிறது) 1084ன் அம்மா... ப்ரதீ சாட்டர்ஜியின் அம்மா ... அவளை நேருக்கு நேரா பார்க்க வேண்டி வரும்னு எனக்குத் தெரியும்... அதுக்காகத்தான் வரவேண்டாம்னு பார்த் தேன் (டேப்ரிகார்டரில் குரல் ஓய்கிறது) டோனிக்கும் துலிக்கும் என் வாழ்த்துக்களை சொல்லு. (சரோஜ்பால் வெளியேறுகிறான். வெளியே வான் கிளம்பும் ஒலி, சைரன் ஒலி பினி நடனமாடும் ஜோடிகளோடுச் சேர்ந்துகொள்கிறாள். ஜோதி அவளை நடனமாட அழைத்துக்கொள்கிறான்)

சுஜாதா: இன்னும் டியூட்டியில் இருக்கானா இவன்? பாரன் நகர்லே Total Elimination Action...ஆ?

(நடனமாடுபவர்களை நோக்கித் திரும்புகிறாள். சுழன்றாடும் நடன அசைவுகளில் அவர்களில் மூழ்கியிருக் கிறார்கள்)

இன்றும் அதே Blackmania துப்பாக்கி! இன்றும், ஹெல்மெட் அணியாத போலீஸ்காரர்கள் வேனுக்குள்! இன்றைக்கு எங்கே உங்கள் வேட்டை துவங்கப்போகிறது? எங்கே இந்த அபாய சங்கு, ‘வீல் வீல்’ என்று அலறப்போகிறது?

இன்றைக்கு எந்த வீதிகளில்தடக் தடக் என பூட்சுகள் பேரொலி எழுப்பப்போகின்றன? எங்கே காற்றைக் கிழித்துக்கொண்டு புல்லட்டுகள் புறப்படப்போகின்றன? எங்கே - மறுபடியும்? ப்ரதீயால் எங்கே ஓடிப்போக முடியும்? எங்கே (பார்வையாளர்களை நோக்கி) நீங்கள் ஏன் பேசக்கூடாது. பேசுங்க. அந்த ஆண்டவனுக்கு புண்ணியமாப் போகட்டும் பேசுங்க, பேசுங்க, பேசுங்க! எத்தன காலம் இதை அமைதியாப் பொறுத்துக்கிட்டிருப்பீங்க? கொலைகாரன் இல்லாத, தோட்டாக்கள் இல்லாத, சிறைகள் இல்லாத, போலீஸ் வேன்கள் இல்லாத இடம் எங்கே இருக்கு?

(மேடையைச் சுற்றி வருகிறாள்.)

இவற்றிலேந்து நீ எப்படி தப்பிச்சு போவே பிரதீ? இந்த கல்கத்தாவிலே, இந்த மேற்கு வங்காளத்தில், தெற்கு வடக்காக... கிழக்கு மேற்காக... உன்னால ஓடிக்கிட்டே இருக்க முடியாதே!

ப்ரதீ! திரும்பி வந்திடு! இன்னைக்கு உன்னை கண்டுபிடிச்சிட்டேன் ப்ரதீ! திரும்பவும் அபாயச் சங்கு அலறிச்சுன்னா, திரும்பவும் போலீஸ் வேன்கள் ரேசாக ஓடினால், திரும்பவும் எங்கியாவது இந்த சரோஜ்பால் துரத்த ஆரம்பித்தால், நீ மறுபடியும் காணாமல் போயிடுவே!

(பார்வையாளரை, நடனமாடுபவர்களை விரல் நீட்டிக் காட்டி) சவங்கள், விரைத்துப்போன சவங்கள், நீங்க எல்லோருமே (தன்னையும் காட்டி) நானுந்தான். சவங்களை யாரோ ஆட்டுவிக்கிறார்கள்! அழுகிப்போன சவங்கள்! எல்லாம் - இந்த தீமான், அமித், திவ்யநாத், மிஸ்டர் கபாடியா, துலி, டோனி - இந்த சவங்கள் தங்கள் அழுகிப்போன இருப்பின் பலத்தில், குழந்தையின் அழுகை ஒலியை, கவிதைகளை, ஓவியங்களை, சிவப்பு ரோஜாக்களை, பசும்புல்லை, நியான் விளக்கொளியை எல்லாவற்றையும் நெடுங்காலம் அனுபவித்துக்கொண்டு இருக்கட்டும் என்றுதான் ப்ரதீ இறந்தானா? இதற்காகத் தான் உலகத்தை இந்த சவங்களிடம் ஒப்படைத்தானா? ஒருபோதும் இல்லை. No இல்லவே இல்லை!

(நடனமாடுபவர்கள் நடனமாடுவதை நிறுத்திவிட்டு பின் மேடையில் அசையாமல் வரிசையாக, திவ்யநாத், கபாடியாக்கள் ஆகியோரோடு) என்னுடைய இந்த இல்லை என்ற சொல் இந்த நகரத்தின் இதயத்தை கிழிக்கட்டும், அது ஆகாயத்தை நோக்கி எழட்டும். காற்றில் கலந்து இந்த மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவட்டும். என்னுடைய இந்த அலறல் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் விதிர்விதிர்க்கச் செய்யட்டும்.

தங்களுடைய சுகம் ஒன்றில் மட்டும் திளைத்துக்கிடக்கும் ஒவ்வொருத்தரின் சுகத்தையும் இது கிழித்தெறியட்டும் (மௌனம்) ப்ரதீ!

(அவள் கீழே சாய்கிறாள் இடைவெளி... மற்றவர்கள் உறைந்ததிலிருந்து விடுபட்டு அவளை நோக்கி ஓடிவருகிறார்கள்)

திவ்யநாத்: (கத்துகிறார்) அப்பென்டிஸ்... அப்பென்டிஸ்... வெடிச்சிடுச்சு...

(திரை)

முற்குறிப்பு: இதை ஒழுங்குபடுத்தி வாசிக்க விரும்புபவர்களுக்காக இலக்கமிடப்பட்டுள்ளது.

1

மெயின்றோட்டோட ஓரஞ்சாறு பரப்பில சொரியல் காணியொண்டு இருந்தது. அந்தக் காணியில நடிகர்திலகத்தின்ர தாய்க்காரி உலகநாயகிக்கும், இன்னும் மூண்டுபேருக்கும் பங்கிருந்தது. அந்த மூண்டு பங்குகாரரில வாள்வெட்டுத் துரையனும் ஒராள். அவன்தான் அப்ப ஊருக்குள்ள பெரிய சண்டியன். அவனோட ஆரேனும் தனகினால் வீடுபுகுந்து வெட்டிப்போடுவான். அதால அந்தக் காணியைப் பங்குபிரிச்சு எல்லைபோடுறதுக்கு ஒருத்தரும் வெளிக்கிடேல்ல. காணி முழுக்கப் பத்தை பறுகு வளர்ந்து காடுபத்திப்போய்க் கிடந்தது.

நடிகர்திலகத்தின் தகப்பன் போல்ப்பிள்ளை ஒருக்கால் இந்தக் காணிக்கு எல்லைபோட்டு அடைப்பம் எண்டு வெளிக்கிட்டார். இரண்டு கூலிக்காரரைக் கொண்டு போய்ப் பத்தையள வெட்டித் துப்பரவாக்கத் தொடங்கக் கொஞ்சநேரத்தில துரையன் வாளோட வந்திட்டான்.

“ஆரைக் கேட்டடா காணிக்குள்ள கால் வைச்சனியள்?” எண்டு அவன் உரப்பின உரப்பல்ல, பத்தையள வெட்டிக்கொண்டு நிண்ட இரண்டுபேரும் பின்னங்கால் பிடரியில இடிக்க ஓடிட்டாங்கள். போல்ப்பிள்ளை வெல வெலத்துப்போனார். வீட்டை வந்து மனிசிக்காரிக்கு நடந்த சங்கதியைச் சொன்னார்.

“அந்த அழிவானோட தனகிப்போட்டு நாங்கள் நிம்மதியாய் இருக்கேலுமே? அது காணி போனால் போகட்டும்” எண்டவ மனிசன்காரனை அமத்திப் போட்டா.

இப்பிடியே காலம் போச்சுது. அதுக்குள்ள நடிகர்திலகமும் இயக்கத்தின்ரை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிப் பேமஸாகிட்டார். அந்தமூட்டம் ஒருநாள் ஏரியாப் பொறுப்பாளர் மாயவன் தற்செயலாய் நடிகர் திலகத்தைச் சந்திச்சாப்போல சுகநயம் விசாரிச்சிட்டு, “எங்கையேனும் ஒரு வெறுங்காணி இருந்தாச் சொல்லுங்கோ. புதுசாய் வாற பொடியளுக்கு ஒரு பயிற்சி முகாம் அமைக்கவேண்டியிருக்கு” எண்டு நடிகர் திலகத்தின்ர காதில போட்டார். நடிகர்திலகத்துக்கு படக்கெண்டு ஒரு மின்னல் வெட்டிச்சுது.

“அண்ணை! உந்த மெயின்றோட்டோடயிருக்கிற காணியை நீங்கள் பாவிக்கலாம். எங்களுக்கும் அதுக்குள்ள பங்கிருக்குது. அதோட இன்னும் மூண்டு பேருக்கும் பங்கிருக்கு. அதிலயும் இரண்டு பேர் பிரச்சினையில்ல. ஒராள் கொஞ்சம் சண்டித்தனத்துக்கு வருவார். அந்தாளை நீங்கள் சமாளிச்சியளெண்டால் விசயம் சரி”

அதைக் கேட்டுப் பொறுப்பாளரும் தலையாட்டிப் போட்டு, “சரி. வேற இடத்திலயும் பாக்கிறன். சரி வராட்டில் நீங்கள் சொன்ன இடத்தைப் பாப்பம். தகவலுக்கு நன்றி” எனச் சொல்லிவிட்டுப் போனார்.

அதுக்குப் பிறகொரு ரண்டுமூண்டு மாதமாய்ப் பொறுப்பாளரும் பயிற்சி முகாமுக்கு இடந்தேடிக் களைச்சுப்போனார்.

“இன்னுமிடமெடுக்கேல்லையா? இன்னுமிடமெடுக்கேல்லையா?” எண்டு மேல்மட்டத்திலையிருந்து தொடர்ந்து பிறசர் வந்துகொண்டிருந்தாப்போல பொறுப்பாளரும் வேறைவழியில்லாமல் நடிகர்திலகத்தைக் கூட்டிக்கொண்டு போய்க் காணியைப்பாத்திட்டு, ரண்டு பொடியளைப் பிடிச்சுத் துப்பரவாக்கிறதுக்கு விட்டுட்டுப் போனார்.

விசயத்தைக் கேள்விப்பட்டுத் துரையன் அண்டைக்கும் வாளோட வந்து “ஆரைக்கேட்டடா காணிக்கை கால் வைச்சனீங்கள்?” எண்டு உரப்பின உரப்பலில துப்பரவாக்கிக்கொண்டு நிண்ட பொடியள் ரண்டும் ஓடிப்போய்ப் பொறுப்பாளரிட்ட நடந்ததைச் சொன்னாப்போல, ஏற்கனவே பயிற்சி முகாமுக்கு இடங்கிடைக்கேல்ல எண்ட கடுப்பில இருந்த பொறுப்பாளருக்குக் கோபம் தலைக்கேறியது.

துப்பரவாக்க வந்த பொடியளுக்கு “நீங்கள் நாளைக்குக் காலைல வாங்கோ. ஒரு பிரச்சினையுமிருக்காது” எண்டு சொல்லியனுப்பிட்டு நடிகர்திலகத்தைக் கூப்பிட்டு வாள் வெட்டுத்துரையனைப்பற்றி விசாரிச்சார்.

அப்பதான் ஆள் டெயிலியா மைம்மலுக்கை வயல் வெளித் தவறணைக்கு போய்வாற தகவல் கிடைச்சுது. பொறுப்பாளர் வோக்கியை எடுத்து மேலிடத்துக்குத் தகவலைச் சொன்னார். அண்டைக்குப் பொழுது படேக்குள்ள வயல்வெளித் தவறணைக்குக் கள்ளடிக்கப் போன வாள்வெட்டுத்துரையன், “இண்டைக்கு இரண்டு பேர் என்னட்ட வெட்டுவாங்கியிருப்பினம் நல்லவேளை ஓடிட்டினம்” எண்டு தன்ரை வீரப்பிரதாபங்களையெல்லாம் அங்கையிருந்த கூட்டாளிமாருக்கெல்லாம் அளந்துபோட்டு ஒரு எட்டு எட்டரை மணிக்கு வெளிக்கிட்டார். நல்ல கச இருட்டு.

தட்டித்தடவி மெயின்றோட்டிலை வந்து மிதக்கேக்குள்ள றோட்டடில ஏதோ வாகனம் நிக்கிற மாதிரியிருந்தது. என்ன ஏதெண்டு நிதானிக்கிறதுக்கிடையில வாள்வெட்டுத்துரையனுக்குப் பிடரியில ஒரு தட்டு விழுந்தது. ஆள் அதை எதிர் பார்க்கேல்ல. சுள்ளெண்டு கோபம் பத்திச்சுது.

“ஆரடா எனக்குமேல கைவைச்சவன்” எண்டு உரப்பி வாய்மூடேல்ல, முகத்தைப்பொத்தி இன்னொரு அடி விழுந்தது.

“நீயென்ன பெரிய சண்டித்தனப்பூழலோ? ஏறடா பிக்கப்பில” எண்டொரு குரல் உறுக்கின உறுக்கலில வாள்வெட்டுத்துரையனுக்கு வெறி முறிஞ்சிட்டுது. ஆரோ ஒருத்தன் துரையனின்ர சாறத்தை உரிஞ்சு கையளப் பின்னுக்குக் கட்டிட்டு பிடரியில பிடிச்சு பிக்அப்புக்குள்ள தள்ளிவிட, ஆள் கமல குண்டலமாய் விழுந்தார். பிக்அப்பு உறுமிக்கொண்டு வெளிக்கிட்டுது. உள்ளுக்க வைச்சும் ஆளுக்குக் கண்மண் தெரியாமல் அடிவிழத் தொடங்கிட்டுது.

அடுத்தநாள் காலமை முதல்நாள் வந்து திரும்பிப்போன இரண்டு பொடியளும் வந்து காணிமுழுக்க வெட்டித் துப்பரவாக்கிப்போட்டுப் போனாப்போல, காணியைச் சுத்திக் கிளிக்கூடுமாதிரி ஆளுயரத்துக்குத் தகரமடிச்சுப் பொறுப்பாளர் பயிற்சிமுகாமைத் தொடக்கினார்.

கொஞ்சக்காலம் வாள்வெட்டுத் துரையனைக் காணேல்லையாம் எண்டு பரபரப்பாய்க் கதைச்ச சனம் பிறகு ஆளை மறந்திட்டுது.

2

ஊருக்குள்ள நடிகர்திலகம் வழமையாகச் சில வீடுகளுக்குப் பின்னேரங்களில் போய் வருவார். அந்த வீடுகளைத் தவிர்த்து வழமைக்கு மாறாக வேறு ஏதேனும் வீட்டுக்குப் போய்வந்தால், அந்த வீட்டிலுள்ள எவரையோ இயக்கம் கிட்டடியில மண்டையில போடப்போகுதெண்டு எதிர்பார்க்கலாம். இதுக்கெல்லாம் தெள்ளத்தெளிவான ஆதாரங்கள் இருக்கு. நடிகர்திலகம் ஒருநாளும் போகாத பொலிஸ் வேலுப்பிள்ளை வீட்டுக்கு ஒருநாள் பின்னேரம் போய்வந்தார். மறுநாள் பின்னேரம் பொலிஸ் வேலுப்பிள்ளை முச்சந்திப் பிள்ளையார்கோவிலடியில் சைக்கிளில் வந்துகொண்டிருக்கும்போது இயக்கம் மண்டையில் போட்டது.

இது நடந்து ஒருமாதம் கழித்து நடிகர்திலகம் வழமைக்கு மாறாக ஒருநாள் பின்னேரம் புரோக்கர் சின்னத்துரை வீட்டுக்குப் போய்வந்தார். அவர் அந்த வீட்டுக்குப் போய்வந்து ஒரு கிழமைக்குள் புரோக்கர் சின்னத்துரையின் கடைசிப்பொடியன் வசந்தனை சாவகச்சேரி ரோட்டில் வைத்து இயக்கம் மண்டையில் போட்டது. இந்தச் சம்பவம் நடைபெற்று மூன்றுமாதம் கழித்து ஒருநாள் பின்னேரம் நடிகர்திலகம் வழமைக்கு மாறாக புறக்டர் பாலசிங்கம் வீட்டிற்குப் போய்வந்தார். அன்றிரவே புறக்டர் பாலசிங்கத்தை அவற்றை வீட்டுவாசலில் வைத்து இயக்கம் மண்டையில் போட்டது.

இத்தொடர் அசம்பாவிதங்களுக்குப் பிறகு ஊர்ச் சனங்கள் நடிகர்திலகம் தங்களது வீடுகளுக்கு ஒருபோதும் வந்துவிடக்கூடாதெனத் தத்தமது குலதெய்வங்களுக்கு நேர்த்தி வைக்கத்தொடங்கினர்.

3

அவரது முழுப்பெயர் டேவிட் திலகநாயகம்போல். பெற்றார், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள், அறிந்தவர், தெரிந்தவரெல்லாம் அவரைத் ‘திலகம்’என்று செல்லமாக அழைப்பர். புலிகள் இயக்கத்தின் கலைபண்பாட்டுக்கழகம் தயாரித்து மேடையேற்றிய நாடகங்களிலெல்லாம் திலகம் தொடர்ந்து பிரதான பாத்திரமேற்று நடித்துவந்தார். இதனால் புலிப்பிரமுகர்கள் சிலர் அவரை ‘நடிகர்திலகம்‘ என்றழைக்க, அப்பெயரே பின்னாள்களில் நிலைத்துவிட்டது.

4

சீற்ரீப்பீறைவர் பொன்னுத்துரைக்கு உன்னப்பார் என்னப்பார் எண்டு மூண்டு பெம்பிளைப் பிள்ளையள். மூண்டுபேருக்குமிடையில ஒண்டுரண்டு வயதுதான் வித்தியாசமிருக்கும். மூத்தவள் மஞ்சுளாவுக்கும், புறக்ரர் நல்லையாவின்ர கடைசிப்பொடியன் சுதாகருக்கும் காதல். பெட்டை உயிருக்குயிராய்க் காதலிக்க, பொடியன் உடலுக்குடலாய்க் காதலிக்க விசயங் கைமீறிப் போட்டுது. பெட்டை ஒருநாள் பொடியனுக்கு முன்னால “இரண்டு மாதமாய் எனக்குச் சுகமில்லாமல் வரயில்லை”எண்டு கண்ணைக் கசக்கினாள். அதுக்குப் பிறகு பொடியன் நைஸாக் காய்வெட்ட வெளிக்கிட்டான். அப்பதான் பெட்டைக்கும் அவனோட உள்நோக்கந்தெரிஞ்சுது.

பெட்டையும் வேற வழிதெரியாமல் தாய்க்காரியிட்ட மெல்லமாய் விசயத்தைச் சொன்னாள். அதைக் கேட்டோண்ண மனிசி வெலவெலத்துப் போச்சு. “எடி நாசமறுப்பாளே! உனக்குப் பின்னாலை இரண்டு குமர் இருக்குதுகள். நீ இப்பிடிக் குரங்காட்டமாடிப்போட்டு வந்தால் நாளைக்கு ஆரடி அதுகளைக் கட்ட வருவான்? கொப்பன் அறிஞ்சால் கொலைசெய்யப் போறானடி” எண்டு மனிசி ஒப்பாரி வைக்கத் தொடங்கிட்டுது.

தகப்பனுக்கு விசயம் தெரிஞ்சோண்ண தாய்க்கும், மகளுக்கும் உழக்குழக்கெண்டு உழக்கிப்போட்டு வேறவழியில்லாமல் புறக்ரர் நல்லையா வீட்டுக்குப் போனார். அங்கேபோய் பக்குவமாய் விசயத்தைச் சொன்னதுதான் தாமதம், நல்லையா எகிறத்தொடங்கிட்டார்.

“உன்ரை பெட்டைய ஊர்மேய விட்டுப்போட்டுக் கடைசியில என்ரை பொடியனே பிள்ளைப்பதிவுக்கு நிக்கிறது? என்ன ஐஸே உம்மட கதை? முதல்ல வெளியில போமைஸே. கெற்றவுட்”

பொன்னுத்துரையருக்கு நல்லையரையும், மோன் காரனையும் கிடத்திப்போட்டு உழக்கவேணும்போலயிருந்தது. எண்டாலும் குமர்ப்பிள்ளையின்ர விசயம் சந்தி சிரிக்காமல் நிதானமாய் நடக்கவேணுமெண்டதால குனிஞ்ச தலை நிமிராமல் வீட்டைவந்து நல்லையரிலயிருந்த ஆத்திரம் முழுக்க மனிசியிலயும், மகளிலயும் தீத்துப்போட்டு வெளிக்கிட்டுச் சுந்தரமூர்த்தியிட்டப் போனார். அவன் பொன்னுத்துரையோட வேலைசெய்யிற பொடியன். அவனுக்கு நெளிவு சுழிவெல்லாம் தெரியும். இயக்கத்தில கொஞ்சம் செல்வாக்கு இருக்கு.

பொன்னுத்துரையர் சுந்தரமூர்த்தியைத் தனியக் கூட்டிக்கொண்டுபோய் ஆதியோடந்தமாய் விசயத்தைச் சொன்னார். டொக்ரர்மார், சட்டத்தரணிமாரிட்ட மட்டுமில்ல அலுவல் கேட்டுப்போறவனிட்டயும் உண்மையை மறைக்கக்கூடாதெல்லோ. எல்லாத்தையும் தலையாட்டிக் கேட்ட சுந்தரமூர்த்தி, “துரையண்ணை! புறக்ரர் நல்லையருக்கு இயக்கமட்டத்திலயும் நல்ல செல்வாக்கிருக்கு. அவையளுக்கு இடைக்கிடை இவர் சட்ட ஆலோசனையும் வழங்கிறவர். அதால உங்கட விசயத்தைக் கத்தி மேல நடக்கிறமாதிரித்தான் டீல் பண்ணவேணும். எதுக்கும் நாளைக்குக் காலமை நான் உங்களுக்கு ஒரு நல்ல முடிவாச் சொல்லுறன்” எண்டு சொன்னான். பொன்னுத்துரையருக்கு தாய்க்கும், மகளுக்கும் இன்னொருக்கால் உழக்கவேணும் போலிருந்தது.

அடுத்தநாள் சுந்தரமூர்த்தி பொன்னுத்துரையரை நடிகர்திலகத்திட்டக் கூட்டிக்கொண்டு போனான். முதல்ல பொன்னுத்துரையருக்குத் தன்ர பிரச்சினையை நடிகர்திலகத்திட்டச் சொல்லத் தயக்கமாய் இருந்தது. சுந்தரமூர்த்திதான் “துரையண்ணை! நடந்ததையெல்லாம் மறைக்காமல் இவரிட்டச் சொல்லுங்கோ. அப்பதான் பிரச்சினையை வெட்டுறதுக்கு இவருக்கு ஈஸியா யிருக்கும்” எண்டு ஏவினான். பொன்னுத்துரையரும் நடந்ததையெல்லாம் நடிகர்திலகத்திட்டச் சொன்னார். அவரும் தலையாட்டித் தலையாட்டிக் கேட்டுப்போட்டு “சரி பாப்பம்” எண்டு சொன்னார்.

அடுத்தநாள் பின்னேரம் ஒருநாளுமில்லாத திருநாளாக புறக்ரர் நல்லையா வீட்டுக்கு நடிகர்திலகம் போனார். நடிகர்திலகம் தங்கட வீட்டு கேற்றைத் திறந்து வாறதைக் கண்டோண்ண புறக்ரர் நல்லையா வின்ர மனிசிக்காரி வெலவெலத்துப்போனா.

“இதென்ன உந்தச் சவம்விழுவான் வீட்டுக்குள்ள வாறான்? என்ர அத்துளு அம்மாளாச்சி! நீதான் எணை என்ர குடும்பத்தைக் காப்பாற்றவேணும்” எண்டு பதகளிக்கத் தொடங்கிட்டா. அந்தநேரம் தகப்பன், மகன் ரண்டுபேரும் வீட்டிலயில்ல. நடிகர்திலகம் வந்து வீட்டு முத்தத்தில நிண்டு “சுதாகர்! சுதாகர்!” எண்டு கூப்பிட்டார்.

இவ வெளியில வந்து “அவர் வெளில போகிட்டார் தம்பி. ஏதும் முக்கியமான அலுவலோ?” எண்டு கேட்டா. அதுக்கவர் “இல்லையில்லைச் சும்மா வந்தனான். சுதாகரைச் சுகம் விசாரிச்சதாய்ச் சொல்லுங்கோ” எண்டு சொல்லிட்டுப் போகிட்டார்.

“ஒருநாளும் வராதவன் இண்டைக்கு வந்திட்டுப் போறானே! என்ர பிள்ளையைப் பலி குடுக்கப் போறனே!”

எண்டு தகப்பனும், மகனும் பொழுது படேக்குள்ள வீட்டுக்குள்ள காலடிவைக்க அந்த மனிசி ஒப்பாரி வைக்கத் தொடங்கிட்டுது. நடிகர்திலகம் தன்ரை வீட்டுக்கு வந்திட்டுப்போனதை அறிஞ்சவுடனையே புறக்ரர் நல்லையாவுக்கும், மகனுக்கும் நாடி விழுந்திட்டுது. ஊர்முழுக்க “புறக்ரர் நல்லையா வீட்டுக்கு நடிகர்திலகம் போனதாம்” எண்டு பரபரக்கத் தொடங்கிட்டுது.

அடுத்தநாள் விடிஞ்சதும் புறக்ரர் நல்லையா மகனைக் கூட்டிக்கொண்டு நடிகர்திலகம் வீட்டை போய் “தம்பி! என்ர மகன் செய்தது பிழைதான். நீங்கள்தான் ஏதும் பாத்துச் செய்யவேணும்” எண்டு அழாக்குறையாக மன்றாடினார்.

“அதுக்கு இங்கை ஏன் புறக்ரர் வந்தனீங்கள்? எங்க பிழை நடந்ததோ அங்கைதானே போய் அதைத் திருத்தவேணும்” எண்டு நடிகர்திலகம் சொல்ல, தகப்பனும் மகனும் ஒரேயோட்டமாய் ஓடிப்போய்ப் பொன்னுத் துரையின்ர கால்ல விழுந்தினம்.

5

நடிகர்திலகம் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமான சிநேகிதன் எண்டு ஊர் முழுக்க நம்பினதுக்குக் காரணம், நடிகர்திலகத்தின்ர வீட்டுவரவேற்பறையில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு போட்டோக்கள்தான். ஒரு போட்டோவில் நடிகர் திலகத்துக்குப் புலிகள் இயக்கத்தலைவர் விருதுக்கேடயம் வழங்குகிறார். மற்றதில் நடிகர்திலகமும், புலிகள் இயக்கத் தலைவரும் அருகருகே மிக நெருக்கமாக அமர்ந்திருந்து அளவளாவிச் சிரித்துக்கொண்டிருக்கின்றனர். மீடியம் சைஸில் பிறேம் போட்டுத் தொங்கவிடப்பட்டிருந்த இந்த இரண்டு போட்டோக்களையும் பார்த்த ஊர்ச்சனங்கள் தமிழீழக் காவல்துறையாலும், தமிழீழ நீதிமன்றத்தாலும் தீர்க்கமுடியாத கணக்கு வழக்குகளையெல்லாம் நடிகர் திலகத்தால் தீர்த்துவைக்கமுடியுமென நம்பினர்.

6

புலிகள் இயக்கத்தால் ‘குயின்ஸ்’ எனச் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த குயின்ரன் இயக்கத்துக்கு ஆள் சேர்க்கிறதிலயிருந்து, பங்கர் வெட்டுறது வரைக்கும் முன்னுக்கு நிப்பான். ஏரியாப் பொறுப்பாளர் இருந்திருந்திட்டு “குயின்ஸ்! நாளைக்கு ஒரு கண்டனப் பேரணிக்கு ஒரு நூறு றூற்றியம்பதுபேர் வேணும்” எண்டு கேப்பார். அவனும் மறுக்காமல் கிறுக்காமல் “அண்ணை! நாளைக்கு இரண்டு பஸ்ஸைக் கொண்டாங்கோ. நான் ஆக்களைத் தாறன்” எண்டுட்டு, மறுநாள் சொன்னமாதிரியே பிசகாமல் செய்வான். ஏரியாவுக்குள்ள இருக்கிற இளவட்டங்களை பங்கர்வெட்ட. சிரமதானம் செய்யவெண்டு இயக்க பேசுகளுக்குக் கூட்டிக்கொண்டு போவான். பிறகு அந்த இளவட்டங்களுக்கெல்லாம் குழையடிச்சு இயக்கத்துக்கு அனுப்பிப்போடுவான். இதால அவனுக்கு இயக்க மேல்மட்டத்தில நல்ல செல்வாக்கிருந்தது. இந்தச் செல்வாக்கில கண்ணுக்குக் குளிர்ச்சியான பெட்டையளயெல்லாம் மடக்கி மடக்கி அலுவல் நடத்திக் குயின்ஸ் ஊருக்குள்ள ஒரு பேமஸ்ஸான பொம்பிளைக்கள்ளனாய் வந்திட்டான். அவன் கடைசியாய் எக்கவுண்டன் கனகநாயகத்தின்ர ஏகபுத்திரி மலர்விழியை மடக்கிறதுக்கு வெளிக்கிட்டான். அந்தப் பெட்டை மசியேல்ல. ஒருநாள் பெட்டை ரியூசன் முடிஞ்சு சைக்கிள்ள வரேக்குள்ளை குச்சொழுங்கைக்குள்ள மறிச்சு “எடியே! நீ என்னை லவ் பண்ணேல்லயெண்டால் உன்ர கொப்பனைச் சுடுவன்” எண்டு ஒரு வெருட்டு வெருட்டினான். பெட்டை உண்மையில பயந்துதான் போச்சுது. வீட்டை போன உடனை அழுதழுது தகப்பனிட்டை நடந்ததைச் சொல்லிச்சுது. அதைக் கேட்டாப்போல அந்தாள் வெலவெலத்துப் போச்சுது.

அந்தாளுக்கு முதல்ல என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல. கடைசியாய் ஒவ்வீஸ் பியோன் வேலுப்பிள்ளையிட்ட இதைப்பற்றிக் கதைக்கேக்குள்ள, அவன் நடிகர்திலகத்தைக் கைகாட்டி விட்டான். மறுநாள் ஒவ்வீசுக்கு லீவு போட்டுட்டு எக்கவுண்டன் நடிகர்திலகத்திட்டப் போனார்.

எக்கவுண்டன் சொன்னதையெல்லாம் தலையை ஆட்டியாட்டிக் கேட்ட நடிகர்திலகம் வழமைபோலச் “சரிபாப்பம். நீங்கள் போட்டு வாங்கோ” எண்டார். எக்கவுண்டன் வந்து பியோன் வேலுப்பிள்ளையிட்ட நடந்ததைச் சொன்னார்.

“அந்தாள் அப்பிடித்தான் சொல்லும். நீங்கள் வொறி பண்ணாதேங்கோ. எல்லாம் சரிவரும்” எண்டு வேலுப்பிள்ளை சொல்லிட்டுப் போகிட்டான்.

அந்தமூட்டம் சர்வதேச மகளிர்தினம் வந்தது. இயக்கப்பெட்டையளின்ர பொறுப்பிலதான் எல்லாம் நடத்திறதெண்டு ஏற்பாடு. ஒவ்வொரு ஏரியாவிலயிருந்தும் குறைஞ்சது ஐம்பது பொம்பிளையளயெண்டாலும் நிகழ்வுக்குக் கொண்டுவரவேணுமெண்டு ஏரியாப் பொறுப்பாளர்மாருக்கு மகளிர் பிரிவிலயிருந்து ஓடர் வந்தது. ஏரியாப் பொறுப்பாளர் குயின்ஸைக் கூப்பிட்டு விசயத்தைச் சொன்னார்.

“அதுக்கென்ன? நீங்கள் பஸ்ஸைக் கொண்டாங்கோ. நான் ஆக்களைத் தாறன்” எண்டு குயின்ஸ் சொல்லிப் போட்டுப் போனான். நிகழ்வு நடக்கிற அண்டு பின்னேரம் பஸ் வந்து சந்தியில நிக்கக் குயின்ஸ் ஐம்பது பொம்பிளையளைச் சொல்லிவைச்ச மாதிரிக் கொணந்திட்டான். பொறுப்பாளர் அப்பிடியே பூரிச்சுப்போனார்.

அந்தளவு பொம்பிளையளையும் பஸ்ஸில ஏத்தி நிகழ்வு நடக்கிற கோப்பாய் கிறிஸ்ரியன் கொலிச்சுக்குக் கொண்டுபோச்சினம். குயின்ஸ்சும் கூடப்போனவன். இரவிரவாய் நிகழ்வு நடந்தது. இடையில யொருக்கால் எஞ்சின் பிழைப்பட்டுக் கறண்ட் கட்டாச்சுது. பிறகு எஞ்சின் திருத்திக் கறண்ட் வந்தாப்போல இயக்கப் பெட்டையளெல்லாம் பரபரப்பாய் ஓடித்திரிஞ்சினம். கூட்டிவரப்பட்ட பொம்பிளையளெல்லாம் மேடைக்கு முன்னால குழம்பிப்போயிருந்தினம்.

“எதிர்பாராது ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகின்றோம். தொடர்ந்து ‘தாயகம் காத்த தங்கையர்’ நாடகம் இடம்பெறவிருக்கிறது” என நிகழ்வின் தலைவி மேடை யில் தோன்றி அறிவிக்க, நிகழ்வு சுமுகமானது. கொஞ்ச நேரத்தால ஒரு நம்பர் பிளேட் இல்லாத வாகனம் வந்து நிண்டுது. அதுக்குள்ள ஆரையோ கண்ணைக் கட்டினபடி ஏத்திச்சினம். அடுத்தகணம் அந்த வாகனம் போகிட்டுது. நிகழ்வு தொடர்ந்தது.

விடிஞ்சாப்போல ஏரியாப் பொறுப்பாளர் கூட்டிக் கொண்டு வந்த பொம்பிளையளை பஸ்ஸிலை ஏத்திப் போட்டுக் குயின்ஸைத் தேடிப்பாத்தார். ஆளைக் காணேல்ல. அப்ப ஒரு இயக்கப்பிள்ளை வந்து “அண்ணை! உங்களை ஒருக்கால் பெரியக்கா கூட்டி வரட்டாம்” எண்டு சொல்லிச்சுது. பொறுப்பாளர் அந்தப் பிள்ளைக்குப் பின்னால இழுபட்டுக்கொண்டு போனார். அப்ப மகளிர்பிரிவுக்குப் பொறுப்பாயிருந்த எழிலரசியை இயக்காக்கள் எல்லாம் பெரியக்கா எண்டுதான் கூப்பிடுறவை. பொறுப்பாளர் அவவைத் தேடிக்கொண்டு போகேக்குள்ள அவ சில இயக்கப் பிள்ளையளோட நிண்டு ஏதோ சீரியஸாய் டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருந்தா. பொறுப்பாளரைக் கண்டுட்டுக் கதைக்கிறதை டப்பெண்டு நிப்பாட்டிட்டா. அங்க நிண்ட இயக்கப்பிள்ளையள் திரும்பிப் பொறுப்பாளரைப் பாத்தினம்.

“இங்க வாரும். அந்தக் குயின்ரன் எண்ட ஆள் உம்மட ஏரியாவா?” பெரியக்கா பொறுப்பாளரைக் கேட்டா.

“ஓமக்கா. அவர் ஏரியாவில என்ர செயற்பாடுகள் எல்லாத்துக்கும் உறுதுணையாயிருக்கிற ஆள்” எண்டு பொறுப்பாளர் சொல்லி முடிக்கிறதுக்கிடையில பெரியக்கா கடுப்பாகிட்டா.

“உம்மட்ட நானென்ன கரெக்ரர் சேட்டிபிக்கற்றே கேட்டனான்? அந்தாள் ராத்திரி எங்கட பிள்ளையொண்டில கைபோடேக்குள்ள கையும் மெய்யுமாய்ப் பிடிச்சிருக்கிறம். ஆளை விசாரணைக்கெடுத்திருக்கு. உம்மையும் விசாரணைக்குக் கூப்பிட வேண்டியிருக்கும்” பெரியக்கா சொல்லச் சொல்லப் பொறுப்பாளருக்கு அஞ்சும்கெட்டு அறிவுங்கெட்டுத் தலை விறைச்சுது.

குயின்ரனின்ர விசயத்தைச் சூசைதான் டீல் பண்ணினவர்.

“இயக்கப்பிள்ளைகளோட சேட்டை விடுகிறதெண்டது எங்கட இயக்கத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாய்த் தான் பாக்கவேண்டியிருக்கு. இது எங்கட தன்மானப் பிரச்சினை. சும்மா பணிஸ்ற்மன்ற் குடுக்கிறது இதுக்குச் சரியான தீர்வாயிருக்காது. நாளைக்கு மற்றாக்களுக்கு இது ஒரு துணிவைக் குடுக்கும். சனங்களும் கண்டபடி கதைக்க வெளிக்கிடும். அதால ஒரு கதையுமில்லாமல் ஆளை மண்டையில போடுங்கோ” எண்டு சொல்லிப் போட்டுப் போகிட்டார்.

குயின்ரனை மண்டையிலபோட்ட அடுத்தநாள் எக்கவுண்டன் நடிகர்திலகத்தைச் சந்திக்கச் சீர்வரிசையோட தன்ர காரில போனார். வீடு பூட்டிக்கிடந்தது. தொடர்ந்து இரண்டுமூண்டுநாள் போனவர். அப்பவும் நடிகர்திலகத்தின்ர வீடு பூட்டித்தான் கிடந்தது.

7

யாழ்ப்பாணம் இயக்கக் கட்டுப்பாட்டிலயிருந்த காலத்திலயும் சரி, பிறகு ஆமிக் கட்டுப்பாட்டிலிருந்த காலத்திலயும் சரி மாறாத செல்வாக்கோட இருந்த ஒரேயாள் நடிகர்திலகம்தான். 1996இல் இயக்கம் யாழ்ப்பாணத்தைவிட்டு வன்னிக்குப் பாஸாகேக்குள்ள இயக்கத்துக்கு வால்பிடிச்ச ஆக்களெல்லாம் வன்னிக்கு இழுபட்டினம். ஆனால் நடிகர்திலகம் மட்டும் இருந்த இடத்தைவிட்டு அசையேல்ல. அவரின்ர மனிசிக்காரிகூட நல்லாப் பயந்துபோனா.

“என்னப்பா? இயக்கத்தோட திரிஞ்சாக்களெல்லாம் வன்னிக்கு வெளிக்கிடினம். நீங்கள் நோமலாய்த் திரியிறியள். அதுகும் ஒரேயொரு ஆம்பிளைப்பிள்ளையை வைச்சுக்கொண்டு...”

“போடி விசரி! நானெங்கை இயக்கத்தோட திரிஞ்சனான்? நான் எதுக்குப் பயப்பிடோணும்? உனக்குப் பயமாயிருந்தால் பொடியனையும் கூட்டிக்கொண்டு வன்னிக்குப் போ. நான் இங்கதானிருப்பன். என்ன சிக்கல் வந்தாலும் எனக்குச் சமாளிக்கத் தெரியும்” எண்டு சொல்லிப்போட்டு நடிகர்திலகம் தன்ர அலுவலைப் பாக்கப் போகிட்டார்.

“இந்த நாசமறுப்பான் ஒருத்தரின்ர சொல்லுங்கேளான். என்ன கோதாரியெண்டாலும் நடந்து துலையட்டும்” எண்டு மனிசிக்காரியும் விட்டிட்டா.

ஆமி ஊருக்குள்ள வந்த கொஞ்சநாளில நடிகர் திலகத்தைப்பற்றி ஆரோ முறையாய்ப் போட்டுக் குடுத்திட்டாங்கள். ஒருநாள் கொமாண்டர் லறி விஜயறட்னா பட்டாளத்தோட நடிகர்திலகத்தின்ர வீட்டுக்கு முன்னால பிக்கப்பில வந்து இறங்கினான். ஊரிலையிருந்த சனமெல்லாம் “இண்டைக்கு நடிகர் திலகத்தின்ர குடும்பம் துலைஞ்சுது” எண்டுதான் நினைச்சதுகள்.

நடிகர்திலகத்தை அரஸ்ற் பண்ணிக்கொண்டுபோய் நல்ல சாத்துக்குடுத்து விசாரிக்க வேணுமெண்ட நோக்கத்தில வீட்டுக்குள்ள வந்த லறி விஜயறட்ணா, அங்கே வரவேற்பறையில் மீடியம் சைஸில் தொங்க விடப்பட்டிருந்த பண்டாரநாயக்க, சிறிமாவோ, சந்திரிக்கா ஆகியோரது மார்பளவு போட்டோக்களைப் பார்த்து பிறேக்கடித்ததுபோல நின்றான். அப்ப கசுவலாய் வாறமாதிரி நடிகர் திலகம் தன்ர மனிசி, மகனோட வந்தார்.

“திலகநாயகம் யார்?” எண்டு லறி விஜயறட்ணா அவனைப் பாத்துக் கேட்டான்.

“நான்தான் ஸேர்” நல்ல பணிவோடு நடிகர்திலகம் பதில்சொன்னார்.

“உம்மை எல்ரீரீ லீடர் பிரபாகரனோட கூட்டாளி என்று பலரும் சொல்றாங்களே. உண்மையா?” லறி விஜயறட்ணா அடுத்த கேள்வியைப் போட. அதுக்குப் பிறகு நடந்ததுதான் க்ளைமக்ஸ். நடிகர்திலகம் “சற்றுப் பொறுங்கள்” என்று லறி விஜயறட்னாவிடம் சொல்லி விட்டு, ஓர் அறைக்குள் நுழைந்து மூன்று புகைப்படங்களை எடுத்துவந்தார்.

“இதைப் பாருங்கள்” என லறி விஜயறட்னாவிடம் ஒரு படத்தைக் கொடுத்து விளக்கமளித்தார். “எனது தந்தையார் மதவாச்சியில் கடைவைத்திருந்தார். அப்போது நான் அங்கிருந்த சிங்களப் பாடசாலையில்தான் படித்தேன். பாடசாலைமட்டத்தில் நடந்த பேச்சுப்போட்டியில் ‘புத்தபிரானின் பஞ்சசீலக்கொள்கைகள்’ என்னும் தலைப்பில் பேசி முதற்பரிசு வாங்கினேன். சங்கைக்குரிய நிர்மலானந்ததேரர்தான் எனக்குப் பதக்கமணிவித்து முதற் பரிசை வழங்கினார். அப்போது எடுத்ததுதான் இந்தப் புகைப்படம்”

மற்றைய இரண்டு புகைப்படங்களையும் அடுத்ததாக லறி விஜயறட்னாவின் கையில் கொடுத்து, “இவற்றுக்கு நான் உங்களுக்கு விளக்கமளிக்க அவசியமேற்படாது” என்றார். லறி விஜயறட்னா அந்த இரண்டு புகைப்படங்களையும் பார்த்தான். ஒன்றில் நடிகர்திலகம் மேன்மைதங்கிய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் நின்று சிரித்துக்கொண்டிருந்தான். மற்றதில் தலைவர் பிரபாகரன் நடிகர்திலகத்துக்கு விருதுக்கேடயம் வழங்கிக்கொண்டிருந்தார்.

ஆந்த மூன்று போட்டோக்களையும் பார்த்துவிட்டு லறி விஜயறட்னா அடுத்த கேள்வியைக் கேட்பதற்கிடையில் நடிகர்திலகம் திரும்பவும் சிங்களத்தில் மிகுந்த பணிவுடன் பேசத்தொடங்கினார்.

“உங்களுக்கு யாரோ சிலர் சொன்னதைப்போல புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கூட்டாளியாக இருந்திருந்தால் நான் குடும்பத்தோடு புலிகளின் பின்னால் வன்னிக்கல்லவா போயிருக்கவேண்டும்?

நான் ஒரு சாதாரண தமிழ்க்குடிமகன். நடிப்பிலே ஆர்வமுள்ளவன். புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இப்பிரதேசமிருந்த காலத்தில் தங்களது மேடை நாடகங்களில் என்னை நடிக்க அழைத்தார்கள். அதை என்னால் மறுக்கமுடியவில்லை. நான் நடிக்க மறுத்திருந்தால் அவர்கள் எனக்குத் துரோகிப்பட்டத்தைத் தந்திருப்பார்கள். எனவே ஒரு நிர்ப்பந்தத்தின் பேரிலேயே அவர்களது மேடைநாடகங்களில் நடித்தேன். என் நடிப்பைப் பாராட்டிய புலிகள் இயக்கத் தலைவர் எனக்கு விருதுக்கேடயம் வழங்கினார். அன்றுதான் நான் அவரை முதலும் கடைசியுமாகப் பார்த்தேன். பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி தொடர்பான பிரச்சினைபற்றிக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதிச் செயலகத்துக்குச் சென்றிருந்தபோது மாண்புமிகு ஜனாதிபதியுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. இதை வைத்து என்னை மாண்புமிகு ஜனாதிபதியின் நெருங்கிய கூட்டாளியென்று சொல்லமுடியுமா? எனது தந்தையார் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தொடக்ககால ஆதரவாளர் என்பதால் வரவேற்பறையில் இம்மூன்று புகைப்படங்களும் தொங்க விடப்பட்டுள்ளன. மற்றும்படி அதற்கு வேறெந்த விசேட காரணமும் கிடையாது. புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தகாலத்தில் இந்த வரவேற்பறையில் இன்னுமொரு புகைப்படமும் தொங்கியது. அது சற்று நேரத்தின்முன் நீங்கள் பார்த்த புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் நான் விருதுக்கேடயம் வாங்கும் புகைப்படந்தான். தங்களது தலைவரிடமிருந்து யாராவது விருதுக் கேடயம் வாங்கும்போது புகைப்படமெடுத்திருந்தால், அதைப் பிறேம்போட்டு வீட்டுச்சுவரில் தொங்க விட வேண்டுமென்பது புலிகள் இயக்கத்தின் எழுதப்படாத சட்டம். அதை என்னால் மீற முடியாமைக்கு மனம் வருந்துகின்றேன்”

நடிகர்திலகம் இலக்கண சுத்தமான சிங்களத்தில் வெளிப்படையாகப் பேசியதில் லறி விஜயறட்னா நெகிழ்ந்துபோனான்.

“நாம் இனி நல்ல நண்பர்களாக இருப்போம்” என நடிகர்திலகத்தைக் கட்டியணைத்துவிட்டு, அவரைக் கைதுசெய்து கொண்டுசெல்லும் முயற்சியில் முற்றும் மனம் தளர்ந்தவனாய் வெறுங்கையோடு தனது படைவீரர்களை அழைத்துக்கொண்டு நடிகர் திலகத்தின் வீட்டைவிட்டுப் புறப்பட்டான். நடிகர் திலகத்தைக் கைதுசெய்து கொண்டுசெல்லும் கண்கொள்ளாக் காட்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஊர்ச்சனம் ஏமாந்துபோச்சு.

8

குயின்ரனை இயக்கம் விசாரணைக்கு எடுத்திருந்தமூட்டம் அவனை ஏரியாப் பொறுப்பாளர் ஒருக்கால் சந்திக்கேக்குள்ள, “உறண்டல் நாயே! ஏன்ரா இப்பிடிக் கேவலங்கெட்ட வேலை பாத்தனீ? உன்னால நான் இயக்கத்துக்குள்ள மொக்கயீனங்கெட்டுத் தலை குனிஞ்சு நிக்கிறன்” எண்டு வெப்பியாரப்படேக்குள்ள, “அண்ணை! என்னைப் பேசாதேங்கோ. நான் பொம்பிளைக்கள்ளன்தான். மறுக்கேல்ல. ஆனால், அண்டைக் கிரவு நடந்த சம்பவத்துக்கும், எனக்கும் சிவசத்தியமாய் ஒரு தொடர்பும் இல்லை. என்னை ஆரோ திட்டமிட்டு மாட்டிவிட்ட மாதிரியிருக்கு. நான் என்னதான் தலை கீழாய் நிண்டாலும் ஒருத்தரும் என்னை நம்பமாட்டியள் எண்டு தெரியும்” எண்டு அடிக்குரலால வாக்குமூலமொண்டு குடுக்க, “பொத்தடா வாயை” எண்டு உறுக்கிப்போட்டு ஏரியாப் பொறுப்பாளர் திரும்பி வந்திட்டார். அதுக்குப்பிறகு குயின்ரனை மண்டையில போட்டாப்பிறகுதான் பாத்தவர்.

குயின்ரனைப்பற்றி நல்லாய்த் தெரிஞ்சாக்கள், “அவன் இயக்கப்பிள்ளையில கைபோடுறளவுக்கு மொக்கனில்ல. அவனை ஆரோ நல்லாத் திட்டம்போட்டு மாட்டிவிட்டிருக்கினம். இதுக்குள்ள நிச்சயமாய் நடிகர் திலகத்துக்குப் பங்கிருக்கும்” எண்டு கதைச்சினம். அவ்வளவுதான்.

9

“உன்ரை கொப்பனை உவன் நடிகர்திலகம்தான் இயக்கத்தைக்கொண்டு மண்டையில போடுவிச்சவன்” எண்டு சொல்லிச் சொல்லியே வாள்வெட்டுத்துரையனின்ர மனிசிக்காரி தன்ர மகனை நடிகர்திலகத்துக்கு ஒரு பெருமெதிரியாக வளர்த்துவந்திருந்தா. பொடியன் இளந்தாரியாய் வந்தமூட்டத்தில இயக்கம் வன்னிக்குள்ள தானிருந்தது. யாழ்ப்பாணத்தில ஆமியோட சேர்ந்து மாற்றியக்கங்களும் செல்வாக்கோட இயங்கிச்சுது. வாள்வெட்டுத்துரையனின்ர பொடியன் இப்பிடியொரு மாற்று இயக்கத்தோட சேர்ந்து முன்னாலையும், பின்னாலையும் திரிஞ்சு ஒரு செல்வாக்கான ஆளாய் வந்திட்டான். எப்பிடியாவது நடிகர்திலகத்தைப் போட்டுத் தள்ளவேணுமெண்டு பிளான் பண்ணிக் கொஞ்சக்காலம் நடிகர்திலகம் போறவாற இடங்கள், நேரங்காலமெல்லாம் பக்காவாய் நோட் பண்ணிக் கொண்டு வந்தான்.

இந்தச் சங்கதி நடிகர்திலகத்துக்கு எப்பிடியோ தெரிஞ்சிட்டுது. ஆனால், நடிகர்திலகம் மெயின்ரோட்டில யிருக்கிற கேம்ப் கொஃஅஆஆஆஆஆஆஆ ஆமாண்டர் ஜெயவிக்கிரமவை நோட்பண்ணத் தொடங்கினான். பொழுது படேக்குள்ள ஒரு ஆறு ஆறரைமணிக்கு கொமாண்டர் ஜெயவிக்கிரம கேம்பிலயிருந்து ஒரு முக்கால் சைக்கிள்ள வெளிக்கிட்டு முச்சந்தியிலயிருக்கிற சென்றிப் பொயின்ற்ருக்குப் போவான். பிறகு அங்கயிருந்து ஒரு ஏழு ஏழரைக்குத் திரும்பிக் கேம்புக்கு வருவான். இது அநேகமாய் ஒவ்வொரு நாளும் நடக்கிற சங்கதி. இப்பிடிப் போய்வரேக்குள்ள கொமாண்டர் ஜெயவிக்கிரம ஒரு டாக் ப்ளு ரீசேட்டும் பச்சை ட்றவுசரும்தான் போட்டிருப்பான். இதையெல்லாம் வலு உன்னிப்பாய்க் கவனிச்ச நடிகர்திலகம் தானும் டாக் ப்ளுவில ரீசேட்டும், பச்சை ட்றவுசரும் போட்டுத் தன்ர சைக்கிள்ள வாள்வெட்டுத்துரையனின்ர பொடியன் கண்ணில படத்தக்கதாய் முச்சந்திக்குப்போய் அங்க நிக்கிற சிநேகிதங்களோட தனக்குத் தெரிஞ்ச அரசியலைக் கதைச்சுப்போட்டு நல்லா இருட்டினாப்போல திரும்பிவருவான். இப்பிடி நடிகர்திலகம் திரும்பிவரேக்குள்ள அவனை மண்டையில போட வேணுமெண்டு வாள்வெட்டுத்துரையனின்ர பொடியன் பிளான் பண்ணினான்.

அண்டைக்கும் பின்னேரம் நடிகர்திலகம் வழமையாப் போடுற டாக் ப்ளு ரீசேட்டும், பச்சை ட்றவுசரும் போட்டுக்கொண்டு சைக்கிளில வெளிக்கிட்டான். சாதுவாய்க் கடைக்கண்ணால நோட்டம் விடேக்குள்ள, வாள்வெட்டுத்துரையனின்ர பொடியன் சைக்கிள்ள பின்தொடர்ந்து வாறது தெரிஞ்சுது.

‘ம்...! மச்சான் இண்டைக்கு ஏதோ பெரிய பிளான் பண்ணுறார்போல’ எண்டு நினைச்சுக்கொண்டு ஒரு சலனமுமில்லாமல் முச்சந்திக்குப் போனான். நல்லாய் இருட்டும் வரைக்கும் அங்க நிண்ட ஆக்களோட சமகால அரசியல் கதைச்சான். கொஞ்சநேரத்தால கொமாண்டர் ஜெயவிக்கிரம சைக்கிள்ள வந்து முச்சந்திச் சென்றிப்பொயின்ரில நிண்ட ஆமிக்காரரோட கதைச்சிட்டுத் திரும்பிப்போகேக்குள்ள நடிகர்திலகமும் தன்ர சைக்கிளை எடுத்துக்கொண்டு அவனுக்குப் பின்னால போனான். அப்பிடியே போய் முதலாவது குச்சொழுங்கைக்குள்ளால சைக்கிளைத் திருப்பினான். கொமாண்டர் ஜெயவிக்கிரம நேர்றோட்டால போனான்.

வாள்வெட்டுத்துரையனின்ர பொடியன் நடிகர்திலகம் வழமையாய்ச் சைக்கிள்ள வந்து திரும்புற சந்தியில வானோட ரெடியாய்ப் பூவரசமரத்துக்குப் பின்னால மறைஞ்சு நிண்டான். றோட்டில ஆள் வாற அசுமாத்தம் தெரிஞ்சுது. மெல்லமெல்ல வெளியே வந்தான் ஆள் கிட்டடிக்கு வந்தோண்ண பக்கெண்டு றோட்டுக்குப் பாஞ்சு வாளை ஒரு ஓங்கு ஓங்கிறதுக்கிடையில ஆள் விலத்திட்டுது. அவனும் சளைக்காமல் வாளைத் திரும்பவும் ஓங்கிக்கொண்டோட அடுத்தடுத்து இரண்டுதரம் வெடி பறிஞ்சுது. வாள் தெறிச்சு நழுவ, துரையன்ர பொடியன் றோட்டில குப்புற விழுந்தான்.

அடுத்தநாள் ‘வாள்வெட்டுத்துரையனின்ர பொடியனை ராத்திரி ஆமி சுட்டுதாம்’ எண்டு ஊர்முழுக்கப் பரபரப்பாயிருந்தது. ‘அவன் மற்றப்பாட்டியெல்லோ? அவனையேன் ஆமி சுட்டது?’ எண்டு விசயந் தெரிஞ்ச சிலர் கேள்வியெழுப்பிச்சினம்.

‘படையினர்மீது மறைந்திருந்து தாக்குதல் நிகழ்த்த முற்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை’ என்ற தலைப்பில பேப்பரிலையும் நியூஸ் வந்தது. வாள்வெட்டுத் துரையனின்ர பொடியன் சேர்ந்தியங்கின மாற்று இயக்க ஆக்களையும் ஆமி அரெஸ்ற் பண்ணிக்கொண்டுபோய் விசாரணை நடத்திச்சுது.

“துரைராசா மனோகர் தன்ர தகப்பனை புலிகள் இயக்கம் கடத்திக் கொண்டுபோய்; கொலை செய்ததால புலிகள் இயக்கத்தைப் பழிவாங்கிறதுக்காக எங்கட கட்சியில சேர்ந்தியங்கப்போறன் எண்டுதான் வந்து சேர்ந்தவர். மற்றும்படி அவரைப்பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது சேர்” எண்டு அந்த மாற்று இயக்க ஆக்கள் அழாக்குறையாச் சொல்லிச்சினம்.

“இனி இந்த ஏரியாவுக்குள்ள உங்கட கட்சி அலுவலகம் இருக்கக்கூடாது” எண்டு கொமாண்டர் ஜெயவிக்கிரம அடிக்காதகுறையாய்க் கடும் ஓடர் போட்டான். அதோட அந்த மாற்று இயக்கக்காரர் பின்னங்கால் பிடரியில அடிபடக் கட்சி அலுவலகத்தை மூடிப்போட்டு ஓடிட்டினம்.

10

நடிகர்திலகத்தைப்பற்றி ஊருக்குள்ள நிறையக் கதையள் உலாவிக்கொண்டிருக்கு. அதுகளில் இருக்கிற உண்மை, பொய்யைப்பற்றி ஒருத்தருக்கும் தெரியாது. அதைப்பற்றி ஒருத்தரும் இதுவரைக்கும் கேள்வி எழுப்பிறேல்ல. நடிகர்திலகத்தைப்பற்றி ஒருத்தர் கேள்விப்பட்டதை மற்றவருக்குச் சொல்லி, அவர் இன்னொருத்தருக்குச் சொல்லி இப்பிடியே கதையள் சுழன்றுகொண்டிருக்கு. நடிகர்திலகத்தை நேரடியாகக் கேட்டால் மட்டும்தான் இந்தக் கதைகளில் இருக்கிற உண்மைபொய் தெரியவரும். நடிகர்திலகம் எங்கே? அவரை எப்பிடிச் சந்திக்கிறது எண்டு கேட்டால் அதுக்கும் ஒருத்தருக்கும் தெரியாது. ஆனால், அதுக்குமொரு கதையிருக்கு.

நடிகர்திலகத்தின்ர தமக்கையொருத்தி கமலநாயகி யெண்டு மல்லாவியில இருந்தவ. அவவுக்கு எழில்வாணியெண்டொரு பெட்டை. தகப்பன்காரன் கந்தையாப் பிள்ளையெண்டு மல்லாவி யூனியனில ஜீயெம்மாயிருந்தவர். அவர் முதலே மோசம் போட்டார். தாயும், மகளும்தான் மல்லாவியிலயிருந்தவை. சண்டை மும்முரமாய் நடந்துகொண்டிருக்கேக்குள்ள இயக்கம் ஆட்பிடிப்பில எழில்வாணியைக் கொண்டுபோட்டுது. பிறகு தாய்க்காரியும் புதுக்குடியிருப்பில இடம்பெயர்ந்திருக்கேக்குள்ள ஷெல் விழுந்து செத்திட்டா. சண்டை முடிஞ்சாப்போல கொஞ்சக்காலம் எழில்வாணி தடுப்பு முகாமிலயிருந்தவள். அவள் வெளியில வந்தாப்போல மனிசியையும், பொடியனையும் கனடாவுக்கு அனுப்பிப் போட்டுத் தனிக்கட்டையாயிருந்த நடிகர்திலகம்தான் அவளைக் கூட்டியந்து தன்னோட வைச்சிருந்தவர். அப்பதான் இந்தப் புலனாய்வுக்காரரின்ர தொல்லை ஆரம்பிச்சுது. நடுச்சாமத்தில போனெடுத்துக் கண்ட படி கதைப்பாங்கள்.

“அங்க வா! இஞ்ச வா! என்னோட படுக்கவா!” எண்டு ஒரே தொல்லையாயிருந்தது. அவளும் பொறுக்க முடியாமல் ஒருநாள் விசயத்தை நடிகர்திலகத்திட்டச் சொல்லியிருக்கிறாள்.

“இனி அவங்களாரும் ரெலிபோன் எடுத்து அங்க வா! இங்க வா! எண்டு கூப்பிட்டால், நீங்கள் கூப்பிடுற இடங்களுக்கெல்லாம் வந்தால் ஆராவது பாத்துப் பிறகு ஊருக்குள்ள சொல்லி விசயம் பரவினால் வெட்கமாய்ப் போயிடும். அதால எங்கட ஊரில இருக்கிற மணிக் குருக்கள் வீட்டடிக்குப் பொழுபட்டாப்போல வாங்கோ. ஒரத்தரும் காணமாட்டினம் எண்டு சொல்லி நைசாக் கதை. மிச்சத்தை நான் பாத்துக்கொள்ளுறன்” எண்டு நடிகர்திலகம் எழில்வாணிக்குச் சொல்ல, அவளும் ரெலிபோனெடுத்தவனோட நைஸாகக் கதைச்சு அவனைப் பொழுதுபட்டாப்போல மணிக்குருக்கள் வீட்டுக்கு வர வைச்சிட்டாள்.

மணிக்குருக்கள் ஏதோவொரு வாய்ப்புக் கிடைச்சுக் குடும்பத்தோட கனடாவுக்குப் போட்டார். அதுக்குப் பிறகு அவரின்ர வீடு வெறும் வீடாய்க் கிடந்தது. இந்தச் சண்டையெல்லாம் முடிஞ்சு வடக்கில வசந்தம் வந்தாப்பிறகு பலரும் கள்ளப்பொம்பிளையளைக் கொண்டுவாற இடமாய்ப் போச்சுது. அதால எழில்வாணி மணிக்குருக்கள் வீட்டை வரச்சொன்னவுடனை புலனாய்வுக்காரன் நம்பிட்டான். அவன் வந்து மணிக்குருக்கள் வீட்டுக்கு முன்னாலயுள்ள சந்தியில நிண்டு எழில்வாணிக்குக் கோலெடுத்தான். அவளும் நடிகர்திலகம் சொல்லிக்குடுத்தபடியே “நான் குருக்கள் வீட்டுக்குள்ளதான் நிக்கிறன். வாங்கோ” எண்டு சொன்னாள். அவனும் காஞ்சமாடு மாதிரிப்போனான்.

மறுநாள் காலமை அந்தப் புலனாய்வுக்காரனை குற்றுயிரும் குலையுயிருமாய் ஆமிக்காறர் வந்து தூக்கிக் கொண்டு போனாங்கள்.

அதுக்குப்பிறகு ஊர் பரபரக்கத் தொடங்கிட்டுது. அடுத்தநாள் மத்தியானம் ஆமிக்காறர் வந்து நடிகர்திலகத்தின்ர வீட்டை றவுண்டப் பண்ணிப் பாத்தாங்கள். வீட்டில ஒருத்தருமில்லை. வெறும் வீடாய்க் கிடந்தது. அக்கம்பக்கமெல்லாம் பிரட்டியெடுத்து விசாரிச்சாங்கள். ஒருத்தருக்கும் ஒண்டும் தெரியேல்ல.

இப்பவும் சிலர் கதைக்கினம், ‘நடிகர்திலகம் கனடாவுக்குப் போட்டார்’ எண்டு. இன்னும் சிலர்’ இல்லையில்லை. அவர் இந்தியாவில நிக்கிறார்’ எண்டு சொல்லினம். எல்லாம் ஒரே மர்மமாயிருக்கு.

11

நடிகர்திலகத்தை முன்பின் தெரியாதாக்கள் அவரைப் பற்றின கதையளக் கேட்டோண்ண, ஆள் எப்பிடி யிருப்பார் எண்டு தெரிஞ்சுகொள்ள ஆசைப்படுவினம். அவரோட தோற்றத்தை விளங்கப்படுத்தினால் ஒவ்வொருத்தர் ஒவ்வொருவிதமாய் ஊகிப்பினம். அதால எல்லோருக்கும்; தெளிவாக விளங்கிறமாதிரிச் சொல்லுறதெண்டால், அவர் இளமையில நடிகர் சுருளி ராஜனைப்போலயிருப்பார். கடைசிக்காலத்தில அதாவது அவர் மர்மமாய் மறைஞ்சுபோன நேரத்தில நடிகர் டத்தோ ராதாரவி மாதிரியிருந்தார். சினிமா நடிகர்களை எடுத்துக்காட்டி விளக்கினால் ஆருக்கும் ஈஸியாய் விளங்கும்தானே.

மிகவும் பரிதாபகரமான அவனது மரணத்திற்குச் சில மணிநேரம் முன்பாக, நான் அவனை ஒரே ஒரு முறை மட்டுமே, புகழ்வாய்ந்த பார்சிலோனா கிளப்பான பொக்கேசியாவில் பார்த்தேன். அப்போது அதிகாலை மணி இரண்டு. கூடுகை விருந்தினை, கடேக்வெஸ் சென்று முழுமைப்படுத்தும் விருப்பில், அவனைத் தம்முடன் அழைத்துச்செல்ல முயன்றுகொண்டிருந்த ஒரு இளம் ஸ்வீடானியக் குழுவினர் அவனைத் துளைத்துக்கொண்டிருந்தனர். அந்தக் குழுவில் பதினொரு ஸ்வீடானியர்கள் இருந்தனர்; அவர்களில் ஒருவரை, ஒருவர் வேறுபடுத்திச் சொல்வது மிகவும் கடினம்; ஏனெனில் அவர்கள் ஆண், பெண் எல்லோருமே, அழகாக, ஒரே சாயலாக, ஒடுங்கிய இடுப்பும் நீண்ட பொன்னிற முடியுமாகத் தோன்றினர். அவனுக்கு இருபது வயதுக்கு மேல் இருக்காது. அவனது தலையினை முழுவதுமாக மறைத்து, நீலக் கருஞ்சுருள்கள் நிறைந்திருக்க, அம்மாக்கள் நிழலிலேயே நடக்குமாறு பழக்கிய கரீபியர்களுக்கே உரிய வழுவழுப்பான வெளிறிய மஞ்சள் மேனியும் ஸ்வீடியப் பெண்களை, ஏன், சிலவேளைகளில் ஒருசில பையன்களையும் கூடக் கிறுக்குப் பிடிக்கச்செய்கிற அராபியக் கண்களும் கொண்டிருந்தான். அவர்கள் அவனை மதுவகத்தினுள், பொம்மை ஒன்றைக் கையில் ஏந்தி, அது பேசுவதாகக் குரல்கொடுக்கும் வென்ரிலாக்குயிஸ்ட்2 கலைஞரின் கைப்பாவையைப் போல் அமர்த்திவைத்து, அவனைச் சுற்றி நின்று ஊரறிந்த காதல்வரிப் பாடல்களை, அவற்றுக்கேற்ற தாளத்தில் கைகளைத் தட்டிக்கொண்டே பாடி, அவனைத் தம்முடன் வருமாறு தூண்ட, மீண்டும் மீண்டுமாக முயற்சித்தனர்.

பெருத்த அச்சத்தில், அவன், அவனுக்கேயான காரணங்களை விளக்கிச் சொல்ல முயன்றான். யாரோ ஒருவர் தலையிட்டு, அவனைத் தனியே விட்டுச் செல்லுமாறு கத்த, அந்த ஸ்வீடானியர்களில், சிரிக்கும்போது தள்ளாடுகிற3 ஒருவன் அவரோடு மோதினான்.

“அவன் எங்களுக்குத்தான் சொந்தம்,” என்று உரக்கக் கத்திய அவன். “நாங்கள், அவனைக் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்தோம்.” என்றான்.

நான் சிறிது நேரத்திற்கு முன்புதான், நண்பர்கள் குழுவுடன் பாலவ் இசை அரங்கத்தில் டேவிட் ஆய்ஸ்ட்ராக்கின் நிறைவுப் பாடல் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, அங்கு நுழைந்திருந்தேன். ஸ்வீடானியர்களின் ஐயுறவு வாதத்தில் எனக்கு உடலெங்கும் பற்றியெரிந்தது. அந்தப் பையன் சொன்ன காரணங்கள் நம்பிக்கை சார்ந்தவை. கடேக்வசின் நவீன மதுக்கூடம் ஒன்றில் ஆன்டிலியன் தீவுக்கூட்டப் பாடல்களைப் பாடுவதற்காகப் பணியமர்த்தப்பட்ட அவன், கடந்த கோடையில் ட்ரமான்டனாவால் வீழ்த்தப்படும் வரையில், அங்குதான் வாழ்ந்திருக்கிறான். ட்ரமான்டனாவின் இரண்டாம் நாளில் அவன் எப்படியோ அங்கிருந்து தப்பி, இனிமேல் ட்ரமான்டனா இருந்தாலும் அல்லது இல்லாமலிருந்தாலும் அங்கு திரும்பவும் செல்வதில்லையென்று தீர்மானித்ததோடு, அப்படி எப்போதாவது திரும்பிச் சென்றால், மரணம் அங்கே அவனுக்காகக் காத்திருக்கப்போவது நிச்சயமென்றும் நம்பினான். கோடையின் மிகை வெப்பம் மற்றும் அந்தக் காலத்திய காட்டமான கேட்டலான் மதுவகை, எல்லாமாகச் சேர்ந்து மனித இதயங்களில் தூவிய காட்டுவிதைகளின் விளைச்சலான அந்தக் கரீபிய நம்பிக்கையினை ஸ்காண்டிநேவியப் பகுத்தறிவாளர்களால் புரிந்துகொள்ள இயலாதுதான்.

வேறு எவரொருவரையும் விட நான், அவனை நன்றாகவே, புரிந்துகொண்டேன். கடேக்வஸ், கோஸ்டா ப்ரேவா4 கடற்கரை நெடுகிலும் அமைந்துள்ள மிக அழகிய நகரங்களில் ஒன்று என்பதுடன் மிகவும் நன்றாகப் பேணிப் பாதுகாக்கப்படுகிறவற்றில் ஒன்றுமாகும். இதில், அந்த நகரத்திற்கான ஒடுங்கிய நெடுஞ்சாலை, அடியற்றப் படுகுழி ஒன்றின் விளிம்பில் முறுக்கிச் செல்வதற்கும் மணிக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட கி.மீ வேகத்தில் ஓட்டுவற்கான கொஞ்சமும் ஆடாத ஆன்மபலமும் தேவைப்படுகிறதென்ற உண்மைக்கும் ஒரு இடமிருக்கிறது. பழைய வீடுகளெல்லாம் வெள்ளை வெளேரென உயரம் குறைந்தவையாக மத்தியத் தரைக் கடற்பகுதி மீன்பிடி கிராமங்களின் பாரம்பரியக் கட்டுமானபாணியிலிருந்தன. புதிய வீடுகள், அசல் இணக்கத்தினை மதிக்கின்ற, புகழ்பெற்ற கட்டுமான நிபுணர்கள் கட்டியவை. நகரத் தெருவை ஒட்டி மறுபக்கமாக அமைந்துள்ள ஆப்பிரிக்கப் பாலைவனங்களிலிருந்து வெப்பம் வீசுவதாகத் தோன்றும் கோடைக்காலத்தில், கடேக்வஸ், பாழாய்ப்போன பல்மொழிப் பேபல்5லாகத் தோற்றங்கொண்டு, ஒரு மூன்று மாதங்களுக்கு ஐரோப்பாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகளோடும் குறைந்த விலைக்கு விற்றுக்கொண்டிருந்த காலத்தில் ஒரு வீடு வாங்கும் பேறு பெற்றவர்களான அயல் நாட்டவரோடும் சொர்க்கத்தின் கட்டுப்பாடு 6 என்கிற அந்த ஊர்ப் பாரம்பரியம் காக்கும் விதிகளின் காரணமாகப் போட்டியில் மோதிக்கொள்வார்கள். ஆனால், கடேக்வஸ் மிக அதிக ஈர்ப்புடன் தோன்றும் இளவேனில் மற்றும் இலையுதிர்காலங்களில், பேய் போல் விடாப்பிடியாகத் துரத்திப் பற்றிப் பிடித்துக்கொள்ளும் ட்ரமான்டனா நிலக்காற்றின் பயங்கரமான நினைவிலிருந்து யாரொருவரும் தப்பமுடியாதென்றும் அந்தக் காற்றில் பைத்திய நோயின் விதைகள் கலந்திருப்பதாகவும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அங்கே ஏற்கெனவே பாடம் பெற்ற சில எழுத்தாளர்களும் கூறுகின்றனர்.

ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வாழ்க்கையில் ட்ரமான்டனா குறுக்கிடும் வரையில், மிகுந்த பற்றுதலுடன் அந்த நகரத்திற்கு வருபவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியத் தூக்கநேரத்தில், ஏதோ ஒன்று நிகழப்போவதான விவரிக்க இயலாத ஒரு முன்னறியும் உணர்வினால், அந்தக் காற்று வருவதற்கு முன்பாகவே நான் உணர்ந்தேன். எனது வாழியல் உணர்வுகள், கனமான பாரத்தால் கீழிழுக்கப்படுவதாக, எந்தக் காரணமும் இல்லாமலேயே, துயரமாக உணர்ந்ததோடு, அப்போது பத்து வயதுக்கும் குறைவான எனது இரு குழந்தைகளும் இணக்கமற்ற எதிரிப் பார்வையோடு வீட்டைச் சுற்றிச்சுற்றி என்னைப் பின்தொடர்ந்து விரட்டுவதாக ஒரு நினைவு. சிறிது நேரத்திலேயே கதவு சன்னல்களை இழுத்துக் கட்டுவதற்கான சில கடற்கயிறுகள் மற்றும் கருவிப் பெட்டியும் கையுமாக அங்கு வந்த வாயில் காவலர் எனது சோர்வினைக் கண்டு வியப்பேதும் கொள்ளவில்லை.

“இது ட்ரமான்டனா! இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளாக இங்கே வந்துவிடும்.” என்றார், அவர். மிக வயதான அந்தக் கடலோடி மனிதர், முன்னர் எப்போதும் அணிந்த பாணியிலான அவரது நீர்க்காப்புச்சட்டை, தொப்பி மற்றும் புகைக்குழாயோடு இந்த உலகத்தின் அனைத்து உப்புகளாலும் பொரிந்துபோன மேனியையும் கொண்டிருந்தார். அவரது ஓய்வு நேரத்தில், பல போர்களில் கலந்து வென்ற படைத்துறை வீரர்களுடன் சதுக்கத்தில் உருட்டுப் பந்து விளையாடுவார். அந்தக் கடற்கரை நெடுகிலும் அமைந்துள்ள மதுவகங்களில் பசியைத் தூண்டும் மது வகைகளை அருந்துவார். அவருடைய படைத்துறை மனிதர்களின் கேட்டலான் மொழியால் எந்த மொழியினரும் புரிந்துகொள்ளும்படியான வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருந்தது. இந்த பூமிக் கிரகத்திலுள்ள அனைத்துத் துறைமுகங்களும் அறிமுகமென்பதில் அவருக்கு மிகுந்த பெருமிதம். ஆனால், அவருக்கு உள் நகரங்களைத் தெரியாது. “பிரான்ஸைப் போலப் புகழ் கொண்டதாக இருந்தாலும் அந்தப் பாரிஸைக் கூட எனக்குத் தெரியாது.” என்பார், அவர். கடலில் செல்லாத எந்த வாகனத்தின் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக முதுமையின் பாதிப்பு அதிகமாகி, அவரால் வெளியே செல்லமுடியாமலாகி விட்டது. அதனால், அவரது பெரும்பகுதி நேரத்தையும், காலமெல்லாம் அவர் வாழ்ந்த அதே மகிழ் விருப்புடன், காவலர் அறையிலேயே கழித்தார். ஒரு தகரப் பாத்திரத்தைச் சாராய விளக்கில் சூடுபடுத்தி, அவருக்கான உணவைச் சமைத்துக்கொண்டார். ஆனால், ஒப்பற்ற கேட்டலான் சமையல் முறையின் சுவைமிக்க உணவு வகைகளை வழங்கி, எங்களை மகிழ்ச்சிப்படுத்த அவருக்கு, அவை மட்டுமே போதுமாக இருந்தன. விடிகாலையில் அவர் ஒவ்வொரு தளமாகச்சென்று, அங்குத் தங்கியிருப்பவர்களைக் கவனிக்கத் தொடங்கி விடுவார். நான் இதுவரை சந்திருத்திருந்த மனிதர்களில், கேட்டலோனியர்களின் தன்னார்வப் பெருந்தகைப் பண்பும் மேற்பூச்சற்ற மென்மையும் கொண்ட மிக மிக இணக்கமிக்கவர்களில், அவரும் ஒருவர். அவர் மிகக் குறைவாகவே பேசினாலும், அவரது பாணி, சொல்லவந்ததை நேரடியாகக் குறிப்பாகச் சொல்வதாக இருந்தது. செய்வதற்கு வேறெதுவும் வேலையில்லாமலிருக்கும்போது, அவர், கால்பந்துப் போட்டிகளின் வெற்றிதோல்விகளை முன்கணிக்கும் படிவங்களை நிரப்பிக்கொண்டிருப்பார்; ஆனால் அவர், அநேகமாக அவற்றை அனுப்புவதேயில்லை.

அன்று அவர் பேரிடரை எதிர்நோக்கி, கதவுகளையும் சாளரங்களையும் பாதுகாப்பாகக் கட்டிக்கொண்டே, எங்களிடம் ட்ரமான்டனாவை, வெறுக்கத்தக்க ஒரு பெண்ணைப் போலில்லாமல், அந்தப் பெண் இல்லாவிட்டால் அவரது வாழ்க்கையே அர்த்தமிழந்து போவதுபோல் பேசினார். கடலோடி ஒருவர், நிலக்காற்று ஒன்றுக்கு இப்படிப் புகழ் பாடுவது எனக்குப் பெரு வியப்பாக இருந்தது.

“இது பழங்காலத்தவற்றில் ஒன்று,” என்றார், அவர். மாதங்கள் மற்றும் நாட்களால் அல்லாமல், ஆண்டுகள், ட்ரமான்டனா வீசிய எண்முறைகளால் கணக்கிடப்படுவதான தோற்றத்தை அவர் ஏற்படுத்தினார். “கடந்த ஆண்டு, இரண்டாவது ட்ரமான்டனா வந்து, இரண்டு மூன்று நாட்களில் குடலழற்சி ஏற்பட்டது.” என்று ஒருமுறை என்னிடம் சொன்னார். இதுவே ஒவ்வொரு ட்ரமான்டனாவுக்குப் பிறகும் ஒருவர் பல ஆண்டுகளுக்கான முதுமையைப் பெறுகிறாரென்ற அவருடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ட்ரமான்டனா மிக மோசமானதென்றும் நம்மை வசப்படுத்திவிடுகிற வருகையாளரென்பதாகவும் அவரை ஆட்டிப்படைக்கும் நம்பிக்கை அப்படியொரு வலுவுடையது; அதைப்பற்றித் தெரிந்துகொள்கிற பெருவிருப்பத்தை நமக்குள் அவர் நிரப்பிவிடுகிறார்.

நாங்கள் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்க வேண்டியதாக இல்லை. அவர் கிளம்பிச் சென்றதுமே, வீளை ஒலி ஒன்று சிறிது, சிறிதாக வலுவாகித் தீவிரமாகி, நிலநடுக்கத்தின் இடியோசைக்குள் கரைந்துபோனதை நாங்கள் கேட்டோம். பின்னர் காற்று வீசத் தொடங்கியது.

முதலில் இடைவெளி விட்டுவிட்டு, அலையலையாகப் பின்னர் அதுவே அடிக்கடி நிகழ்வதாகி, அவற்றில் ஒன்று அப்படியே அசையாமல், கணநேர இடைவெளிகூட இல்லாமல், எந்த இடைமூச்சும் எடுக்காமல், அப்படியே நிலைத்துநின்றதோடு தீவிரமும் கொடூரமும் கொண்ட ஒரு மீமிகைத் தன்மைகொண்டதாகத் தோன்றியது. கரீபிய வழக்கத்துக்கு மாறாக, எங்கள் குடியிருப்பு, மலைகளைப் பார்ப்பதாக அமைந்திருந்தமை, கடலை நேசித்த பழங்காலப்பாணி கேட்டலோனியர்களின் அந்த வித்தியாசமான முன்னுரிமை, அக்கறையெடுத்துக் கவனிக்காமலிருந்ததால் ஏற்பட்டிருக்கலாம். அதனால், காற்று எங்கள் தலையை வீழ்த்திவிடுவதுபோல மோதிச் சாளரக்கதவுகளை இழுத்துக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்துவிடுவதாகப் பயமுறுத்தியது.

எனக்குள் அதிக ஆர்வமூட்டித் துளைத்தது எதுவெனில், பொன்னிறக் கதிரும் மாசுமருவற்ற வானமுமாகக் கடல்வெளி மீண்டும் காணமுடியாத ஒரு அழகுடன் விளங்கியதுதான். அதனாலேயே கடலைக் காட்டுவதற்காகக் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதென முடிவெடுத்தேன். மெக்சிகன் நிலநடுக்கங்கள், கரீபியன் புயல்களுக்கிடையே வளர்ந்தவர்கள் தானே, அதனால் பெரிதோ, சிறிதோ, சாதாரண ஒரு காற்றுக்காகக் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லையெனத் தோன்றியது. வாயிற் காவலரின் அறையை முன்பாதம் ஊன்றிச் சத்தமில்லாமல் கடந்தபோது, அவர் பீன்சும் சுவைச்சாறுமாக ஒரு உணவுத் தட்டத்தின் முன் பிடித்துவைத்த சிலை போல் அமர்ந்திருந்ததைச் சாளரம் வழியே கண்டோம். நாங்கள் வெளியே வந்ததை, அவர் கவனிக்கவில்லை.

வீட்டின் வெளிச்சுற்றில் காற்றுப்படாத பக்கமாக நடக்கும் வரையில் சமாளித்துக்கொண்டோம்; ஆனால், காற்றுத் திசையில் திரும்பிய மூலைக்கு வந்தபோது, காற்றின் திசையில் காற்றோடு காற்றாக அடித்துச் சென்றுவிடாமலிருக்க அருகிலிருந்த விளக்குக் கம்பத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளவேண்டியிருந்தது. எங்களை மீட்பதற்கு அக்கம்பக்கத்தவர் சிலரை அழைத்துக்கொண்டு வாயிற்காவலர் வரும்வரையில், அப்படியே நின்று, அத்தனை கலவரத்துக்கிடையிலும் அசைவற்றுத் தெரிந்த தெளிவான கடலைப் பார்த்து வியந்துகொண்டிருந்தோம். பின்னர், இறுதியாகக் கடவுள் மீது பாரத்தைப் போட்டு, வீட்டுக்குள் அடைந்து கிடப்பதே அறிவுள்ள ஒரே செயலென ஆற்றிக்கொண்டோம். கடவுள் எப்போது வழிவிடுவாரென்பது பற்றித்தான் யாருக்கும் எதுவும் தெரியாமலிருந்தது.

இரண்டு நாட்கள் முடிகின்ற நிலையில், அந்த பயங்கரமான காற்று ஒரு இயற்கைச்செயல் அல்லவென்றும் எங்களை நோக்கி, எங்களை நோக்கி மட்டுமே யாரோ ஒருவரால் தனிப்பட்ட பகையினால் ஏவப்பட்டதென்றும் எங்களுக்குத் தோன்றியது. வாயிற்காவலர் இரண்டு நாளிலும் பலமுறை எங்களை வந்து பார்த்துக்கொண்டார்; எங்கள் மனநிலை குறித்துதான் அவர் அதிக அக்கறை காட்டினார். அந்தப் பருவகாலத்தில் கிடைத்த பழங்கள் மற்றும் மிட்டாய்களைக் குழந்தைகளுக்காகக் கொண்டுவந்து தந்தார். செவ்வாய்க்கிழமை மதிய உணவுக்கு, கேட்டலோனிய சமையலின் தலைசிறந்த முயல் மற்றும் நத்தைக்கறி தந்து உற்சாகப்படுத்தினார். அதை அவர், அவருடைய தகரப் பாத்திரத்தில்தான் சமைத்திருந்தார். அத்தனை திகிலுக்கு மத்தியில் அது ஒரு பெருவிருந்தாகத்தான் அமைந்தது.

காற்றைத் தவிர வேறு ஏதும் நிகழாத புதன்கிழமைதான் என் வாழ்க்கையிலேயே மிக நீண்ட நாளாக அமைந்தது. ஆனால், அது விடியலுக்கு முன்பான இருட்டைப் போன்ற ஒன்றாகத்தானிருக்கவேண்டும்; ஏனென்றால், நடு இரவுக்குப் பின் நாங்கள் எல்லோரும் ஒரேநேரத்தில் ஒருசேர, மரணத்தின் முன்பு மட்டுமே நிகழக்கூடிய அமைதியான முழுமையான அசைவற்ற நிலையால் மூச்சுத் திணறி விழித்தெழுந்தோம். மலையைப் பார்த்துநின்ற மரங்களில் ஒரு இலை கூட அசையவில்லை. அதனால், நாங்கள், காவலரின் அறையில் விளக்கு எரிவதற்கு முன்பாகவே வெளியே சாலைக்கு வந்ததோடு, விடிவதற்கு முந்தைய வானத்தை அதன் ஒளிரும் அனைத்து விண்மீன்களுடன், பளபளத்துக்கொண்டிருந்த கடலையும் பார்த்து மகிழ்ந்தோம். அப்போது ஐந்து மணிகூட ஆகவில்லையென்றாலும், பல பயணிகளும் அந்தப் பாறைபடிந்த கடற்கரையில், விட்டு விடுதலையான உணர்வினைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். மூன்று நாள் தவம் முடித்த பாய்மரப் படகுகள், பாய்களை விரித்தன.

நாங்கள் வெளியே சென்றபோது, காவலரின் அறை இருண்டிருந்ததின் மீது எந்தவித கவனமும் கொள்ளவில்லை. ஆனால், வீட்டுக்குத் திரும்பும்போது, கடலைப் போலவே பொழுதும் பளபளக்கையில் அவரது அறைமட்டும், அப்போதும் இருண்டிருந்தது, எனக்கு வித்தியாசமாகத் தோன்றவே, கதவை இரண்டு முறை தட்டினேன்; பதில் எதுவும் வரவில்லை. அதனால், கதவைத் தள்ளித் திறந்தேன். எனக்கு முன்பாகவே குழந்தைகள் பார்த்துவிட்டார்கள் போலும்; திகிலில் அலறிக் கூச்சலிட்டனர். கூரையின் நடுவிட்டத்தில் தொங்கிய தூக்குக் கயிறு கழுத்தை இறுக்கிய நிலையில், சிறந்த மாலுமி விருதுகள் மார்புப் பகுதியில் குத்தப்பட்டிருந்த கடலோடி மேற்கோட்டுடன், அந்த வயதான காவலரின் உடல், அப்போதும் வீசிக்கொண்டிருந்த ட்ரமான்டனாவின் இறுதிக் காற்றலையில் ஊசலாடிக்கொண்டிருந்தது.

விடுமுறையின் மத்தியில், இழந்துவிட்டதான ஏக்கத் துயரம் ஏற்படப்போவது தவிர்க்கமுடியாததென உணர்ந்ததுடன், இனிமேல் ஒருபோதும் இங்குத் திரும்ப வரப் போவதில்லை என்ற மாற்றமுடியாத தீர்மானத்துடன், திட்டமிட்டிருந்ததற்கும் முன்பாகவே நாங்கள் அந்த நகரத்தை விட்டுக் கிளம்பினோம். பயணிகள் நகரத் தெருக்களுக்குத் திரும்பி வந்திருந்தனர். ஓய்வு பெற்ற போர் வீரர்கள் ஒன்றின் மீது ஒன்றினை மோதவிடும் உருட்டுப் பந்து விளையாட மனமின்றிப் போனதால், வெறிச்சிட்ட சதுக்கத்தில் இசை கேட்டது. தாக்குப் பிடித்த நண்பர்கள் சிலர், ஒளிமிக்க ட்ரமான்டனாவின் இளந்தென்றல் பொழுதில் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கியிருப்பதை ‘கடல்நேரம்’ மதுவகத்தின் தூசிபடிந்த சாளரங்கள் வழியாகக் கண்டோம். ஆனால், அவை எல்லாமே கடந்த காலமாகிவிட்டன.

அதனால்தான், பொக்காசியோவின் அந்த விடிகாலைத்துயர்ப்பொழுதில் கடேக்வசுக்குத் திரும்பப் போகமாட்டேனென்று அடம்பிடிக்கும் ஒருவரின், கண்டிப்பாக இறந்துவிடுவோமென்ற பேரச்சத்தினை, என்னைப் போல வேறு எவரும் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், ஆப்பிரிக்க மூடநம்பிக்கைகளின் பிடிமானங்களிலிருந்து அவனை விடுவிப்பதான ஐரோப்பியத் தீர்க்கத்துடன் அவனை இழுத்துக்கொண்டிருந்த ஸ்வீடானியர்களைத் திசைதிருப்ப எந்த வழியுமில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒரு பகுதியினரின் கைதட்டல் மற்றும் உற்சாகக் கூச்சலில் அவர்கள், கடேக்வசுக்குச் செல்லும் நீண்ட பயணத்துக்கு அந்த மிகவும் பிந்திய இரவு நேரத்தில் கிளம்பத் தயாராகவிருந்த, குடிகாரர்கள் நிரம்பிய வேனுக்குள் அவனை உதைத்து ஏற்றினார்கள்.

மறுநாள் காலையில் தொலைபேசிக்குரல் ஒன்று என்னை எழுப்பியது. விருந்திலிருந்து திரும்பி வந்தபோது சாளரத் திரையினை இழுத்து மூட மறந்திருந்தேன்; அப்போது என்ன நேரமென்று தெரியவில்லையென்றாலும், படுக்கையறை ஒளிமிக்க கோடை வெளிச்சத்தில் நிரம்பியிருந்தது. தொலைபேசியில் ஒலித்த கவலைக்குரலை, என்னால் அப்போதைக்கு இனம் காணமுடியவில்லையென்றாலும், அது என்னைத் தூக்கத்திலிருந்தும் தட்டியெழுப்பிவிட்டது.

“நேற்று இரவு அவர்கள் கடேக்வசுக்குக் கொண்டு சென்ற பையனை உங்களுக்கு நினைவிருக்கிறதா?”

எனக்கு வேறெதுவும் கேட்கவேண்டியிருக்கவில்லை. நான் நினைத்ததை விடவும் அது மிகமிக மோசமானது. கடேக்வசுக்குத் திரும்பச் செல்வதை நினைத்து நடுங்கிய அந்தப் பையன், அறிவு மயக்கத்திலிருந்த அந்த ஸ்வீடானியர்களின் கணநேரக் கவனமின்மையைப் பயன்படுத்தி வேகமாகச் சென்றுகொண்டிருந்த அந்த வேனிலிருந்தும் அந்தப் படுகுழிக்குள் பாய்ந்துவிட்டிருக்கிறான்.

குறிப்புகள்

(1) ட்ரமான்டனா - ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கோடைகாலத்தில் வீசும் வடதிசை நிலக்காற்று. இக்காற்று மரணத்தைச் சுமந்து வருவதான ஒரு நம்பிக்கை ஸ்பெயினில் நிலவுகிறது.

(2) வென்ரிலாக்குயிஸ்ட் - Ventriloquist

(3) சிரிக்கும்போது தள்ளாடுபவன் - Weak with Laughter என்னும் மரபுத்தொடர்

(4) கோஸ்டா பிரேவா - கேட்டலோனியா நாட்டிலுள்ள கடற்கரை Costa Brava

(5) பேபல் - Babel எபிரேய மொழியில் பாபிலோனியா பேபல் எனப்படுகிறது.

(6) சொர்க்கத்தின் கட்டுப்பாடு - Control of Paradise, செல்லப் பிராணிகள் வளர்ப்பு, நெகிழிப் பயன்பாடு, சூழல் பாதுகாப்புக்கான சிறப்பு ஏற்பாடு, சுற்றுலா நகரங்களில் அழகு கெடாமல் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கைகள் போன்றவை.

இக்கதையின் ஆங்கிலப் பிரதி Strange Pilgrims (knopf, 1993) pdf - இல் உள்ளது.

மடச்சாம்பிராணி

நிறைய நேரங்களில் ச்சும்மா சிவனேயென்றுதானே தொங்குகிறது
உருண்டு பொரளட்டுமேயென ஆரம்பித்தது
எனது ஒரு கையை எனது இன்னொரு கையோடு
மோத வைக்கும் இந்தச் சொகம்
எப்படியோ தொடங்கி விடுவேனா என்கிறது இது
தொல்லையைப் பிடித்துத் தோளில் போட்ட கதைதான்
இன்றைக்கும் ஆரம்பித்துவிட்டது பிடித்துப் பிதுக்காமல் என்னை விடாது
கண் மூடி கண் திறப்பதற்குள்ளாக வேலையைக் காட்ட
கொலம்பஸ் ராட்டினத்தின் ஒரு சைடு தூக்குமே அப்படியே
மெது மெதுவாக வலது தூக்கியது
வலது சரியச் சரிய அதே ஏத்தத்திற்கு இந்தப் பக்கம் இடது தூக்கியது
பாம்பு கிடக்குமே அது போல கிடந்து திடீரென முடிச்சு போல குழம்பியது
எந்நேரமும் இரண்டும் சரி மல்லுக்கு நின்று
என் மண்டைக்குள் தான் எப்பொழுதும் கொழ கொழவென்ற சத்தம்
சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் அனைவருக்கும்
பற்பசை விளம்பரத்தில் நடிப்பவருக்கு வாயில் ஒரு மினுக் வந்து போகுமே
அந்த மினுக் வந்து மறைந்தது
ஆளுக்கொரு மடச்சாம்பிராணியை வாயில் ஏந்திப் பிடித்திருந்தனர்
கண்டும் காணாது இருந்தவாறு
வேலையில் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த கைகள்
உஆ உஆ யென என் வாயையுமே சேர்த்து வாடகைக்கு எடுத்திருந்ததால்
அங்கு சுவாரசியத்திற்கெல்லாம் ஒரு சுணக்கமுமில்லை
அம்மா உளையுதே அய்யா வலி உசிர் போகுதேயென்ற இரவுகளில்தான்
கையிருந்த ஏரியா வழி ஒன்று கசிய
சொகத்தின் விளிம்பாகையால் அப்படித்தான் வழுக்குமென
மனச்சொஸ்தம் வந்து யாரும் பார்க்காத நேரம் அதையும் எம்சீல் பூசி
அடைத்தது
காலம் ரொம்ப கடந்துவிட்டபிறகு எனது கைகளை இன்று கவனிக்கிறேன்
வேறு இரண்டு பேருடையதை ஒட்டி வைத்தாற் போலயிருந்தன
சொல்லாத வேறு எதையோ மும்முரமாகச் செய்துகொண்டிருந்தன
அதற்காக எல்லாம் யாரும் இந்த மடச்சாம்பிராணியை
நடு ஹாலில் வைத்துப் பவுடர் அடிப்பதை நிறுத்திவிடவேண்டாம்
அதது அது பாட்டுக்கு நடக்கட்டும்
எல்லாருக்குமிருப்பது இரண்டு கைகள் தான் என்றாலும்
எனக்கு மட்டுமேயது எண்ணிக்கைச் சுத்த இரண்டு
இந்தப் பக்கம் ஒன்று அந்தப் பக்கம் இன்னொன்று
ஈஈஈஈஈஈஈஈஈஈ...யென நானுமே
கும்பலோடு கும்பலாக வந்து கும்மியடிச்சால் போச்சு.

கொட


ஒரே குடையில் முட்டிக்கொண்டு நிற்பதுபோல்
தம்பியும் நானும்
ஒரே முலையில் பால்குடித்தோம்
கடித்திழுக்க முடியாதபடி
விறைத்திருந்தன குடையின் காம்புகள்
நீருக்குள் படகாக இருந்த உருளிகள்
தலைகீழாய்க் கரையேறிக்
குடையாகிக் கொள்கிறது
எழுத்துப்பிழைகளைத் திருத்திக்கொள்ளாதவரை
எவ்வளவு பெரிய ‘குடை’யானாலும்
நனைந்துகொண்டுதானிருப்பீர்கள்
இல்லையே,
குடையென்று எழுதினால் விரியும் அதேதான்
பேச்சுவழக்கில் ‘கொட’ என்றாலும் விரிகிறது
அதைச்சொல்லி ஒன்றுமில்லை
அந்தக் கைத்தடியில் அப்படியொரு பொத்தானைக் கண்டறிய
நமக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கிறது.

பளிச்சென்ற தாமிரப் பற்களுக்கு


நீட்டிய விரல்கள்
தோட்டாக்களென வியனோக்கிப் பாய்கிறது
அவர்களால் மேலும் சில சப்தங்களை
செலவுசெய்ய முடிந்ததே தவிர
குலுங்கும் வயிற்றை ஒன்றும் செய்யமுடியவில்லை.
விரட்டுவதற்கு ஆரம்பித்தவர்கள்
பிற்பாடு சிரிப்பை அடக்கினாலே போதுமென்றாகினர்
வயிறு வலிக்க,
வாய் நோக,
பற்கள் தெறிக்க
தரையில் விழுந்து புரள்வதைக் கண்டு
உத்தரவிட்ட அதிகாரிகளில்கூட
ஒருசிலருக்கு
பொத்துக்கொண்டுதான் வந்தது
முக்கால்வாசி ஜனத்தொகை மூர்ச்சையான பின்னும்
சிரிப்பலைகள் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது
இவ்விளம்பரம் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி
பார்த்தோரெல்லாம் ‘வாய்விட்டுச் சிரித்தனர்’
இவ்வளவுக்கும் காரணமானவன் எங்கே
அவன்தான் முதலில் ஆரம்பித்தவன்
அவனையும் குறைகூற இயலாதுதான்
பேச்சுவார்த்தை என்றழைத்துவந்து
அவ்வளவு பெரிய துப்பாக்கியை நீட்டினால்
யாருக்குத்தான் சிரிப்பு வராது.

திரி ஊதும் பூமி


முகம் கருகிய திரியைத் தூக்கியெறிந்ததுதான்
பெருந்தவறு
வானம்வெட்டும் சமயம் பார்த்து
துணிகாயப்போட்டவர்களைப் பயமுறுத்தும்
அதுதான்
ஊருக்குப் பொதுவாய் மாட்டிவைத்த மின்விளக்கு
ஒருவேளை எண்ணெய் தீர்ந்துவிட்டதோவென நிரப்புவதற்கு
உயரமான என்னை அழைத்தார்கள்
வரையப் பழகுவதாய்
விட்டத்தில் கோணல்மாணலாய் கோடு வரைவதும்
பின் அழிப்பதுமாய்
விளையாடிக்கொண்டிருந்தவனிடம்
திரியை நன்றாக நிமிர்த்திவிட்டு
சீக்கிரம் இறங்கி வா வென்று
எவ்வளவோ முறை அழைத்துவிட்டோம்
இப்போது வீட்டுக்குள் சரளமாய்
பேசிக்கொண்டிருந்த டியூப்லைட்டும்
திக்க ஆரம்பிக்கிறது
என் செய்வேன்
நம்பித்தானே நடுவீட்டில் மாட்டிவைத்தோம்
கொளுத்திய விளக்கு
காற்றில் முங்கியெழுவதைப்போல்
தன் கழுத்தையும் அசைத்துப் பார்க்கிறது
கொண்டைச்சேவல்
விளக்கினுள் உபரியாக விஞ்சிய
ஒளியை அள்ள
கைகள் போதவில்லை,
நேரம் ஆக ஆக
அறைமுழுதும் வழிந்தோடும் மெழுகுவர்த்தியை
மின்சாரம் வந்ததென ஓங்கி அறைகிறோம்
மிகுந்த எதிர்பார்ப்போடு
நெருங்கிய விட்டில்
வேறுவழியின்றி
அணைந்த தீக்குச்சியின் கரியை அள்ளி
முகத்தில் பூசிக்கொண்டு
முகம் கருகியதாய் கீழே விழுந்தது.

ஊர்ந்துபோகும் பருவம்


இளைஞனாக இடையில் நுழைந்ததாக
வசவுகள் வாங்கியபடி கடைசியில் வந்து நிற்கிறது குழந்தை
அதன் கன்னத்தைக் கிள்ளி
கையிலொரு மிட்டாயைத் திணிக்கிறாள் செவிலி
அது சப்பிக்கொண்டே வரிசையில் மெதுவாக
முன்னேறுகிறது
மேலும் முன்னே செல்லும் மூத்தவர்களை
வேகமாக நகரச்சொல்லி சத்தமிடுகிறது
வரிசையின் முதல் ஆளாக இருமிக்கொண்டே நிற்கும்
வயதானவரிடம்
மருந்தைத் தரும்போதுதான் பார்க்கிறாள்
தான் திணித்த மிட்டாயை
கிழவன் சூப்பிக்கொண்டிருப்பதை
அதைப்பிடுங்கி மீண்டும் அதே குழந்தையிடம்
ஒப்படைப்பதற்காகச் சென்றாள்
அதை அங்கே காணவில்லை
‘வரிசையென்பது முன்னோக்கித்தானே’
குழப்பம் அடங்காதவள்
இந்த மிட்டாய் எப்படி உன்கையில் வந்ததென
அந்த குழந்தையிடமே கேட்டாள்.

1

கொமட்டல் எழுப்பக்கூடிய அழுக்கடைந்த மக்குவாடைதான் அறைமுழுவதும் மண்டிக்கிடந்தது. அங்கும் இங்கும் இறைந்து கிடக்கும் குப்பைகளுக்கு மத்தியில் கிடந்த ‘முப்பிடாதி’ கைகள் ரெண்டையும் முட்டுக்கிடையில் கொடுத்தபடி முனங்கிக்கொண்டு அரை கிறக்கத்தில் இருந்தான்.

சன்னமாகத் திறந்திருந்த சன்னல் ஒன்றின் விளிம்பில், நூலாம்படை மெல்ல ஆடிக்கொண்டிருந்தது. சாமத்தில் வந்தடங்கும் வறட்டலறல், இப்போது அக்கம்பக்கத்தில் கொஞ்சம் பழக்கப்பட்டிருந்தது. நாள் முதல் ரெண்டில்
இருந்த கெதி இல்லை. அடிவயித்து கேவல்தான் கையிருப்பு.

கவிந்த இரவின் பிடியில் அவனைப் பிணைக்கும் கனவு இன்றும் வரத்தான் போகிறது. அடர்ந்த நாள்பட்ட நோவின் வாசத்தோடு. திட்டித்திமிறிய முப்பிடாதியின் பல வசைகளையும் சகித்தபடியேதான் போன வாரம் மாரி வந்து வம்படியாக அவனை வெளியே இழுத்து வந்தான். முளைப்பாரி எடுத்துவரும் கூட்டம் திரள் திரளாக முப்பிடாதியைக் கடந்து போனது. கதம்பப்பூச்சரம் சூடி நிமிர்ந்து வருபவர்கள் மீது வெக்கை அனல் அடிக்க தோள்ப்பட்டையில் இருந்து வகுடெடுத்தபடி ஓடியது வேர்வை. வேர்வையும் கதம்பப்பூவும் ரசமான வாசத்தை பெண்களின் மேலெல்லாம் படரவிட்டிருந்தது. மாரியின் கையை உதறிக்கொண்டு, வீட்டுக்குள் விழுந்தெழுந்து போய் கதவடைத்துக் கொண்டான் முப்பிடாதி. இருந்தும் அவனோடு பின்தொடர்ந்து வந்த வாசம் களைந்த நினைவுகளைச் சிதைத்தபடி ஒரு கணம் சடுதியில் முயக்கத்தின் சம்போக நெடியாக நிலைகுத்தி நின்றது. அதை அவன் புலன் உணர உடல் விறைப்பு கொண்டது. அதை தடுப்பதற்காக கைலியை சுருட்டிமூடியும் தலையணையில் அழுத்தி முகம் புதைத்தும் கூட முன்பை விட தீவிர கதியில் அடர்ந்துகொண்டேதான் வந்தது.

உருண்டு புரண்டவன் கைகள் நெகிழ்ந்து கிடந்த கைலியை ஒதுக்கி தொடையிடுக்கில் புரளத் துடங்கியது. உடல் பொங்கி விம்மியவன்,

“அப்புடி உனக்கு கறி கேக்குதோ… ம்… கேக்குதோ” யென கைகளை, தரையில் அறைந்தபடி அலறினான்.பின் அதுவே கதியத்து கேவலாக மிஞ்சியது.

2

ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு மணமுண்டு. களம் நிறைந்த நெல் மணமாக பரதவர் நிலத்தில் மீன் மணமாக தன் வாழ்வை அந்த ஊர் எதன் வழி இயக்குகிறதோ, அதன் வழியே அந்த மணம். இந்த மக்களுக்கு அதிகம் பழகிப்போன மணம் ஒன்று உண்டு. ஊர் பிரிந்து போனவர்களின் நினைவுகளில் தனதூர் வரும்போதெல்லாம் நெஞ்சுக்கூட்டில் நிறைந்துகொள்வதும் அந்த மணம்தான். பிரதான வழிப்போக்கர்கள் தவிர்த்து இராசபாளையம் - தென்காசிச்சாலையை கடந்து போகும் எவருக்கும் நெடுஞ்சாலையில் இருந்து மூன்று கிலோமீட்டர் உள் ஒதுங்கியபடி தளவாய்புரம் என்றொரு ஊர் இருப்பதை அறிந்திருக்க நியாயமில்லை. இருந்தும், அதைச்சுற்றியுள்ள ஊர்களின் ஜீவனை குறுக்கும் நெடுக்குமாக நூல் இழைத்தபடி இருப்பது இதுதான். அந்த இழைப்பில் ஊடும் பாவுமாக நிறைந்த மணம்தான் இந்த அறை முழுவதும் கலந்திருக்கிறது.

நாடா நூற்காத, பாகம் சேராத, கண்டுகளை பொதித்து வைத்து கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்ட முழுமை பெறாத பாவாடை துணிவாசம்! பழனி நாடார் கடையில்
நிறைந்த அந்த வாசத்தை இழுத்தவாறே முத்து தொடர்ந்தாள்.

“பதினாறு வகை கூட்டும் வைச்சு, பக்கத்துல கொஞ்சம் நரகலும் வப்பா மகேசு அவ! பழனி அண்ணாச்சி மாரியெல்லாம் கெடயாது அவுக வீட்டம்மாவுக்கு கொணங்காணாது!”

மகேசு பதிலேதும் பேசாது நாடாக்களைக் கணக்குப்பாத்து பிரித்துக்கொண்டிருந்தாள். பத்தாம் வகுப்பு விடுமுறையில் பழனி நாடார் கடையில் வேலை செய்தமையால் அவளுக்கு தையலில் பெரிய மலவுத்தட்டவில்லை.

எட்டுப்பார்ட்டு பாவாடைக்கு தையக்கூலி எண்பது பைசா, ஏழுப்பார்ட்டு பாவாடைக்கு எழுபது பைசா, ஆறுப்பார்ட்டுக்கு அறுவது பைசா, கால் இஞ்ச் அல்லது அரை இஞ்ச் பட்டி வைத்து தைத்தால் கூடுதலாக பத்து பைசா, பட்டிக்குப் பதிலாக பிரில் வைத்து தைத்தால் கூடுதலாக இருபத்தி ஐந்து பைசா என்ற கணக்கு விவரங்களை முத்துவிடம் கேட்கும்போது மகேசுக்கு இருந்த ஆர்வம் அவள் சொல்லும் வேறு கதைகளில் இருந்ததில்லை. முத்து மட்டும் அல்ல அங்கு வேலையில் மூழ்கும் எந்தப் பெண்ணுமே யாரையும் எதிர்பார்த்து கதை சொல்வது கிடையாது. பேசித் தீராத கதைகள், பேசத் திகட்டாத கதைகள் என்று அறை முழுவதும் கதைகள் கலந்து சுவர்களில் அப்பியபடியே இருக்கும்.

முத்து நூல் கண்டுகளை எண்ணிப்பார்த்துவிட்டு மூச்சிறைத்தபடி,

“பாத்தியா மகேசு அந்த கருவாமுண்டைய. ஒரு நாளும் கண்ட எண்ணிக் குடுக்கமாட்டான், அவன்கிட்ட நம்ம தாங்கிக்கிட்டு இருக்கனும்”

“இங்கனதானக்கா இருக்கு!”

என்று அவள் கால்மாட்டில் உள்ள கண்டுகளை பிறக்கி மகேசு முத்துவிடம் நீட்ட தன்பங்கு பாவாடைத்துணி பண்டல்களை எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு மிசினில் அமர்ந்தனர். மகேசு முத்துவின் தங்கைதான். முத்தக்காளுக்குத் துணைபுடிச்ச மாதிரி பன்னெண்டு முடிச்சதும் சேர்ந்துவிட்டாள்.

பத்துக்குப் பிறகும், பன்னென்டுக்குப் பிறகும் தன்னுடன் படிக்கும் மத்த பிள்ளைகளில் பெரும்பாதி பாவாடை, நைட்டி தைக்க ஒதுங்கியபோதும் நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கு உண்டான கனவுகளையே முத்துவும் கொண்டிருந்தாள். அவை அத்துணையும் ஒரே அடியாக ஒதுக்கித் தள்ளிவிட்டு அவர்களுடனே வேலைக்குச் செல்லும் சங்கடத்தை தவிர்க்கத்தான் பஞ்சு மில்லுக்குச் சென்றாள். காலையில் அரசரடி ஸ்டாப்பில் இருந்து முகவூர் எல்.எஸ்.எஸ்ஸில் ஏறிக்கொள்வாள். இராசபாளையத்தில் இருந்து தளவாய்புரம் வரும் வண்டி, பின் முகவூர் வந்து திரும்பி அரசரடி ஸ்டாப்புக்கு வர ஒரு கிலோமீட்டர்தான். சிலநேரம் விறுவிறுவென்று நடந்து முகவூரிலேயே ஏறிக்கொள்வாள். ஏலேகால் முகவூர் எல்.எஸ்.எஸ்ஸை விட்டால் வண்டி பிதுங்க ஆள் ஏத்தி வரும் தெம்மலை பி.ஆர்.சி.தான். கொத்துவேலைக்கு ஏறிய ஆட்கள் தொடங்கி, பாலிடெக்கினிக் படிக்கும் மாணவர்கள் வரையில், இடியவும், பிடியவும் சகித்தவாறே பதினோரு கிலோமீட்டரைக் கடக்கவேண்டும்.

தையலினூடே வாசலை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு மகேசிடம் “இந்த முப்புடாதி பய எதும் பேச்சு குடுத்தா பதில் சொல்லாத பொறுக்கி நாயி! எவ கெடப்பானு அலயுது” என்றாள். பண்டலை மளமளவென்று பிரித்து, பாவாடைத் துணி மூட்டையை எண்ணி, ஆறுக்கு ஆறு, எட்டுக்கு எட்டு என்று பாட்டுவாரியாகப் பிரித்து, கண்டுயெண்ணி நாடா பிரித்து பதிவாள் வீடுகளுக்கு, ஒரு சுருக்குப்போட்டு தள்ளிக்கொண்டிருந்தான் முப்பிடாதி.

3

பாய்ஸ் ஸ்கூல் காம்போண்டு தாண்டியவுடன்தான் கேல்ஸ் ஸ்கூல் காம்போண்டும். கால்பந்து மைதானத்தை ஒட்டி நடக்க எட்டு, ஒன்பதாம் வகுப்பு கிளாஸ் சன்னல்களைப் பார்க்க முடியும். சில சமயம், மிகச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை மதியம் நாலாவது பாடவேளையும் வியாழனன்று கடைசி எட்டாவது பாடவேளையும் பந்து காம்போண்டு தாண்டி கேல்ஸ் ஸ்கூலில் வந்து விழும். ஒன்பதாப்பில் சூட்டிக்கானவன் ஒருவனுடன் லாவகமாக பந்தை எத்தித்தள்ளியவன் என்ற முறையில் முப்புடாதியும் சேர்ந்துதான் கேல்ஸ் ஸ்கூலுக்குப் போவார்கள். பனியனும் அரை டவுசருமாக புழுதிபடிந்த தன் அடர்புருவங்களுக்குக் கீழ் உள்ள முட்டைக்கண்ணை உருட்டியபடி முப்புடாதி நிற்பதை முத்து வகுப்புப் பிள்ளைகள் பார்க்கும் போது சிரிப்பு தாங்கமுடியாது.

விளையாட்டு வாத்தியாருக்குப் பயந்து டவுசர் பைகளில் ஒளிந்துகொண்ட கலர் பேண்டுகளும், கருப்பு வயரும் முப்பிடாதியின் வலது, இடது மணிக்கட்டுக்கு ஏறியிருந்தது. போன வருடம் கவராயம் கொண்டு வலது கையில் கிழித்தெழுதிய பெயர் இம்முறை அதைக்கொண்டே அழிக்கப்பட்டு இருந்தது. அதற்கு முந்திய பங்குனிப் பொங்கலில்தான் உடுப்புகளில் இளவட்ட வாடை அடித்திருந்தது. ஒரு வகையில் அது அவன் முதலில் பசி வாடை அறிந்த காலமும் கூட! இளமை அரும்ப, பால் பிடித்திருந்த உயிரூட்டத்தின் பசி. உலகம், உறவு என அத்துணையிலும் நிறைந்து தளும்பக் காத்திருந்த பசி. பலர்போல முப்புடாதிக்கும் தீவிரம் கொண்டுவரும் பருவம் அதுவாகவே இருந்தது…

3.1

பூக்குழி பார்க்க வாகான இடமென்றால், இன்னவீடு, இன்ன கடையென்று எந்தக் கணக்கும் கிடையாது. அதிலும், எளந்தாள் வீடென்றால் சொல்லத் தேவையில்லை. ‘ஏலமாட்டாதவன் பொண்டாட்டி எல்லாத்துக்கும் மதினி’ சொந்தவீட்டுத் தோரணையில் புதுசட்டைப் போட்டுக்கொண்டு பதினாலு பதினஞ்சு வயசு பயலுகள் எல்லாம் சரசரவென பிறத்தியார் வீட்டில் நுழைந்து, ஏறி மாடி அடைவது வாடிக்கை. உயிரை குடுத்த சாமிக்கு மயிரையாவது கொடுப்போம் என்பதாக பத்தி பெருக்கெடுத்து ‘மாரியாத்தாளுக்கு படி போடுங்க’ என்று வாசல் வரும் பக்தர்களுக்கு இல்லையென்று சொல்லாது வழங்க தாழம்பூ பத்திக்கட்டு எல்லோர் வீட்டிலும் இருக்கும். அப்படி பத்தி ஏற்றிய வீடொன்றின் மாடியில் ஏறும்போதுதான் தவச்செல்வம் திடீர் என்று விரைத்தபடி கண்கள் நிலைகுத்த நின்றான். அவனறியாமலே சிறுநீர் கழித்திருந்தான்.

“ஏலே என்ன, என்னல ஆச்சு” என்ற கூச்சலுடன் முப்புடாதியும் மாரியும் அவனைக் கீழே இழுத்து வந்தனர். கீழே தாழம்பூ பத்தி தவிர்த்து வேறு வாடையும் அடித்தது கெறக்கமான வாடையை வேர்வையில் நனைந்த கதம்பப் பூ தந்தது. வைத்த கண் எடுக்காமல் முப்பிடாதியைப் பார்த்தபடி முத்து நின்று கொண்டிருந்தாள். அந்த அறை நிறைந்த வாசம் அவனுடன் நள்ளிரவு வரையிருந்தது. உடலில் அணு ஒவ்வொன்றும் அடைப்புடைப்பட்டு அருவி வந்து விழுந்ததுபோல சட்டென குளித்தடங்கிய நொடி அவனுடலில் மிதமான பனம்பால் வாடை அடித்தது. அவன் நினைவு சரியென்றால் அன்றிரவே அவன் கைலி முதல்முதலாய் கறைபட்டுக்கொண்டது.

3.2

அரிதலான உருவமாக ஸ்கூலை ஒட்டிய சுப்பையா கோயில் மலையில் யாரோ ஏற, பிள்ளைகள் கூடி அதை சுட்டிக்காட்டிய மறுநொடியே சொல்வாள்.

“முப்புடாதிதான், கைய எவளோ எட்டபுடிச்சு ஏறுததப் பாத்தாலே தெரியல மூதேய் மாடு மாதிரி ஆயிருச்சு, வெளிய போட்டுவரன்னு கேட்டுட்டு வந்து இங்க ஏறிக்கிட்டு இருக்காங், காலைல வெளிக்கு இருக்கலையானு கேட்டு அவுக வாத்தியார் ரெண்டு போடு போட்டாத் தெரியும் ரவுடிநாயி” என்று வாய்க்குள்ளேயே முத்து முனகிக் கொள்வாள். இன்று நேற்று என்று இல்லை. அன்று கோயில் கொடைக்கு குட்டி குருமாலுமாக குடும்பவாரியாக கொட்டகை போட்டுத் தங்க, பொட்டுபொடிசுகள் எல்லாம் ராத்திரிக்கு கதை கேட்க புன்னையாபுரத்து பாட்டியைச் சுற்றிப் படுத்துக்கொண்டார்கள்.

“எங்க ஊருக்கு மேக்குட்டு நம்ம சாஸ்தா கோயில் மாணிக்கு முந்தல்னு ஒன்னு இருக்கு. அங்க ஒரு கொறத்தி இருந்தாளாம். அவ அழகினா அழகி அப்படி ஒரு அழகி. நெதமும் மலையில இருந்து சுள்ளி பெறக்கிட்டு வரபோறப்ப ஒரு ராசா அவள பாத்துக்கிட்டே இருந்துருக்கான். ஆகா நல்ல புள்ளையா இருக்காளே இவள நம்ம தூக்கிட்டு போயிர வேண்டியதுதான்னு நெனச்சுருக்கான்”

“எதுக்கு அவள கொண்டு போணும்”

“ம்… வாட புடிக்கத்தான்! அவ மலமேல மஞ்சள் அரைச்சு குளிப்பா. அந்த வாடைக்கு கெறங்கி அவள கொண்டு போவ வந்துருக்கான்! முருவம் கதைய கேளு பேசாம”

அரட்டி கதையைத் தொடர்ந்தாள். மலையடியில் காடு பரப்பிக்கொண்டு இருந்த ஆதிபுத்திர கொண்ட அய்யனார் கோயிலின் கொல்லூரணி தாமரைக்கு மணமில்லாததாலேயே கதை கேட்ட முப்பிடாதிக்கு அன்று கனவில் அரைத்த மஞ்சள் வாசம் அடித்தது. அதைக் கலைத்ததுபோல மறுநாள் காலை கதம்பப்பூ வாடை அடித்தது. குளித்தவுடன் வரும் தெளிந்த வெள்ள வேர்வை மேல் பூசிய மஞ்சளில் படர, கதம்பச்சரம் வைத்து வெறித்தபடி நின்றாள் முத்து.

“என்னத்தான் லூசு கணக்க மொனங்கிகிட்டே கெடக்க”

“உனக்கும் மஞ்சள் வாடை அடிச்சதா” என்றுதான் கேட்க நினைத்து இருந்தான். ஆனால் கேட்டது என்னமோ,

“உங்புருசன் காணமாம். அதுதான் புலம்பிக்கிட்டு இருந்தேன்”

மூக்கை விடைத்துக்கொண்டு முட்டைக்கண்ணை அவள் உருட்டும்போதெல்லாம் வலிய வலிய முப்புடாதி வந்து சொன்னான்,

“போச்சு போ… உங்புருசன் கெடைக்கமாட்டான்” என்று.

அன்றைக்கு இருந்தே திட்டுதான்.

3.3

தளவாய்புரத்தில் கொமந்தாபுர மாணவர்களுக்கு என்று ஒரு தனி மவுசு உண்டு! நண்டு சுண்டுமாக இருப்பவர்கள் கூட சுழிவான கபடிக்காரர்கள் என்பதே அது. அந்தப்பெயரை உயிர்ப்போடு வைக்க ‘கலைமணி’ கபடிக்குழு இருந்தது. முப்பிடாதிக்கு வருஷத்தொடக்கத்தில் இருந்த பந்தாட்டம் விளையாட்டு சுணங்கிப் போனதற்கும் நாளும் பொழுதும் உடம்பு முறுக்கேறி வந்ததுக்கும் பெரும் பங்கு ‘கலைமணி’க்கு உண்டு. பத்தாம் வகுப்பு விடுமுறை நாட்களில் முப்புடாதி, முத்து உட்பட பேருவாதி பதின்ம வயது தாண்ட உள்ளவர்கள், ஊரில் உள்ள பாவாடைக் கடைகளில்தான் வேலை பார்த்தனர். வேலை பார்த்து வீட்டுக்குக் கொடுத்தது போக மீதமானவற்றை செலவு செய்யும் இடமாக ‘முத்துமுடி கடை’ அல்வாவும், ‘கண்ணாடிக்கடை’ மீல்மேக்கரும் மட்டும் இருந்துவிடவில்லை. பதின்வயதுப் பரபரப்பும் உத்தியோகம் தந்த புருசலச்சனமும் வேறு ஒரு செலவுக்கு வகை பார்த்திருந்தது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்று வந்திறங்கிய வாழ்த்தட்டைகளை ஆற அமர ‘நதியா கவரிங்கில்’ வாங்கிவிட்டு மறுநாள் மாலை செவக்காட்டு முக்கிலும், சொசைட்டி தெரு வளைவிலும், புத்தூர் விலக்கிலும் கணநேரத்தில் கைமாத்திவிட்டு நகரும்போது காலையில் இங்கிலீஸ் வாத்தியாரிடம் வாங்கிய அடியும், மதியம் கணக்கு வாத்தியாரிடம் வாங்கிய அடியும் போன மாயம் தெரியாது.

அடுத்த கட்டமாக காதலர் தினத்தன்று ஆர்ட்டின் போட்ட பொம்மையோ அல்லது ஒயிட் மெட்டலில் ‘லவ்’ என்று எழுத்து இடம் பெற்ற கீச்செயின்களோ பரிசளிக்கப்படும். சைக்கிள் பூட்டுக்களை கழுகுப்பார்வை பார்த்தபடி கீச்செயினைத் தேடுபவர்களும் அதை உணர்ந்த விதமாக சாவியை ஒருமுறை பார்த்தபடி விரியும் குறுஞ்சிரிப்பும் கீச்செயின் கண்ணில் பட அரும்பு மீசையை கடித்து புருவம் உயர்த்தி தோழமைகளுடன் பகிர்ந்த முகமலர்வையும் ‘சாமி அன்கோ’ கடைவரையில் பார்க்கலாம்.

சில காலம் தள்ளி, கால்களில் செம்புழுதி படிய, ஜீவாநகர் தாண்டி தாவணியும் பப்புக் கை வச்சி எம்பிராய்டர் போட்ட சட்டையும் பூப்போட்ட பாவாடையுமாக சம்படத்தில் பழையதும், சுண்ட இருந்த காய்கறி வெஞ்சனமும் சுமந்து வரும் கன்னிமார்களுக்கு அந்த நினைப்பு மட்டுமே ஆசுவாசம்.

வெள்ளி செவ்வாய்களில் காலை முதலே பரிதவிப்பு கொண்டு பணிச்சொனங்கை உதறியபடி ஓட்டமும் நடையுமாய் மாலையில் வீடந்தவர்கள் வழிந்தோடிய வேர்வையை நீர்கொண்டு அலசி, ஈர உடல் வாசத்தோடு மாரியம்மன் கோவிலுக்கு ஓடி, சன்னதி சுத்தி புற்று மண்ணோடு இட்ட மஞ்சள் திலகத்தை மெல்ல அழித்தபடி தேங்கிய வேர்வை புருவமயிர்களுக்கு மடைமாற இடமும், வலமும் மாறி மாறி நடக்கும் முந்தானைத் துடைப்பை மீறி மஞ்சள் சாயமேறிய திரவம் நாடி விளிம்பில் திரண்டு பெருக உடலெங்கும் கூச்சத்தோடு நோக்குவார் நோக்க கிளம்பும் நாணச் சிரிப்புகள் அத்தனையுமே அந்த ஆசுவாசத்துக்கு அஸ்திவாரம்தான்.

4

மதியம் வரையில் தைத்த எட்டுப்பார்ட் பாவாடைகளை எண்ணி அடுக்கிவிட்டு சாப்பாட்டுக்கு கூரைச்சாய்ப்புக்குள் ஒதுங்கிக்கொண்டனர். வந்த கத, போன கத, சோறு கொழம்பு, தொடுகறி பரிமாற்றங்கள் முறையாக நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் ஆண்கள் சாப்பாட்டுக்கு சைக்கிள் மிதிச்சு வீடு சென்று திரும்புவார்கள். முப்புடாதி மட்டும் ஜெர்சி அடிப்பவர் சிலருடன் சேர்ந்து சாப்பிடுவான். அந்த அறையை பக்கவாட்டில் கடந்து கைகழுவச் செல்லும் பெண்களை அரைச் செங்கல் கனத்தில் ஆறு ஸ்பீக்கர், சைனா போன் ஒவ்வொருவர் கடக்கும் போதும் முப்புடாதி மனதுக்கு ஏற்ப வசனம் படித்தபடியே இருக்கும். சிலசமயம்,

‘போங்கடீ பீத்த சிறுக்கிகளா’

‘சரியான லம்பாடி பொம்பளையா இருப்பா போல’ போன்ற வசனங்களும் அரிதாக

‘நான் கொண்ட ஆசையெல்லாம்
நான்காண்டு ஆசைதான் 
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி 
உன் கொழுசின் ஓசைதான்’ 

என்ற பாடலும் வரும். அறையில் மாரிராஜ், மெல்ல வெளியே எட்டிப்பார்த்துவிட்டு

“இந்த பெருசு பண்ணுத சோலிய பாத்தியா?” என்றான். தனது பையில் இருந்து சிகரெட்டை வெளியே எடுத்துக்கொண்டே முப்புடாதி

“எந்த பெருசு” என்றான்.

“பெரியாளு மாப்ள! நம்ம கதிர் அண்ணாச்சி மாம்ஸ்! திக்கும் திக்கும் ஒரு பொம்பளயாளச் சேத்துக்கிட்டு இல்லாத கள்ளச் சோலியெல்லாம் பாத்துக்கிட்டு இருக்காரே!” சரவணன் குனிந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“ஏய் பொம்பளயாளா திரியுதுக இன்னியேரம் போய்க்கிட்டு! நம்மளா இருந்தாலும் பரவால்ல!”

“ஆமா! அந்தானைக்கு இவளுகளுக்கு ஒன்னுமே தெரியாது பாரு!”

என்ற முப்பிடாதி, சரவணன் சட்டைப்பையில் இருந்து தீப்பட்டியை எடுத்தபடி ரெண்டு சட்டைபட்டனை திறந்துவிட்டான். கலைமணி கபடிக்குழு உடைய வார்பிடிப்பில் தசை அங்கங்கு கட்டுதட்டியேறி இருந்தது. மார்பில் சுருள், சுருளாக வளர்ந்து இருந்த மயிர்காட்டினூடே இடதுபுறம் பச்சைகுத்தி பின்னர் சிகரெட் கங்கினால் அந்த பெயர் அழிக்கப்பட்டும் இருந்தது.

அவன் கெடக்கான் மாப்ள, நீ இங்க கேளு! என்று சம்மணம் போட்டு அமர்ந்த மாரி,

“பெருசு ராணா டார்க் முறுக்குக் கம்பி ஏதும் வச்சுருக்கோ என்னவோ! எல்லா வயசு பொம்பளகளையும் வளைச்சுக்கிட்டு திரியுதே! அது, பாதாம், முந்திரினு திங்காம்ல முப்புடாதி, அதுதான் பெருசு தெனவெடுத்துத் திரியுது!”

முப்புடாதி சிகரெட்டைப் பத்தவைத்தபடி புருவம் உயர்த்தி மாரியைப் பார்த்து

“உனக்கு தெரியுமோ” என்றான்.

“ஆமா! வன்னியராசு அண்ணாச்சி கடையில நிக்கும்போது பலசரக்கு வாங்க பெருசுதான வரும்”

என்று சொல்லும்போது மாரிக்கு புரிந்திருக்க வேண்டும். முப்புடாதி கேட்ட தொனி, சரவணன் வாயைப் பொத்திச் சிரித்துக்கொண்டான். தன் தலையில் அடித்தவாறு மாரி ஒரு கும்புடு போட்டு முப்புடாதியிடம் “போதும் ராசா!” என்றான். ‘ம்… ம்!…’ என்று சிரிப்பை முகத்தில் காட்டாமல் முப்புடாதி தொடர்ந்தான்.

“அதுக்கில்ல மாப்ள! நீவாட்டுல முறுக்கீட்டு, திருக்கிக்கிட்டுனு சொல்லுததப் பாத்ததும் நான் கூட பெருசு உன் கைலதான் விளக்க கொடுத்து உக்கார வைச்சுருப்பாரு போலனு நெனச்சன்”

என்றதும், மாரி முப்புடாதி முதுகில் அடித்தபடி சிரித்தான்.

“பின்ன! அந்தக் கெழட்டு ஆத்மாவ புடிச்சுக்கிட்டு, அப்புடியே அவுக கம்பெடுத்து சுத்தீட்டா எல்லாவளும் மயங்கி விழுந்திருவாளுக! ஏதோ பாவப்பட்ட கழுதைக காச ஏதும் குடுப்பான்னு வருதுக அத புடிச்சுகிட்டு”

என்ற முப்புடாதி, சிகரெட்டை இழுத்து ஊதியவாறு மெல்லச் சிரித்தபடி,

“பெருசுகிட்டனா! வேலப்பாடும் கம்மி”

எனும்போது கூடுதலாக ஒரு சிரிப்புச்சத்தம் மெலிதாகக் கேட்க, சட்டென்று முப்புடாதி எழுந்து சன்னல்புறம் வரும்போது முத்து வேகமாக உள்ளே ஓடிக்கொண்டு இருந்தாள். எழுவதற்கு முயன்ற மாரியிடம் யாரும் இல்லை என்று கையைக்காட்டிவிட்டு பின் அங்கு நின்றுகொண்டு மீதம் உள்ள சிகரெட்டையும் புகைத்தான்.

4.1

மாய்ந்து மாய்ந்து தைப்பவர்களுக்கு மட்டுமல்ல ஊரார் அனைவருக்குமே அதீத கொண்டாட்டத்தையும் அதற்குப்பின்னான ஓய்வையும் தரவல்லது தீபாவளி விடுமுறையோ, தைப்பொங்கலோ அல்ல! மாரியம்மனுக்கு ‘பூ’ வளர்த்து மூன்று நாளைக்கு மொத்த ஊரையே விழாக்கோலம் கொள்ள வைக்கும் பங்குனிப்பொங்கல்தான். ஊருடைய நான்கு முகப்பிலும் பொடி பல்பு சீரியல் செட் போட்ட முப்பதடி மாரியம்மன் நொடிக்கு நொடி கைகளில் கரும்பும் நெல்லும் வைத்திருப்பவளாக, சிம்மவாகினியாக மாறி மாறி காட்சி தந்துகொண்டிருந்தாள். மூணாவது நாள் காலை ஐஞ்சு மணிக்கே பூவிறக்க அடுத்த அரைமணி நேரத்தில் பரிசுக்கு குலுக்கல். ஆறுமணிக்கெல்லாம் ஊர் பெரு உணவு கொண்டு ஓய்வுகொள்ளும் மலைப்பாம்பு போல சுருண்டு முடங்கிவிடும்.

பங்குனிப் பொங்கலுக்கு மறுநாள் பெரிய வேலைகள் எந்த பாவாடைக் கடைகளிலும் இருந்திருக்கவில்லை. நேற்று உடுத்திய புது உடுப்பை கழட்ட மனதில்லாதவளாக தன் மாமா வீட்டுக்கு முத்து வந்துகொண்டிருந்தாள். மூன்று கோவிலிலும் விடிய விடிய மாரியம்மனுக்கு வளர்த்த ‘பூக்குழி’ மேகத்தைச் சுரக்க வைக்க, மழை பிடித்திருந்தது. மழைக்கு முப்புடாதி வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த முத்துவுக்கு, தன்னையே யாரோ பார்ப்பது போலப்பட அடிக்கடி வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தபடியே இருந்தாள். சன்னல் வழியாக தெறிக்கும் மழை, மெல்ல ஈரம் பரப்பியபடி இருக்க, அருகில் அடுக்கியபடி இருந்த பாவாடை பண்டல்களை நெருங்கிய ஈரத்தைப் பார்த்ததும், அதை இடம் மாற்ற ஆள் இல்லாததை அறிந்து உள்ளே வந்தாள்.

தன் மீது குவியும் பார்வையை முத்து உணர்வதற்குள் முப்பிடாதி பின்புறமாக முத்துவை அணைத்திருந்தான். அவளுடைய வனப்பான திரட்சி கொண்ட உடல்வாகாக அதற்கு பிடி கொடுத்து இருந்தது. முத்து விலக விலக பிடி இறுக்கமடைந்துகொண்டேபோனது முகப்பில் மெல்ல நிழலாடிய உருவத்தை கவனித்த முத்து முப்பிடாதியின் கையைக் கீறி விலகினாள்.

“எவ கெடப்பானு அலயுத நாயி! கைய தூர எடு முதல்ல”

“ஏ! என்னத்துக்கு இப்ப கத்தற? அப்படி என்ன நடந்து போச்சு” என்றவாறே முத்துவின் கையை இறுக்கிப் பிடித்தான்.

“உனக்கு அரிப்பெடுத்துப்போயிருந்தா உன் வீட்டு பொம்பளயாளுக கிட்ட போகவேண்டியதான” கண்ணு செவக்க கையை ஓங்கிய முப்பிடாதி, முத்து கன்னத்தில் அறைந்த பின்புதான் முத்துவுடன் மகேசும் வாசலில் நின்றிருந்தது தெரிந்தது.

மறுமுறை கையை ஓங்கியவன் மகேசைப் பார்த்ததும் சுவற்றில் அறைந்தான். என்னக்கா? என்னக்கா? என்று புரியாதவளாக சத்தம் கேட்டு உள்ளே வந்த மகேசு முழித்தாள். “ஒன்னும் இல்ல மகேசு” என்று கண்ணீரைத் துடைத்தபடி முத்து எழுந்துகொண்டாள். வெளியே மழை பிரித்துக்கொண்டிருந்தது.

“கூட்டுப்போ! பெரிய யோக்கியச்சியாட்டம்”

“இந்தபாரு நீ ஒன்னும் எங்க அக்கா யோக்கியத்த நொட்ட வேண்டாம்” என்று மகேசு சொல்லி முடிக்கும் முன்பே முத்து அவளை நிறுத்தி ஒன்னும் பேசாத மகேசு போ! பேசாம, என்றாள். உக்கிரம் கூடியபடி இருளோடிய வானில் கோடை இடி அலறியபடி இருந்தது.

“வெளிய போடி மொதல்ல, அப்படியே உங்கொக்காகிட்ட ஏன் பஞ்சுமில்லு வேலைக்கு போவாம நின்னான்னு கேளு”

முத்து, முப்பிடாதியை முறைத்தபடி “போதும் நீ பண்ணது எல்லாம்” என்று தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினாள்.

“உனக்கு அழச்சொல்லியா தரணும் மில்லு சூப்பர்வைசர் கூப்பிடும்போது இளிச்சு இளிச்சு போகத்தெரிஞ்சது? பின்ன இந்த அரிப்பெடுத்தவங்கிட்டதான கண்ணீர் வடிச்சுகிட்டு நின்ன? அப்ப மட்டும் நாங்க வேணுமோ?”

பேசுவதற்கு வாயெடுத்த மகேசை “நீ ஒன்னும் பேசாத மகேசு! பேசாம போ புள்ள!” என்றவாறு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மகேசை அழைத்தபடி வெளியேறினாள்.

மறுவாரமே முப்பிடாதி வீட்டில் இருந்து முத்துவை பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் போனதுதான் தாமதம் என்று மகேசு விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்கத் தொடங்கினாள். முத்துவின் அம்மா கையில் வைத்து இருந்த நாடா பண்டலை மகேசு மேல் எறிந்துவிட்டு,

“அப்பா இல்லாம அனாதரவா இந்த ரெண்டு முண்டைகளையும் எப்படி கரைசேப்பனோனு நான் மலைக்காத நாள் உண்டா? அப்படி என்னடி குறைய கண்ட? நீயா கட்டிக்கிறப்போற?”

“இப்ப அவ சொன்னா சரிதான? கேட்டுக்கோ உம்மவகிட்ட” என்று முத்துவை பார்த்தபடி அவளருகே அமர்ந்தாள். முத்து, மகேசு முதுகில் விளையாட்டாக தட்டிவிட்டு “எனக்கு சம்மதம்தான்மா” எனக்கூறி சமையல் வேலையில் மும்முரமானாள். சம்மதம் சொல்லும்போது முத்துவின் முகத்தில் மலர்ந்த சிரிப்பு கொடுத்த அதிர்ச்சி மகேசை மறுவார்த்தை பேசவிடாமல் செய்தது.

திருமணத்திற்குப் பின்பு முத்து தன் அம்மாவீட்டுக்கு வரும் போதெல்லாம் முத்து முகத்தில் இருக்கும் பூரிப்பு, மகேசை தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தியது.

“எப்படிக்கா? அவர உனக்கு உண்மையாவே புடிக்குமா” என்று அடிக்கடி முத்துவிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள். முத்து தன் வழக்கமான சிரிப்புடன் மகேசு தலையில் தட்டிவிட்டு போ புள்ள! என்ற பதிலுடன் சென்றுவிடுவாள். அந்தச்சிரிப்பு அவளிடம் வெகுநாட்களாக தங்கிவிட்ட சிரிப்புதான்.

“பிரில் பாவாடையா குடுத்தீகன்னா தங்கமாப்போகும்” என்று கேட்டு எட்டு பார்ட் பாவாடைத்துணிகளில் பிரில் வைத்து தைத்துக் குடுத்தாள். பிரில் வைத்த பாவாடை தைக்க கூடுதலாக 25 பைசா.

“அங்கன வேண்டாம் வீட்டுல போட்டு தைச்சுக்கிடட்டுமா அண்ணாச்சி” என்று முத்து கேட்க, பவர் மிசினை வீட்டில் போட்டுக்கொடுத்திருந்தார் முதலாளி. “சூட்டிக்கான புள்ள எங்கனாலும் கொறையாம தைக்குமென்று” அவருக்குத் தெரியும். போக அது வழக்கத்தில் உள்ள முறைதான்.

“மகேசு, இன்னைக்கு சாந்தி தியேட்டர்ல அவுக தலைவர் படம் போட்டுருக்காகன்னு வெள்ளன வான்னாக! படத்தப் பாத்துட்டு ஆனந்தா ஓட்டல்ல புரோட்டா சாப்ட்டுதான் நைட்டு வருவோம். நான் போய்ட்டு வாரேன்”னு சொல்லும்போது கூட மகேசுக்கு வியப்பு அடங்கவில்லை. முப்புடாதி வண்டியில் உற்சாகமாக முத்துவை ஏத்திக்கொண்டு கிளம்பிய பயணம் கிருஷ்ணாபுரம் தாண்டும் முன்னரே முடிந்திருந்தது. முப்பிடாதிக்கு தன்னுசார் இல்லை. முத்துவுக்கு கொஞ்சம் விழிப்பு இருந்தது. இருவரையும் இலந்தோப்பு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அவனுக்கு நினைவு திரும்பும்போது முத்து இருந்ததுக்கான சுவடே இல்லாமல் போயிருந்தது.
வலது காலில் விழுந்த அடி அவனை தவங்கியபடி நடக்கப்பணித்து இருந்தது. பேச்சில் முன்பு இருந்த சவுடாலோ கேலியோ இல்லை.

5

தான் குடித்தனம் போன வீட்டில் இருந்தான் முப்பிடாதி. கடந்த பத்து நாட்களாக அவன் உடல் நோவின் ருசி கண்டுவிட்டது. “அவன அவன் போக்குல கொஞ்ச நாளைக்கு விடு, ஓயாம போய் நோண்டிக்கிட்டே இருந்தா அதே நெனவாதான் இருக்கும்” என அவர் போக்கில் இருந்த அப்பாவின் செயல்தான் ஒரே ஆறுதல். தினமும் அவன் அம்மா மட்டும் வந்து சாப்பாடு கொடுத்து ஒரு வேளை சாப்பாட்டைப் போராடி சாப்பிட வைத்து கொண்டிருக்க இந்த நான்கு நாட்களாக கதவை திறந்து சாப்பாட்டை மட்டும் வாங்கிக் கொண்டிருந்தான். இன்று காலையில் அம்மாவுக்கு பதிலாக மகேசு கொண்டு வந்தாள்.

இங்க எதுக்கு வார? என்று வேண்டா வெறுப்பாக கேட்டான். அவள் அவனைக் கண்டு கொள்ளாதவளாக போய்க் கொண்டிருந்தாள். எழுந்து வேட்டியைக்கட்ட முயன்றவன் தடுமாற மகேசு ஓடிவந்து பிடிக்கும் முன்பு சுதாரித்துக் கொண்டவன் போல சுவரை பிடித்துக்கொண்டு வேண்டாம் என்பது போல மகேசிடம் கையைக் காட்ட,

“உங்கள ஏதும் தொந்தரவு பண்ணுதனா? எம்பாட்டுக்கு வாரன் போறன் உங்களுக்கு என்ன வலிக்குது”

“போன்னா, தூர போ நாயே அதவிட்டு வியாக்கியன மயிறு பேசிக்கிட்டு உனக்கு வாய்ல சொன்னா புரியாதா”. வெரட்டி கத்த கண்கள் இருண்டு கொண்டு வந்தது தன்னுசார் வந்து தலையை குலுக்கிக்கொண்டான். எந்த பதட்டமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்த மகேசு,

“எல்லாம் தெரிஞ்சுதான் வாரேன், பஞ்சு மில்லுல நீங்களும் வேலைக்குச் சேந்தது. அக்கா வயத்துல உசுரோட தயங்கி நின்னப்போ அந்த சூப்பர்வைசர அடிச்சது அதுக்காக ஒரு நா முழுக்க போலிஸ் ஸ்டேசன்ல வாரவன் போறவன்கிட்டெல்லாம் அடிப்பட்டது. உங்க வேல போனது”.

முறைத்தபடி இருந்த முப்புடாதியின் கண்களில் மெல்ல திரவம் படரத் தொடங்கியது. நாற்காலியில் அமர்ந்து ஒரு நிமிட மௌனத்திற்கு பின்னர் “முத்து சொன்னாளோ” என்றான்.

“அவ உடம்புல தங்குன மூச்ச இத சொல்லத்தான்
புடிச்சு வைச்சு இருந்தா”

5.1

கைவீக்கமெடுத்து விண்விண்னென்றது. நிச்சயமாக நேற்று தரையில் அடித்ததால்தான். கையில் தோல் தடித்து பளபளத்துக்கொண்டு மோலிமேடை மறைந்திருந்தது. தசைகள் காய்ந்து தளர்ந்துகொள்ள வயிறு கவ்விப்பிடிப்பது போல இருந்தது முப்பிடாதிக்கு, அந்த வாடையைத் தவிர்த்து அவன் அனுமதியில்லாமல் வந்தது மகேசு மட்டும்தான். எப்படி வந்தாள் என்கிற ஓர்மை துளி கூட நினைவில் வரவில்லை.

“கேக்கா பாரு, சொல்லு உங்தங்கச்சிகிட்ட பஞ்சுமில்லுல நல்லா விழுந்து பெறக்கி வேல ஓடுச்சுனு” அன்று கடுங்கோவத்தில் கத்தியதை இன்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். அதை… “அத மனசுல வச்சா சொன்னா?” நேற்றைக்குப்போலவே குரல் உளறியது.

ஒட்டியும் வெட்டியும் முத்து பேசிய வார்த்தைகளே இரைச்சலெடுத்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது வந்த தன்னுசார் எல்லாம் அவள் பேசியது கூட முத்துவின் குரல் என்றே உணர்த்தியது. நொசநொசத்துக்கொண்டு இருந்த இடது கையில் ஒருமுறை கண்களைத் துடைத்துக்கொண்டான். வலுவத்தனையையும் கூட்டி எழுந்தமர்ந்தான். “நாங் வாரேன்” என்று கதவடைக்கும் சத்தம். சந்தேகமே வேண்டாம் முத்துவின் குரலேதான். தடுமாறி எழுந்து சுவர் பிடித்து நடந்து கதவருகே சென்று பார்த்தான். நேற்றைக்கு போலவே கதவு உள்புறமாக தாழ் இடப்பட்டிருந்தது. கதவைத் திறக்கவும் சுருள் சுருளாக அடர்ந்த கருந்திட்டுக்கள் கண்முன் விழுந்து பின் தெளிவான தெரு நேற்றைக்கு போலவே வெறிச்சோடிக்கிடந்தது. கதவடைக்க, அதுபோலவே வீடும் ஆள் அரவமற்றுக்கிடந்தது. சாவித் துவாரத்தில்இருந்து வரும் காற்றுக்கு ஒதுங்கி மறைந்து வந்து ஒரு மூளையில் மறுபடியும் படுத்துக்கொண்டான்.

5.2

சன்னல் நூலாம்படையை நைத்தவாக்கில் இழுத்துச் சாத்தியிருந்தது. மூளையில் ஒரு வாரமாக கொட்டிக்கிடந்த சோற்றில் ஈ மொய்த்துக் கிடந்தது. மூட்டுக்கிடையில் கைகோர்த்து முனங்கியபடி சுருண்டு கிடக்கத்தொடங்கிய முப்புடாதி இப்போது அந்த வாசத்துக்கு நடுங்கி தலையணையில் முகம் புதைக்கவில்லை. அது கொஞ்சம் எட்டித்தான் கிடந்தது. உடல் முன்பு போல குறுகி சுருண்டும் கிடக்கவில்லை. அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, அவனை நோக்கிப் பொங்கி வந்த வேர்வை ஊறிய கதம்பப்பூ மணத்திற்கு தன்னை முழுதளித்திருந்த அவனுக்கும் தளத்திற்கும் இடையில் வேர்வையும், வாந்தியும் இன்னபிற கறைகளும் படிந்து அடையடையாய் இருந்த முத்துவின் பிரில் பாவாடை தரைவிரிப்பாக இருந்தது.

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2019 Designed By Digital Voicer